Wednesday, January 3, 2018

Speed of light in rig veda

*ரிக் வேதத்தில் – ஒளியின் வேகம்* : 

*Speed of Light in Veda 98.1% accurate.*

ரிக் வேதத்தில் : ஒளியின் வேகம்

Rig Veda(I, 50-4)

*"Yojananam Dwe Dwe Shate Dwe Cha Yojane AkenNimishardhena Krammana Namostute" (Rig-veda I,50-4)*

*Dwe Dwe Shate Dwe  == 2202*

Nimish/ardhena = 1/2 நிமிஷ

அரை நிமிஷத்தில் சூரிய ஒளி/கதிர் 2202யோஜனை தூரம் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

சமஸ்கிருதத்தில் நிமிஷ என்பதின் விளக்கம்

மகாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் உள்ள மோக்க்ஷ தர்ம பர்வத்தில்,   பின்வருமாறு விவரிக்கப் படுகிறது.

15 நிமிஷ = 1 கஸ்த
30 கஸ்த = 1 கலை
30.3 கலை = 1 முஹூர்த்தம்
30 முஹூர்த்தம்  = 1 நாள்

நமக்கு 1 நாள் என்பது 24 மணி நேரம் என்று தெரியும்

எனவே, நாம் 24 மணி = 30 முஹூர்த்தம் x 30.3 கலை x 30 கஸ்த x  15 நிமிஷ என்று கணக்கிட்டால் 4,09,050 நிமிஷ கிடைக்கும்.

நாம் 1 மணி = 60 x 60 = 3600 விநாடிகள் எனவே 24 மணி = 24 x 3,600 நொடிகள் = 4,09,050  நிமிஷ ஆகும்.

4,09,050 நிமிஷ = 86,400 விநாடிகள்

1  நிமிஷ = 0.2112… விநாடிகள்

1/2 நிமிஷ = 0.1056  சுமார் விநாடிகள்

இப்போது தூரத்தை எப்படி கணக்கிடுவது என்று பார்க்கலாம்.

தூரத்தின் அலகு: யோஜனா

யோஜனா என்பது பின்வருமாறு பண்டைய வேத உரை "விஷ்ணு புராணம்" புத்தகத்தில் 1, அத்தியாயம் 6 இல் வரையறுக்கப்பட்டுள்ளது

10 பரமாணு = 1பரஷுக்ஷும (Parasúkshma)
10 பரஷுக்ஷும = 1  Trasarenu
10 Trasarenus = 1  தூசி /துகள் – (Mahírajas )
10 துகள்  = 1பல்க்ர (Bálágra )
10 பல்க்ர = 1 லிக்யா (Likhyá )
10 லிக்யா = 1 யுகா (Yúka )
10 யுகா  = 1யவோதர (Yavodara )
10 1யவோதர = 1 யவ (Yava )
10 யவ = 1 அங்குல /விரல் (Angula) (1.89 செமீ அல்லது சுமார் 3/4 அங்குலம்)
6 விரல் = 1பாதம் Pada
2 1பாதம் = 1 Vitasti (span)
2 Vitasti = 1 ஹாஸ்டா (முழம்)
4 ஹாஸ்டா = 1 தனு/தண்டா/கம்பு/கோல்/வில்
2000 தனு = 1 காவ்யுதி (Gavyúti) (ஒரு பசுவும் சத்தம் கேட்கிற தூரம்) = 12000 அடி
4 காவ்யுதி = 1 யோஜனா = 9,09 மைல்கள்

ஆகையால், நாம் இப்போது ஒளியின் வேகம் மதிப்பு என்னவென்று கணக்கிடுவோம்.

1/2 நிமிஷத்தில் 2202 யோஜனா என்றால்

1/2 நிமிஷம் = 0.1056 வினாடியில் கடந்த தூரம் 2202 யோஜனா x 9.09 மைல் = 20016.18 மைல்

எனில் ஓரு வினாடியில் கடக்கும் தூரம் : 1,89,547 மைல்/வினாடி

நவீன அறிவியலின் படி ஒளியின் வேகம் விநாடிக்கு 1,86,000 மைல்கள்.

வித்தியாசம்: 3,547 மைல்/வினாடி (1.9% )

பண்டைய அளவீடுகளை புதிய அளவீட்டு முறைக்கு மாற்றுவதில் உள்ள குறைபாட்டால் வித்தியாசம் ஏற்பட்டிருக்கலாம்.

ரிக் வேதம் மிகபழமையானது (சுமார் 5000-7000 வருடங்களுக்கு முற்பட்டது)

No comments:

Post a Comment