Monday, March 19, 2018

Plumber and vibhooti

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
---------------------------------------------------------
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்*
----------------------------------------------------------
அடியேன் வீட்டிற்கு அருகில் இருக்கும் பிளம்பர் ஒருவருக்கு, சிவத்தின் மீது கொஞ்சம் ஈடுபாடு வைத்திருந்தார். ஆனால், அவர் நெற்றியில் விபூதி தரிப்பதில்லை.

சிவ நூல்களை படிப்பதற்கு, அடிக்கடி வந்து அடியேனிடம் வாங்கிச் செல்வார். அப்போதெல்லாம் அவரிடம் மூவிரலால் விபூதியை தரிக்கச் சொன்னேன்.

அதற்கு அவரோ, வெட்கமாக இருக்கிறது, அடுத்தவர் கேவலா நினைப்பர்கள் என்றார்.

விபூதி பூசுவது என்பது கேவலமா? 'பட்டை' என்றும் அதை அசிங்கமாகவா நினைப்பார்கள்?, என்று விபூதியின் தன்மை பற்றி, அவரிடம் தொடர்ந்து வற்புறுத்தி கூறினோம். 

அவர், அடியேனின் வாங்கிச் சென்ற சிவநூல்களை படிக்க படிக்க, சைவத்தில் உள்ள நெறிமுறைகளால் ஈர்க்கப்பட்டார் அந்த பிளம்பர்.

முதலில் நெற்றிக்கு பட்டும் படாமலும் சின்தாக கீற்றுப்போல திருநீற்றைப் பூசி வர ஆரம்பித்தார்.

இப்பொழுதெல்லாம் அவர், நெற்றிய நிறைய விபூதியை அணிந்தே வெளிவருகிறார்.

ஒரு முறை அவரிடம்.....
என்ன!, எப்படி இருக்கிறீர்கள்? வேலைகள்  நல்லவிதமாக நடக்கிறதா? என விசாரித்தேன்.

அதற்கு அவர், நல்லா இருக்கேன் ஐயா!, இப்பொழுதெல்லாம் என் கோலத்தைப் பார்த்து (நெற்றியில் விபூதி இருக்கும் கோலம்) வேலையை யாரும் மறுப்பதில்லை. இவன் சிவனடியான், இவனிடம் வேலையும் ஓழுங்கும் நல்லா இருக்கும் என்று வேலையை தருகின்றனர். இதனால் எனக்கு நிறைய வேலைகள் கிடைக்கிறது. இப்போது சந்தோஷமாக இருக்கிறேன் ஐயா! என்றார்.

அவரின் இந்த பதில், மனதிற்கு இதமாக இருந்தது அவரின் பேச்சு முழுமையும் சந்தோஷமாக இருந்தது.

பலர் பார்க்க, கண்டத்தில் உருத்திராட்சமும், நெற்றியில் விபூதியும் காட்டி என்ன பயன்?

இது சைவ சின்னம் என்பது மட்டுமல்ல, இதனுள் பரமன் இருப்பதை, இந்த பிளம்பர் உணரப் பெற்றது போல, எல்லோரும் உணரப் பெற வேண்டும். அதை உணரும் முடிவில் சக்தி கிடைக்கும்.

ஆக, நீங்களும், மற்றோர்களிடம் சைவத்தை ஒழுக மெனக்கெடுங்கள். பெரும்பாலும் சின்ன சின்ன சைவ நூல்களை வாங்கி பலருக்கும் வாசிக்கக் கொடுங்கள்.

சைவம் தழைக்க, திருஞானசம்பந்தரின் தந்தை சிவபாதவிருதயர், முதன் முதலில் சைவம் வளர்க்க அத்தனை பாடுபட்டார். வேள்விகள் செய்வதற்கு பொருளாதாரமின்றி மிகவும் கஷ்டப்பட்டார்.

அப்பொழுதெல்லாம் இறைவனுக்கு தொண்டு செய்ய அவ்வளவாக ஆட்கள் இருந்ததில்லை.

இதில் வேறு, சமணமதத்தார்கள் எதிர்விளைவுகளை உருவாக்கினார்கள். ஆட்சியிலிருக்கும் அதிகாரத்தை உடையோர் மூலமாக, இதை நிறைசெழுத்தி வந்தார்கள்.

சைவத்தின் மீது பற்று கொண்டுள்ளோர்கள் இதை எதிர்க்கக் திராணியின்றி அவ்வளவு வேதனைகளை அனுபவித்தனர்.

இதையெல்லாம் கண்ட சிவபாதவிருதயர், சைவவளர்ச்சிக்கு மனம் படைத்தவர்கள் உருவாகி வரமறுக்கிறார்களே என வேதனை கொண்டிருந்தார்.

சமணத்தோரின் மிரட்டல்களே, அந்த காலத்தில் சிவனடியார்கள் பெருக தடையாக இருந்து வந்தது.

இந்த வேதனைகளையெல்லாம் கண்டு மனம் பொறுக்காத சிவபாதவிருதயரால் சமணர்களை எதிர்க்க முடியாமல் மனம் புழுங்கினார்.

அவர் என்ன செய்வார்!, இறைவனுக்கு பூசனை செய்து வருபவர். ஆதலால் அவர், நாட்டம் இருக்கும் இடத்திலேயே முறையிட எண்ணி, இறைவனினிடத்திலே முறையிட்டார். அழுது புலம்பினார். சைவம் விளங்கிப் பெருக அனுதின பூஜையிலும் விண்ணப்பித்து வந்தார்.

நாம் படிக்கிறபோது, மூன்று மாதத்திற்கு ஒரு முறை பரீட்சை வரும் அது, *(திறமையின் வெளிப்பாட்டைக் கொணரப்படும் செயலுக்காக)*

அப்போது, வினாத்தாளை கொடுப்பார்கள். இது,  *( விண்ணப்பத்தின் மனு.)*

நாம், வினாத்தாளுக்கு பதில் வரைவோம் இது *(இத்தாள்களை, உரியோரிடம் சேர்த்து மதிப்பெண் பெறுவதற்கு.)*

இறைவன் பார்வைக்கு வரப்பட்ட அத்தனைக்கும் அதற்குரிய மதிப்பெண்ணை அவர் வழங்கிப் பெருக்குவார்.

இப்படித்தான், ஒவ்வொரு பயிற்சிலும் விண்ணப்பம் செய்வது போல, சிவபாதவிருதயர் ஒவ்வொருநாளும் இறைவனிடத்திலே முறையிட்டழுதார்.

அந்த நேரத்தில் அவர் மாற்றுமதத்தாரை எதிர்க்க மனமிலாலாமல், ஈசனிடம் மட்டுமே முறையிட்டு விண்ணப்பங்களை நிறைத்து வந்தார்.

ஒவ்வொரு நாள் பூசையிலும், இறைவனிடம் சைவம் தழைக்க அவர் விண்ணப்பம் வைக்காமலிருந்ததில்லை.

இறைவன், தேர்வின் தாள்களை திருத்தி மதிப்பெண்களை வரைந்தார்.........

ஆமாம், சிவபாதவிருதயரின் விண்ணப்பத்தின் மீது கிடைத்த அதிகமதிப்பெண்களின் கருணையினால், திருஞானசம்பந்தர் நமக்கு கிடைத்தார்.

அதுவும் சைவம் வளர்க்க, ஒழுக நினைத்த சிவபாதவிருதயருக்கே மைந்தனாக திருஞானசம்பந்தர் அவதரித்தார். 

(இது காலத்தின் கட்டாயம்.)
இதன்பிறகுதான் சைவசமயம் எழுச்சி பெற்றது.

ஆக, சைவம் தழைத்த இப்பூமியில் சைவநெறிகளை மற்றவர்களிடம் கூற, நாம் ஒவ்வொருவரும் பங்கெடுக்க வேண்டும்.

இது போராட்டமல்ல! சைவத்துள் இருந்தால் அதற்கு இறப்பு இல்லை. நமக்கு பிறப்பும் இல்லை. இறப்பையும் பிறப்பையும் விளக்கிக் கூற வேண்டும்.

ஒருநாள் எல்லோரும் வீரசைவராக இருப்போம். அப்போது நாயன்மார்களின் காலத்தை நாம் பார்ப்போம்.

இப்படித்தான்............

கன்னியாகுமரிக்கு அருகில் முருகன் குன்றம் என்ற ஒரு ஊர் இருக்கிறது.

இந்த ஊரில் முருகப் பெருமான் கோயில் ஒன்றும் இருக்கிறது.

இதே வாழ்ந்து வரும் மிக மிக செல்வந்தாரான ஒருவருக்கு, கந்தவேலவன் என்ற ஒரு மகன் இருந்தான்.

தந்தை மகனிடம்,...முருகப் பெருமான் நிகழ்த்திய அற்புதங்களை விளக்கி ஒவ்வொரு நாளும் கூறி வருவார்.

இந்நிகழ்வுகளையெல்லாம் கேட்டு வந்த கந்தவேலவனால், நாளடைவில் முருக பக்தனானான்.

படிப்பை முடித்ததும், வேலை கிடைக்கும் வரைக்கும் முருகனாலயம் வந்து அடியார் தொண்டு செய்து வந்தான்.

முருகனுக்காக எடுக்கப்பட்டு வரும் ஒவ்வொரு விழாக்களிலும் கந்தவேலவன், ஆலயத்துள் இருக்கும் முருகப் பெருமானை வணங்குவதைவிட மேலாக, முருகனாலயத் தரிசனத்திற்கு வரும் அடியார்களுக்கு, அவர்களுக்கு பணிபுரிவதையும், தொண்டு செய்வதையும் தொடர்ந்து வந்தான்.

அன்றன்று அடியார்களின் தொண்டுக்குப் பிறகு, முருகனிடம் வந்து கண்ணீர் வடித்து உருகி உருகி வணங்குவான்.

இப்படித் தொடர்ந்து அவன் முருகனைப் பெருமானை வணங்கி வரும் ஒரு நாளின் போது அவன் முருகனிடம்.....

உன்னையே நினைத்து நினைத்து உருகுகிறேனே!, எனக்கு நீ காட்சி தரமாட்டாயா?, உன்னை வணங்கிய அருணகிரிநாதருக்கு நீ காட்சி தரவில்லையா?,... ஏன்?, ஒளவைக்கும் காட்சி கொடுத்தாயே! 

அதே பக்திதானே என்னிடம் இருப்பதாக நான் உணர்கிறேன். பிறகு ஏன் நீ எனக்கு காட்சி தர மறுக்கிறாய்! என்று அழுதான்.

அன்று தைப்பூசத் திருநாள் திருவிழா நடந்து கொண்டிருந்த சமயம்.

வழக்கம்போல் முருகனிடம் வந்து வேண்டுதலை சொன்னான். பூசனையும் புரிந்தான்.

அப்போது கந்தவேலவனுக்கு, முருகப் பெருமான் பன்னிருதிருக்கரங்களுடன் காட்சி தந்தார்.

காட்சியைக் கண்ட கந்தவேலவனுக்கு, இக்காட்சி அதிர்ச்சியாக இருந்தது. பரவசத்தில் அப்படியே மெய் மறந்து கண்ணீர் உருக, வார்த்தை எழா வண்ணம், நின்று கை தொழுதான்.

அப்போது, ஆலயத்துள் அரோகரா கோஷம் வெளிப்பட்டது. அடியார்களின் ஆர்ப்பரித்த கூச்சல் அதைவிட மேலாக ஒலித்தது.

