Sunday, December 10, 2017

Sree bhasyam part2

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீபாஷ்யம் - பகுதி 1 பிரிவு 2

சூத்திரம் 2
விவக்ஷித குணோபபத்தே: ச 
இந்தப பகுதியில் சொல்லப்படும் குணாதிசயங்கள் பிரம்மத்தையே சாரும்.

மனோமய:- - மனதில் வியாபித்துள்ள பிரம்மம் 
பிராண சரீர:- எவருக்கு பிராணன் சரீரமோ
பாரூப: - தேஜோ மயமானவரோ
சத்யசங்கல்ப: - எவருடைய சங்கல்பமே உண்மை எனப்படுவதோ
ஆகாசாத்மா- ஆகாசத்தைப் போல் சூக்ஷ்மமாகவும் தூயதாகவும் உள்ளவரோ
சர்வகர்மா- எல்லாசெயல்களுக்கும் காரணம் எதுவோ
சர்வகாம: சர்வ கந்த: சர்வரஸ:- எல்லா ஆசைகளும் எல்லா கந்தங்களும் எல்லா ருசிகளும் எந்த ஆதாரத்தினால் தோன்றுகின்ற்னவோ -----

இப்படி எல்லா குணங்களுக்கும் இருப்பிடமாக இருந்தும் அசப்தம் அஸ்பர்சம் என்று ஜீவராசிகளின் குணங்களாகிய சப்தம் ஸ்பர்சம் முத்லியவற்றிற்கு அப்பாற்பட்டது என்ற வர்ணனை பிரம்மத்திற்குதான் பொருந்தும்.

தேஹம் இந்திரியங்கள் பிராணன் மனம் இப்படி ஸ்தூல உருவங்களை ஒவ்வொன்றாகத் தாண்டிச் சென்றால் ஒளிமயமான ஆகாசத்தைப் போல் சூக்ஷ்மமான ஆத்மாவை அறியலாம்.

அதற்கும் மேலே அந்த ஆத்மாவையே சரீரமாகக் கொண்டது பிரம்மம் என்று பொருள். பிரம்மம் அல்லது பரமாத்மாவின் சங்கல்பமே இந்த பிரபஞ்சம். 
ஆகவே சத்யகாமன் சத்யசங்கல்பன் என்று சொல்லப்படுகிறான். அதாவது அவனுடைய சங்கல்பமோ இச்சையோ அன்றி எதுவும் இல்லை என்று பொருள். "தத் ஐக்ஷத பஹு ஸ்யாம் பிரஜாயேய ,' என்று முதலில் பார்த்தபடி எல்லாவற்றிற்கும் முதல் காரணம் என்ற அர்த்தத்தில் இந்த வர்ணனைகள் பிரம்மத்தையே குறிக்கும் ஜீவாத்மாவை. அல்ல என்பது இந்த சூத்திரத்தின் பொருள்.

சூத்திரம் 3
அனுபபத்தேஸ்து ந சாரீர:
இங்கு சொல்லப்பட்ட குணங்கள் ஒட்டிவராத காரணத்தால் இது சம்சாரத்தில் சிக்கி அவதிப்படும் ஜீவாத்மா அல்ல.

No comments:

Post a Comment