Thursday, April 5, 2018

Sraddha Niyamas

Courtesy: Brahmasri. EB.Kumar

ஸ்ரார்த்த நியமனங்கள் 
 
ஸ்ரார்த்த நியமனங்கள்.Forward  as received

1. ஸ்ராத்த பக்ஷம் வாரம் 3 நாளாவது நியமமாயிரு.
2. கர்த்தா என்பவர் ஸ்ரார்த்தம் செய்கின்றவர்.
3. போக்தா எனில் ஸ்ரார்த்தத்தில் வரித்துப் புஜிப்பவர்.
4. கர்த்தா போக்தா இருவருக்கும் சில நியமம் பொது.
5. இருவரும் ஸ்ரார்த்த தினத்தில் வழி நடக்கலாகாது.
6. இருவரும் புஜித்தபின் வேறொன்றும் புஜிக்கலாகாது.
7. நமது பாபத்தை அகற்றிக் கொள்வதற்காக ஸ்ரார்த்தத்திற்கு முன் கூஸ்மாண்ட ஹோமம் செய்யலாம்.
8. ப்ரூண ஹத்திக்கு உட்பட்ட பாபத்தை போக்குவது.
9. கூஸ்மாண்டமெனில் சில மந்த்ரம் (பூஷிணிக்காயல்ல)
10. 4 நாள் முன்னதாகவாவது ஔபாஸநம் துவக்க வேண்டும்.
11. ஔபாஸநாக்னியில் தான் ஸ்ரார்த்த ஹோமம் நடக்கிறது.
12. பிரும்மச்சாரி ஸமிதா தாநாக்னியில் செய்ய வேண்டும்.
13. பெற்றார் இறந்தமாதம் பக்ஷம் திதியில் ஸ்ரார்த்தம் வரும்.
14. திதி இரு நாட்களுமிருந்தால் அபரான்ன வ்யாப்தியில் செய்ய வேண்டும்.
15. இரு நாட்களும் அப்படி இருந்தால் அதில் அதிக வ்யாப்தியுள்ள நாள் தான் திதி.
16. இருதினமும் ஸமமாகயிருந்தால் முதல் நாள் செய்க.
17. ஒரு மாதத்தில் இரு திதிகள் வந்தால் பிந்திய திதியில் செய்க.
18. அதில் ஸங்க்ரமண தோமிருந்தால் முன்னே செய்க.
19. 18 நாழிகைக்கு மேல் உள்ளது அபரான்னம்.
20. சுமார் பகல் ஒன்றறை மணிக்கு அபரான்னமாகும்.
21. 15 நாழிகைக்கு மேல்பட்டது குதபகாலம் சுமார், 12 மணி.
22. ஒரு மாஸத்தில் வரும் இரு திதிகளுக்கும் தோம் இருந்தால் பின்னால் வரும் திதியில் ஸ்ரார்த்தம் செய்க.
23. ஒரு மாதத்தில் ஒரே திதியானால் தோமில்லை.
24. ஒரு மாதத்தில் திதியே இல்லாவிடில் முந்திய மாதம் சாந்த்ரமான சுத்த திதியில் செய்க.
25. அதுவும் சுத்தமாக இல்லாவிடில் பிந்திய மாதம் செய்க.
26. எக்காரணத்தாலாவது திதியில் செய்ய முடியாவிடில் அன்று உபவாசமிருந்து மறுநாள் செய்யலாம்.
27. திதி மறந்தால் கிருஷ்ணபக்ஷ அஷ்டமி ஏகாதசி அமாவாஸ்யையில் செய்க.
28. தீட்டு வந்தால் தீட்டு போகும் நாளில் செய்க.
29. பகல் 30 நாழியை 5 பாகமாகப் பிரித்தால் முதலில் ப்ராத : காலம்.
30. 2. ஸங்கவகாலம், 3. மாத்யான்ஹிக காலம். 4. அபரான்னம், 5. ஸாயாந்நம்.
31. மாத்யான்னிகத்தை மூன்றாக பிரித்தால் 1. கந்தர்வ காலம், 2.குதபம், 3. ரெளஹிண காலம்.
32. ஸ்ரார்த்தத்தில் தெளஹித்ரன், குதபம், எள்ளு சிறந்தன.
33. பெண் வயிற்றில் பிறந்த பிள்ளை தெளஹித்ரன்.
34. கறுப்பு எள்ளு நிறைய உபயோகிப்பது நலம்.
35. வராஹ மூர்த்தியினிடமிருந்து தர்ப்பம் கறுப்பு எள்ளு வந்தது. அவை ராக்ஷஸர்கள் கிட்டே வராமல் தடுக்கும்.
36. அண்ணன் தம்பி இருவர்களை ஒரு ஸ்ரார்த்தத்தில் வரிக்கக்கூடாது.
37. வேதமறியாதவரை, நோயாளியை வரிக்கக்கூடாது.
38. பஹிஷ்டைக்காரியின் புருன் அர்ஹரல்ல.
39. பத்நி புத்ரர்கள் இல்லாதவரும் அர்ஹரல்ல.
40. பத்நி இல்லாவிடினும் புத்ரனுள்ளவரை கூறலாம்.
41. மூன்று நாட்களுக்குள் பிராம்மணார்த்தம் புஜித்தவரும் கூடாது.
42. என்னைச் சொல்லு என கேட்பவரும் அர்ஹரல்ல.
