உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹*பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*🌹
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
💐 *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.* 💐
*(10-வது நாள்.)*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🌷 *அருள்மிகு சொக்கநாதசுவாமி திருக்கோயில்.*🌷
*மேல வீரராகவபுரம், திருநெல்வேலி.*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*இறைவன்:*
அருள்மிகு சொக்கநாதர்.
*இறைவி:* அருள்தரும் மீனாட்சி அம்மன்.
*தீர்த்தம்:* பிரம்ம தீர்த்தம்.
*தல விருட்சம்:* வில்வம்.
*ஆகமம்:* காமிக ஆகமம்.
*தல அருமை:*
இத்திருக்கோயில் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான திருக்கோயிலாகும்.
மதுரையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த அழகிய பாண்டிய மன்னன், மதுரை திருசொக்கநாதர் மீனாட்சி அம்மனிடம் ஆழ்ந்த பக்தியையும் அன்பையும் செலுத்தி வந்து கொண்டிருந்தான்.
அனுதினமும் கோவிலுக்கு சென்று சொக்கநாதரை தரிசனம் செய்த பின்புதான் மற்ற பணிகளை தொடர்வார்.
இந்தநிலையில் சேரமன்னன் புருஷோத்தமன், பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்து திருநெல்வேலி வரை தனது சேரநாட்டின் எல்லையை விரிவுபடுத்தும் எண்ணி மேற்கு தொடர்ச்சி மலை வழியாக தனது படையுடன் புறப்பட்டான்.
அதை தனது ஒற்றர் மூலம் அறிந்து அழகிய பாண்டிய மன்னனும் பெரும்படை திரட்டி தற்போது பழைய பேட்டை இருக்குமிடத்தில் முகமிட்டு தங்கியிருந்தார்.
இத்தலத்தில் அவருடைய ஆஸ்தான குரு சுந்தர முனிவர் ஆசிரமம் அமைத்து ஆலோசனை கூறி வந்தார்.
ஒருநாள் மன்னன் தாமிரபரணி நதியில் நீராடிவிட்டு மதுரை சொக்கநாத பெருமானை தரிசனம் செய்யமுடியவில்லையே என்று வருத்தப்பட்டு, தியாணம் செய்தான்.
அப்போது அசரீரி வாக்காக,... சுந்தர முனிவர் ஆசிரமம் அமைந்த வில்வவனத்தில், வில்வமரத்தின் அடியில் ஊர்ந்து செல்லும் மணல் மேட்டில் தானிருப்பதாக அசரீரியாக ஒலித்தது.
அசரீரியான இச்செய்தியைக் கேட்ட பாண்டிய மன்னன் எறும்பு ஊர்ந்த அந்த புற்றை தோண்ட பணித்தார்.
அவ்விடத்தை அகழ்ந்ததில் அவ்விடத்தில் அழகிய சிவலிங்கம் இருப்பதைக் கண்டார்கள்.
மன்னன் மகிழ்ந்து அந்த இடத்தில் சொக்கநாதர் மீனாட்சி அம்மனுக்கு ஆலயம் எழுப்பி தினமும் பூஜை செய்து மகிழ்ந்து வந்தான்.
சேரமன்னன் புருஷோத்தமன் தன் படையுடன் வந்து தாக்க இதுதான் நல்ல தருணம் என வந்த போது சொக்கநாத பெருமானின் அருளால் பாண்டிய மன்னனின் படைத்தளம் ஆயிரம் மடங்கு பெரியதாக காட்சி தந்தன.
இப்படைகளைக் கண்டு அச்சம் கொண்ட புருஷோத்தமன், *"இதை வெல்வது கடினம்!* இதுவரை நான் பாத்திராத படையாக இருக்கிறதே?!" இது எப்படி நமக்கு சாத்தியமாகும்?" என எண்ணினான்.
பின், மாறுவேடமெடுத்து இங்கு வருகிறான். அப்போது பாண்டிய மன்னனின் மகளான மனோன்மணியை பார்க்கிறான்.
அவளகில் மனதை பறிகொடுக்கிறான் சேரமன்னன், நேராக பாண்டிய மன்னனிடம் சென்று...............
*நான் சேர மன்னன் புருஷோத்தமன்.* போரிட வந்துள்ளேன். இறைவனருளால் உம் மகளைக் காணநேரவும் அவள்மீது எனக்கு விருப்பம் உண்டாகிவிட்டது.
எனவே, அவளை எனக்கு மணமுடித்துத் தரவேண்டுகிறேன் என்றான்.
மனோன்மணியும் சேர மன்னன் மீது விருப்பம் இருக்கிறது எனக்கூற..........
பாண்டிய மன்னன் இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்து மதுரைக்கு அழைத்து சென்றார்.
*சிறப்பு:*
மதுரையைப் போன்றே இதுவும் பழமையான சக்தி வாய்ந்த திருக்கோயிலாகும்.
மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு பிரதோஷ காலங்களில் அபிஷேகம் செய்வதில்லை.
இங்கும் அதுபோலவே அபிஷேகம் நடத்தப்படுவதில்லை.
இங்கிருந்து வலப்புறமாக நின்று மீனாட்சியைத் தரிசனம் செய்தால், மதுரை மீனாட்சியை தரிசனம் செய்த பாக்கியம் கிடைக்கும்.
இத்திருக்கோயிலில் பிரதோஷ காலங்களில் சென்று வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறிக் கொள்ளும் என்பது இப்பகுதியிலுள்ளோரின் நம்பிக்கை.
*திருவிழாக்கள்:*
இத்திருக்கோயிலில் மதுரையில் நடப்பது போலவே சித்திரை மாதம் மீனாட்சி திருக்கல்யாணம் ஒரு நாளும், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா ஒன்பது நாட்களாவும், ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி திருநாள் ஆறு நாட்களாகவும், கார்த்திகை மாதத்தில் சோமவாரம் நான்கு நாட்களாவும் நடைபெறச் செய்கிறார்கள்.
திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுவது போல் இத்திருக்கோயிலிலும் மகாதீபம் ஏற்றப்பட்டு திருக்கார்த்திகை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
மார்கழி மாதத்தில் திருவாதிரை தன் திருநாள் பத்து நாட்களும், மாசி மாதத்தில் சிவராத்திரி விழாவும், தை மாதத்தில் தைப்பூச விழாவும், பங்குனி மாதத்தில் பங்குனி உத்தரவிழாவாக பத்து நாட்களும் வெகு விமரிசையாக வழக்கமாக நடந்தேறி வருகிறது.
*பூஜை காலம்:*
காலசந்தி - காலை 8.30 மணிக்கும்,
சாயரட்சை - மாலை 6.30 மணிக்கும்.
*இருப்பிடம்:*
திருநெல்வேலி பேருந்து நிலையத்திற்கும், இரயில் நிலையத்திற்கும் அருகாமையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
*தொடர்புக்கு:*
செயல் அலுவலர்,
அருள்மிகு சொக்கநாத சுவாமி திருக்கோயில்,
மேலவீரராகபுரம்,
திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி- 627 001
*தொடர்புக்கு:*
0462--233 4943
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!
திருச்சிற்றம்பலம்.
நெல்லை மாவட்ட சிவாலய நாளைய பதிவாக *அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில்* வ(ள)ரும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment