வாமனாவதாரம்
जन्मकर्मवयोरूपैश्वर्यविद्यामदा
स्तम्भितो न जानाति वामनो त्रिविक्रम इति |
हरति स सर्वं कृपया तस्यानुग्रहं इच्छन्
वासुदेवस्सर्वं इति बुद्धिं दातुकामया ||
ஜன்மகர்மவயோரூபைச்வர்யவித்யாமதா
ஸ்தம்பித: ந ஜானாதி வாமநோ த்ரிவிக்ரம இதி
ஹரதி ஸ ஸர்வம் க்ருபயா தஸ்யானுக்ரஹம் இச்சன்
வாஸுதேவஸ்ஸர்வம் இதி புத்திம் தாதுகாமயா
பலி:- மகாபலி
ஜன்மகர்மவயோரூபைச்வர்யவித்யாமதா
ஸ்தம்பித: - புத்தி மழுங்கி
வாமன்: -வாமனன்தான்
திரிவிக்கிரம: இதி- த்ரிவிக்ரமன் என்று
ந ஜானாதி- அறியவில்லை
ஸ: - அந்த பகவான்
க்ருபயா- தயையினால்
தஸ்ய- அவனுக்கு
அனுக்ரஹம்- அருள் செய்ய
இச்சன்- விரும்பி
ஸர்வம்- எல்லாவற்றையும்
ஹரதி – எடுத்துவிட்டார்
வாசுதேவஸ்ஸர்வம் இதி- வாசுதேவனே எல்லாம்
இதி புத்திம் – என்ற புத்தியை
தாதுகாமயா- கொடுக்க விரும்பியதால்.
வாமனன் ஞானஸ்வரூபம் . ஞானம் வருவதற்கு முன் தர்மம் தானம் முதலிய எல்லா நற்செயல்களும் செய்பவரின் கர்வத்தையே வளர்க்கின்றன. இதயத்தில் பக்தி வந்துவிட்டால் ஞானம் வாமனரைப்போல் சிறு வடிவில் வந்து விடுகிறது.
மகாபலியைப் போன்ற ஒரு பக்தன் கூட இருப்பது எல்லாம் இறைவன் கொடுத்ததே என்பதை மறந்து தன்னுடைய நற்செயல்களினால் கர்வம் கொள்கிறான். சுக்ராசாரியார் வாமனன் யார் என்று சொன்னபிறகும், அப்படி இருந்தால் அந்த பரந்தாமனே தன்னிடம் யாசகம் கேட்பது பெரிய பேறு என்று நினைக்கிறான்.
இது பக்தியின் ஆரம்ப நிலை. உண்மை தெரிந்து சரணடையும்போது எல்லாம் இறைவனே என்று உணர்கிறான். இந்த ஞானம் உள்ளம் பூராவும் வியாபித்து த்ரிவிக்ரம ரூபம் கொள்கிறது.
பக்தனின் அஹங்கார்த்தையே பகவான் அழிக்கிறான். அவனுக்கு பூரண ஞானத்தை கொடுத்த பின்னர் அவனுக்கு ஆட்படுகிறான், மகாபலியின் பாதாள அரண்மனையில் காவல் காத்தது போல.
.
No comments:
Post a Comment