43. யோகீ, க்ஞாநீ, ஸாமவேதி, தெளஹித்ரன் ஸ்லாக்யம்.
44. நான் உன் வீட்டில் பிராம்மணனாக இருக்கிறேன். நீ என் வீட்டில் இரு என்று ஏற்பாடு செய்யக் கூடாது.
45. 3 மாதத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணி பதியும் கூடாது.
46. பெற்றோருக்கு ஆப்திகம் முடிக்காதவரும் கூடாது.
47. அன்று காலை வபநம் செய்து கொண்டவர் கூடாது.
48. குஷ்டம், சொத்தை நகம், சொத்தை பல்லுள்ளவர் கூடாது.
49. இளையவரை பித்ருக்களாக வரிக்க வேண்டும்.
50. சக்தியுள்ளவர் வெண்பட்டு வாங்கித் தர வேண்டும்.
51. 3 வேஷ்டி, 2 வேஷ்டிகளாவது தர வேண்டும்.
52. நாம் உடுத்துவது போல் நல்ல வேஷ்டி தர வேண்டும்.
53. சக்தி இல்லாதவர் வஸ்த்திரத்திற்காக பூணூலாவது தருக.
54. கர்த்தா புதுப் பூணூல் அணிந்தே ஆரம்பிக்க வேண்டும்.
55. மந்த்ரங்களை நன்கு ஸ்வரத்துடன் உச்சரிக்க வேண்டும்.
56. ஸ்ரார்த்தத்தில் அவஸரமே கூடாது.
57. ஸக்திக் கேற்றபடி நிறைய தக்ஷிணை தர வேண்டும்.
58. ஸ்வர்ண தக்ஷிணை தருவது மிக ஸ்லாக்கியம்.
59. வரிக்கப் பட்டவர்களை தெய்வம் போல் நடத்துக.
60. ஸ்ரார்த்த தினத்தன்று கோபமே கூடாது.
61. ஒரு மாஸத்திற்கு முன் பரான்னம் சாப்பிடக் கூடாது.
62. ஒரு பக்ஷம், அல்லது ஒரு வாரமாவது குறைந்தது 3 நாளாவது பரான்னம் சாப்பிடாமலிருக்க வேண்டும்.
63. 1 வாரம் முன்னே எண்ணைத் தேய்த்துக் கொள்ளக் கூடாது.
64. பெரியவரை விச்வேதேவராக வரிக்க வேண்டும்.
65. ஸ்திரீ ஸங்கமும் பாய் மெத்தையும் படுக்கையும் கூடாது.
66. குரு, மாமன், ஸகோதரி மாமனார் இவர்கள் அன்னம் பரான்னமல்ல.
67. பவித்ரத்துடன் பிராம்மணர் கால்களை அலம்பக் கூடாது.
68. பவித்ரத்தை கழட்ட நேர்ந்தால் வலது காதில் வை.
69. விச்வே தேவருக்கு சதுரச்ரம். பித்ருக்களுக்கு வட்டமாக காலலம்பவும். இலையின் கீழும் இடம் செய்யவும்.
70. இருவர்களது பாதஜலமும் ஒன்றாக சேரக் கூடாது.
71. பசுஞ்சாணியால் ஸ்தலத்தை சுத்தி செய்ய வேண்டும்.
72. பிராம்மணர் கணுக்காலை மாத்ரம் அலம்புக.
73. அதற்கு மேலும் உள்ளங்காலையும் அலம்பக்கூடாது.
74. ஹோமம் செய்து மிகுந்த நெய்யால் அன்னத்தை அபிகாரம் செய்யாதே.
75. நெய்யால் பாகஞ்செய்ய வேண்டும். எண்ணெய் கூடாது.
76. எள்ளை உபயோகிப்பதால் நல்ல எண்ணையை சிலர் ஏற்பர்.
77. தேங்காயுபயோகிப்பவர் அவ்வெண்ணையை ஆதரிப்பர்.
78. சிலர் வீட்டில் தேங்காயை உபயோகிப்பதில்லை.
79. சிலர் கடுகு தாளிப்பதில்லை, சிலர் தாளிப்பர்.
80. அவரவர் முன்னோர் செய்தபடி செய்ய வேண்டும்.
81. அன்று காலை நனைத்து உலர்த்திய மடியையே அணிக.
82. எல்லா சாமான்களையும் அலம்பியே சேர்க்க வேண்டும்.
83. உப்பு வெல்லம் போன்றதை ப்ரோக்ஷிக்க வேண்டும்.
84. பஞ்சாக்ஷரீ, அஷ்டாக்ஷரீ இல்லாதவர் சமைக்கக் கூடாது.
85. பந்து அல்லாதவரோ வேலைக்காரியோ சமைக்கக் கூடாது.
86. பஹிஷ்டைக்கு காலமான ஸ்த்ரீ சமைக்கக் கூடாது.
87. பஹிஷ்டை குளித்த அன்றும் சமைக்கக் கூடாது.
88. ஈரவஸ்திரத்துடன் சமைக்கக் கூடாது.
89. 7முறை ஈரவஸ்த்ரத்தை காற்றில் உலர்த்திக் கட்டலாம்.
90. பாக(சமையல்) ஸமயத்தில் மலஜலங் கழிக்க நேர்ந்தால் ஸ்நாநம் செய்தே பாகம்(சமையல்) செய்ய வேண்டும்.
91. கர்பிணியும் நோயாளியும் பாகம் செய்யக் கூடாது.
92. கச்சமில்லாமலும் சிகையுள்ள விதவையும் பாகம் செய்யக் கூடாது.
93. பேசிக் கொண்டே பாகம் செய்யக் கூடாது.
94. காபி முதலியன அருந்தியவர் பாகம் செய்யக் கூடாது.
95. சொந்த வீட்டில் ஸ்ரார்த்தம் செய்வதே உசிதம்.
96. அன்யர் வீடானால் வாடகை தந்து செய்யலாம்.
97. புதுப்பாத்ரம் அல்லது நன்கு சுத்தி செய்ததில் சமை.
98. இரும்புப் பாத்ரம் சம்பந்தப்படவே கூடாது.
99. மணி ஓசையும் திலகமும் ஸ்ரார்த்த காலத்தில் கூடாது.
100. இரும்பும் மணிசத்தமும் பித்ருக்களை விரட்டும்.
101. சிலர் நெற்றிக்கு அணிந்து ஸ்ரார்த்தம் செய்வர். அது அது அவர் குலாசாரமாம்.
102. பசுஞ் சாணியால் வீட்டை மெழுக வேண்டும்.
103. சிரித்துக் கொண்டோ அழுது கொண்டோ சமைக்காதே.
104. தலை மயிரை அவிழ்த்துக் கொண்டு சமைக்காதே.
105. அன்னத்தை கடைசியில் வடிக்க வேண்டும்.
106. இலையில் வைக்கும் போது புகை கிளம்ப வேண்டும்.
107. ஸ்ரார்த்தத்திற்கு ஏற்றவைகள் : உளுந்து, கருப்பு எள்ளு, கோதுமை, பயிறு, பாகற்காய், மாங்காய், மாதுளம்பழம், கருவேப்பலை, எலுமிச்சம்பழம், வாழைப்பழம், வாழைக்காய், இலந்தம்பழம், தேன், நெய், பழுப்புச் சக்கரை, வெல்லம், கடலுப்பு, பசும்பால், கரணைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, ஜீரகம், ஏலக்காய், அவரைக்காய், பெரண்டை, தூதுவளை, பசுந்தயிர், வாழைத்தண்டு ஆகியவை சிலரது குலவழக்கம்.
108. முன்கூறியதுடன் தேங்காய், கடுகு, வள்ளிக்கிழங்கு, கடலை, கூஸ்மாண்டம், விளாம்பழம், மிளகாய் இவைளைச் சேர்ப்பர் சிலர். அவரவர் குலசாரப்படிச் செய்க.
109. சேர்க்கக் கூடாத பொருள்கள் : காராமணி, கொள்ளு, பெருங்காயம், முருங்கைக் காய், கத்திரிக்காய், துவரம் பருப்பு, சுரைக்காய் இவைகளை விலக்குக.
110. முக்யமானவைகளும், சிலாக்யமானவைகளும் : தேன், பலா, உளுந்து, கண்டங்கத்திரி, மின்னக்கீரை,
111. வெள்ளிப்பாத்ரம், வாழை இலை, அடி நுனி நறுக்கக்கூடாது. அதன் நரம்பையும் கிழிக்கக்கூடாது. இடதுபுரம் நுனி அமைந்திருக்க வேண்டும்.
112. பிராம்மணர் சாப்பிட்ட எச்சில் இலையை பூமியில் புதைக்க வேண்டும்.
113. பாழுங்கிணற்றில் போடுவது கிராம வழக்கம்.
114. அதை இதரர்களோ நாயோ தொடக்கூடாது.
115. நகரங்களில் வசதி இல்லாத இடத்தில் சிலர் அந்த இலையை பசுவுக்கு அளிக்கின்றனர்.
116. அன்றெல்லாம் வைத்திருந்து மறுநாள் காலையில் அப்படிச் செய்கின்றனர். அதுவும் உசிதமல்ல.
117. கோவுக்கு எச்சிலைக் கொடுக்கக் கூடாதென விதி.
118. வேறு வகையில்லாததால் வழக்கப்படிச் செய்க
119. இலையை ஸ்வஸ்திவாசநத்திற்கு முன் எடுக்க வேண்டும்.
120. பிண்டப்ரதானமான பின்பு சுத்தி செய்ய வேண்டும்.
121. கர்தா முதல் நாளும் ஸ்ரார்த்த தினத்திலும் பல் குச்சியை உபயோகித்து பல் தேய்க்கக் கூடாது.
122. ஸ்ரார்த்த பிராம்மணர் ஒருவரை யயாருவர் தொடக்கூடாது.
123. பேசவுங்கூடாது. மெளனமாக புஜிக்க வேண்டும்.
124. வேண்டியதை விரலால் தொட்டுக் காட்ட வேண்டும்.
125. நெய் பாயஸம் இரண்டையும் எறியக் கூடாது.
126. மற்றெல்லாவற்றிலும் பாக்கி வைக்கலாம்.
127. இரவு பசி எடுக்காதபடி அவஸரமின்றி புஜிக்க வேண்டும்.
128. 8 வஸுக்கள், 11 ருத்ரர்கள், 12 ஆதித்யர்கள், 12 விச்சே தேவர்கள் ஸ்ரார்த்தத்தைக் காக்க நியமிக்கப்பட்டவர்கள்.
129. ஒவ்வொரு ஸ்ரார்த்தத்திலும் 2, 2 விஸ்வேதேவர்கள் விரிக்க வேண்டும்.
130. பிரத்யாப்திகத்தில் புரூரவர் ‡ ஆர்க்ரவர் என்பர்.
131. புரூரவார்தவ ஸம்க்ஞக விஸ்வேதேவர் எனப்படும்.
132. மஹாளயத்தில் துரு‡ருசி ஸம்க்ஞகர் எனப்படும்
133. நாந்தியில் ஸத்யவஸூ ஸம்க்ஞகர். யாகத்தில் க்ரது தக்ஷ ஸம்க்ஞகர்.
134. ஸபிண்டீகரணத்தில் கால - காமுக ஸம்க்ஞகர்.
135. ஸன்யாஸாங்க ஸ்ராத்தத்தில் ஸாது - குரு ஸம்க்ஞகர்.
136. அர்க்ய பாத்ரத்தை திறந்து வைக்கக் கூடாது.
137. அதை இடம் விட்டு நகர்த்தவும் கூடாது.
138. அர்க்யமெல்லாம் அடியோடு கொட்டிவிட்டால் முன் போல் மந்திரங் கூறி புதிதாக வைக்க வேண்டும்.
139. கொஞ்சம் சிந்தினால் பாதகமில்லை.
140. வஸு, ருத்ர, ஆதித்யர் ஸ்ரார்த்த தேவர்கள்.
141. அவர்களுக்கும் சேர்த்துச் செய்வதால் நமது பித்ருக்களுக்கு அளவில்லாத திருப்தி.
142. வஸு ஸ்வரூபர் பிதா, ருத்ர ஸ்வரூபர் பிதாமஹர், ஆதித்ய ஸ்வரூபர் பிதாமஹர் சேர்த்து வஸுருத் ராதித்ய ஸ்வரூப அஸ்மத்பித்ரு பிதாமஹ பிரபிதா மஹர் என்கிறோம்.
143. தேவ வரணம் உபவீதியாய் ப்ரதக்ஷிணமாக.
144. பித்ரு வரணம் ப்ராசீனா வீதியாய் அப்ரதக்ஷிணமாக.
145. தேவர்களுக்கு நேரான தர்ப்பம் அளிக்க வேண்டும்.
146. பித்ருக்களுக்கு நுனியும் அடியும் சேர்த்து இரண்டாக மடித்துப் போட வேண்டும்.
147. பருப்பு நெய் இரண்டையும் தனியாக தொன்னையில் வைத்து இலைக்கு வலதுபுறம் இலைக்கு மேல் வைக்கமாமல் கிழே தனி கிழிச்சலில் வைக்க வேண்டும்.
148. ராக்ஷஸர் முதிலியவர்களை அகற்றுவதற்காக பிராம்மணர் சாப்பிடும் போது அபிஸ்ரவணம் சொல்லும் படிச் செய்ய வேண்டும்.
149. நாசிகேதோபாக்யானமுள்ள கட்டம் கட உபநித் கங்காவதாரணமுள்ள ராமாயண கட்டம்.
150. வேத மந்த்ரமிவைகளைக் கூறும்படி செய்ய வேண்டும்.
151. அதற்காக சில பிராமணர்களை வரிக்க வேண்டும்.
152. அவர்களுக்கு ஸ்ரார்த்தமான பின் தக்ஷிணை தர வேண்டும்.
153. ஏகோத்திஷ்டம் ஸபிண்டீகரணம் மாஸிகம் அநுமாஸிகம், நாந்தி கய்யாஸ்ரார்த்த மிவைகளில் அபிஸ்ரவணம் கூடாது.
154. ஸ்ரார்த்த பிராம்மணர்கள் ஒருவருக்கொருவர் இலையில் எச்சில் விழுந்து விட்டால், உடனே கை இலை மீது படக்கூடாது. அவர்கள் எழுந்திருக்கக் கூடாது.
155. ஆனால் இரு இலைகளையும் எடுத்து விட்டு கோமயத்தால் சுத்தி செய்து விட்டு வேறு இலை போட்டு பரிமாற வேண்டும். 156. மறுபடி பரிசோக்ஷ நம் செய்து சாப்பிடலாம்.
157. பிராம்மணர் போஜநம் முடியும் வரை அக்நி அவியக்கூடாது.
158. அக்நி அவிந்தால் உபவாஸமிருந்து மறுபடியும் ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும்.
159. வாயஸ பிண்டத்தை காக்காய் எடுக்கும் வரை ரக்ஷி.
160. சதுர்த்தர் பார்த்தால், நாய் அல்லது மற்ற பிராணிகள் பிண்டத்தை சாப்பிட்டால் புநஸ்ரார்த்தம் செய்க.
161. அன்று உபவாஸமிருந்து மறுநாளே செய்க.
162. எல்லா உபசாரமும் விஸ்வே தேவருக்கு முதலில்.
163. சாப்பிட்டு கையலம்புவது ஆசமநம் செய்வது.
164. ஸ்ரார்த்தம் முடிந்து எழுந்திருப்பது ஆகியவை.
165. பித்ருக்களுக்குத் தான் முதலில் நடக்க வேண்டும்.
166. பிண்ட பிரதாநமானபின் சிறிது அன்னத்தை மந்த்ரம் கூறி வாயில் போட்டுக் கொள்க.
167. அது ஸ்ரார்த்தாங்கமானதால் சாப்பிட்ட தோமில்லை.
