Monday, December 11, 2017

Yoga Vasishtam in tamil part-2

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

யோகவாசிஷ்டம் - வைராக்ய பிரகரணம் -2

அரிஷ்டநேமி என்ற அரசன் ராஜ்யத்தை பிள்ளையிடம் விட்டு கந்தமாதனபர்வதத்தில் தவம் செய்கையில் இந்திரனால் சுவர்க்கத்திற்கு வரும்படி அழைக்கப்பட்டான். அப்போது அந்த இந்திரனின் தூதனைப் பார்த்து அரிஷ்டநேமி சுவர்க்கத்தின் தன்மையைப் பற்றி கேட்க, அந்த தூதன் கூறலுற்றான்.

சுவர்க்கம் மூன்று வகைப்படும்.
முதல் வகை மிகவும் புண்யம் செய்தவர்கள் தூய உள்ளம் கொண்டவர்கள் இருப்பது. இதிலிருந்து மேலும் சித்த் சுத்தி பெற்று அவர்கள் மேலான கதியை அடைகிறார்கள். 
இரண்டாவது புண்யம் செய்தவர்கள்ஆனால் உள்ளத்தும் மாசு போகாதவர்கள் இருப்பது.

மூன்றாவது புண்யம் செய்திருந்தாலும் பாபமும் செய்து இருப்பவர்கள் இருப்பது. இந்த கடைசி இரண்டு ஸ்வர்கத்தில் இருப்பவர்கள் தங்கள் புண்ய பலன் தீர்ந்தவுடன் பிறவி எடுக்கிறார்கள்.

பரோத்கர்ஷ அஸஹிஷ்ணுத்வம் ஸ்பர்தா

சைவ ஸமை: ச தை:|

கனிஷ்டேஷு ச சந்தோஷ: யாவத் புண்யக்ஷயோ பவேத் ||

தன்னைவிட உயர்ந்த நிலையில் உள்ளோர் மீது வெறுப்பு, தனக்கு சமமாக உள்ளோர் மீது பொறாமை , தன்னை விட கீழ் நிலையில் உள்ளோரைக் கண்டு மகிழ்ச்சி இவை புண்ய பலத்தை வெகுவாகக் குறைக்கும்.

இதைக்கேட்ட அரசன் எனக்கு இப்படிப்பட்ட சுவர்க்கம் தேவை இல்லை என்றான்.

இந்திரன் அவனை மோக்ஷ ஞானம் பெற வால்மீகியிடம் உபதேசம் பெறச் செய்கிறான்.

அரிஷ்ட நேமியும் வால்மீகியிடம் சென்று இவ்வுலகத் துன்பங்களில் இருந்து விடுதலை பெரும் வழியை உபதேசிக்கும்படி வேண்டுகிறான்.

அப்போது வால்மீகி அவனிடம் ராமனின் சரிதத்தைக கேட்டால் உய்யும் வகை அறியலாம் என்று கூற அந்த அரசன் ராமன் யார் அவன் எப்படி பந்தத்தில் கட்டுண்டான் எப்படி பந்தத்திலிருந்து விடுதலை அடைந்தான் என வினவ , அதற்கு வால்மீகி தன் சிஷ்யர் பரத்வாஜருக்குக் கூறியதை சொல்ல ஆரம்பிக்கிறார்.

இவ்வாறு யோக வாசிஷ்டம் துவங்குகிறது.

அஹம் பத்தோ விமுக்த: ஸ்யாம் இதி யஸ்ய அஸ்தி நிஸ்சய: I
நாத்யந்தம் அக்ஞ:: நோ தத் க்ஞ: ஸோ அஸ்மின் சாஸ்த்ரே அதிகாரவான்II

எவனொருவன் நான் உலகபந்தத்தில் கட்டுப்பட்டிருக்கிறேன் . இதிலிருந்து விடுபடவேண்டும் என்று விரும்புகிறானோ , எவன் முழுமையான அறியாமையும் இல்லாது முழுமையான ஞானமும் பெறாது உள்ளானோ அவனே இந்த கிரந்தத்தினால் பயன் பெறுபவன் ஆவான்.

கதோபாயான் விசார்ய ஆதௌ மோக்ஷோபாயான் இமான் அத I
யோ விசாரயதி ப்ராக்ஞ: ந ஸ பூயோ அபிஜாயதே ||

புத்திமான் இந்த ராமனின் சரித்திரத்தை ஆராய்ந்து அதன் மூலம் மோக்ஷ சாதனத்தை அறிகிறான். அவனுக்கு மறு பிறப்பில்லை.

பரத்வாஜர் வால்மீகியிடம் ராமன் மற்றும் லக்ஷ்மண பரத சத்ருக்னர்களும் சீதையும் மற்றும் ராமனை பின்பற்றினவர்களும் எவ்வாறு துக்கமாகிற கடலை கடந்தார்கள் மென்று கேட்க வால்மீகி பதில் கூறினார்.

அவர்கள் ஆசாபாசங்கள் அற்று (நீராக சேதஸ:) நடப்பதை ஏற்று ( யதாப்ராப்தானுவர்தின:) உலகில் பற்றற்று வாழ்ந்தார்கள்.

ராமன் எவ்வாறு ஜீவன் முக்தனாய் வாழ்ந்தான் என்பதை விவரிக்க அவன் ம்மன்க்குழப்பத்தையும் வசிஷ்டரின் உபதேசம் மூலம் தெளிவு பெறுவதையும் விவரிப்பதே பின்வரும் அத்தியாயங்கள்.


No comments:

Post a Comment