Friday, April 13, 2018

Adishankara & his teachings in tamil

கேரளா மாநிலம் ஆலவாய் என்னும் கிராமத்தில் இருந்து சுமார் ஆறு மைல் தூரத்தில் #காலடி என்கிற சிறிய கிராமத்தில் பிறக்கிறார்.

4 வயதில் தந்தையை இழக்கிறார்.

5 வயதில் கற்க ஆரம்பிக்கிறார்.

7 வயதிற்குள் அனைத்து தத்துவ நூல்களையும் கற்கிறார்!

8 வயதில் துறவியாகிறார்.#கேரளத்தை விட்டு வடக்கே #நர்மதைநதிக்கரையை அடைகிறார்.#கோவிந்தரை குருவாக அடைகிறார்..

12 வயதில் #காசிக்கு செல்கிறார்.

கடும் தவம் புரிந்து யோகத்தின் உயர்ந்த நிலையான "
#நிர்விகல்ப_சமாதிநிலை யை" அடைகிறார்.அத்வைதம்"என்ற தத்துவத்தை வெளிப் படுத்துகிறார்.காசியில் பல தத்துவ நூல்களை படைக்கிறார்.

#இந்து மதத்தை 6 பிரிவுகளாக ஒருங்கிணைக்கிறார். 
(அவை
1.கணபத்தியம்-விநாயகர் வழிபாடு
2.கௌமாரம்-முருக வழிபாடு
3.சைவம்-சிவ வழிபாடு
4.வைணவம்-விஷ்ணு வழிபாடு
5.சாக்தம்-சக்தி வழிபாடு
6.சௌரம்- சூரிய வழிபாடு)

#இந்தியா முழுவதும் சென்று தன் தத்துவத்தை பரப்புகிறார்.

செல்லும் வழியில் அனைத்து மத அறிஞர்களையும் வாதத்தில் வெல்கிறார்.

பல சீடர்களைப் பெறுகிறார் .கூடுவிட்டு கூடு பாய்தல் போன்ற பல அற்புதங்களை நிகழ்த்துகிறார்.

வடக்கே பத்ரிநாத், கிழக்கே பூரி, மேற்கே துவாரகை, தெற்கே சிருங்கேரி. ஆகிய 4 இடங்களில் மடங்களை நிறுவுகிறார்.

தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற திரும்பி வந்து தாய்க்கு இறுதிசடங்கு செய்கிறார்.

பிறகு மீண்டும் வட இந்தியா செல்கிறார்.

#இமயமலை சென்று அங்கு ஒரு குகையில் யோகநிலையில் 32 வயதில் தன் உடலை விடுகிறார்.

அவரே "உலகமே வியக்கும் "#அத்வைதம்" என்ற தத்துவத்தை வெளிப்படுத்திய #ஆதிசங்கரர்.

இந்து மத பிரிவுகளையும்,தத்துவங்களையும் ஒருங்கிணைத்து இந்து மதத்தின் சிற்பி என அழைக்கப் படுபவர்.

32 வயது (788-820)வரை மட்டுமே வாழ்ந்த அவரது தத்துவ நூல்களையும் சாதனைகளையும் இன்றும் உலகம் வியக்கிறது!

.உலக விஞ்ஞானிகளில் முதல் இடத்தைப் பிடித்த #ஐன்ஸ்டீன்படைத்த #சார்பியல்_தத்துவம்(theory of relativity)சங்கரின் அத்வைத தத்துவத்தை (குறிப்பாக அவரது #மாயா தத்துவத்தை) அறிவியல் முறையில் நிறுவுகிறது.

#குவாண்டம்_இயக்கவியல் கூறுவதும் சங்கரரின் அத்வைதம் என்ற தத்துவமே.

வேதங்களின் மூலக் கருத்தே சங்கரர் வெளிப்படுத்திய"அத்வைதம்" என்ற தத்துவமாகும்.

நண்பர்களே! கீழே ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தின் கொள்கை சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.படித்துப்பாருங்கள்

எங்கும் நிறைந்த #இறைவன்_நானே!.
இந்தப் #பிரபஞ்சம் முழுவதும் ஒன்றே! அனைத்தும் நானே! வேறாகத் தெரிவது மாயை.மனத்தின் கற்பனையே!.."#நானே_கடவுள்! 
நானே கடவுள் என்பதை உணராமல் வாழ்வது #மாயை!

என்பதே அத்வைத தத்துவமாகும்.

மாயை என்பது என்ன?

#மாயத்_தோற்றம் என்பது எளிமையான பொருள். இல்லாததை இருப்பதாக நினைத்து மயங்குவது என்றும் சொல்லலாம்.

