Tuesday, February 13, 2018

DONT's on shivaratri day

லிங்கோத்பவ காலம் என்னும் மகாசிவராத்திரி தரிசனம் ...13-2-2018

சிவராத்திரி பற்றி இந்த முக நூலில் பலதரப்பட்ட தகவல்கள் வந்தபடி/பதிந்தபடி இருக்கிறது ,
மேலும் மகாசிவராத்திரிவிழா என்ற விளம்பர அட்டைகள் பலஇடம்களில் காண்கிறேன் .....
சிவராத்திரி பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு இது ..
நான் கடந்த வருடம் சிவராத்திரி அன்று பெருமானை தரிசிக்க கோவில் சென்ற பொழுது ஒரு புரம் உணவு வழங்கபட்டு கொண்டுஇருந்தது
மக்கள் உணவுகளை உண்டு விட்டு கோவிலில் இலைகளை சிதறி கோவிலை அசுத்த படுத்தி கொண்டு இருந்தார்கள் .

மஹா சிவராத்திரி அன்று செய்ய கூடாத மிக முக்கியமான தவறு
பக்தர்களுக்கு உணவு அளிப்பது அடியார்கள் சிவாச்சாரியார்கள் கோவிலில் உள்ள குருக்கள் ஏன் இதை
கவனித்து தானம் செய்பவர்களிடம் சொல்ல தவறுகிறார்கள் என்று புரிய வில்லை ..

உண்மையில் சிவராத்திரி நமக்கு அருளப்பட்டதும் நாம் கடைபிடிக்க காரணம் ஏன் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உணவும் உறக்கமும் ஆன்மோவோட தொடர்பு கொள்ளும் நிலையை உடையது எனலாம்.இதையே நமது நூல்கள் அன்னதானத்தையும் பற்றியும் நல்ல உறக்கத்தில் நம் ஆன்மா இறைநிலையை தொடர்பு கொள்வதையும் தெரிவிக்கிறது .
பசிக்கும் பொழுது உணவை தவிர்த்து ஒரு செயலை நாம் செய்ய முற்பட்டால் நம் உடலும் மனமும் ஒத்துழைக்காது
ஆனால் சித்தத்தில் மனதை அமைத்தோமானால் பசி ஏற்படாது.
இவ்வகையாக சித்தர்களும் அடியார்களும் மனதை அமைத்து விடுவார்(அன்னமயகோசத்தில் இருந்து பிராணமயகோசம்)

சாதாரண பக்தர்களான நாம் உணவை தவிர்த்து சிவ லயத்தோடு 12 மணி நேரம் கடைப்பித்தோமானால் நமக்கு சித்தத்தில் சிவலயம் ஏற்படும் என்றே சித்தர்கள் நமக்கு இந்த பழக்கத்தை தெரிவித்தார்கள் எனலாம்.பசியென்பதை பிணி என்பார்கள் சித்தர்கள். பசி எடுத்தால் பத்தும் பறந்து போகும் என்பது பழமையான மொழி.பசிக்கொடுமையால் கோபமும் கோபத்தின் விழைவால் அழிவும் ஏற்படும் என்பது விதி.பசியோடு பராபரத்தை சிந்தனை செய் என்றபொழுதும் தூக்கத்தை கடந்து விழித்து சிந்தனை செய் என்ற போதும் நாம் உடலாலும் மனதாலும் சிவபரத்தை நெருங்குகிறோம் என்றே சொல்லவேண்டும்.

