Thursday, April 19, 2018

Shiva temples to have darshan on Shivaratri

*ௐௐௐௐௐௐௐௐௐ*
       *சிவ சிவ :*
     *===== ===== =====*
     *" இரவிடத்துறைவர் வேள்விக் குடியே "*
     *××××× ××××× ×××××*

         *சிவ இராத்திரி நாளில்*
*எந்த ஆலயத்தை எந்தக் காலத்தில்*
*வணங்குதல் நன்று என அன்பர்கள் பலர்*
*வினவியுள்ளனர்.*
       *இறைவன் *இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே*, *எனப் பகலில் திருத்துருத்தியில் உறைவதாகவும் , இரவில் திரு வேள்விக்குடியில் உறைவதாகவும் திரு ஞான சம்பந்தர் குறிப்பாக உறுதிபடத் தன் திருபதிகத்தில் (03-90- சாதாரி ) அருளியுள்ளார்.*
   *இது போல வேறு எந்தத் திருப் பதிகத்திலும் அருளியதாக நான் அறிந்த வரைக் கண்டேனில்லை !*
      *குத்தாலம் எனத் தற்போது அழைக்கப்படும்* *திருத்துருத்தி திருத்தலம்*
*மயிலாடுதுறை ~* *கும்பகோணம் சாலையில்*
*மயிலாடுதுறையிலிருந்து*
*மேற்கே 12 கி .மீ தொலைவில் காவிரியின்*
*தென்கரையில் அமைந்துள்ளது.* *திருத்துருத்தித் திருத்தலத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ளக் காவிரி ஆற்றுப் பாலம் கடந்து கிழக்கே ,காவிரியின் வடகரையில் மயிலாடுதுறை* *செல்லும்*
*சாலையில் 01 கி. மீ தொலைவில் உள்ளது* *இந்தத் திரு* *வேள்விக்குடி
ஆலயம்* . *ஶ்ரீ மணவாளேஸ்வரர் /* *சாந்த நாயகி @ சௌந்தர நாயகி*
*இறைவனார் திருமணம் தொடர்பாக வேள்வி நடந்ததாக திருத்தல வரலாறு உள்ளது.* 
   *மயிலாடுதுறையைச் சுற்றி வாழும் அன்பர்களும் ,ஏனைய இயன்ற அன்பர்களும் ஒரு காலமாவது ,பூசைப்* *பொருள்களுடன் ,*
*திரு*
*வேள்விக்குடித் திருத்தலத்திற்குச்* *சென்று*
 *வணங்குதல் நன்று !*
       *சுந்தர மூர்த்தி சுவாமிகளும் இந்த இரு திருத் தலங்களையும் இணைத்தே இரு திருப் பதிகங்கள் அருளியுள்ளமையும் கருத்தில் கொள்க !*
    *நான் திருமுறைகளை ஆய்வு செய்த வகையில் இறைவன் இரவில் வெளிப்பட்டுத் தோன்றியத் திருத்தலங்கள் பற்றியக் குறிப்புகளை பட்டியலிட்டுள்ளேன். !*
    *ஆதாரங்களுடன் வரைந்தால் எல்லையின்றிப் பெருகும் எனபதால் திருதலங்களின் பெயர்களை மட்டும் குறித்துள்ளேன் !*
     *1~திருவாரூர்*
*2~திரு ஆலவாய்*
*3~திருமறைக்காடு*
*4~ திருவாய்மூர்*
*5~ காஞ்சிபுரம்*
*6~திருக் கருக்குடி*
*7~திரு நெல்வாயில்* *அரத்துறை*
*8~மாறன்பாடி*
*9~ திரு ஆலங்காடு*
*10~சித்தவட மடம் 11~பழையனூர்*
*12~திரு வதிகை வீரட்டானம்*
*13~பழையாறை வடதளி*
*14~ திரு ஒற்றியூர்*
*15~ திருக் குண்டையூர்*
*(திருக் கோளிலி வட புறம்)*
*16~திரு ஆலம் பொழில்*
*17~ திரு மழபாடி*
*18~திரு இளையான்குடி*
*19~திருக் காளத்தி*
*20~ திருக் கடவூர்*
*21~ திருத் தில்லை* 
*22~ திருச் சாத்த மங்கை*
*23~ திரு நெய்ப்பேர் ( நமி நந்தி அடிகள்* *அவதாரத் தலம் )*
*24~தஞ்சாவூர்*
*25~திருப் புலீச்சுரம்*
 *(தில்லை )*
*26~ திரு மருகல்*
*27) திருச் சுழியல்*
*28~ காளையார் கோயில்*
     *இவை இறைவன் நிகழ்த்திய அற்புத நிகழ்வுகள் ,அருளாளர்*
*களுக்கு கனவில் வெளிப்பட்டு அருளியவை*
*அடிப்படையில் ஆய்வு செய்துப் பட்டியலில் இணைக்கப் பட்டன.!*
      *திரு வைகாவூர் திருத்தலம் சிவராத்திரி அன்று வேடன்* *அறியாமல்*
*அருச்சித்து அருள் பெற்றது*
*என்பர்.*
 *தவிர முதல் காலம் குடந்தை கீழ் கோட்டத்திலும் ,2-ஆம் காலம் திரு நாகேச்சரத்திலும் 3-ஆம் காலம் திருப் பாம்புரத்திலும் ,4-ஆம் காலம் நாகூர் திருத்தலத்திலும் வணங்கும் வழக்கம் உள்ளது.  இவை நாகம் அருச்சித்து அருள் பெற்றத்*
*திருத் தலங்கள் .* 
      *1~ அனபர்கள் ஒரே திருத்தலத்தில் அமைதியாக அமர்ந்து மேற்கண்டத் திருத்தலங்களின் திருப்பதிகங்களை ஓதிக்
காலங்கள் தோறும்
வணங்குதல் நன்று.*
*2~ ஒரே ஊரிலோ ,*
*அருகாமையில் உள்ளத்* *திருத்தலங்களைச்*
*சேர்த்தோ ஒரு* *காலத்துக்கு*
*ஒரு ஆலயம் என* *வணங்குதலலும் நன்று.*
*3~ வாகனங்கள் அமைத்துத் தொலை* *தூர ஆலயங்களை இணைத்து*
*வணங்க முயல்வோர் ,*
*வாகனத்தில்*
*செல்லும்* *போது ,அரசியல்*
*மட்டும் இறை சிந்தையை*
*விலக்கும் வாழ்வியல் செய்திகளைப் பேசிச் செல்லுதல் தவிர்த்தல் நன்று.*
   *4~ முதியோர்கள் இல்லத்தில்* *இருந்தவாறே*
*மேற் குறிப்பிட்டத்* *திருத்தலங்களின் இறைவரை உள் நினைந்து*
*திருப் பதிகங்களை ஓதுதல் நன்று !*
  *கடும் உடலை வாட்டும் உண்ணா நோன்பு  விரதங்கள்* *சைவர்களுக்கு*
*விதிக்கப்பட்டதல்ல !*
      *அளவோடு தூய உணவு*
*கொள்ளல் நன்று !*
     *~வீடும் ஞானமும் வேண்டிதிரேல்* *விரதங்களால் / வாடின்*
*ஞானம் என்னாவதும் எந்தை வலஞ்சுழி/ நாடி*
*ஞான சம்பந்தன செந்தமிழ்*
*கொண்டு இசை / பாடும் ஞானம் வல்லார் அடி சேர்வது ஞானமே*
*02~ 02 ~ 11 / திரு ஞான*
*சம்பந்த சுவாமிகள்.*
  *நல் வாழ்த்துகள் !*
*திருச் சிற்றம்பலம்*
 கோமல் கா சேகர்
.21. 02.17
9791232555.

நல்ல பதிவு பகிர்கிறேன்