Tuesday, December 26, 2017

Story of Ashtapadi

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

After my post about starting the Ashtapadi, KumarRamanathan has sent me a post on Jayadeva and ashtapadi which he has posted sometime back. I thought thta it will be a good preface for my posts . I am givingi it below.

courtesy Kumar Ramanathan

அரியும் அரனும் ஒருவரே. தாழ்சடையும் நீண்முடியும் கொண்ட அரனும், சங்கு சக்கரம் தரித்த திருமாலும் இந்த இரண்டு உருவமும் ஒன்று. எப்படி என்கிறீர்களா.

அரசன் ஜயதேவரின் விருப்பத்தை ஏற்றான். "ஜயதேவரே! தாங்கள் காசிக்குச் செல்லும் தங்களின் விருப்பத்திற்குத் தடையேதுமில்லை. தாராளமாகச் செல்லலாம். தங்களுடன் நானும் வருகிறேன். அதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சிதான். ஆனால் தங்கள் விருப்பத்தில் ஒரு நெருடல் தெரிகிறது. 'அஷ்டபதி' பாட்டுகளை இறைவனே அங்கீகரித்த பிறகு ஏன் இந்த விபரீதமான எண்ணத்தைத் தெரிவிக்கிறீர்கள்? இறைவனே தான் முன் நின்று தங்களை எழுத வழிகாட்டியுள்ளான். அப்படியிருக்க அதனைக் குறைசொல்ல யாருக்கு அருகதை உண்டு? காசிவிஸ்வநாதரைத் தரிசித்து பின் வருவோம்." என்றான் அரசன்.

அரசனின் வார்த்தைகள் நியாயமானதாக இருந்தன இருப்பினும் "மன்னா! இறைவனின் அங்கீகாரம் எனக்கும் என் மனைவிக்கும் மட்டுமே தெரியும். உன்னிடம் இதனைக் கூறியவுடன் என்மேல் உள்ள நம்பிக்கையில் இதனை ஏற்றுக் கொண்டுவிட்டாய். எல்லாரும் அப்படி இல்லையே! ஊருக்கு இது தெரிய வேண்டும். ஆகவேதான் இறைவன் என் உள்ளத்தில் இம்மாதிரியானதோர் எண்ணத்தைத் தோன்ற வைத்துவிட்டார். என் வாழ்க்கையில் ஒவ்வொரு வினாடியும் கண்ணனின் எண்ணத்தைத் தவிர வேறு சிந்தனையற்றவன். அந்த நிலையில் இம்மாதிரியான விபரீத எண்ணத்தை ஏன் தோற்றுவித்தான்? இதற்கு ஒரு காரணம் இருக்கும். அக்காரணத்தை அவனேதான் அறிவான். இதில் எந்தவித முரண்பாட்டையும் நான் காணவில்லை. இறைவனின் திருவுள்ளத்தோடுதான் இந்தக் காசியாத்திரை" என்று ஜயதேவர் பதிலளித்தார்.

இதற்குமேல் அரசனால் தட்டிக்கழிக்க இயலவில்லை. அரசனும் ஜயதேவரும் காசிக்குப் புறப்பட்டனர். அங்கு சென்று கங்கையில் புனித நீராடி ஆயிரம் வில்வ தளத்தால் விஸ்வநாதரை அர்ச்சித்தனர். ஜயதேவரும் தான் வந்தபணி நிறைவேற வேண்டுமெனப் பிரார்த்தித்தார். அடியார் வேண்டினால் ஆண்டவன் உடன் பலனளிப்பான். அன்று இரவு ஜயதேவருக்கு ஒரு கனவு தோன்றியது. கனவில் சிவபெருமான் காட்சியளித்து "ஜயதேவா! நீ வந்த காரியம் நான் அறிவேன். உன் பாடல்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென எண்ணுகிறாய். பரம்பொருளான அந்தக் கண்ணனே அதிகாரம் கொடுத்த பிறகு ஏன் மானிடர்களின் ஒப்புதல் கேட்க விழைகிறாய்? இது உன் அறியாமை அன்றோ? இருப்பினும் உன்னைக் காப்பது என் கடமை. நாளை நீ வெற்றி பெறவேண்டுமானால் என்னைப் புகழ்ந்து ஐந்து பாடல்கள் பாடு. அவ்வாறு பாடினால் நீ வந்த காரியம் கைகூடும்." என்று கூறினார்.

