Wednesday, February 28, 2018

Jayaghosham observed in Kanchi mutt

Courtesy:Sri.P.R.Kannan

Jayaghosha observed in Kanchi Sankara Matham with Tamil translation has been published in the Feb 2018 issue of KAMAKOTI PRADIPAM. 

ஜயகோஷம்

மொழிபெயர்ப்பு: பி.ஆர்.கண்ணன்


ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட ப்ராசீனமான குரு பரம்பரையில், ஸ்ரீமடத்தில் நடைபெறும் பல விழாக்களிலும் பூஜைகளிலும் பரமபூஜ்ய ஜகத்குரு ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகளுக்கு உரிய மரியாதையாக சில முக்கியமான வழக்கங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த முறையில் ஸ்ரீஸ்வாமிகள் யாத்திரைக்காகப் புறப்படுகையிலும், வேறிடத்திற்கு வருகை தருகையிலும், சிம்மாஸனம் ஏறுகையிலும், கோவில் மரியாதைகளின்போதும், மற்றும் பூஜை, அன்னதானம் ஆகிய காலங்களிலெல்லாம் ஜயகோஷம் போடுவது என்பது பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இருந்துவருகிறது.



जयघोषः ஜயகோஷம்

(सर्वे नन्दन्ति)

(எல்லோரும் ஆனந்திக்கிறார்கள்)


पटु-पटह​-भेरी-काहल​-भाण्ड-कटक​-

निस्साण​-वीणा-वेणु-मृदङ्गादि-सकल​-वाद्य​-विनोद​!

निखिल​-वाद्यघोष​-श्रवण​-कान्दिशीक​-विमत​-बृन्दकोलाहल​!

पराक् स्वामिन्! जय​! विजयी भव​!

ஸ்ரீஸ்வாமிகள் புறப்படுகையில், பலவகையான வாத்தியங்கள் - தம்பட்டம், பேரிகை முதலானவை, பல பெரிய அமைப்புகளில் உள்ளவை, நிஸ்ஸாணம், வீணை, புல்லாங்குழல், ம்ருதங்கம் ஆகியன- பெரிதாக சப்திக்கின்றன. ஸ்ரீஸ்வாமிகளுக்கு ஆனந்தம். இந்த பெரிய வாத்திய சப்தங்களைக் கேட்டு, எதிரிகளின் குழுக்கள் தலைதெறிக்க ஓடுகையில், பேரிறைச்சல் எழுகின்றது. ஸ்ரீஸ்வாமிகள் வருகின்றார், பராக், ஜய விஜயீ பவ.



सिंहासनारोहणकाले

ஸிம்ஹாஸனம் ஏறுகையில்


काञ्चीपुराभरण-कामद-कामकोटिपीठाभिषिक्त-वरदेशिक सार्वभौम​।

सार्वज्ञशक्त्यधिगताखिल-मन्त्रतन्त्र-चक्रप्रतिष्ठित-विजृम्भित-चातुरीक​॥

पराक् स्वामिन्। जय​। विजयीभव​।

ஸ்ரீஸ்வாமிகளே, தாங்கள் காஞ்சிமாநகரின் அணிகலன். எல்லா மனோரதங்களையும் அருள்பவர். காமகோடி பீடத்தை அலங்கரிக்கும், மாபெரும் குருக்களின் சக்கரவர்த்தி. தங்களின் ஸர்வக்ஞதை, மந்திர, தந்திர புலமை, ஸ்ரீசக்ர உபாஸனையின் பலனல்லவா. ஸ்ரீஸ்வாமிகள் வருகின்றார், பராக், ஜய விஜயீ பவ.


जय गोविन्दभगवत्पाद​-पादाब्ज​-षट्पद​।

जय जीवपराभेद​-वावदूक जगद्गुरो॥

जय भो बौद्ध-पाषण्ड​-विध्वंसन​-विचक्षण​।

जय वेदान्तसिद्धान्त सिद्धाञ्जन​-महामते॥

पराक् स्वामिन्! जय​! विजयीभव​!

ஸ்ரீகோவிந்த பகவத்பாதரின் பாதகமலங்களில் மகிழும் தேனீயே, ஜயம் உண்டாகட்டும். ஜீவாத்ம, பரமாத்ம ஐக்கியத்தைத் தெளிவாக போதிக்கும் ஜகத்குருவே, ஜயம் உண்டாகட்டும். பௌத்தர்களின் பாஷண்ட மதத்தை வேரறுப்பதில் ஸமர்த்தரே, ஜயம் உண்டாகட்டும். வேதாந்த ஸித்தாந்தமாகிற கண்மையினை (பக்தர்களுக்கு) அளிக்கும் பேரறிவாளரே, ஜயம் உண்டாகட்டும். ஸ்ரீஸ்வாமிகள் வருகின்றார், பராக், ஜய விஜயீ பவ.


