Wednesday, February 7, 2018

Easy way to health Periyavaa

மிகவும் முக்கியமான பதிவு....தவறாமல் படிக்கவும்

"ஆரோக்யமாக வாழ அருமையான உபதேஸம்"

பெரியவாளுக்கு வந்து நமஸ்காரம் செய்தாள் ஒரு பக்தை.

"பெரியவா...... மனுஷாளுக்கு.... பணம், புகழ், ஆயுஸ் எல்லாமே வேணும்தான்! ஆனா, எல்லாம் இருந்தும், ஒடம்பு ஆரோக்யமா இல்லேன்னா ப்ரயோஜனமில்ல....  நன்னா ஆரோக்யமா இருக்கறதுக்கு பெரியவாதான் வழி சொல்லணும்..... ஸ்லோகமோ, வேற பாராயணமோ, கோவில் கோவிலா போகறதுக்கோ.... எனக்கு நேரமேயில்ல பெரியவா! simple-ஆ... என்னால ஆகக்கூடியதா பெரியவாதான் வழி காட்டணும்"

எளிமையான பஞ்சிலிருந்து, எளிமையான ஆனால் ஹிதமான, நன்மையை மட்டுமே தரும் பருத்திதானே வரும்?

அதே போல், எளியனான, ஸர்வ ஸுலபனான பகவானான பெரியவாளிடமிருந்தும்...... பக்தையை முன்னிட்டு, தறிகெட்டலைய மட்டுமே நேரம் இருக்கும் நமக்காக...... எளிய, மிக மிக ஸுலபமான உபதேஸம் சட்டென்று உதிர்ந்தது.

"இதென்ன பெரிய விஷயம்? ஓம் நமோ பகவதே ஸூர்ய நாராயணாய நமஹ....ன்னு தெனோமும் 12 தடவை சொல்லிட்டு, கெழக்கப் [கிழக்கு]  பாத்து, 12 நமஸ்காரம் பண்ணு! போறும்......"

திருக்கரம் உயர்ந்து அபயமும், ஆஶீர்வாதமும் தந்தது.

"பெரியவா சொன்னதை.... நானும், குடும்பத்துல எல்லாருமே பல வர்ஷங்களா விடாம பண்ணிண்டு வரோம்! பெரியவாளோட ஆஶீர்வாதத்துல.... எங்களுக்கு ஒரு குறையும் இல்லாம, ஆரோக்யமா இருக்கோம்"

ஏன்? எதற்கு? என்று துளி கூட ஸந்தேஹம் எழாத தூய அன்பால் [unconditional love], திட பக்தியில் பிறக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமே போதும். 

அதுதான் பகவான்! அதுதான் அவனுடைய அனுக்ரஹம்!

ஸ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்.🌲🌲🌲

No comments:

Post a Comment