கனவு கலைந்தது. ஜயதேவரின் மனத்தில் ஒரு சஞ்சலம். இது நல்ல கனவா? கெட்ட கனவா? எல்லாம் ஈசன் செயல் என எண்ணி பிறகு தூங்கிவிட்டார். காலையில் எழுந்தார். தன்னுடைய நித்திய கர்மாக்களை முடித்தார். அதன் பின் அஷ்டபதி சுவடிகளை எடுத்துக் கொண்டு காசிவிஸ்வநாதர் ஆலயத்தை நோக்கி நடந்தார். அங்கு இறைவன் முன் ஐந்து அஷ்டகங்களை இயற்றிப் பாடினார். தானும் அதனை ரசித்தார். அதே சமயம் ஒன்று பண்டிதர் குழு கோவிலை நோக்கி வந்து கொண்டிருந்தது. முன்னே வந்த ஒரு மாணவர் மூலம், வரும் பண்டிதர் அவர்கள் குலத்திலே தலைமைப் பண்டிதர் என அறிந்தார். அப்பண்டிதரின் பெயர் சந்தேக நிவர்த்தி குமாரப்பண்டிதர். வேதங்களில் எழும் சந்தேகங்களுக்கு எல்லாம் தக்க பதில் கொடுப்பார். எப்படி ஞானசம்பந்தப் பெருமான் சமணர்களிடம் வாதம் புரிந்தாரோ அதேபோல் இந்தப் பண்டிதரும் ஜயதேவரிடம் வாதம் செய்யவேண்டும் என்றார்.

மிகுந்த அடக்கத்துடன் ஜயதேவர் தன்னை அறிமுகப்படுத்தி, "நான் அறிஞனுமல்லன். பண்டிதனுமல்லன். என் குரு பெருமானின் கருணை. ஏதோ சில நேரங்களில் நான் வாதம் செய்தால் அதை என் குருநாதரின் செயல் என எண்ணுவேன். நான் வாதம் செய்ய அருகதை அற்றவன். என்னைவிட்டு விடுங்கள். என…

இதற்கெல்லாம் குமாரப் பண்டிதர் செவி சாய்க்க வில்லை. அவர் "என் அருமை பண்டிதர்களே! இதுவரை நடந்ததை தாங்கள் அறிவீர்கள். என் எதிரே அடக்கமாக நின்று பேசுகிறானே இவனை எளிதில் நம்பாதீர்கள். தன்னைப் பெரும் கிருஷ்ண பக்தன் என்ற இறுமாப்போடு இருக்கிறான். இவனுக்குத் தலை ஆட்ட ஒரு பொம்மை அரசனும் உடன் இருக்கிறான். இவன் பாகவதம் பாடினதும் உடனே இறைவன் முன்வந்து ஏற்றுக் கொண்டாராம். இதிலெல்லாம் எவ்வளவு உண்மை என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். இவனது பாடல்களை நான் அறிவேன். அது ஒரு சிருங்காரம் பொருந்திய பாடல்கள். அதனை இறைவன் சந்நிதியில் பாடமுடியாது. இதனை மகா காவியமெனப் பாடிக் கொண்டிருக்கிறான். இதனை ஏற்கலாமா என்பதற்கு ஒரு சோதனை வைப்போம். இவனது கீதகோவிந்தப் பாடல்களை கங்கையில் விட்டெறிவோம். அப்பாடல்கள் மிதந்து வந்து கரைசேர்ந்தால் கங்காமாதா ஏற்றுக்கொண்டு விட்டாள் என அறிவோம். இல்லையேல் இக்கவிதைகள் யாவும் பயனற்றவை என்பதனை உலகுக்கு அறிவிப்போம். இதற்கு நீ தயாரா?" என ஜயதேவரிடம் பட்டர் கேட்க, ஜயதேவர் துடித்துப் போனார். "காசியம்பதி பரமேஸ்வரா! இது உன் திருவிளையாடலன்றோ, என் மனத்தில் ஓர் எண்ணத்தை உதிக்க வைத்து அதனை நிறைவேற்றுவதற்கு உண்டான சூழ்நிலையையும் ஏற்படுத்திவிட்டாய். இனி பின்வாங்க முடியாது. எது நடந்தாலும் உன் சித்தம்தான் என எண்ணியவராக இறைவனை வேண்டினார்: "கண்ணா! உன்னை நான் உண்மையாக நேசிக்கிறேன். உன்னை விட்டால் வேறுகதி எனக்கு இல்லை. சோதனையை ஏற்படுத்திவிட்டு அதன்பின் சிவனாகக் கனவில் காட்சி அளிக்கிறாய். எனக்கு எல்லாமே கண்ணன் தான். சிவனும் கண்ணன்தான்." இக்கருத்தை பல மகனியர்கள் பிற்காலத்திலும், இதற்கு முன்னும் உணர்த்தியுள்ளனர். முன்னம் திருவந்தாதியை அருளிய பேயாழ்வார் ஒரு பாசுரத்தில்
"தாழ்சடையும், நீண்முடியும், ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும், பொன்நாணும் தோன்றுமால்-சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைத்து"
என்று கூறுகிறார். அரியும் அரனும் ஒருவரே. தாழ்சடையும் நீண்முடியும் கொண்ட அரனும், சங்கு சக்கரம் தரித்த திருமாலும் இந்த இரண்டு உருவமும் ஒன்றாய் இசைத்து எனப் பொருள்படக் கூறியுள்ளார்.
இவ்வாறு எண்ணியவராக தன் கீதகோவிந்த காவியத்தை விஸ்வநாதன் முன் வைத்து, "இறைவா! கண்ணன் இதனை அங்கீகரித்தான் என்பதை இவர்கள் எண்ண மறுக்கிறார்கள். நான் கூறுவதையெல்லாம் உண்மை என்றால் இக்காவியத்தைத் தாங்கள் ஏற்று என்னைக் காக்கவேண்டும்." என வேண்டினார். அடியார் படுதுயரையெல்லாம் போக்க வல்லவன் பரந்தாமன். தன் பக்தன் இவ்வாறு தன்னையே சோதனைக்குட்படுத்தி வேண்டும்போது அவனைக் காப்பதுதான் தருமம் எனக் காட்டவே இறைவன் ஓர் அதிசயத்தை நிகழ்த்தினான்.
கர்ப்பகிரகத்திலிருந்து கணீரென்று ஒருகுரல் "ஜயதேவா! உன் கீதகோவிந்தப் பாடல்கள் உயர்வானவை. அதனால் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இது ஒரு மகா காவியம். இவ்வையகம் உள்ளவரை போற்றப்பட்டு என் கோவில்களில் பாடப்படும். இந்தப் பாடல்களைப் பாடுவோரும், பாடுவதைக் கேட்போரும், இதைப் பற்றிச் சிந்திப்போரும், எழுதுவோரும் என் அன்பிற்குப் பாத்திரமானவர்கள். இதில் எந்த ஓர் ஐயப்பாடும் இல்லை. இதனை சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை. என் அங்கீகாரம் பெற்ற இப்பாடல்கள் வாதத்திற்கு அப்பாற்பட்டவை" என ஒலித்து மறைந்தது.
வந்த பண்டிதர் தன் குழாத்துடன் ஜயதேவரை நமஸ்கரித்து, தங்கள் செயலைக் கண்டு வருந்தினர்.
அதன்பின் சிறிதுகாலம் காசிமாநகரில் தங்கி, தன் காவியத்தை எல்லாருக்கும் புரிய வைத்து, அவர்களையும் மகிழ்வித்து தானும் ஆனந்தமாகக் கண்ணனை ஆராதித்தார். பின் மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க கிரௌஞ்சதேசத்தை அந்தடைந்தனர்.
அங்கு மன்னருக்கு மறைபொருள்கள் யாவையும் விளக்கி மன்னரைப் புடம் போட்ட தங்கமாக்கினார். மன்னன் குருநாதரின் அருளோடு, தெய்வீக சிந்தனையுடன் அரசு பரிபாலனம் செய்து வந்தான். அந்தச் சமயத்தில் மன்னன் மனத்தில் ஒரு சிந்தனை எழுந்தது. அதனை குருநாதரான ஜயதேவரிடம் தெரிவிக்க அவரும் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

ராதா யார்? வ்ரிஷபானு என்கிறவர் அவரது பூர்வ ஜன்மத்தில் ராஜ சுச்சந்தரா வாக இருந்தார். அவருக்கும் அவர் மனைவி கலாவதிக்கும் பிரம்மா கொடுத்த வரத்தின் பயனாக த்வாபர யுகத்தில் லக்ஷ்மி தேவியே பெண்ணாக அவதரித்தாள். அவளே ராதா. கலாவதி ராணியே வ்ரிஷ பானுவின் மனைவி கீர்த்தி குமாரி . வ்ரிஷ பானு வசித்த ஊர் பர்சானா. தொலை தூரம் நடக்கவேண்டாம் . கொஞ்சம் தள்ளி கோகுலம் என்று ஒரு ஊர். அந்த ஊரில் நந்த கோபன் ஒன்று ஒரு பிரமுகன். அந்த ஊரின் கோபர் தலைவன். வ்ரிஷபானுவின் நண்பன். ஒரு . ஹோலி பண்டிகை போது நண்பர்கள் இருவரும் சந்தித்தனர். நந்தகோபன் வீட்டில் வ்ரிஷபானு தனது மனைவியோடும் பெண்ணோடும் வந்த போது தான் ராதையும் கிருஷ்ணனும் சந்தித்தனர்.

