Thursday, November 9, 2017

Thiruvengadu Jayaraman - Periyavaa

பெரியவா சரணம் 

பெரியவா   புனே   அருகே,  ஒரு   மலையடிவார   கிராமத்தில்   முகாமிட்டிருந்தார்.   அங்கு   திருவெண்காட்டைச்   சேர்ந்த   ஜெயராமன்   வந்தார். 

அவரிடம்   பெரியவா  பரிவுடன், "இந்த   சின்னக்   கிராமத்திற்கு   கூட   வந்திருக்கியே.   பரம  சந்தோஷம்!  ஒவ்வொரு   நாள்   காலை   பூஜையின்  போது   நீ  தீட்சிதர்  கீர்த்தனைகளைப்  பாடு.   நாங்கள்   எல்லோரும்  கேட்க வேண்டும்.."  என்றார். 

ஜெயராமனுக்கு   பூரிப்பு.  ஒரு நாள்  வெள்ளிக்கிழமை   பூஜை..  பூஜை   முடிந்ததும்  சுக்கிர வார   கீர்த்தனையைப்    பாடத்   தொடங்கினார்   ஜெயராமன். 

அன்று   யாருக்கும்   பெரியவா பிரசாதம்   கொடுக்க வில்லை.   ஜெயராமனுக்கு  மட்டும்   பிரசாதம்   கொடுத்து   சென்னைக்கு   செல்ல   உத்தரவிட்டார். 

பெரியவா   கண்டிப்பாக   சொன்னதும்  ஜெயராமனுக்கு   ஒன்றும்   புரியவில்லை.   இருந்தாலும்   பெரியவா   சொல்வதில்    ஏதோ   உள்ளர்த்தம்   இருக்கும்   என்று   மனதிற்கு   தோன்றியது.   மறு வார்த்தை   பேசாமல்  சென்னை  வந்து  விட்டார். 

வீட்டுக்கு   வந்ததும்   அவரது   குருநாதர் மதுரை  மணி ஐயர்   வீட்டிலிருந்து   உடனே   வரும் படி   அழைப்பு   வந்தது. 

குருநாதருக்கு   ஏதோ   அவசரம்   என்பதை   உணர்ந்த   ஜெயராமன்   அவரது   வீட்டுக்குச்   சென்றார்.   இரண்டு   நாட்கள்    இரவும்   பகலும்  குருநாதர்    அருகில்   இருந்து   சேவை   செய்தார்.  மதுரை  மணி ஐயர்   இறைவனடி    சேர்ந்தார். 

தன்   குருநாதரின்    இறுதிக்   காலத்தில் ,   அவருக்கு   சேவை    செய்யும்    பாக்கியத்தை    அளிப்பதற்காகவே    பெரியவா   தன்னை   சென்னை   அனுப்பினார்   என்பதை   அறிந்த    ஜெயராமனின்   உள்ளம்    உருகியது....

No comments:

Post a Comment