ஸ்ரீபாஷ்யம் பகுதி2 பிரிவு 1
சூத்திரம் 3
அனுபபத்தேஸ்து ந சாரீர:
இங்கு சொல்லப்பட்ட குணங்கள் ஒட்டிவராத காரணத்தால் இது சம்சாரத்தில் சிக்கி அவதிப்படும் ஜீவாத்மா அல்ல.
சூத்ரம் 4
கர்மகர்த்ருவ்யபதேசாத் ச
அடைபவன் அடையபப்படுபவன் என்ற வித்தியாசத்தால் ,
'ஸர்வம் கலு இதம் பிரம்ம தஜ்ஜலான் இதி சாந்த உபாஸீத' ------, 'அத: கலு க்ரதுமய: புருஷ: ----மனோமய: ப்ராணசரீர: பாரூப:'
மேற்கண்ட சந்தோக்ய உபநிஷத் வாக்கியம் காணப்படும் அத்தியாயத்தில் 'ஏதம் இத: ப்ரேத்ய அபிசம்பவிதா அஸ்மி' இந்த உடலிலிருந்து புறப்பட்டு அந்த பரம் பொருளை அடைவேன் என்ற வாக்கியத்தில் இருந்து அடைபவன், கர்த்தா (subject)வேறு அடையும் இடம் கர்ம ( Object) என்று புலப்படுகிறது.
மனோமய:- - மனதில் வியாபித்துள்ள பிரம்மம் பிராண சரீர:- எவருக்கு பிராணன் சரீரமோ பாரூப: - தேஜோ மயமானவரோ என்று முன் பார்த்தபடி இந்த சாந்தோக்ய உபநிஷத் வாக்கியம் பிரம்மத்தையே ஜீவனின் குறிக்கோளாகக் கூறப்படுகிறது.
சூத்ரம் 5
சப்தவிசேஷாத்
மேற்சொன்ன 'ஏதம் இத:---' என்ற வாக்கியத்திற்கு முன்பு 'ஏஷ மே ஆத்மா அந்தர்ஹ்ருதய: ஏதத் பிரம்ம' இதுதான் என் அந்தராத்மா, பிரம்மம் என்று எதை சரீரத்தை விடுவதற்குப் பிறகு அடைய ஜீவன் முற்படுகிறான் என்று தெரிவிக்கிறது. மே ஆத்மா, என்னுடைய அந்தராத்மா என்பதில் இருந்து ஜீவன் பிரம்மம் அல்ல என்று தெரிகிறது.
சூத்ரம் 6
ஸ்ம்ருதே:ச
சுருதி என்பது வேதம் ஸ்ம்ருதி என்பது சாஸ்திரம் . இதிலிருந்தும் பிரம்மம் தான் ஜீவனின் குறிக்கோள் என்று தெரிகிறது.
கீதையில் 'ஸர்வச்ய சாஹம் ஹருதி ஸந்நிவிஷ்ட: ' (கீ. 15. 15) என்று பகவான் நான் எல்லாஉயிர்களுக்கும் உள்ளே இருக்கிறேன் என்று சொல்கிறார்.
மேலும்
ஈஸ்வர: சர்வபூதானாம் ஹ்ருத்தேசே .அர்ஜுன திஷ்டதி
ப்ராமயன் ஸர்வபூதாநி யந்த்ராரூடானி மாயயா; தமேவ சரணம் கச்ச
(கீ 18. 61)
அர்ஜுனா பரமாத்மா எல்லா உயிர்களின் ஹ்ருதயத்தில் இருந்துகொண்டு அவைகளை ஆட்டுவிக்கிறார். அவ்ராவ்யே சரணம் அடைவாயாக. என்ற ஸ்லோகத்தின் மூலம் அடைபவன் ஜீவன் என்றும் அடையப்படுபவது பிரம்மம் என்றும் தெரிகிறது.
சூத்ரம் 7
அர்பகௌகசஸ்த்வாத் தத் வ்யபதேசாத் ச
மேற் கண்ட உபநிஷத் வாக்கியத்தின் கீழ் 'ஏஷ மே ஆத்மா அந்தர்ஹ்ருதயே அணீயான் வ்ரீஹேர்வா யவாத்வா ஸர்ஷபாத்வா,' என்ற வாக்கியத்தில் என்னுள் இருக்கும் இந்த ஆத்மா அணுவைப் போல என்று சொல்லப்படுவதனால் அது ஜீவாத்மாதான் என்பது சரியல்ல.
அந்தராத்மா அணுவைப்போல ஹ்ருதயத்தில் உள்ளது என்பதனால் எங்கும் நிறைந்த பிரம்மத்தை இவ்வாறு கூற முடியாது ஆகவே அது ஜீவாத்மாவையே குறிக்கிறது என்றால் அது தவறு. தியானத்தின் பொருட்டு அவ்வாறு கூறப்படுகிறது. ஹ்ருதயத்தில் உள்ளதாக தியானிக்க வேண்டும் என்பது பொருள்.
அடுத்து வருவது 'ஆத்மா அந்தர்ஹ்ருதயே ஜ்யாயன் ப்ருதிவ்யாத் ஜ்யாயன் அந்தரிக்ஷாத் ஜ்யாயன் திவோ ஜ்யாயான் ஏப்ய: லோகேப்ய:' என்று அந்தராத்மா பூமியைக் காட்டிலும் வானத்தைக் காட்டிலும் தேவலோகத்தைக் காட்டிலும் எல்லாஉலகங்களைக் காட்டிலும் பெரியது என்று சொல்லும் வாக்கியம்.
சூத்ரம் 8
சம்போகப்ராப்தி: இதி சேத், ந , வைசேஷ்யாத்
தேகத்திற்குள் இருப்பதனால் பிரம்மம் தேகத்தின் சங்கமத்தினால் துன்பமுறாதா என்றால் , அது சரி அல்ல. ஏனென்றால் பிரம்மத்திற்கும் தேகத்திற்கும் நிறைய வேறுபாடு இருப்பதால்.
சுகதுக்கங்கள் என்பவை கர்மாவினால் ஏற்படுபவை. ஆதலால் அது தேகத்தினோடு சம்பந்தப் பட்ட ஜீவனுக்கு மட்டுமே
. ராமானுஜர் இந்த உபநிஷதப பகுதியை கீழ்க் கண்டவாறு விவரிக்கிறார்.
முதலில் 'சர்வம் கலு இதம் பிரம்ம என்று பிரம்மத்தை அந்த்ர்யாமியாக உபாசிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அடுத்து அந்த பிரம்மத்தை அடைவதற்கு தியானமே வழி என்பதைக் கூறுகிறது. பிரம்மம் எப்படிப் பட்டது என்பதை அடுத்து 'மனோ மயம் பிராண மயம்' என்னும் சொற்களால் விவரித்துப் பிறகு அந்த பிரம்மம் அந்தர்யாமியாக ஹ்ருதயத்தில் உள்ளது என்பதைக்கூறுகிறது. அதனால் அணுவளவு என்பது தியானிக்கும் சௌகர்யத்திற்காகக் கூறப்பட்டது.
No comments:
Post a Comment