அது இறைவனும் இறைவியும் சந்தித்த அதி திவ்ய சிநேக- பாவ சந்திப்பு. சாதரணமான ஆணும் பெண்ணும் சந்திக்கும் உறவு இது வல்ல. இது மனித காதல் அல்ல. அதையும் கடந்த தெய்வீக நேசம். பகதனுக்கும் பகவானுக்கும் உள்ள உறவையும் மீறியது. வ்ரஜ பூமியின் உயிரே கண்ணன் என்றால் கிருஷ்ணனின் ஆத்மா ராதா.

''ஆத்மா தூ ராதிகா தஸ்ய'' (ராதே, நீ தான் ஆத்மா"") ஒரு புறம் பார்த்தால் ராதா ஒரு கிருஷ்ண பக்தை யாக தோன்றினாலும் மறுபுறம் அவளே கிருஷ்ணனால் ஆராதிக்கப்பட்டவள். (''ஆராத்யதே அசௌ இதி ராதா'') இது யாருக்கு கிடைக்கும்? இணை பிரிக்க முடியாத அன்பு, காதலுக்கு ஒரு அடையாளம் தான் ராதா-கிருஷ்ணா காதல் . பிருந்தாவனமே எதிரொலித்த முடிவில்லாத கட்டுப்பாடில்லாத தூய்மையானது ராதாவின் காதல்.

ராதை குழந்தையாக இருக்கும்போது நாரதர் அவளைப்பார்க்க வந்தபோது வ்ரிஷபானுவிடம் சொன்னதை மீண்டும் ஞாபகப் படுத்துகிறேன். ''இந்த குழந்தை சாதாரணம் இல்லை. லக்ஷ்மிதேவியே . தாயாராகவே இவளை வளர்த்துவா. இவள் காலடி பட்ட இடம் நாராயணன் இருக்குமிடம். அவரே கிருஷ்ணன் என அறிவாய். '' வ்ரிஷபானுவிடம் ராதை அவ்வாறே வளர்ந்தாள் .


கிருஷ்ணனின் இதயத் துடிப்பு ராதா. கிருஷ்ணனின் மறுபெயர் ராதா. அழகுக்கு திரு உருவம் கிருஷ்ணன் என்றால் கிருஷ்ணனுக்கு அழகூட்டுவது ராதாவே. சைதன்ய மகாப்ரபுவை ராதா- கிருஷ்ணனின் மறுபிறப்பு என்பார்கள். ராதாவின் சில அழகிய பெயர்கள் தெரியுமா உங்களுக்கு. 
கோவிந்த நந்தினி (கோவிந்தனுக்கு ஆனந்தம் தருபவள்) 
கோவிந்த மோகினி (கண்ணனை கவர்ந்த காந்த சக்தி) 
கோவிந்த சர்வச்வா (கிருஷ்ணனின் எல்லாமே) 
சர்வ காந்த சிரோமணி ( கிருஷ்ணனின் எல்லா கோபியரில் தலை சிறந்தவள்) 
க்ரிஷ்ணமயி ( உள்ளும் புறமும் க்ரிஷ்ணனே) 
தாமோதர ரதி, 
பர்சானே வாலி (வர்ஷனாக் காரி -- வங்காளியர் ''வ'' வை ''பா'' என்று தானே சொல்லுவார்கள்) 
கிருஷ்ணப்ரியா . 
நாரத பஞ்சரத்ராவில் ராதா ஹரா என்று அழைக்கபடுகிறாள். அதனால் தான் ஹரே கிருஷ்ண மஹா மந்த்ரத்தில் ஹரே என்கிற வார்த்தை ராதையோடு சேர்ந்த கிருஷ்ணனன் என்று வரும். பர்சானா பிருந்தாவன் -இந்த ரெண்டு ஊர்களுமே மதுரா நகரத்தை சேர்ந்தவை. ராதா கிருஷ்ணா கோவில்கள் உலகெங்கும் உள்ளன. ராதா ராணி கோவில் ஆஸ்டின், டெக்ஸாஸ், நகரில் உள்ளது. வட அமெரிக்காவில் மிகப்பெரிய ராதா கிருஷ்ணன் கோவில் உள்ளது. கிருஷ்ணன் அருள் வேண்டுமானால் ராதாவின் கால்களை முதலில் பிடிக்கவேண்டும். பிருந்தாவனத்தில் கிருஷ்ணனை தரிசிக்க போவோர்கள் ராதா கோவிந்தா என்று ஸ்மரித்துக்கொண்டே தான் கொவிலை அணுகுவார்கள்.

No comments:

Post a Comment