உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
__________________________________
*தெரிந்தும் தெரியாமலும் தொடர்: 65*
____________________________________
செல்லமுடியாதோர் சென்று வணங்கிய உணர்வாக.....
*இலங்கை கதிர்காமம் முருகன்:*
__________________________________
சுமார் முக்கால் ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. சுற்றிலும் ஆறு அடி உயர மதில்சுவர்களுடன் சுடுசெங்கற்கட்டிகளைக் கொண்டு கட்டப்பட்டவையாகும்.
இலங்கையில் மிகவும் புகழ்வாய்ந்த புனிதமிக்க பாதயாத்திரை தலம் இது.
இத்தல முருகனை வழிபடச் செல்வோர், நம்நாட்டில் மேற்கொள்ளும் பழனி பாதயாத்திரையைப் போல, அங்கு செல்வதை *கதிர்காம யாத்திரை* என்கின்றனர்.
**
இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு, நம் நாட்டின் தமிழ் மன்னனான எல்லாளனுடன், சிங்கள மன்னனான துட்டகை முனு என்பான் போரிட்டான்.
போருக்கு புறப்பட்டுச் செல்லும்போது, கதிர்காம முருகனிடம் துட்டகை முனு நேர்த்திக்கடன் வேண்டிக் கொண்டே போருக்குச் சென்றான்.
போரின் வெற்றி, துட்டகை முனுவிற்கு கிடைத்தது. இதனால் இவன் கதிர்காம முருகனிடம் வேண்டிக் கொண்டிருந்த வேண்டுதலான நேர்த்திக் கடனை திரும்பச் செலுத்தினான் அவன்.
இந்த விபரங்கள், மகாவம்சம் எனும் நூலில் குறிப்புகளாக உள்ளன.
இந்தக் கதிர்காம கந்தன் கோயிலுக்கு நீண்ட வரலாறும் உள்ளன.
இக்கோயிலின் ஆதிமூல அறைக்குள் பக்தர்கள் யாரும் சென்றுவிட முடியாது.
இந்த அறை பரம ரகசியமான புனிதத்துவம் மிக்க இடமாக கருதப்படுவதால் யாவரையும் உள்ளே விட அனுமதிப்பதில்லை.
இந்த அறையின் காற்று நுழைவதற்குக் கூட அனுமதியில்லை. வெளிச்சத்திற்குந்தான்.
சாளரங்களும், துவாரங்களும் இந்த அறைக்கு கிடையாது. ஆகையினால் காற்றுக்கும் வெளிச்சத்திற்கும் இங்கே உள்ளே வர தடை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த புனிதமான அறைக்கும் மத்தியிலிருக்கும் இடையில் ஒரு சிறிய அளவிலான கதவு இருக்கிறது.
இங்கும் யாரும் செல்ல முடியாது. அர்ச்சகர் மட்டும் பக்தி சிரத்தையுடன் சென்று வருகிறார்.
இங்கு தரிசிக்க வரும் பக்தர்கள், தங்களது காணிக்கைகளை செலுத்துவதற்கு நடு அறைப்பக்கத்திலே செலுத்திவிட வேண்டும். நடு அறையைத் தாண்டியும் செல்ல முடியாது.
இங்குரகசியமான மந்திரசக்தி வாய்ந்த யந்திரம், பிரசித்தி பெற்ற கதிர்காம வருடாந்திர பெருவிழாவின்போது, தாமிரம் அல்லது தங்கம் இதில் ஏதோ ஒன்றில் மந்திரம் எழுதப்பெற்று, இதை வெண்துகிலால் மூடப்பட்டு, இதையும் பேழைக்குள் இருத்தி, யானை மீது ஊர்வலமாக எடுத்து வருவர்.
இந்த மந்திர யந்திரம் அந்த அறையில் இருப்பதால்தான் அந்த அறைக்குள் யாரும் செல்ல முடியாது.
இத்தலத்தில் கந்தனின் அண்ணன் கணபதியார்க்கும், மூத்த தெய்வானையாளுக்கும் தனித்தனியாக சந்நிகள் அமைந்திருக்கின்றன.
