நவராத்திரிலே ஒவ்வொரு கன்னிகையும், ஒவ்வொரு சுமங்கலியும்
சக்தி அம்சம்- (ஸ்ரீ மஹா பெரியவாளின் அருள்வாக்கு)
நவராத்திரிலே ஒவ்வொரு கன்னிகையும், ஒவ்வொரு சுமங்கலியும்
சக்தி அம்சம். அவாளை சுவாசினியா உருவகப்படுத்தி பூஜை செய்யலாம். சிவ-சக்தி வடிவமா தம்பதி பூஜை செய்யறதுக்கு விசேஷம். ஒரே நாளில் ஒன்பது பேருக்கோ, ஒவ்வொரு நாளில் ஒவ்வொருத்தருக்கோ, எண்ணெய் தேய்த்து நீராடக் சொல்லணும். நிறைய மஞ்சள், மருதாணி, புது வஸ்திரம் எல்லாம் கொடுக்கணும். சாட்சாத் லலிதையாவே வரிச்சு, குழந்தை உட்கார்ந்திருக்குமானால், ஸஹஸ்ரநாமமே பண்ணலாம். இல்லேனா திரிசதி, அஷ்டோத்திரம், திருப்தியா போஜனம்- பக்கத்திலே இருந்து அன்பா பரிமாறணும். யதா சௌகரியம் போல் இதைச் செய்துண்டு வந்தால் அம்பாள் அனுகிரஹத்தில் சக்தி பெருகும்.
கிரகத்துக்கு வர சுமங்கலிகளிலே வேணும்கறவா, உறவுக்காரா என்றெல்லாம் பார்க்காம சர்வ தாம்பூலம் கொடுக்கற சிந்தனை வரணும். அப்போதுதான் கிருஹத்திலே சுபிட்சம் பொங்கும். நவராத்திரிலே சுமங்கலிகள் எல்லாருமே ஸூவாஸினிகள்தான்.
"குரவ காக்யஸ்யதரோ புஷ்போத்பத்யர்த்தம்
ஸ்த்ரீ-ஸ்தான-லிங்கன-ரூப-தோஹத-குதூகலஸ்யா
சேதனஸ்ய வ்ருஷ-விசேஷஸ்யாபி அஸூலபா".
மரத்துக்கு உயிரிலேன்னு பலபேர் நினைப்பா. ஸ்த்ரீகள் தொட்டு பறிச்சா சில செடி, கொடிகள் அதிகமாப் பூக்குமாம். காய்க்குமாம். அதிலே ஒண்ணு மருதாணி. அதுக்கு சம்ஸ்க்ருதத்தில் குரவகம்னு பேரு. அசோக மரத்துக்கு கங்கேலி, காமகேலின்னு பேரு. அதோட பூ சிவப்பா இருக்கும். பூக்காம இருந்தா உத்தம ஸ்திரீகளை அதைத் தொடச் சொல்வா. மரம் கொள்ளாம பூத்துடும்.
'பாதாஹத: ப்ரம தயாவிக ஸத்ய சோக' ங்கறது பெரியவா வாக்கு.
தேவி நந்தவனத்தில் உலாவரும், அவளோட பாத துளி படாதான்னு அசோகமரம் ஏங்கறதா ஆதிசங்கர பகவத்பாதாள் ஸௌந்தர்யலஹரி -லே சொல்லி இருக்கா.
சர்வாலங்கார பூஷிதையா, புன்சிரிப்போட, நல்ல குணங்கள் நெறைஞ்ச பல சுமங்கலிகள் பாதம் பட்டாலே கிரஹ தோஷங்கள் விலகறது. சம்பத்து கூடறது. அதனாலேதான் கொலுன்னு ஏற்படுத்தினா. பல ஸ்திரீகளை, கன்னிகைகளை அழைத்து தாம்பூலம் கொடுத்தா, வாங்கிண்டா நல்லது. வருஷம் பூராவும் ஸ்திரீகளை ஆராதிக்க முடியலேன்னாலும் இந்த ஒன்பது நாளாவது கடைபிடிக்கணும்னு வைச்சா. கிரஹஸ்தா இதைக் கைவிடப்படாது.
No comments:
Post a Comment