மாயையை இரண்டு விதமாகப் பிரிக்கிறது #அத்வைத_தரிசனம்.

ஒன்று ஆவரணம்.-உள்ளதை மறைப்பது 
இரண்டு விக்ஷேபம். -இல்லாததைத் தோற்றுவிப்பது

ஆகியவையே இவை.

நாம் காணும் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் கடவுளாகிய நானே!. என்னைத் தவிர இரண்டாவதாக ஒன்றில்லை.

. மனிதர்கள், மரங்கள், விலங்குகள், புல் பூண்டுகள்ஆகிய அனைத்து உயிர்களும் அண்ட சராசரங்கள் ஆகிய யாவும் இறைவனாகிய நானே!.

இதை வேறாகக் காட்டுவது மாயை.

.இருப்பது இறைவனாகிய நாம் மட்டுமே.மாயை இதை மறைக்கிறது

இல்லாதது உலகம். மாயை இதைத் தோற்றுவிக்கிறது.

மாயையைக் கடந்தால் பொய்யான இந்த உலகம் மறைந்து மெய்யான இறைவன் நானே என்ற உண்மை விளங்கும்.

நாமும் கடவுளும் வேறு என்று நினைத்த மாய எண்ணமும் மறைந்துபோகும்.

கடவுளாகிய தன்னை உணராமல் வேறு எங்கோ கடவுளை மனிதன் தேடுகிறான்.

மனிதன் படைத்த அத்தனை கடவுள்களும்,சொர்க்கம்,நரகம் போன்ற அனைத்தும் மாயை!.

முன்னோர்களும்,சமுதாயமும் படைத்த சாதி, மதம்,இனம்,மொழி,தேசம்,போன்ற அனைத்து வேற்றுமைகளும் மாயையே.

பிறப்பு,இறப்பு,இன்பம், துன்பம், வெற்றி தோல்வி ,லாபம், நஷ்டம், புகழ் ,இகழ்ச்சி ஆகிய அனைத்தும் மாயையே!

மேலே கூறப்பட்ட அத்தனை வேறுபாடுகளும் மனித மனத்தின் கற்பனையே! மாயையே!.

.உள்ளது கடவுளாகிய நாம் மட்டுமே!

பகுத்தறிவின் மூலம் நான் யார்? என்பதை ஆராய்ச்சி செய்தால் இந்த உண்மையை உணரலாம்.

அத்வைத தத்துவத்தின் "#மாயா" கொள்கை

"நாம் இறைவன் என்பதே உண்மை.நாம் காணும் உலகமும் பொருட்களும் எல்லாமே பாலைவனத்தில் தோன்றும் #காணல்_நீர் போல ,#கனவில் காணும் பொருள் போல ஒரு பொய் தோற்றமே! இந்த உண்மை நமக்குத் தெரியவில்லை .அதற்கு காரணம் மாயை என்கிறது அத்வைத தத்துவம்.

மாயை என்றால் என்ன? மாயத் தோற்றம் என்பது எளிமையான பொருள். இல்லாததை இருப்பதாக நினைத்தும் இருப்பதை இல்லாததாகவும் மயங்குவது என்று பொருள்.

எப்படி எல்லாமே பொய்யாக இருக்க முடியும்?

இருட்டில் ஒரு பாம்பைப் பார்க்கிறீர்கள். அச்சம் ஏற்படுகிறது. அடுத்த நிமிடமே அது #கயிறு என்று தெரிந்துவிடுகிறது. அப்போது அங்கே #பாம்பு மறைந்து விடுகிறது அல்லவா?

அதுபோலத்தான் எங்கும் இருப்பது இறைவனே என்று உணர்ந்தால் உலகம் மறைந்துவிடும் என்கிறது #அத்வைதம்.

ஒரு #குடம் இருக்கிறது. அதற்குள்ளும் #ஆகாசம் இருக்கிறது. அதற்கு வெளியிலும் ஆகாசம் இருக்கிறது.

குடத்தின் #ஓடு உடைந்தால் வெளியில் உள்ள ஆகாசமும் உள்ளே இருக்கும் ஆகாசமும் ஒன்றாகிவிடுகின்றன அல்லவா? அந்த ஓட்டைப் போன்றதுதான் மாயை.

பெரிய பணக்காரர் ஒருவர் தூங்கும்போது பிச்சை எடுப்பதுபோலக் கனவு காண்கிறார். பசியால் அழுகிறார். வேறொருவர் மலையிலிருந்து கீழே விழுவதுபோலக் கனவு காண்கிறார்.

#கனவு காணும்போது அது நிஜம்போல இருக்கிறது. #வேதனை, #அச்சம் எல்லாமே நிஜமாக இருக்கின்றன. விழித்த பிறகு அது பொய் என்று தெரிகிறது. அதுபோலத்தான் மாயை விலகியதும் உண்மை புரிகிறது.

ஆழத்தில் #மறைந்திருக்கும் உண்மையை உணர்ந்ததும் மேற்பரப்பில் #தோற்றமளிக்கும் உண்மை மறைந்துவிடுகிறது.

மேற்பரப்பில் இருப்பது மாயை. கீழே இருப்பது கயிறுதான், பாம்பு அல்ல என்று உணருவதுபோல, மேற்பரப்பில் தெரிவது பொய் என்பதை அறிந்தால் பிரம்மமே நித்திய சத்தியம் எனபதையும் நாமே #பிரம்மம் என்பதையும் உணரலாம் என்பதே #அத்வைத_தத்துவ_தரிசனம்.

(எங்கும் நிறைந்த உருவமில்லா இறைத்தன்மையே பிரம்மம் என்று அழைக்கப்படுகிறது)

பாம்பாகத் தெரியும் கயிறை உணர அறிவும் #விழிப்புணர்வு தேவை. உலகமாகத் தெரியும் இறைவனை உணர #பகுத்தறிவு தேவை.

உண்மையான பகுத்தறிவின் மூலம் #நித்தியமான சத்தியத்தை உணரலாம் என்கிறது அத்வைதம்.

மாயை எப்படி வந்தது, ஏன் வந்தது? எப்போது வந்தது? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்க்கலாம்.

மாயை #அறியாமையால்(அஞ்ஞானத்தால்) வந்தது. என்று அத்வைத ஞானிகள் சொல்கிறார்கள்.

#அறியாமை எப்படி வந்தது? மாயையால் வந்தது. சொல்லப்போனால் அறியாமையும் மாயையும் பிரிக்க முடியாத அளவில் ஒன்றுடன் ஒன்று கலந்தவை.

ஒன்றை ஒன்று உருவாக்குபவை. ஒன்று இருக்கும்வரை மற்றொன்றும் இருக்கும். ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்றும் இல்லாமல்போகும்.

காரணம் இல்லாமல் காரியம் இல்லை.

விதை காரணம், மரம் காரியம்.

அடி காரணம், வலி காரியம்.

அப்படியானால் மாயையின் காரணம் என்ன?

காரண – காரிய விதியே மாயையின் உருவாக்கம்தான். எனவே மாயை ஏன் வந்தது என்னும் கேள்வியிலும் பொருள் இல்லை

காலமே மாயையின் கருவி

இந்த மாயை எப்போது வந்தது?

இதற்குப் பதில் சொல்ல முடியாது என்கிறது அத்வைதம்.

எப்போது என்பது காலத்தைக் குறிக்கிறது.

#காலம் என்பதே கற்பிதம்.

காலமே மாயையின் கருவி.

மாயைதான் காலத்தை உருவாக்கியது.

நேற்று, இன்று, நாளை என்பதெல்லாம் மாயை.

எனவே மாயை எப்போது தோன்றியது என்னும் கேள்விக்கே இடமில்லை.

மாயை உருவான பிறகே காலம் உருவானது. 
மாயை விலகினால் காலமும் விலகும்.

எனவே எப்போது என்னும் கேள்வியே அர்த்தமற்றது.

அறியாமையைப் போக்கத் தூய அறிவு, ஞானம் தேவை. அது வந்துவிட்டால் அறியாமையும் மாயையும் விலகும். அதுதான் உண்மையான விடுதலை .

இறை ஆற்றல் (பிரம்மம்) மட்டுமே உள்ளது.

என்றும் அதை பிரபஞ்சமாக எண்ணி மயங்குவது மனிதனின் அறியாமை என்றும் ஆதிசங்கரர் சொல்கிறார்.

புறவுலகம் (இறைவன்)பிரம்மம்தான். ஆனால் அதில் நாம் காணும் தோற்றங்கள், குணங்கள் ஆகியவை பொய்த் தோற்றங்களே!

தூய ஞானத்தில் உதவியால் இந்தத் தோற்றங்களை விலக்கினால் அறிபவன், அறிபொருள், அறிவு ஆகிய எல்லாமே ஒன்றாகிவிடுகின்றன.

மூன்றையும் பிரித்துக் காட்டுவது மாயை. மாயையை ஞானத்தால் கடந்தால் உணரப்படுவது ஒருமை.

இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒன்றுதான்.அது 
#இறைவனான_நாமே! வேறுபாடுகள் மேலோட்டமானவை, தற்காலிகமானவை.இதை
உணர்ந்தவர்கள் மரணத்தை வென்று சாகா நிலை அடைவார்கள்!

#அஹம்_பிரம்மாஸ்மி!


No comments:

Post a Comment