சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
---------------------------------------------------------
*இறைவன் இங்கா? இருக்கிறான்!,*
--------------------------------------------------------
ஈஸ்வரன் உலகைச் சுற்றி வலம் வர முடிவெடுத்தார்.
எதேச்சையாக ஈஸ்வரனின் எதிரில் வந்துவிட்ட நாரதரிடம், இதை தெரிவித்தார்.
அதற்கு நாரதர்,...தாங்கள் வருவதை முன்னறிவிப்பு செய்துவிட்டுச் செல்லலாமே! இதனால் பக்தர்கள் தங்களைச் சந்திப்பது எளிதாகுமே என்றார்.
சரி அப்படியே அறிவிப்பு செய்து விடு!, இந்தந்த நேரங்களில், இந்தந்த இடங்களில் தான் தோன்றப் போவதையும், அந்நேரத்தில் வேண்டுவன வரங்களை அளிப்பதாகவும் அறிவித்து விடு என ஈஸ்வரன் கூறிவிட்டார்.
ஈஸ்வரனின் அருளுரைப்படி நாரதபெருமானும், உலகமெங்கும் சென்று, ஈஸ்வரன் உங்கள் முன் தோன்றப் போகிறார் என்றும், அப்போது உங்களுக்கு வேண்டிய வரங்களையும் அளிப்பார் என்று அறிவிப்பு செய்து விட்டார்.
குறித்த நாளில் குறிப்பிட்ட இடங்களில் ஈஸ்வரன் தோன்றினார்.
ஈஸ்வரன் முன் அணைவரும் கூடிவிட்டனர். ஒவ்வொருத்தர் கையிலும் நீள நீளமான ஓலைகள் இருந்தன.
அந்த ஓலையில் உள்ளதை படிப்பதற்கே மணிக்கணக்காகும் போல! அவ்வளவு வரங்களை அள்ளியெழுதிக் கொண்டு ஒவ்வொருவரும் வந்து நின்றார்கள்.
கடவுளுக்கு சிரமமாகிப் போய்விட்டது. ஒவ்வொருவரும் இவ்வளவு வரங்களைக் கேட்டால், யுகத்தின் நிலைமை என்னவாவது?
இதற்கு ஒரு முடிவெடுக்க ஈஸ்வரன், வேறு வேறு இடங்களுக்கு நீங்கிப் போனார்.
மக்கள் விடுவதாயில்லை. ஈஸ்வரனைத் தேடித் தேடி ஓடித் துரத்தினார்கள்.
ஈஸ்வரனும், மண்டபம் சத்திரம், கிராமம், நகரமென்று ஓடிக் கொண்டிருந்தார்.
மக்களும் ஈஸ்வரன் பின்னாடியே ஓடிப்போய், இதைக் கொடு!, அதைக் கொடு!, என்று தொல்லையிட்டனர்.
திரும்பவும் ஈஸ்வரன் ஒரு யோசனை செய்தார். மனிதர்கள்தான் உள்நோக்கி சிந்திப்பதும் இல்லை, தங்கள் மனதுக்குள் இருத்திப் பார்ப்பதும் இல்லை.
ஆகையால், பேசாமல் அவர்களின் இதயத்துள் ஒளிந்து கொண்டால் என்ன? என நினைத்து, நம் மனதுக்குள் உள் புகுந்து இருந்து கொண்டான்.
இதன் பிறகு ஈஸ்வரனை யாரும் தொந்தரவு செய்வதில்லை.
ஈஸ்வரனை உணர்ந்து, இதயத்துள் இருத்தி நினைந்தோர்க்கு வரங்களை இன்றளவும் வழங்கி வருகிறார்.
மற்றபடி மானிடர்களுக்கு எது எதுவாக வேண்டுமோ? அது நேரத்தில் அதுவாக அருளித் தரும் எண்ணத்தையும் தொடர்ந்து தந்த வண்ணமே இருக்கிறார்.
இது தெரியாதோர் ஆலயம் செல்வர். இதுவும் சரிதான், ஆலயம் செல்வதினால் மனநிம்மதியோடு சேர்ந்த வரமும் சேர்ந்து கிடைக்கும்.
ஆனால், இன்னும் நிறையவர் இறைவனைக் காணாது விக்கித்து நிற்கின்றனர்.
அவர்கள் நல்லா புரிந்து கொள்ள வேண்டும்!. இறைவனைத் தேடாதீர்கள். அவன் உங்கள் இதயத்துக்கள்ளேயே இருந்து கொண்டிருக்கிறான்.
நாளை, நீங்கள் வேனுமானால் எப்போதும் போல பூஜை செய்யும் போது, சுவாமி முன் அமர்ந்து தியாணம் செய்யுங்கள்.
அப்போது உங்கள் இதயத்திற்குள்ளிருக்கும் இறைவனை நினைந்து அழையுங்கள். அவன் அங்கிருந்தே உங்களைப் பார்ப்பான்.
அறியாமை என்னும் ஆணவ இருள் நீங்குவதற்கு மாயையை இயக்கி, இப்புழுவுடலைத் தந்தான் இறைவன்.
இறைவன் தந்த இவ்வுடலை புழுவுடல் என்றா கூறுவது என வினா வேண்டாம்.
இந்த உடல் ஒரு நாள் அழுகி புழுவாகத்தான் போகிறது. அப்படி இவ்வுடலை நோய் தாக்காது அழுகாது காத்தாலும், அடக்கத்தில் இவ்வுடலை புழுதான் உன்னத்தானே போகிறது. ஆக புழுவுடல் தானே.
நாம் செய்த முன்வினைகளிலிருந்து ஒரு பகுதியை அனுபவித்துத் தீர்வதற்காக விதிக்கப்பட்ட இப்பிறவிக்கு வந்திருக்கிறோம்.
இவ்விதியையும், இன்னும் பற்பல பிறவிகளுக்காக காத்திருக்கும் பாக்கியுள்ள பழைய வினைகளையும், நமக்குத் தெரிய வந்தால் நம்மிடம் நிம்மதி இலாது போயிடும்.
ஆகவேதான் இறைவன் நம்மிடமிருந்து ஏகமானவற்றை மறைத்து அருளுகிறான்.
இறைவனின் இந்த சக்தி
*மறைப்பாற்றல்* எனப்படும்.
மறைத்தல் இறைவனின் ஐந்து தொழில்களில் ஒன்றென்பதை நாம் அறிவோமே.
சிவத்திலிருந்து சக்தியும், சக்தியிடமிருந்து மற்றேனைய தத்துவங்களும் தோன்றுகிறது.
இத் தத்துவங்கள் ஒன்றனுள் ஒன்றாக அடங்க, இறுதியில் அணைத்தும் சக்தியுள் அடங்கி சிவத்துள் ஒடுங்கும்.
ஆணவ மலத்திலிருந்து உயிரை விடுவிக்க, மறைப்பு சக்தியால், உடல்பிறவிப் பந்தத்துள் உயிர்களைச் செலுத்த, இறைவனே பேரின்பப் பிறவாமை நிலையான வீடுபேற்றை அருளுவான்.
அத்தகைய இறைவனிடம் நாம், நம் இதயத்துள்ளிலிருந்து அழைத்து வணங்கி வேண்டி, வேண்டியதைக் கேட்பீர்.
இதயத்தால் இறைவனை உணர்பவர்களுக்கு, இறைவன் அருள் சத்தியமாக உண்டு.
இப்படித்தான் திருச்சி உறையூரில் நந்தாகன் எனும் மன்னர், பேராண்மையும் படைபலமும் கொண்டு இருந்தார். இவருக்கு போர் செய்வதில் பெருவிருப்பம் கொண்டவர்.
இதனால் எதிரி நாடுகளின் மீது போர் தொடுத்து வெற்றிக் கொடிகளை நாட்டிக் கொண்டே இருந்தான்.
இந்த நேரத்தில் சுந்தரேச பாதசேகரன் எனும் பாண்டிய மன்னன் மதுரையை ஆட்சி செய்து கொண்டிருந்தான்.
இப்பாண்டிய மன்னன் சிவ பக்தியில் சிறந்து விளங்கியவன். யாரிடமும் பகைமை பாராட்டாத இயல்பு கொண்டவர்.
பாண்டிய மன்னனைப் பற்றி அறிந்து கொண்ட நாந்தக மன்னன், இவன் குணத்தாலேயே இவனை வென்று விடலாம்...என்று தன் படைகளை தயார் செய்து பாண்டிய நாட்டை நோக்கி படையெடுத்துப் புறப்பட்டான்.
திடீரென்று பெரும் படையுடன் புறப்பட்டு வருவதை அறிந்து கொண்டான் சுந்தரேசபாத சேகரன்.
இந்நிலையை இறைவனே காக்க வேண்டுமென்று முடிவெடுத்து, ஓரிடத்தில் அமர்ந்து தியாணித்தான்.
இதயத்திற்குள் இருத்தி வைத்திருந்த சொக்கநாதப் பெருமானையும், அன்னை மீனாட்சியையும் வாவென அழைத்தான்.
அப்போது இறைவன் சுந்தரேசபாத சேகரனிடம், என்ன வேண்டும்? என்றார்.
சொக்கநாதனே!", யாருடனும் பகைமை கொண்டிராத என்னுடன் போரிட நாந்தகன் வருகிறான்.
என் குடிகளை எங்ஙனம் காப்பேன்?, என்னைக் காக்கும் நீயே என் குடியைக் காக்க வேண்டும் என்றான்.
அதற்கு மன்னன் இதயஸ்தானத்திலிருந்த இறைவன், நீ' போருக்குப் புறப்படு. வெற்றி உனக்காகும் என மொழிந்தார்.
சுந்தரேசபாத சேகரனும் போருக்குப் புறப்பட்டான். இம்மன்னனுக்குத் தெரியா வண்ணம், அவன் படைகளுக்கு பின்னால் சொக்கநாதர் படையுடன் உடன் சென்றார்.
கடுமையாக போர் நடந்தது.
நாந்தகனோ,.... சிறு படையுடன் வந்திருக்கும் சுந்தரேசபாத சேகரனை வென்று விடலாம் என நினைத்து அலட்சியமாக போர் செய்தான்.
சுந்தரேசபாத சேகரனோ,... சிறு படைகளை கொண்ட நாம், பெரும் படைகள் கொண்ட நந்தாகனை எவ்வாறு வெல்லப் போகிறோம் என்று நினைத்து போரிட்டான்.
சந்தரேசபாத சேகர மன்னனின் கண்ணுக்குத் தெரியாதவாறும், நந்தாகனின் படைகளுக்கு பெரும் படைகளாகத் தோன்றியவாறும் இறைவன் காட்சி தந்தான்.
இறையருளை எதிர்த்து யாரால் நிற்க முடியும்!" சொக்கநாதப் பெருமான் அருளால், நந்தாகனின் படைகள் புறமுதுகிட்டுத் தோற்றோடின.
வீம்பாலும் வெறியாலும் போர் தொடுத்த நந்தாகனை விரட்டினார் இறைவன்.
நந்தாகன், ஆயுதங்களை இழந்தான். படைகளை இழந்தான். பெரும் கரிகளையும், பரிகளையும் இழந்தான்.
தோற்றுவிட்டு ஓடிச் சென்ற வேகத்தில், வழியில் இருந்த பெருமடு ஒன்றில் வீழ்ந்து உயிரை விட்டான்.
வெற்றிக் களிப்போடு திரும்பிய பாண்டியன், நேராக தன் படைகள், மொத்தத்தையும் அழைத்துக் கொண்டு சொக்கநாதர் ஆலயம் சென்றான்.
மன்னனும் அவன் படையோர்களும், இறைவன் முன் விழுந்து பணிந்து வணங்கினர்.
சொக்கநாதப் பெருமானே....உன்னருளால் பகை யொழியப் பெற்றேன். பகை இல்லா மனமும், பகையில்லா வாழ்வும் அருளும் பரம்பொருளே!.... என்னையும் என் குடியையும் காத்தருளியதற்கு மிக்க நன்றி!.என்று சொல்லி பிரார்த்தித்தார்.
முதலில் இதயஸ்தானத்திலிருந்த இறைவனை எழுந்தருள வைத்த மன்னன். பின்பு ஆலயம் வந்து நன்றி கொடுத்து வணங்கினான் சுந்தரேசபாத சேகர மன்னன்.
என்ன?, நாமும் முயற்சிப்போமா!
திருச்சிற்றம்பலம்.
----------------------------------------------------------
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment