Monday, March 5, 2018

Equipoise like dinner-positive Story

🌿🌿🌿🌿🌿ஞானியைப் பார்க்க வந்த ஒருவர் 

'ஞானத்தில் சிறந்த ஞானம் எது சுவாமி..???' என்று கேட்டார்.

'இன்பத்தில் மகிழ்ச்சி அடையாமலும் 

துன்பத்தில் சோர்வடையாமலும் இருப்பதுதான் 

உண்மையான ஞானம்' என்று பதிலளித்தார் ஞானி. 

கேட்டவருக்கு சற்றுக் குழப்பமாக இருந்தது. 

"சலவைத் தொழிலாளி ஒருவரது கழுதையைக் காலையிலும் மாலையிலும் கவனித்துப் பார்த்தால் 

இந்த உண்மை புரியும்" என்று கூறி அவரை அனுப்பி வைத்தார் ஞானி. 

ஞானி கூறியபடியே காலையும் மாலையும் கழுதையைக் கவனித்தும் அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. 

திரும்பவும் ஞானியிடம் வந்து கேட்டபோது 

ஞானி விபரித்தார் 

"காலையிலே அழுக்குத் துணிகளைத் தனது முதுகிலே சுமந்து செல்கின்ற கழுதையானது, 

தாம் இவ்வாறு அழுக்குகளைச் சுமந்து செல்கிறோமே, 

சலவைத் தொழிலாளி வீட்டுப் பசுவுக்கு இவ்வாறு சுமையைச் சுமக்கும் நிலை இல்லையே என்று வருந்துவதும் இல்லை 

 அதேபோன்று மாலையிலே, 

அந்தக் கிராமத்து அறிஞர்கள் பெரியோர்கள் உடுத்துகின்ற தோய்த்துலர்ந்த துணிகளையெல்லாம் நான் தானே முதுகில் சுமந்து வருகிறேன். 

நான் எனது உடலில் சுமந்து வந்த உடைகளைத்தானே அவர்கள் தங்கள் உடலில் உடுத்தப் போகிறார்கள் என்று இறுமாப்பும் கொள்வதில்லை. 

அதைப் பார்த்துத்தான் நான்கூட ஞானம் கற்றுக் கொண்டேன்" என்றார் ஞானி. (நற்சிந்தனை)

உலகம் நன்மையும் சொல்லும் தீமையும் சொல்லும்.

அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாதீர். 

தாம் இல்லாதபோது தம்மைப்பற்றிப் பிறர் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்ற உண்மை மட்டும் மனிதர்களுக்குத் தெரிந்துவிட்டால், 

இந்த உலகத்தில் ஒரு சிநேகிதர்கூட இருக்கமுடியாது.

No comments:

Post a Comment