அப்போதுதான் கந்தவேலவனுக்கு நினைவு வந்தது. அன்னதான கூடம் சென்று, அடியார்களுக்கு அன்னம் பரிமாற வேண்டுமென்று......

உடனே கந்தவேலவன் முருகப் பெருமானை பார்த்து, நீ என் வேண்டுதலுக்கு காட்சி தந்தாய்.

ஆனால், அங்கே அடியார்களுக்கு அன்னம் பரிமாறும் நேரம் வந்து விட்டது. அடியார்களை பசியுடன் காக்க வைக்கக் கூடாது.

ஆதலால் இந்த நேரத்தில் உன் காட்சியைக் கண்டு கொண்டிருப்பது, அடியார்களின் பசிப் பாவம் என்னை வந்து சேரும். 

ஆதலால், நான் போய் அடியார்களின் அன்னம் பரிமாறி முடித்தபின்பு வருகிறேன். ஆதலால் அது வரை இங்கேயே நில்! என சொல்லி, அன்னதானக் கூடம் ஓடிப் போனான்.

மொத்த அடியார்கள் கூட்டத்துக்கும் அன்னதான பரிமாறுதல் முடிந்ததும்... மீண்டும் முருகன் சந்நிதிக்கு ஓடி வந்தான்.

என்ன ஆச்சர்யம்!

அங்கே அவ்விடத்திலேயே முருகப்பெருமான், பக்தன்  கந்தவேலவனுக்காகக் காத்து நின்றிருந்தார்.

வியந்து போனான் கந்தவேலவன். நெடுஞ்சான்கிடையாய் முருகப்பெருமானின் திருபாதங்களில் வீழ்ந்தெழுந்தான்.

காத்து நிற்க வைத்த என்னை நீ மன்னித்து காக்க வேண்டும் என்றான்.

அப்போது முருகப் பெருமான்,... கந்தவேல் வா!', எனக்கு நீ செய்யும் பூஜையை விட, அடியார்களுக்கு நீ செய்யும் தொண்டே மிகச் சிறந்த தொண்டு.

அடியார்களின் தொண்டுக்கு முன்னால் நாம் நிற்பதொன்றும் பெரிதல்ல! மேலும்,... ஒவ்வொரும் என்னைத் தரிசிக்கும்போது, அது, இது, எது என்று எதுவெல்லாமே கேட்பார். ஆனால் நீ வேண்டிக் கேட்டதெல்லாம் *என்னை நீ காண வேண்டும்* என வேண்டுதல் வைத்ததுதான் எனக் கூறி ஆசீர்வதித்தார்.

அடியார்களுக்குத் தொண்டு செய்யும் அடியார்க்கு ஆண்டவன் தரிசனம் நிச்சயம் உண்டு. இதை அணைவரும் உணர வேண்டும்.

ஆதலால்தான் அடியேனின் கருத்தும்.....ஒவ்வொரு பதிவிலும், *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்* என்பனதாது.

இப்பதிவுகளோடு,
அடியேனின் பிறந்த நாளான இன்று உங்களை........

இனிய புகழோடு அரிய கலைகளையும், வீரம் மற்றும் வெற்றி கொண்ட மக்கட் பேறுகளுடனும், துணிவும், செல்வமும் கூடவே இருந்து, நனிவிளையும் தாணியங்களை நல்லுடலோடு புசிக்கப் பெற்று, இன்பமாக இருந்து அறம் பல செய்து, மனம்போல நெடுவாழ்நாள் கிடைக்கப் பெற்று, மலர்கின்ற புகழ்களோடு, பொறுமைகள் அணைகட்டி,  புனிதமுறு பதினாறு பேறும் வாய்த்து, முக்தி பேறு அருள இறைவனை மறவா மனமும் பெற்று, அடியார்கள் அணைவரும் வாழ்க வாழ்க வாழ, இறைவனிடம் வேண்டிக் கொண்டேன்.
              நன்றி!

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
திருச்சிற்றம்பலம்..
திருச்சிற்றம்பலம்...
------------------------------------------------------
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment