Wednesday, April 18, 2018

Kadi jokes

போன வருஷம் டைரி தரலைன்னு வருத்தப்பட்டீங்களே ..!

ஆமாம் சார் இந்த வருஷம் கிடைக்குமா ?
இந்தாங்க... போன வருஷத்து டைரி!



பெப்சோடென்ட்டை தலையில் தேய்த்தால் என்ன ஆகும் ?

என்னாகும் ?

ஈறுகள் வலுவடையும்


பத்து மணிக்கு டாண்னு ஆபீஸ் போகலாம்னு பார்த்தா முடியலை

ஏன் .. . நடுவில் ஏதாவது பிரச்சினையா ?

இன்னும் வேலையே கிடைக்கலையே


உங்க மனைவிகிட்டே உங்களுக்குப் பிடிச்ச விஷயம் எது ?

என்ன சண்டை வந்தாலும், கோபம் இருந்தாலும், என்னோட சமையல்ல மட்டும் குறையே சொல்ல மாட்டா


வர வர எனக்குக் கண்ணே தெரியமாட்டேங்குது.

பின்ன... அன்னிக்கு நான் தூரத்துல போயிட்டிருக்கும்போது கரெக்டா என்னைக் கூப்பிட்டீங்களே, எப்படி ?

போகும்போதுதானே ? எனக்கு வரவரதானே கண்ணு தெரியலேனு சொன்னேன்


கல்யாணப் பெண்ணைப் பார்த்தா கொஞ்சம் வயசான மாதிரி தெரியுது..

நீங்க சத்திரம்; மாறி வந்திட்டீங்க போல.. இங்க நடக்கறது 60-ம் கல்யாணம்..



No comments:

Post a Comment