சிந்தாந்த நூல்கள் "சிவத்தை பொன்ஒளி என்றும் சக்திகளத்தை இருள்"என்றுக்கும் விவரிக்கிறது.உயிர்கள் அனைத்தும் இந்த பொன் ஒளியில் சேர்வத்திற்கு ஒரு முயற்சியை தான் லிங்கோத்பவ வழிபாடு என்று சொல்கிறது.
லிங்கோத்பவ காலத்தில் உறங்காமல் சிவனை நினைத்து இருப்பது
நம் உடலில் உள்ள பல கர்ம பதிவுகளையும் அழித்து விடும் என்று அனுபவித்தால் உணர்ந்து கொள்ளலாம் .
மாற்றி சொன்னால் ஒரு முழுலிங்கோத்பவகாலமும் நிறைந்து நிற்கும் காலம் தான் மகாசிவராத்திரி என்று நாம் புரிந்து கொள்ளவேண்டும் .
இதை பற்றி ஒரு நண்பரிடம் சொன்ன பொழுது அவர்கள் லிங்கோத்பவ காலம் என்றால் என்ன? என்று கேட்கிறார்.
அடிப்படை விவரங்களை கூட நாம் தெரிந்து இருக்கவில்லை என்பது வேதனையாக உள்ளது.
லிங்கோத் பவக்காலம் என்பது ...
"திரியோதசியும் சதுரதசியும் சந்திக்கும் காலம் தான் லிங்கோத்பவ காலம் .அதாவுது 13 நாள் முடிந்து 14 வது நாள் தொடங்கும் காலம் .
இந்த இரு காலத்தில்/திதிகள் சந்திக்கும் காலம்".
தமிழில் சதுர்தசி என்பதை சிவராத்திரி(இரவு ) என்பார்கள்.இது ஒரு ஒரு வளர்பிறை தேய்பிறை அன்றும் வரும் .
லிங்கோத்பவ காலம் எப்பொழுது துவங்கும் என்று எந்த பஞ்சாங்கதிலும் குறிப்பிடுவது இல்லை .
நாம் கவனித்து அந்த வேளையில் லிங்க தரிசனம் செய்தால் சிவபராபரதரிசனத்தை அந்த வேளையில் அடையலாம்.
இந்த லிங்கோத்பவகாலம் மாசி/கும்ப மாதம் இரவுமுழுவதும் இருப்பதால் அன்று (மஹா சிவராத்திரி )மட்டும் உயிர்கள் அனைத்தும் இரவு முழுவது கண்விழித்து பெருமானை வழிபட்டால் சிவனிடத்தில் செல்லலாம் என்று நூல்கள் சொல்கிறது .
(கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோவில் புராணத்தில் கும்பத்தில் ஏற்பட்ட உயிர் ஆட்சியை பற்றியும் பிரளயத்தை பற்றியும் அறிந்து கொள்ளமுடியும் )மேலும் திருவெண்ணாமலையில்"அம்பாள் சிவனுடன் சேர்ந்த காலம் லிங்கோத்பவ காலம் " ஈசனிடத்தில் அணைத்து தவசிகளும் ஒன்றிய காலம் இதுவே.
அணைத்து தேவதைகளும் இந்த லிங்கோத்பவகாலத்தில் ஈசனை வழிபாடு செய்து தன் பலனை பெருக்கி கொள்ளும்.(இதை ஓமாந்தூர் எல்லையில் அன்னகாமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் காணலாம்)
உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெற முடியும்.நினைத்த காரியம் சித்தி ஆகும்.வைகுண்ட ஏகாதேசியும் இந்த நோக்கம் தான்.
லிங்கோத்பவவேலையில் லிங்க தரிசனம் செய்ய முடியாவிட்டாலும்
நம்முடைய மனதால் எண்ணத்தால் சொற்களால் அஷ்ட சிம்மாசன நாமத்தை சொல்லலாம்..
1.ஸ்ரீ பவாய நம
2. ஸ்ரீ சர்வாய நம
3.ஸ்ரீ ருத்ராய நம
4.ஸ்ரீ பசுபதே நம
5.ஸ்ரீ உக்ராய நம
6.ஸ்ரீ மகாதேவாய நம
7.ஸ்ரீ பீமாய நம
8.ஸ்ரீ ஈசானாய நம
இவைகளை சொல்ல முடியாவிட்டால்
"சிவாய நம"
அல்லது
"சிவாய வசி"
இதுவும் சொல்ல முடியாவிட்டால்
"சிவ சிவ"
என்று சொல்ல சொல்ல சிவ கதிகளை அடையலாம்.

அன்பர்கள் பக்தர்கள் பித்தர்கள் அனைவரும் லிகோத்பவ காலத்தில்
லிங்க தரிசனம் செய்து சிவபெருமானை ஆசிகளை பெறுவோம்
மகாசிவராத்திரி அன்று அம்பாளே உணவு அருந்தாமல் இருக்கும் பொழுது கோவிலுக்கு வந்து உணவுகள் கொடுத்து சாபத்தை பெற்று
அடுத்தவரின் புண்ணியத்தை கெடுக்கவேண்டாம் .
மேலும் சிவ பெருமான் ஆரவாரத்தை விரும்பாதவர்
ஏகாந்தமும் அமைதியும் விரும்புவர்.
நன்றி
அகத்தியர்
காக புஜெந்தர் ஆசிகளுடன் ......சீடர்களின் சீடன்

குறிப்பு ..ஓம் என்ற ஒரு எழுத்து மந்திரத்தை சேர்க்காமல் அஷ்ட மஹாமந்திரத்தை உச்சரிக்கும் பொழுது அவைகள் நாமங்களாக உருமாறி போகும்.நாமங்களாக உச்சரிப்பதும் சிறப்பு.


No comments:

Post a Comment