Thursday, November 2, 2017

Vivekananda & /radha devi - Positive story


குரங்கின் விளையாட்டு

பிரேமை பக்திக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த ராதா தேவி சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புத சம்பவம்……………

ராதாகுண்டம் என்ற பகுதி ராதா தேவி வாழ்ந்து அன்பைப் பரப்பிய புண்ணிய ஸ்தலம். சுவாமி விவேகானந்தர் இங்கே வந்து தங்கியிருந்தபோது அவரிடம் ஒரே ஒரு துணிதான் இருந்தது. அதை ஒரு நாள் அவர் கசக்கி உலர்த்தி வைத்திருந்தபோது ஒரு குரங்கு வந்து தூக்கிக்கொண்டு போய் மரத்தின் உச்சாணிக் கிளையில் உட்கார்ந்துகொண்டது. சுவாமிஜிக்கு கோபம் வந்து விட்டது.  குரங்கின் மீது அல்ல  அந்தப் புண்ணிய தலத்தில் பாதம் பதித்து வலம் வந்த ராதா தேவியிடம்  எல்லோரும் உன்னைக் கருணையின் வடிவமாகப் போற்றுகிறார்கள். ஆனால் உன்னை தரிசிக்க வந்த இந்த ஏழையின் துணியைப் பறித்துக்கொண்டு விட்டாயே?  பக்கத்தில் உள்ள வனத்துக்குச் சென்று பட்டினி கிடந்து உயிரை விடுகிறேன் அந்த பழி உன்னையே சேரட்டும் என்று கூறியவராய் சுவாமிஜி காட்டை நோக்கி ஓடலானார்.

எல்லாவற்றையும் எங்கிருந்தோ கவனித்துக்கொண்டிருந்த ஒருவன் காவி உடையும் சிறிது உணவும் எடுத்துக்கொண்டு காட்டுக்கு சென்றான். அங்கே சுவாமிஜியைச் சந்தித்து அவற்றைக் கொடுத்து சென்றான். சுவாமிஜியின் கண்களை நீர் திரையிட்டது. வேட்டியை அணிந்து உணவையும் உட்கொண்ட பின் வனத்திலிருந்து வெளியே வந்தார். துணியும் உணவும் கொடுத்த அந்த வாலிபனை எவ்வளவு தேடியு அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அவர் எங்கே துணியை முன்பு உலர்த்தி இருந்தாரோ அங்கேயே அது காய்ந்து கொண்டிருந்த்து. சுவாமிஜி ராதா தேவியின் திருவருளை வியந்து சிலிர்த்தார்.

No comments:

Post a Comment