ஆக அப்பா ஸொத்து சாச்வதமில்லை.
நாமே தேடிக் கொள்கிற ஸொத்துக்களுக்கும் இதே கதைதான்.
சாச்வதமான ஸொத்து, இழந்து போகாத, ரிப்பேர் பண்ணவேண்டாத ஸொத்து, டாக்ஸும் திருட்டும் தொடாத ஸொத்து, 'திருட்டுப் போயிடுமோ?' என்று பயப்படவும் வேண்டாத ஸொத்து, தப்பு வழிகளில் போய் நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டாத ஸொத்து அப்பா கொடுக்க முடியாது; நாமாகவும் தேடிக்கொள்ளமுடியாது.
குரு என்கிற ஒருத்தர்தான் சாச்வதமான அந்த ஸொத்தைத் தருகிறவர். இது நாம் போன பிற்பாடு நம் கூட வராத ஸொத்தில்லை – நம்மையே திரும்பி வரப் பண்ணாத ஸொத்து! எது சாச்வதமோ அந்தப் பரமாத்மாவுடன் நம்மைப்பிரிக்க முடியாமல் சேர்த்துவிடுகிற ஸொத்து.
ஞானம் என்ற ஸொத்தை குரு அநுக்ரஹிக்கிறார். ஸொத்து க்ஷீணித்துக் கொண்டே போவது, நாம் சிரமப்பட்டு அதை விருத்திபண்ணப் பாடுபடுவது, இந்தப்பாட்டில் பாவ மூட்டையை இன்னும் பெரிசாக்கிக் கட்டிக்கொள்வது என்பதற்கெல்லாம் இடமே வைக்காமல் நாளுக்கு நாள் தானும் வளர்ந்து நம்மையும் வளர்ப்பது குரு தருகிற உபதேச ஸொத்து.
மற்ற ஸொத்து எதுவானாலும் அதனால் கிடைக்கும் எல்லா ஸுகங்களும் தாற்காலிகம்தான். 'நித்யானந்தம்' என்றே சொல்லப்படுவதான சாச்வ ஸுகத்தைத் தருவது குரு அநுக்ரஹிக்கிற ஞானமொன்றுதான்.
No comments:
Post a Comment