राङ्कवाच्छादन​-देवालयप्रसादाद्युपहरणकाले

கோவில் ஸால்வை, ப்ரஸாதம் ஏற்கும்போது


स्वस्ति श्रीभुवनत्रयार्चित​-पदाम्भोजात​-तादृङ्महातत्वज्ञान​-निदान​-शंकरगुरोः छात्रक्रमाधिष्ठिते।

काञ्चीमध्यग​-शारदामठ​-सुधीसिंहासने षण्मताचार्याराधितपादुको विजयते विश्वाधिकोऽस्मद्गुरुः॥

पराक् स्वामिन्! जय विजयीभव​!


ஸ்ரீஸ்வாமிகளே, தங்களுக்கு ஸகல மங்களங்களும் பெருகட்டும். தாங்கள் ஆதிசங்கரர் குரு சிஷ்ய பரம்பரையில் வந்துள்ளீர்கள்; மூன்று லோகங்களும் வணங்கும் ஸ்ரீகாமாக்ஷி தேவியின் பாதகமலங்களிலிருந்து பெருகும் மகாதத்வஞானத்தின் நிதியாக விளங்குகிறீர்கள். காஞ்சிமாநகர் மத்தியில் விளங்கும் ஸ்ரீசாரதா மடத்தில் ஸிம்மாசனத்தை நம் குரு அலங்கரிக்கிறார். ஷண்மத ஸ்தாபகம் செய்தருளிய ஆதி சங்கரர் பாதுகையினை உபாஸிக்கிறார். ஸ்ரீஸ்வாமிகள் வருகின்றார், பராக், ஜய விஜயீ பவ.



यात्रादिप्रस्थानावसरे

யாத்திரை புறப்படும் சமயம்


प्रस्थानतूर्य​-पटहानक​-शङ्खभेरी-भं भं निनाद​-बधिरीकृत-दिक्तटीक​।

अभ्यर्णदेश​-विनमन्नखिलावनीन्द्र​-मूर्धन्य​- रत्न- रुचि- रञ्जित​-मञ्जुलाङ्घ्रे॥

पराक् स्वामिन्! जय! विजयीभव​!

ஸ்ரீஸ்வாமிகளே, தாங்கள் புறப்படும் சமயம் பல வாத்தியங்கள் - பேரிகை, சங்கு, துரியா முதலான பலவகைப்பட்டன- ஒருசேர காது செவிடுபடும்படி எழுப்பும் ஒலி எல்லா திசைகளிலும் வெகுதூரம் பரவிச் செல்லுகின்றது. உலகத்திலுள்ள அனைத்து மன்னர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் பாதங்களில் விழுந்து வணங்கும்போது, அவர்களுடைய கிரீடங்களிலுள்ள ரத்தினங்களின் ஒளி தங்கள் பாதங்களை இன்னும் ஒளிவெள்ளமாக்குகிறது. ஸ்ரீஸ்வாமிகள் வருகின்றார், பராக், ஜய விஜயீ பவ.


कुम्भीसंभव​-डिंभजृम्भण​-दृढाहंभावं, अम्भोनिधेः

गाम्भीर्यं, कुलकुम्भिनी धर धृतिं, जम्भारि-सम्भावनाम्।

अम्भोदोद्भट-नादमप्यहसन्, बंभम्यते सम्भ्रमात्

भं भं भं भमितीड्य शंकरगुरोः जैत्राङ्क-शङ्खध्वनिः॥

पराक् स्वामिन्! जय​! विजयीभव​!

நம் சங்கர குரு புறப்படுகையில் எழும்பும் 'பம்', 'பம்', 'பம்' எனும் சங்கநாதம் விஜயகோஷமாக உயர்ந்து ஓங்கி; அகஸ்திய மகரிஷி, வாதாபி என்னும் அரக்கன் தன் வயிற்றினிலிருந்து வெளிவர முயற்சிக்கையில், அவனை அடக்குவதற்காக அவர் கைக்கொண்ட மன உறுதி; சமுத்திரத்தின் கம்பீரம்; பூமியின் நிலைப்பாடு; ஜம்பாஸுரனை அழித்த தேவேந்திரன் உயர்வு; மேகங்களின் ஆழ்ந்த இடிசப்தம்; இவை எல்லாவற்றையும்விட தலைதூக்கி நிற்கிறது. ஸ்ரீஸ்வாமிகள் வருகின்றார், பராக், ஜய விஜயீ பவ.



पूजाकाले

பூஜாகாலத்தில்

अत्रैवर्गिक​-सम्प्रदाय​-पदवी-साम्राज्य​-सिंहासने

स्वैरारोहण​-कर्म​-जाङ्घिक​-गुणग्रामाभिरामात्मने।

वाणी-कर्णवतंस​-हल्लक​-दल​-द्रोणी-मिलद्वासना-

तत्व​-व्यञ्जक​-वाङ्मुखाय​-भगवत्पादाय मोदामहे॥

पराक् स्वामिन्! जय​! विजयीभव​!

நம் குரு ஸ்ரீ பகவத்பாதர், தன் மனோகரமான குணவெள்ளத்தினால், தர்மம், அர்த்தம், காமம் என்ற மூன்று லக்ஷ்யங்களையும் தாண்டி நிற்கும் மோக்ஷ ஸாம்ராஜ்ய சிம்மாசனத்தின்மீது வீற்றிருக்கிறார். அவருடைய தத்துவஞான உபதேசம் நம் காதுகளை எட்டும்போது, தாமரைமலர்களின் இனிப்பும், சுகந்தமும் கலந்து நம்மை ஆட்கொள்கிறது. ஸ்ரீஸ்வாமிகள் வருகின்றார், பராக், ஜய விஜயீ பவ.



अन्नदान समाराधनादिकाले

அன்னதானம் ஸமாராதனை காலங்களில்

नित्यान्नदान- लसमान​-घनापदान​-

गानावादन​-भृशविस्मयमानलोक​।

भक्तिप्रकर्ष​-परिपूजित​-चन्द्रचूड​-

कारुण्यलब्ध​-निखिलाभिमतार्थसिद्धे॥

पराक् स्वामिन्! जय​! विजयीभव​।

ஸ்ரீஸ்வாமிகளே, தினந்தோறும் இனிய சங்கீதத்துடன் நடைபெற்று விளங்கும் அன்னதானமாகிற உயர்ந்த சேவையின்போது, தாங்கள் உத்ஸாகமாகப் பார்த்து ஊக்குவிக்கிறீர்கள். ஆழ்ந்த பக்தியுடன் ஸ்ரீசந்திரமௌளீஸ்வரரை உபாஸித்து அவர்தம் கிருபையினால் எல்லா ஸித்திகளையும் அடையப்பெற்றுள்ளீர்கள். ஸ்ரீஸ்வாமிகள் வருகின்றார், பராக், ஜய விஜயீ பவ.



पूजासमाप्तिकाले

பூஜை முடியும்போது

कामपरिपन्थि कामिनि कामेश्वरि कामपीठमध्यगते।

कामदुघा भव कमले कामकले कामकोटि कामाक्षि॥

ஸ்ரீகாமாக்ஷிதேவியே, மன்மதனின் எதிரியான சிவனின் காமினியே, காமபீடத்தின் மத்தியில் விளங்கும் காமேஸ்வரியே, கமலே, காமகலையே, காமகோடியே, எங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் காமதேனுவாக இருப்பாயாக.


जय जय जगदम्ब शिवे जय जय कामाक्षि जय जयाद्रिसुते।

जय जय महेशदयिते जय जय चिद्गगन-कौमुदीधारे॥

ஸ்ரீஜகதம்பிகைக்கு, ஸர்வமங்கள ஸ்வரூபிணிக்கு, காமாக்ஷிக்கு, ஹிமவான் புத்திரிக்கு, மஹேஸ்வரனின் பத்தினிக்கு, ஜயம் உண்டாகட்டும். ஜயம் உண்டாகட்டும்.


महात्रिपुरसुन्दरीरमण-चन्द्रमौलीश्वर-प्रसादपरिलब्ध-वाङ्मय-विभूषिताशान्तरम्।

निरन्तरमुपास्महे निरुपमात्मविद्या-नदीनदपतिप्रभं मनसि शंकरार्यं गुरुम्॥

पराक् स्वामिन्! जय विजयीभव​।

ஸ்ரீமகாதிரிபுரஸுந்தரி ரமணரான ஸ்ரீசந்திரமௌளீஸ்வரர் பரிபூர்ண கிருபையினால் எங்கள் ஸ்ரீசங்கர குருவின் வாக்கு அமுதமாகப் பொழிகின்றது. குருவின் தேஜஸ் தன்னிகரில்லாத ஆத்மவித்தை என்கிற சமுத்திரத்தைப் போலுள்ளது. நாங்கள் அத்தகைய குருவினை எப்போதும் உபாஸிக்கின்றோம். ஸ்ரீஸ்வாமிகள் வருகின்றார், பராக், ஜய விஜயீ பவ.



No comments:

Post a Comment