Balaramavathara
बलबद्रो हलधरः मुसलीत्युच्यते
हलेन कृषीकरणं चेतसः द्योत्यते |
मुसलेन चूर्णयति आशानिगलं
विवेक एव हलः वैराग्यः मुसलम् ||
பலபத்ரோ ஹலதர: முஸலீத்யுச்யதே
ஹலேன க்ருஷீகரணம் செத்தச: த்யோத்யதே
முஸலேன சூர்ணயதி ஆசாநிகளம்
விவேக ஏவ ஹல: வைராக்ய: முஸலம்
பலபத்ர: - பலராமர்
ஹலதர: கலப்பையை தரித்தவர்
முஸலீ- உலக்கையை உடையவர்
இதி – என்று
உச்யதே – சொல்லப்படுகிறார்.
ஹலேன – கலப்பையினால்
சேதஸ: - உள்ளத்தினுடைய
க்ருஷீகரணம் – உழுதல்
த்யோத்யதே- காட்டப்படுகிறது.
முஸலேன- உலக்கையினால்
ஆசாநிகளம் – ஆசை என்னும் விலங்கை
சூர்ணயதி – பொடிப்பொடியாக்குகிறார்.
விவேக ஏவ- விவேகமே
ஹல: - கலப்பை
வைராக்ய: -வைராக்கியம்
முஸலம்- உலக்கை
பக்தி உள்ளத்தில் வந்து விட்டால் பகவான் ஹலதரன் ஆகி நம் உள்ளத்தை உழுது விவேகத்தை விளைவிக்கிறான். அப்போது வைராக்கியம் என்ற உலக்கையால் நம் ஆசைகள் தூள் தூளாகின்றன.
பலராமாவதாரத்தை கிருஷ்ணாவதாரத்தில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க இயலாது. ஏனென்றால் பலராமன் கிருஷ்ணனின் அண்ணன் என்ற உருவில் அவனுடனே எப்போதும் இருப்பவன். ஆதிசேஷனின் அவதாரம் எனக் கருதப் படுபவன்.
லக்ஷ்மணனும் அவ்வாறே இருந்தாலும் இந்த அவதாரத்தில் பலராமன் தனித்துப் பல திருவிளையாடல்களை செய்திருப்பதால் ஒரு தனி அவதார அந்தஸ்து கொடுக்கப் பட்டுள்ளது. ஆதிசேஷன் பகவானுடைய சங்கர்ஷணன் என்ற வ்யூஹ ஸ்வரூபம்.
பலராமன் வந்து விட்டால் பின்னே க்ருஷ்ணன் ஓடி வந்து விடுவான்.

No comments:
Post a Comment