Thursday, March 1, 2018

Pudu periyavaa's demise

Courtesy:Sri.J.K.Sivan

ஒரு விண்ணுலக விஷயம் J.K. SIVAN

இந்திரனுக்கு வியர்த்து கொட்டியது. என்ன இங்கே இன்று இவ்வளவு கூட்டம். விண்ணுலகவாசலில் ஏன் இத்தனை பேர்?
என்ன விசேஷம் நாரதா நீ பார்த்து வழக்கம் போல் சமாச்சாரங்கள் தெரிந்து கொண்டு வந்து சொல்.
'' கொஞ்சநாளாகவே நமது இந்த விண்ணுலகில் நிறைய பேர் ஏதேதோ பேசிக்கொண்டிருப்பது காதில் விழுகிறது இந்திரா''
''என்ன அப்படிப்பட்ட பேச்சு நாரதா?''
''இந்தியர்களில் முக்கியமானவர்கள் தான் ரொம்பவும் அதிர்ந்து போய் இருக்கிறார்கள் என்று தெரிகிறது''
''எனக்கு தெரியாமல் அப்படி என்ன அசம்பாவிதம் இங்கே நடந்தது?''
''இங்கே எதுவுமில்லை இந்திரா. அங்கே தான்''
''அங்கே என்றால் எங்கே?
''பாரத தேசத்தில் தான் புதிது புதிதாக நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக ஏதேதோ நடக்கிறது என்று அறிகிறேன் இந்திரா''
''அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் நாரதா?'' நாம் இங்கு எதற்கு சஞ்சலப்படவேண்டும்?''
''இங்கிருக்கும் சில ஜீவாத்மாக்கள் அங்கிருந்து வந்தவை அல்லவா, அவர்கள் தான் பொறுமை இழந்து காணப்படுகிறார்கள்''
''புரியும்படியாக சொல்லேன் நாரதா?''
''இதோ அங்கங்கே நடப்பதை எல்லாம் உங்களுக்கு காட்டுகிறேன் நீயே அவர்கள் பேசுவதைக் கேள் இந்திரா.''
++
நாட்டு நடப்பு பற்றிய பேச்சு அங்கே காந்தி, நேரு, விவேகானந்தர், பாரதியார், அப்துல் கலாம், காமராஜர், சிவாஜி கணேசன்,எம்ஜியார், ஜெயலலிதா போன்றோர் கலந்து பேசியவைகளில் கொஞ்சம் கேட்ட இந்திரனின் பார்வை இன்னொரு இடத்தில் ஒரு ஆஸ்ரமம் போன்ற இடத்தில் நடப்பதில் உன்னிப்பாக ஆழ்ந்தது. அங்கே....

++

பரமாச்சாரியார் ஒரு அரசமரத்தடியில் தியானத்தில் ஆழ்ந்திருக்கிறார். அருகே சில பக்தர்கள் அங்கேயும் விடாமல் அவரைச்சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள்''
இன்று அவர்கள் பலர் கண்ணிலே கண்ணீர். துக்கம் தொண்டை அடைக்கிறது. கண் திறந்த மஹா பெரியவா என்ன என்று தலையசைத்து ஜாடையாக கேட்கிறார்கள்.
''பாரததேசம் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது பெரியவா''
''..........''
''புதுப்பெரியவா உங்களை தேடிண்டு வந்துட்டா இங்கே ''
''.................''
''நீங்களும் இல்லே, புதுபெரியவாளும் இல்லேன்னு தாயை இழந்த கன்றுகள் மாதிரி பக்தர்கள் அங்கே துடிக்கிறார்கள். ஒரே ஒரு சமாதானம் பால பெரியவா இருக்கிறது தான். இனிமே அவருக்கும் பொறுப்பு ஜாஸ்தி ஆயிட்டதே''
''........................''
புதுப்பெரியவா கடைசிலே இங்கே வருவதற்கு முன்பு மனசு ரொம்ப உடைஞ்சு போய்ட்டா''
''............................''
''அபவாதம், அக்கிரமம், அநியாயம், அதர்மம், இன்னும் என்னென்ன உண்டோ அதெல்லாம் கூட அனுபவிச்சாச்சு''
''ஜகத் குரு ன்னு ஒரு லட்சிய பொறுப்பை வகிச்சா அதோட எல்லாமும் தான் வரும். மனசை தளரவிடாமல் பகவான் மேலே பக்தியோடு ஆச்சார்யாள் காட்டிய வழியிலே நடக்கறது ஒண்ணுதான் மனசிலே இருக்கணும். போற்றுவதும் தூற்றுவதும் ரெண்டுமே சமமாக எடுத்துக்கணும்.

''பெரியவா.....இதோ வந்துட்டா''
''ஜெயேந்திரர் குருவின் பாதாரவிந்தங்களில் வந்தனம் செய்தார். நீண்ட இடைவெளிக்குப்பிறகு நேரில் சந்தித்த இருவரும் முக மலர்ச்சியோடு மௌனமாக உறவாடினார்கள்.
என் கடமையை பூலோகத்தில் நீங்கள் காட்டிய பாதையில் சென்று நிறைவேற்றிவிட்டுத்தான் வந்திருக்கிறேன் குருநாதா''
என் கடைசி நேரம் கூட குருவந்தனம், குரு த்யானம், குருவை சேர்தல் என்று தான் இருந்தது.'
எது நடக்க பகவான் சித்தமோ அது நிறைவையே தரும். நிறைவேறியே தீரும். இதில் எந்த மாறுதலும் இல்லை.
நீ நான் கண்டெடுத்தவன், தேர்ந்தெடுத்தவன், எனக்குப் பிறகு பீடத்தை அலங்கரித்தவன். என் வழியில் சென்றாய். லோக க்ஷேமத்திற்கு ஹிந்து சனாதன முன்னேற்றத்துக்கு பாடுபட்டாய் சில வழிகளை பின் பற்றினாய். எதுவும் எல்லாருக்கும் பிடிக்கும் என்று எதிர்பார்ப்பே நமக்கு கிடையாது. நம் கடமையை செய்ய தான் நமக்கு அதிகாரம் என்று சொல்லி முடித்த மஹா பெரியவா மீண்டும் த்யானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

++
இந்திரன் நமக்கு இன்னொரு குருவும் இங்கே கிடைத்தது நமது அதிர்ஷ்டம் என்று சந்தோஷித்தான். பூமியில் பார்த்த நாரதர்
இந்திரா பாரத தேசத்தில் பக்தர்கள் இன்னும் சோகத்தில் இருந்து மீளவில்லை. பால பெரியவா என்ற விஜயேந்திரர் இனி பெரியவா என்ற பதவியில் வழிநடத்த காத்திருப்பது தெரிகிறது என்று இந்திரனுக்கு எடுத்துரைத்தார்.

Image may contain: 5 people


No comments:

Post a Comment