Tuesday, February 13, 2018

Keep asking again & again for getting back the loan amount

*இட்டுக் கெட்டது காது* 
*இடாது கெட்டது கண்* 
*கேட்டுக் கெட்டது குடி* 
*கேளாது கெட்டது கடன்* 
*பார்த்துக் கெட்டது பிள்ளை* 
*பாராமல் கெட்டது பயிர்*
*உண்டுக் கெட்டது வயிறு*
*உண்ணாமல் கெட்டது உறவு*

விளக்கம் :
குச்சியைச் சதா காதில் விட்டு குடைவதால் காது கெடும் 
மையை இடாததால் கண் கெடும் 
பிறர் சொல்லும் கோள் வார்த்தைகளை காது கொடுத்துக் கேட்டால் , குடும்பம் சீரழியும் 
அடிக்கடி கேட்காததால் கடன் திரும்பி வராமல் அழியும் 
தயவு தாட்சண்ணியம் பார்த்துக் கண்டிக்காமல் இருந்தால் பிள்ளைகள் திருந்தாமல் கேட்டுப் போவார்கள் 
அடிக்கடி போய் பார்க்க வில்லையானால் பயிர் கெடும் 
அடிக்கடி உண்பதால் வயிறு கெடும் 
உறவினர் வீடுகளில் விசேஷக் காலங்களில் நாம் கலந்துக் உண்ண வில்லையானால் உறவினர் நட்புக் கெடும்.

No comments:

Post a Comment