Wednesday, April 18, 2018

Panini and thiruvotriyur temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
-------------------------------------------------------
🌙 *பெருமானின் வேதப் பொருள்.*🌙
---------------------------------------------------------
சிவபெருமானைப் போற்றிப் புகழும் திருமுறைகளினில்,
*வேண்டத்தக்கது அறிவோய் நீ*
*வேண்ட முழுவதும் தருவோய் நீ* என்று.

உள்ளத் தூய்மையும் புறத் தூய்மையும் முழுதும் தன்னகத்தே வைத்திருக்கும் 
*பாணினி* என்ற முனிவருக்கு வேதங்களைனைத்தையும் தனக்கு சித்திக்க வேண்டுமென தன்  ஆசைக்கு வழி தேடிக் கொண்டிருந்தார்.

முடிவாக, பிரமனை நோக்கி கடுந்தவம் இருக்க முடிவு செய்து தவமேற் கொள்ளவும் செய்தார்.

பாணினிக்கு தரிசனம் தந்தார் பிரம்மா,....

பாணினி,....நீ தவமிருக்கும் நோக்கம் அறிந்தோம்!. உன் ஆசை நிறைவேற வேண்டுமானால், நீ ஆதிபுரி எனும் திருத்தலம் செல்ல வேண்டும். அங்கே யமனை, தன் திரவடிகளால் உதைத்த ஈசன் எழுந்தருளியுள்ளார்.

எனக்குப் படைக்கும் தொழிலை உபதேசித்தருளியது அத் தலத்தில்தான். எனவே நீயும் உன் விருப்பம் நிறைவேற அங்கு செல்வாயாக! எனக்கூறி மறைந்தார்.

பிரமன் கூறிய ஆதிபுரி தலத்திற்கு உடனே புறப்பட்டார் பாணினி.

அங்கேயிருந்த பிரம்ம தீர்த்தத்தில் தினமும் நீராடினார். முழு திருநீறு பூசினார். ருத்திராட்சம் மாலை அணிந்து கொண்டார். பஞ்சாட்சர மந்திரத்தை சொல்லியபடி, சிவனை நிந்தனையில் இருத்தி மானச பூஜை செய்தார். மேலும் தவத்திலும் ஆழ்ந்தார்.

சிவலிங்கத்திருவுருவிலிருந்து குருவடிவாக வெளிப்பட்டார் சிவபெருமான்.....

*முனிவனே!*... உன் தவத்தை மெச்சினோம், மகிழ்ந்தோம். நீ வேண்டுவன வரம் யாது என்றார்? 

கண்ணுதலோனைக் கண்ணெதிரிலே கண்ட காட்சியால், கண்களில் கண்ணீர் மல்க, நா தழுதழுக்க, சிரசின் மீது கைகளை குவித்து மகிழ்ச்சியுடன் பாடி, ஆனந்தத்துடன் ஆடவும் செய்தார் பாணினி முனிவர்.

சிவபெருமானை நோக்கி, அடியேனுக்கு வேதங்களை யாவும் உணரும்படி அருள்புரிய வேண்டும் அதுதான் என் தவத்தின் நோக்கம் என தன் விருப்பத்தைக் கூறினார்.

தவமிருந்தோா்கள், அது வேண்டும், இது வேண்டும் என்று தன் தேவையை மட்டுமே கேட்டிருக்கிறார்கள்.

ஆனால், நீ அவர்களின் மத்தியில் 
வேதத்தையுணரும் வரம் வேண்டிக் கேட்பதால், நான் மகிழ்வுறுகிறேன்.

பாணினி,  உன் பெயராலேயே வியாகரண ( இலக்கண) நூலை எழுதுவாயாக!,  அந்நூல் மூலம் உன் விருப்பம் பூர்த்தியாகும்...என்று அருளி மறைந்தார் ஈசன்.

ஈசன் மறையவும் அடுத்த நொடிப் பொழுதில் பாணினியின் முன், பதினான்கு சூத்திரங்களும் காட்சி தந்தன.

காட்சி தந்த சூத்திரங்களைக் கொண்டு, சமஸ்கிருத வியாகரணத்தை  எழுதி முடித்தார் பாணினி முனிவர்.

இன்றும் அந்நூல் *"பாணினி வியாகரணம்"* எனும் பெயரில் புகழ் பெற்று விளங்கிக் கொண்டிருக்கிறது.

மேலும் சமஸ்கிருதத்தில் மிகவும் புகழ் உயர்ந்த இலக்கண நூல் வரலாறு இதுவேயாகும்.

இத்தலத்தில் தான் பிரம்மாவுக்கு சிவபெருமான் சிருஷ்டித் தொழிலை உபதேசித்தருளிய தலத்திலேயே பாணினி முனிவர்க்கும் அருளியுள்ள இத்தலம் திருவொற்றியூர் வடிவுடையம்பாள் ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில் ஆகும்.

பாணினியின் விருப்பத்தை நிறைவேற்றிய பரம்பொருள், அடியார்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுவார்.

அதற்கு நாம் அவனை நாடனும். அவனுள்ளுறையனும். அவனருள் பொழிய உள்தூய்மை புறத் தூய்மை கொண்டு, பக்திப்போர்  செய்வித்தருள வேண்டும்!.

*ஆகுக அடியார்களாக! நல்குக சிவ தொண்டாக!*

வட்ட விகாரமும்
வார்த்த சிலையும்
வெண்சங்கு முழக்கமும்
திரி சூல திலகமும்
வதம் செய்த பாதமும் 
கனல் மூண்ட கண்களும்
ஆர்ப்பரித்த புயங்களும்
நர்த்தன நடனமும்
நடராஜா உன்னை நினைக்கையிலே!
உன்னை நினைக்கையிலே!!
உன்னை நினைக்கையிலே!!!

       திருச்சிற்றம்பலம்.

---------------------------------------------------------
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*