ஞான சொரூபியான விநாயகர் கோயிலுக்கு அருகிலேயே புத்தர் இருக்கிறார். அடுத்து விஷ்ணு இருக்கிறார்.
புத்தருக்கும் விஷ்ணுவுக்கும், உகந்ததாக புனித அரசமர நிழல் தருகிறது.
இங்கிருக்கும் ஏழுமலைகளின் ஒன்றில் கந்தன் காட்சி கொடுத்ததின் காரணமாக, மாணிக்கக் கங்கையின் இடது கரையோரத்தில் வள்ளியை மணம் செய்ததைக் குறிக்கும் விதமாக இம்மையில் கதிர்காம ஆலயம் எழுப்பிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு வருடாந்திரப் பெருவிழாவின்போது, வான சாஸ்திரத்தையொட்டி மிகநுண்ணிய முறையில் கணிக்கப்பட்ட பூரணையன்று மாணிக்கக் கங்கையில் கந்தன் தீர்த்தமாடுவார்.
மாணிக்க கங்கையாற்றில் நீரோட்டத்தின் பரப்பின்மீது, பூஜயில் வைக்கப்பட்ட வாளினாலோ அல்லது களியாலோ ஒன்றைக் கொண்டு, மாணிக்க கங்கை நீரில் வட்டமிட்டு வெட்டுவார்.
இத்தலத்தின் தலவிருட்சம் விளாமரம்.
இவ்விளாமரத்தின் அடியில் விளாத்தீஸ்வரன் அருள் புரிகிறார்.
இவர் சுயம்புவாகவே இவ்விளாமரத்தடியில் எழுந்தருளியிருக்கிறார். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கும் முன்பாக....
*செல்லக் கதிர்காமம்:*
பிரசித்தி பெற்ற முருகனின் இத்திருத்தலமான கதிர்காமத்திற்கு அன்மையில் செல்லக் கதிர்காமம் பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்தது.
கதிர்காமத் திருத்தலத்திலிருந்து மூன்று கி..மி தொலைவில் இருக்கிறது.
இங்கு பக்தர்கள் மாணிக்க கங்கையில் நீராடி கதிர்காமத்திலுள்ள விநாயகப் பெருமானை வழிபட்டு பின் ஏழுமலையிலுள்ள கந்தனை தரிசிக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது.
*உபய கதிர்காமம்:*
இலங்கையில் பிரசித்தி பெற்ற சுயம்பு இந்துக் கோயில்களில் உபய கதிர்காமம் திருக்கரங்களில் சண்முகர் ஆலயம் மக்கியமான தலம்.
இரண்டாம் கதிர்காமம் என்று போற்றப்படுகிறது. இந்த ஆலயம் இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணம் புலோலி என்னுமிடத்தில் இருக்கிறது.
இவ்வாலயத்தருகில் இருநூறு வருட பழமையான தேவனத்தாய் விநாயகர் ஆலயம் அமைந்திருந்தது.
இங்கு மூன்று வேளை நித்திய பூசை நடைபெறுகிறது.
கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில், திதிருக்கார்த்திகைக் கற்பூரத் திருவிழா நடைபெறுகிறது.
திருவோணம் நட்சத்திரத்தில் தீர்த்த விழா சிறப்பாக நடைபெறுகிறது.
*இலங்கை மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்:*
இலங்கையில் இந்துத் திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த திருத்தலம் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்.
யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை சாலையில் சுமார் ஒன்பது கி.மி. தொலைவில் அமைந்துள்ளது.
ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் மதுரையை ஆட்சி செய்து வந்த உக்கிரப்பெருகி மன்னனுக்கு மாருதப்புரவல்லி என்றும் ஒரு மகள் இருந்தாள்.
இந்த அரசி குதிரை முகத்துடன் பிறப்புற்றிருந்தாள். மேலும் குண்ம நோயினாலும் வருந்தி அவதியுற்றாள்.
எல்லாவிதமான மருத்துவத்தாலும் நோயை ஒழிக்க முடியவில்லை.
சாந்தலிங்க முனிவருடைய வழிகாட்டுதலின் கீழ் அரசி கீரிமலைப் புனித தீர்த்தத்தில் நீராடி இலங்கை மாவிட்டபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் முருகப் பெருமானை வழிபட்டாள்.
இதனால் அரசியின் குதிரை முகம் நீங்கியும், மேலும் மகா பேரழகு வாய்க்கப் பெற்றாள்.
இதன் காரணமாக மகிழ்ச்சி அடைந்த இளவரசி மதுரையில் இருந்து சிற்ப வல்லுநர்களை அழைத்துப் போய் மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தை புரணமைத்தார்கள்.
1795 ஆம் ஆண்டு ஆனி உத்திர நட்சத்திரத்தில் இக்கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
போர்த்துகீசியர் இலங்கையைத் கைப்பற்றிய வேளையில் மத மாற்றம் முகமாக இந்து ஆலயங்களை அழித்து தேவாலயங்கள் நிர்மாணித்திர்கள்.
அப்போது மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும் அழிக்கப்பட்டன.
அவ்வாலயத்தில் இருந்த கந்தசுவாமி திருவுருவத்தை *(முன்பு தில்லையில் ஆலயத்தை கொள்ளயிட வந்தபோது, தில்லைவாழந்தணர்கள் நடராஜத் திருமேனியை எடுத்துப் போய் புளியங்குடி புளியமரப் பொந்தில் கொண்டு சென்று மறைத்து வைத்தார்களே புளியங்குடிதிருவுருவத்தை மக்கள் எடுத்துப்போய் கிணறு ஒன்றில் மறைத்து வைத்தார்களே அதுபோலவே)* மக்கள் கிணறு ஒன்றினுள் போட்டு மறைத்து வைத்தார்கள்.
போர்த்துகீசியர் ஆட்சி முடிவுக்குப் பின் ஆலயம் புரணமைக்கப்பட்டது. மீண்டும் கந்தசுவாமி திருவுரு ஸ்தாபிக்கப்பட்டு வழிபாடு தொடங்கப்பட்டது.
கந்தசுவாமி திருவுரு எடுத்துச் செல்லப்பட்ட பின்பு, இடைக்காலத்தில் அக்கருத்தை மில் வேல் வைத்து வழிபட்டு வந்தனர்.
இன்றும் கந்தசுவாமி கோயில் மூலஸ்தானத்தில் வேல் இருக்கப் பெற்று வழிபடப்பட்டு வருகிறது.
திருமுருக வள்ளல் கிருபபானந்த வாரியார் இலங்கை சென்றபோதெல்லாம் மாவிட்டபுரத்துக் கந்தசுவாமியை தரிசிக்காமல் திரும்பி வந்ததில்லை.
இலங்கையில் இருக்கும் இந்து திருத்தலங்களில் மிகவும் பழமையான தொன்மையான திருத்தலமாக காணப்படுவது மாவிட்டபுரம் கந்தசுவாமி திருக்கோயில்.
*திருவிழாக்கள்:*
நம்மூரில் திருக்கோயில் திருவிழாவுக்கு கொடிமரத்துக்கு கொடியேற்று விழா நடத்துவோம்.
ஆனால் அங்கு விழாவின்போது, கொடியேற்றத்துக்குப் பதிலாக காம்போற்சவ திருவிழாவாக இருபத்தைந்து நாட்கள் நடைபெறுகின்றன.
அந்தத் திருவிழா சமயத்தில், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, ஆராதனை, திருமுறை ஓதுதல், மகேஸ்வர பூஜை ஆகியவைகள் நடத்துகின்றனர்.
மேலும் இங்கு, அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களோடு ஷண்முகார்ச்சனை நடைபெறுகின்றது.
திருச்சிற்றம்பலம்
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவுகல வாமை வேண்டும்
பெருமை பெறுகின்றது நினது புகழ் பேச வேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மத மானபேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும் நோயற்ற வாழ்வில் நாம் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள்வளர் தலம் ஓங்கு கந்தவேளை
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.
-வள்ளலார்.
சண்முகா சரணம்.
திருச்சிற்றம்பலம்.
_________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment