Wednesday, February 14, 2018

song for doing namaskaaram to Guruvayoorappan

கோயில் முன்னே கூடி நின்று 
கோடி ஜென்ம பாவம் தீர 
குருவாயூரப்பா உன்னை 
நமஸ்காரம் செய்கின்றோம்

திருமேனி தரிசனம் 
நிர்மால்யமாகவே கண்டு 
கிரிதரா உன்னை 
நமஸ்காரம் செய்கின்றோம்

சந்தனக் காப்பு கழற்றி தைலம்
பூசிக்கொண்டு நிற்கும் 
நந்த கோபாலனே உன்னை
நமஸ்காரம் செய்கின்றோம்

எண்ணெய் ஸ்நானம் செய்து 
கையில் வாழைப்பழத்தோடு நிற்கும் 
கண்ணா உந்தன் பாதம் 
நமஸ்காரம் செய்கின்றோம்

குடம் குடமாக பாலை 
அபிஷேகம் செய்யும் வேளை 
கோவிந்தனே உன்னை 
நமஸ்காரம் செய்கின்றோம்

கொண்டை மயில் பீலிமின்ன 
மஞ்சள் பட்டு கட்டிக் கொண்டு 
குழலூதும் கண்ணா உன்னை 
நமஸ்காரம் செய்கின்றோம்

தெச்சி மந்தாரம் துளசி 
தாமரைப் பூமாலை சாற்றி 
அச்சுதனே உன்னை 
நமஸ்காரம் செய்கின்றோம்

திவ்ய நாமம் சொல்லிக்கொண்டு 
ஸ்ரீ வேலியை சுற்றிக்கொண்டு 
ஸ்ரீதரா உன்னை 
நமஸ்காரம் செய்கின்றோம்

தீரா வினை தீர்த்து வைத்து 
நான் கோரும்வரம் அளித்திடும் 
நாராயணா உன்னை 
நமஸ்காரம் செய்கின்றோம்

கோயில் முன்னே கூடி நின்று 
கோடி ஜென்ம பாவம் தீர 
குருவாயூரப்பா உன்னை 
நமஸ்காரம் செய்கின்றோம்.

Koil Munney Koodi Nindru
Kohdi Jenma Paavam Theera
Guruvaayoorappaa Unnai
Namaskaaram Seigindrohm.

Thirumeyni Dharisanam
Nirmaalyamaagavey Kandu
Giridharaa Unnai
Namaskaaram Seigindrohm.

Sandhana Kaappuk Kazhatri
Thailam Poosikkondu Nirkum
Nandha Gopaalaney Unnai
Namaskaaram Seigindrohm.

Yennai Snaanam Seidhu
Kaiyil Vaazhaippazhaththohdu Nirkum
Kannaa Undhan Paadham
Namaskaaram Seigindrohm.

Kudam Kudamaaga Paalai
Abishekam Seiyum Veylai
Govindhaney Unnai
Namaskaaram Seigindrohm.

Kondai Mayil Peeliminna
Manjal Pattu Kattik Kondu
Kuzhaloodhum Kannaa Unnai
Namaskaaram Seigindrohm.

Thechchi Mandhaaram Thulasi
Thaamaraip Poomaalai Saatri
Achchudhaney Unnai
Namaskaaram Seigindrohm.

Dhivya Naamam Sollikkondu
Sri Veyliyai Sutrikkondu
Sreedharaa Unnai
Namaskaaram Seigindrohm.

Theeraa Vinai Theerththu Vaiththu
Naan Kohrumvaram Aliththidum
Naaraayanaa Unnai
Namaskaaram Seigindrohm.

Koil Munney Koodi Nindru
Kohdi Jenma Paavam Theera
Guruvaayoorappaa Unnai
Namaskaaram Seigindrohm.

No comments:

Post a Comment