168. சிலர் ஸம்ப்ரதாயம் அதை முகர்ந்துப் பார்ப்பது.
169. பிண்டங்களை அக்நி அல்லது நீரில் போடலாம்.
170. தீர்த்த ஸ்ரார்த்தமானால் ஜலத்தில் போட வேண்டும்.
171. ஸங்கல்ப ஸ்ரார்த்தத்தில் ஹோமம் ஆவாஹநம்.
172. அர்க்யம் விகிரம் பிண்டதாநம் இவைகளுமில்லை.
173. தர்ப்பங்களை இடது கையால் எடுக்கக்கூடாது.
174. ஸ்ரார்த்தம் முடியும்வரை கோலம் போடக் கூடாது.
175. புண்ட்ரம் ருத்ராக்ஷமணிவதும் கூடாது.
176. சிலரது குலாசாரம் இவைகளைத் தரிப்பர்.
177. ஸ்ரார்த்த கர்த்தா போக்தா இருவருக்கும் சில நியமம்.
178. தீர்த்தம் தவிர வேறென்றும் சாப்பிடக் கூடாது.
179. போக்தா தாம்பூலம் போடலாம்.
180. வேறெந்த வைதீக கர்மாவும் செய்யக் கூடாது.
181. போக்தா 10 முறை காயத்ரீ ஜபித்து தீர்த்தம் சாப்பிட்டால் தான் ஸந்த்யைக்கும் அர்ஹçவான்.
182. ஒளபாஸனமிருந்தால் பிறரை செய்யச் சொல்
183. ஸ்த்ரீ ஸங்கம், தானம் வாங்குதல் அளித்தலும் கூடாது.
184. அன்று வேத அத்யயனமும் செய்யக் கூடாது.
185. கர்த்தா மறுநாள் ஸ்த்ரீ ஸங்கம் க்ஷவரம் எண்ணை.
186. தானம் வாங்குதல் ஆகியவைகளை முக்யமாக விலக்குக.
187. ஸ்ரார்த்த தினத்தில் சதுர்த்தர்களுக்கு அன்னம் தரக் கூடாது.
188. காக்காய் பிண்டததை கிழக்கே எடுத்தால் செல்வம்.
189. தெற்கே எடுத்தால் நோய் உண்டாகும்.
190. மேற்கே எடுத்தால் வெளியூர் செல்ல நேரும்.
191. வடக்கே எடுத்தால் ஆயுள் குறையும்.
192. இது சகுனம் போல் சில சமயம் பலிக்கும்.
193. பிராம்மணர் வாந்தி எடுத்தால் ஸ்ரார்த்த நஷ்டம்
194. பிண்டம் உடைந்தாலும் ஸ்ரார்த்த நஷ்டம்.
195. கர்தா ஏகாதசியானால் கூட பித்ருசேம் சாப்பிடலாம்.
196. ஏகாதசி விரதம் இருந்தது போலவே ஆகும்.
197. க்ஞாதிகள் அன்று சேத்தை முகர்ந்தால் போதும்.
198. சாப்பிட்ட பலனும் வரும். உபவாஸ மிருக்கலாம்.
199. இறந்தவர் தேவஸ்வரூபிகளாகி விடுவதால் சின்னவர் பத்நீ ஆகியவர் ஸ்ராத்த சேக்ஷமும் தோமில்லை.
200. விவாஹமானாலும் பெண்கள் மாதா பிதா ப்ராதா, இவர்களது பித்ருசேம் சாப்பிடலாம். தோமில்லை.
201. விதவைகளானால் அதைச் சாப்பிடக் கூடாது.
202. மாமனார் அம்மானிவர்களது பித்ருசேம் தோமில்லை.
203. பழம் கரிகாய் பால் தயிர் நெய்தேன் இவை சேமில்லை.
204. ஏகோத்திஷ்டத்தில் க்ஞாதிகளும் சாப்பிடக் கூடாது.
205. 3 நாள் தீட்டுள்ள க்ஞாதி பித்ருசேம் புஜிக்கக் கூடாது.
206. ஸ்ரார்த்தத்திற்கு மறுநாள் தான் பரேஹணி தர்ப்பணம்.
207. பிதா இருந்து மாதாஸ்ரார்த்தமானால் தர்ப்பணமில்லை.
208. ஸபிண்டீகரணம், அனுமாஸிகம், நாந்தி, ஆப்தீகம் இவைகளில் பரேஹணி தர்ப்பணமில்லை.
209. ஸ்ரார்த்த சேக்ஷமான திலதர்ப்பங்களால் அந்த தர்ப்பணம் காலை 4 மணிக்கே பிராம்ம முகூர்த்ததில் செய்
210. தர்ப்பணம் செய்த பிறகு ஸ்நாநம் செய்ய வேண்டும்.
211. பல் தேய்க்காமல் தர்ப்பணம், பிறகு பல் தேய்த்து
212. ஸ்நாநம் என்பது சிலரெண்ணம். 4 மணிக்கு செய்தால் பிராத ஸ்நாநம் செய்க.
213. ஸ்ந்த்யாகாலம் அல்லது உதயமாகிவிட்டால் முதலில் ஸந்த்யை ; பிறகுதான் தர்ப்பணம்.
214. பங்கு பிரிந்த ஸகோதரர் தனித்தனி ஸ்ராத்தம் செய்க.
215. பாகமாகாதர்வளும் வெவ்வேறிருந்தால் தனித்தனி.
216. ஸ்ரார்த்த தர்ப்பணம் செய்யத்தான் வேண்டும்.
217. பங்கிட சொத்தில்லாவிடினும் ஒரே குடும்பத்தில் ஒன்றாக இருந்தால் தனி ஸ்ராத்தம் வேண்டாம்.
218. தனித்தனி இருந்தால் தனியாக செய்ய வேண்டும்.
219. ஸ்ரார்த்த தினத்தில் மாத்ரம் சேர்ந்து செய்வது உசிதமல்ல.
220. மூத்தவர் செய்தல் அருகிலிருந்தால் போதுமென்பது.
221. ஒரே இடத்தில் இருப்பவர்களுக்கு தான் ஏற்றது.
222. மூத்தவருடன் சேராவிடில் தனியாக செய்யக் கூடாது.
223. என்பது தர்ம விதியோ என சிலர் நினைப்பர்.
224. தாயார் இருந்தால் எல்லோரும் ஒன்று சேரவேண்டும்.
225. தனித்தனி புத்ரர் செய்தால் பித்ருகளுக்கு ஸந்தோம்.
226. பல ரூபாய் சிலவில் வெகு தூரம் பிரயாணம் செய்து வந்து ஸஹோதரருடன் ஸ்ராத்தம் செய்கிறார் சிலர்.
227. அங்கேயே வேஷ்டியளித்து தனியாக செய்யலாம்.
228. சாஸ்த்ரம் இடம் கொடுக்கவில்லை என்பதில்லை.
229. பலர் செய்தால் எங்கு போவர் பிதா ?
230. தேவதாம்ஸமானதால் எங்கும் செல்ல சக்தியுண்டு.
231. ஸ்த்ரீகளுக்குச் செய்யும் ஸ்ரார்த்தத்தில் கூட ஸ்த்ரீகளுக்கு ஹோமம் கிடையாது.
232. வரணமும் பிண்டமும் மாத்ராந்தானுண்டு.
233. அமாவாஸை தர்ப்பணத்தில் வரணமில்லை. தர்ப்பணம் உண்டு.
234. தந்தை உள்ளவன் ஜீவ பித்ருகள் எனப்படுவான்.
235. அவன் பிரும்யக்ஞ பித்ரு தர்ப்பணம் செய்யலாம்.
237. ஆனால் பிதாவுக்குள்ள தேவர் தானிவர்க்கும்.
238. தீர்த்த ஸ்ரார்த்தமுண்டு. கயா ஸ்ராத்தம் கூடாது.
239. ஆள் காட்டி விரலாலும் கட்டை விரலாலும் எள்ளை எடுக்கக் கூடாது. அது ராக்ஷஸம்.
240. மஹாளய பக்ஷத்தில் ஸ்ரார்த்தம் செய்வது அவச்யம். அதை செய்ய முடியாவிடில் ஹிரண்யமாகச் செய்க.
241. 16 நாள் திநமும் தர்ப்பணமாவது செய்ய வேண்டும்.
242. இதை செய்யாவிடில் பித்ரு சாபம் உண்டாகும்.
243. அதில் மஹாபரணி மத்யாஷ்டமி வியதீபாதம் விசேம்.
244. மஹாளய பக்ஷ த்ரயோதசி கஜச்சாயையாகும்.
245. அம் மூன்றிலும் செய்தால் கயா ஸ்ராத்த பலன். ஸன்யாசிகளுக்கு த்வாதசியில் தான் ஸ்ராத்தம்.
246. சதுர்த்தசியில் துர்மரணமானவர்க்கே செய்யலாம்.
247. மஹாளயத்தில் தான் காருண்ய பித்ருக்களுக்கு தர்ப்பணம்.
248. காருண்ய பித்ருக்கள் யார் ? யார் ?
249. சிறிய, பெரிய தகப்பன், தனதண்ணன், தம்பி, அத்தை, அம்மான், பெரிய, சிறிய தாயார், சகோதரிகள், அவர் புத்ரர்கள், இறந்த பத்நி , மாமனார், மாமியார், அத்திம்பேர், மாட்டுப் பெண், மைத்துனன், குரு, யஜமாநன், நண்பன் ஆகியவர்களுக்கும் தர்ப்பணம் உண்டு.
250. கயா ஸ்ரார்த்தத்தில் தனித்தனி பிண்டம் உண்டு.
251. மஹாளயம் செய்தவரும் ஹிரண்யம் செய்தவரும் அப்படியே செய்ய வேண்டுமென நியமமில்லை.
252. யஸளகர்யப்படி செய்யலாம்.
253. தாயிருந்தால் மாத்ருவர்க்க வரணமில்லை.
254. மங்களகரமானது நாந்தி ச்ராத்தம் என்பது.
255. விதிப்படி ஸ்ராத்தம்போல் முதலில் செய்ய வேண்டும்.
256. அதில் தர்ப்பத்திற்கு பதில் (சிலர்) அருகம்புல்எள்ளுக்கு பதில் யவதான்யம் பயன்படுத்துவர்.
257. அப்ரதக்ஷிணமாக பரிசேனம் இல்லை. ஸ்வதா என்ற சப்தங்கூடயில்லை.
258. கிழக்கு முகமாக அமர்ந்து கிழக்கு நுனியான தர்ப்பத்தில் இரண்டு இரண்டு பிண்டங்கள் வைக்கவும்.
259. ஒன்று கோத்ரம் சர்மாவுடன், அதில்லாமல் ஒன்றும்.
260. இலந்தம் பழம் தயிர் இவைகளால் தான் பிண்டம்.
261. எப்பெப்போது நாந்தீ ஸ்ரார்த்தம் உண்டு.
262. கர்ப்பா தானம், பும்ஸவன ஸீமந்தம், ஜாதகர்ம நாம கரணம் அன்ன ப்ராஸ்நம் செளளம், உபநயநம் ப்ரஜா பத்யாதி விரதங்கள் ஸமாவரத்தநம் விவாஹம் புது வீடு க்ரஹபிரவேசம் இவைகளில் நாந்தி ஸராத்தம் உண்டு.
263. ஜாதகாதிகளை உபநயநத்துடன் சேர்த்து செய்தால் ஒரே நாந்தி செய்தால் போதும். தனித்தனி வேண்டாம்.
264. முடியாதவர் நாந்தியை ஆமஸ்ரார்த்தமாக செய்யலாம்.
265. ஹிரண்ய ஸ்ராத்தமாகவும் செய்யலாம்.
266. இப்போது கல்யாணாதி சுப கார்யங்களில் ஹிரண்யமாக வரணமுமின்றி தத்தம் செய்தளிக்கின்றனர்.
267. நாந்தியில் விச்வேதேவருக்காக இரு பிராம்மணர் பிதா மஹருக்காக இரு பிராம்மணர், பிதாவிற்காக இருவர்களை வரிக்க வேண்டும். மற்றதில் பிதா பிதாமஹன் பிரபிதா மஹன் என்ற முறையில் வரிக்க வேண்டும்.
268. நாந்தியில் பிரபிதா மஹன், பிதாமஹன், பிதா என்ற முறையில் வரிக்க வேண்டும்.
269. நாந்தியில் மாத்ரு வரணம் முதலில் வரிக்க வேண்டும்.
270. பிறகு தான் பித்ரு வர்க்கம் வரிக்க வேண்டும்.
271. ஒரு நாந்தி ஸ்ரார்த்தம் செய்தபின் கர்த்தா மற்றொரு நாந்தி செய்ய நேர்ந்தால் ஆறு நாள் கழித்த பின்பே இரண்டாவது நாந்தி ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும்.
272. யாருக்காக நாந்தியோ அவன் பித்ரு தேவருக்கே.
273. தேவ வ்ருத நாந்தி ஆசார்யன் பித்ருக்களுக்கே.
274. நாந்தி செய்தவர் மூன்று மாதம் வரை அமாவாஸை ஸங்க்ரமணம் மன்வாதி யுகாதி ஆகியவைகளில் அன்ன ஸ்ராத்தம் செய்யக் கூடாது.
275. தர்ப்பணம் கூட செய்யக் கூடாது என சிலர் ஆறு மாதம் தர்ச தர்ப்பணம் செய்வதில்லை.
276. நாந்தி செய்தவர் எள்ளு தர்ப்பங்களை தொடக் கூடாது. அக்ஷதம் அருகம் புற்களால் தர்ப்பணம் செய்யலாம்.
277. இது நைமித்திக காம்ய ஸ்ரார்த்த விய மென்பர்.
278. நாந்தி செய்தவர் ஸபிண்டீகரணம் ப்ரத்யாப்திகம் முதலியவைகளை வீட்டில் செய்யலாம்.
279. ஞாயிறு செவ்வாய் வெள்ளிகளில் வீட்டில் தர்ப்பணம் செய்தாலும் எள்ளுடன் அக்ஷதை சேர்க்க வேண்டும்.
280. நேராக எள்ளை எடுக்காமல் ஒருவழி. ஒரு பாத்ரத்தில் எள்ளையும் ஜலத்தையும் சேர்த்து அதிலிருந்து வேறு பாத்ரத்தில் அந்த ஜலத்தால் தர்ப்பணம் செய்வர்.
281. பத்நீ ரஜஸ்வலையாக இருந்தால் நாந்தி கூடாது.
282. ஸ்ரார்த்தம் நமது பித்ருக்களுக்கு மாத்ரமல்ல. மற்றும் பலருக்கு ஸந்தோமளிக்கிறது.
283. ஹோமத்தால் தேவர்களுக்கு ஸந்தோம்.
284. பிராம்மண போஜனம் ஸ்வர்கிகளுக்கு இன்பம்.
285. பிண்ட தாநம் எமலோக வாசிகளுக்கு இன்பம்.
286. அன்று அன்னதானம் மனுஷ்யாளுக்கு இன்பம்.
287. உச்சிஷ்டம் பிசாசாதிகளுக்கு இன்பம்.
288. விகிரான்னம் நரகவாசிகளுக்கு இன்பம்.
289. காக பிண்டம் நாமறியாத பித்ருக்களுக்கு.
290. இங்ஙனம் ஏழு பேர்களுக்கு இன்பம் தருகின்றன.
291. ஸ்ரார்த்தம் ஒரு உயர்ந்த வைதிக கர்மா.
292. பித்ரு தேவ பிரஸாதத்தால் ஸந்ததி, ஸம்பத், வம்சம் விருத்தி, ஆரோக்கியம் க்ஞாநம் பூர்வஜன்மக்ஞாநம் பலம் முக்தி முதலிய பலவகை பலனைத் தரும்.
293. அதை விட்டவர் மாறான பலனைப் பெறுவர்.
294. பித்ருக்களுக்கு சாபந்தான் ஆயுதம்.
295. பித்ரு ஸாபம் பெறாமல் அருள் பெற வேண்டும்.
296. ஸ்ரத்தையுடன் ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும்.
297. ஸகல வித ஸம்பத்துக்களையும் அதனால் பெறலாம்.
298. பஞ்ச கவ்யம் அருந்துவது பாவ நமாக்குவதற்காக.
299. யத்வகஸ்தி கதம் பாபம் தேஹேதிஷ்டதி மாமகே ப்ராஸ்நம் பஞ்சகவ்யஸ்ய தஹத்யக்நி ரிவேந்தனம் தோலிலும் எலும்பிலும் பற்றி எனது சரீரத்தில் இருக்கின்ற பாபம் பஞ்சகவ்யத்தை சாப்பிட்டதால், தீயால் கட்டை போல் எரிகின்றது. (இது பஞ்சகவ்ய மருந்த மந்தரார்த்தம்)
300. ஸ்ரார்த்தத்திற்கு முந்திய நாள் இதை அருந்துவர்.
301. ப்ரஸவத்தீட்டு கழிந்த ஸ்த்ரீ சாப்பிடுவாள்.
302. பஞ்ச கவ்யம் ஒரு திவ்ய ஔதமாகும்.
303. ஒரு மண்டலமதை ஸேவித்தால் அபஸ்மாரமகலும்.
304. பசு ஸம்பந்தம் ஐந்தும் தர்ப்ப தீர்த்த மொன்றும் சேர்ந்தே பஞ்ச கவ்யமெனப்படும்.
305. பசும்பால் பசுந்தயிர் பசுவின் மூத்ரம் பசுஞ்சாணி பசுவின் நெய் இவை ஐந்துடன் தர்ப்பத்தில் பட்ட தீர்த்தம் ஆறாவதாம். ஒவ்வொன்றிற்கும் அளவுண்டு.
306. ஒவ்வொன்றையும் சேர்க்க மந்த்ரமுண்டு.
307. கோ மூத்ரத்தில் வருணன் வசிக்கிறார்.
308. பசுஞ்சாணியில் அக்நி வசிக்கிறார். பசுந் தயிரில் வாயு வசிக்கறார். பசும்பாலில் சந்த்ரன் வசிக்கிறார். பசும் நெய்யில் சூர்யன் வஸிக்கறார்.
309. கோ மூத்ரம் ஒரு பலம், கட்டை விரலளவு சாணி, ஏழு பலம் பசும்பால், மூன்று பலம் பசுந்தயிர், பசும் நெய் ஒரு பலம், தர்ப்ப ஜலம் ஒரு பலம் இவைகளை தனி தனியாக வைத்து பிறகு குறிப்பிட்ட படி அருகில் வைக்கவும். அதன் பிறகு மந்த்ரம் கூறி சேர்க்கவும். கிழக்கே தயிர், தெற்கே கோமூத்ரம், மேற்கே சாணி, வடக்கே நெய் இடையே பால் காயத்ரியால் கோமூத்ரத்தையும் கந்தத்வாரா என்பதால் சாணியையும், ஆப்யாஸ்வ என பாலையும் ததிக்ரா விண்ணே என தயிரையும் சுக்ரமஸி என நெய்யையும் தேவஸ்ய என தர்ப்ப ஜலமும் ஒரு பாத்ரத்தில் சேர்க்க வேண்டும். காயத்ரியால் கலக்கி மந்த்ரங் கூறி அருந்துக.
310. பஞ்ச கவ்யத்தால் பகவானுக்கு அபிஷேகமுண்டு.
311. பஞ்சகவ்ய ஹோமம் நடப்பதுண்டு. பால் ஏழ்மையைப் போக்கும். தயிர் ஸந்தாநத்தை விருத்தி செய்யும். கோமூத்ரம் ஸகல பாபங்களையும் அகற்றும். கோமயம் நோய்களை அகற்றும். நெய் மோக்ஷத்தைத் தரும்.
312. பசுவின் உடலில் 14 புவநங்களுமிருக்கின்றன. கோவின் பின்புறத்தில் லக்ஷ்மீ வஸிக்கிறாள். காலையில் எழுந்தவுடன் அதை தர்சிக்க வேண்டும்.
313. தாநம் செய்யும் போது வாலை உருவியளிக்க வேண்டும். கொம்பு முகம் நாக்குகளில் இந்த்ரன், கொண்டையில் ருத்ரன், வயிற்றில் அக்னி, மடியில் சரஸ்வதி, சாணியில் லக்ஷ்மி, மூத்ரத்தில் கங்கை கீர்த்தி தேவி, ஹ்ருதயத்தில் யமதர்மராஜன், வாலில் தர்மதேவதை வஸிக்கிறாள், மயிரில் சர்மதேவதைகள் வஸிக்கின்றனர். கண்ணில் ஸீர்யன் ப்ரகாஸிக்கிறார். ஸந்திகளில் ஸித்த புருர்கள் இருக்கின்றனர். சேஷ்டைகளில் தபஸ் வஸிக்கிறது. ஆபஸ் தம்ப பார்வண ஸ்ரார்த்த நியமங்கள் முற்றிற்று..

நன்றி : சிரார்த்த சேவா..ஸ்ரார்த்த நியமனங்கள்

No comments:

Post a Comment