Friday, January 19, 2018

wife- Joke

முருகேசு மன நிம்மதி வேணும்ன்னு...
ஒரு சாமியாரை பார்க்க போயிருக்காரு..

சாமியார்ட்ட
, "வாழ்க்கை  அமைதியா , சந்தோஷமா போகணும் , அதுக்கு நா  என்ன செய்யணும், சாமி "னு  கேட்டுருக்காரு.
 
 சாமியார், " உங்க, மனைவியோட  சமையலை புகழ்ந்து பாராட்டியிருக்கிறீங்களா" னு கேக்கவும்

 இவரும்  , 

"கல்யாணமாயி,  இந்த  இருவது வருஷத்தில  ஒரு நா கூட  அவ  சமையலை புகழ்ந்து  பாராட்டுனதில்ல" னு  ரொம்ப மெதப்பா பதில் சொல்லிருக்காரு..

 சாமியார், "அடுத்த    தடவ சாப்பிடும் போது மனைவியின் சமையலை புகழ்ந்து பாருங்கன்னு"  அட்வைஸ் செஞ்சு அனுப்பி வைச்சிருக்காரு...

வீட்டுக்குப்போனவருக்கு அவரு மனைவி, சப்பாத்தியும் குருமாவும் மனைவி பரிமாறியிருக்காங்க !! 

அத சாப்பிட்டு, முருகேசும் ரொம்ப  குஷியாகி , சப்பாத்தி, குருமா இரண்டையும் ஒரேடியா  புகழ்ந்து, மனைவியையும் புகழ்ந்து தள்ளிட்டாரு...

இந்த திடீர் புகழ்ச்சி  கொஞ்சம் கூட  எதிர்பார்க்காத  மனைவிக்கு கோபம் வந்ததுச்சாம் ! 

கையில் இருந்த கரண்டியால் 🥄அவரு தலையில் "டங் டங்" ன்னு அடிச்சுக்கிட்டே..

"இந்த இருவது வருஷமா என்னைப் புகழாத நீங்க, இன்னிக்கி  பக்கத்து வீட்டிலிருந்து வந்த சப்பாத்தியையும் குருமாவையும் புகழ்ந்து பாராட்ட எப்படித் தோணிச்சு " ???... ன்னு கேட்ட... மனைவியப் பார்த்த 
முருகேசு " ஙே.."🙄 என்று மயங்கினான் 

கல்யாணம் பண்ணவனுக்கு ஏதுடாஆ நிம்மதி?
 😂😞😂😞😂😞

No comments:

Post a Comment