Thursday, December 7, 2017

Think good - Positive story

நீ என்ன நினைக்கிறாயோ அது
வாகவே ஆகிவிடுவாய் – சுவாமி விவேகனந்தர்.

இன்றையஉங்களது வாழ்க்கை உங்களது கடந்தகால எண்ணங்களின் பிரதிபலிப்பே. அதில் நல்லவையும் அடங்கும் கெட்டவையும் அடங்கும். நீங்கள் அதிகமாக யோசிக்கும் விசயங்களை உங்களின் பக்கம் ஈர்ப்பதால் உங்களின் வாழ்வில் ஒவ்வொரு அம்சத்திலும் அந்த எண்ணத்தின் ஆக்கிரமிப்பு அடங்கியுள்ளது என்பதை நீங்களே உணரலாம்.

"Thoughts become things. If you see it in your mind, you will hold it in your hand"
-Bob Proctor

"உங்களது மனக்கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்கமுடிந்தால் அது கண்டிப்பாக உங்களது கைகளில் தவழும்."
-பாப் பிராக்டர்

உங்களது தேவை என்னவோ அதை பற்றி நீங்கள் சிந்திக்க ஆரம்பித்தால், உங்களது அந்த எண்ணத்தை ஆதிக்க எண்ணமாக மாற்ற முடியும் என்றால், கண்டிப்பாக நீங்கள் நினைத்ததை உங்களால் வாழ்வில் கொண்டு வரபோவது உறுதி.

எண்ணங்கள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் பயணிக்கும் என்று பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்வதில்லை.நாம்மால் எண்ணத்தை அளவிட முடியும்.நாம் நமக்கு தேவையான விசயத்தை பற்றி திரும்ப திரும்ப எண்ணிகொண்டே இருக்க வேண்டும்.

நான் அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும். பெரிய வீடு வாங்க வேண்டும். கார் வாங்க வேண்டும் நீங்கள் இது போல தொடர்ந்து எண்ணிகொண்டே இருக்கும்போது, நீங்கள் தொடந்து அதன் எண்ணங்களை ஒரு குறிபிட்ட அலைவரிசையில் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கறீர்கள்.

எண்ணங்கள் அந்த காந்த சமிக்கைகளை வெளியே அனுப்பி அவற்றிற்கு இணையானவற்றை உங்களிடம் ஈர்க்கின்றன.

எண்ணங்கள் காந்த சக்தி உடையவ.நீங்கள் சிந்திக்கும் போது எண்ணங்கள் குறிபிட்ட அலைவரிசையில் பிரபஞ்சதினுள் அனுப்பபடுகின்றன.

அவை அதே அலைவரிசையில் உள்ள அனைத்து விசயங்களையும் ஈர்க்கின்றன. பிரபஞ்சத்திற்கு அனுப்பப்படும் ஒவ்வொன்றும் திரும்ப அதன் மூலத்துக்கே அனுப்பப்படும் அந்த மூலம் தான் நீங்கள்.

உதரணமாக
தொலைகாட்சி நிகழ்ச்சிகளை நாம் பார்க்கிறோம். அது எப்படி நம் டிவியை வந்து சேர்கிறது. அதன் ஒளிபரப்பு நிலையத்தில் இருந்து ஒளிபரப்பபடுகிறது.

நாம் வீட்டில் நமக்கு எந்த சேனல் தேவையோ அதற்கு ஏற்ற சேனல் மாற்றும் போது அது சம்பந்தமான அலைகளை உள்வாங்கி நமக்கு படமாக காண்பிக்கிறது டிவி.

இதே போல மனிதனும் ஒரு ஒளிபரப்பு கோபுரம் தான். அதாவது சிக்னல்களை வெளியே அனுப்பிக்கொண்டு இருக்கும் ஒரு உயிர் உள்ள ஒளிபரப்பு கோபுரம்.

நாம் எந்த மாதிரி அலைகளை வெளியே அனுப்புகிறோமோ அதற்கு ஏற்றார் போல நமது வாழ்க்கை அமைகிறது. ஏன் என்றால் நம்மிடம் இருந்து எந்த மாதிரி அலைவரிசை வெளியே போகிறதோ அதே மாதிரி தான் நமக்கு எல்லாமும் வந்து சேரும்.

உங்களது வாழ்வில் இப்போது நடைபெற்று கொண்டிருக்கும் காட்சிகள் அனைத்தும் உங்களிடம் இருந்து வெளியே போன எண்ணங்கள் கவர்ந்து இழுத்தவையே. உங்கள் வாழ்கையில் நீங்கள் எதாவது மாற்ற விரும்பினால் முதலில் நீங்கள் வெளிப்படுத்தி கொண்டிருக்கும் எண்ணங்களின் அலைவரிசையை மாற்ற வேண்டும்.

எப்போதும் நல்ல எண்ணங்களையே சிந்தியுங்கள்.

நாம் எல்லோருக்கும் பிரச்சினை இங்குதான் உள்ளது. பெரும்பாலான மக்கள் எல்லோரும் தனக்கு என்ன வேண்டாமோ அதை பற்றி மட்டும்தான் சிந்தித்து கொண்டு இருக்கிறோம்.

பிறகு எனக்கு மட்டும் ஏன் வாழ்கையில் எனக்கு பிடிக்காத அல்லது விரும்ப தகாத நிகழ்சிகளாக நடக்கிறது என்று புலம்புகிறோம்.

"மனம் இருந்தால் மார்க்கம் உண்டு"

"வாழ்க வளமுடன் "

No comments:

Post a Comment