Wednesday, September 20, 2017

One hour - Greatness of nama sankeertanam

நீங்கள் ஒரு மணி நேரம் நாமம்(ராம என்றோ கிருஷ்ணா என்றோ) சொன்னால் ஒரு மணி நேரம் நீங்கள் மௌன விரதம் இருப்பதாகிறது .
ஒரு மணி நேரம் நீங்கள் இறைவனுக்கு சம்மதமாக வாழ்ந்ததாகிறது .
ஒரு மணி நேரம் ஹரிச்சந்திரன் போல் உண்மையை பேசியதாகிறது .

ஒரு மணி நேரம் நீங்கள் உங்கள் மரணம் என்கிற பரிக்ஷைக்கு தயார் செய்தீர்கள் என்று ஆகிறது .
ஒரு மணி நேரம் பூஜை செய்ததாகிறது .

ஒரு மணி நேரம் உங்கள் பாவத்தை போக்கி கொள்ள பிராயசித்தம் செய்ததாகிறது .
ஒரு மணி நேரம் இறைவனை நோக்கி சில படிகள் முன்னேறியதாகிறது 

ஒரு மணி நேரம் வேதம் ஓதுவதாகிறது 
ஒரு மணி நேரம் பெரியோர்கள் சொல் பேச்சு கேட்டதாகிறது 

ஒரு மணி நேரம் நீங்கள் பக்தராகிறீர்கள் .
ஒரு மணி நேரம் நீங்கள் மஹான்களால் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள் 

ஒரு மணி நேரம் உங்கள் புலன்களை ஜெயித்தவர்கள் ஆகிறீர்கள் 
ஒரு மணி நேரம் தியானம் செய்தவர் ஆகிறீர்கள் 

ஒரு மணி நேரம் சமாதியில் உள்ளவர் ஆகிறீர்கள் 
ஒரு மணி நேரம் ஒழுக்கமானவனாக ஆகிவிடுகிறீர்கள் 

ஒரு மணி நேரம் Positive ஆக இருக்கிறீர்கள் 
ஒரு மணி நேரம் உங்கள் போலித்தனமான வாழ்க்கையில் இருந்து விடுதலை அடைகிறீர்கள் 

ஒரு மணி நேரம் பாண்டுரங்கன் உங்கள் கை யை பிடித்துக்கொண்டு இருக்கிறான் .
ஒரு மணி நேரம் நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள் .

ஒரு மணி நேரம் உங்களுக்கு தெரியாமல் உங்களை கோவிந்தன் ரசித்துக்கொண்டு இருக்கிறான் .
ஒரு மணி நேரம் மஹான்கள் வாயில் வந்த நாமத்தை நாமும் சொல்வதால் அவர்களுடைய பிரசாதத்தை உண்டவர்கள் ஆகிறீர்கள் 

இந்த ஒரு மணி நேரத்தினால் இறைவன் நீங்கள் செய்த தவறுகளை மறந்து நிற்கிறான் 
ஒரு மணி நேரம் யாகம் செய்தவர் ஆகிறீர்கள்
 
ஒரு மணி நேரம் பகவானையே நீங்கள் கடனாளி ஆக்குகிறீர்கள் 
ஒரு மணி நேரம் நீங்கள் கங்கையில் குளித்தவர் ஆகிறீர்கள் 

ஒரு மணி நேரம் யமுனையில் குளித்தவர் ஆகிறீர்கள் 
ஒரு மணி நேரம் காவிரியில் குளித்தவர் ஆகிறீர்கள் 

ஒரு மணி நேரம் பிருந்தாவன மண்ணில் உருண்டு பிரண்டவர் ஆகிறீர்கள் 
ஒரு மணி நேரம் கோடி கோடியான புண்யத்தை சம்பாதிகிறீர்கள்

எல்லாவற்றிர்க்கும் மேல் நாமம் வேறு இல்லை பகவான் வேறு இல்லை அந்த ஒரு மணி நேரம் இறைவனே உங்கள் நாக்கில் எச்சில் பட்டு கட்டுண்டு இருக்கிறான்

பாக்கியம் செய்திருந்தால் மட்டுமே நாமம் சொல்ல முடியும்

HARE RAMA HARE RAMA RAMA RAMA HARE HARE
HARE KRISHNA HARE KRISHNA KRISHNA KRISHNA HARE HARE

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare 
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare

No comments:

Post a Comment