Thursday, August 10, 2017

Azhwars & Divya desams

ஸ்வாமி ஒரிரு நாட்களுக்கு முன் 108 திவ்ய தேசங்களில் ஒன்று நாமும் நேரம் கிட்டும் போது சென்று தரிசனம் செய்வோமா? என கேட்டு பதிவு இட்டிருந்தீர் 

நான் பார்க்கும் பல ஶ்ரீவைணவ நண்பர்களும் மாமிகளும் நாங்கள் 106 திவ்ய தேசம் 100 திவ்யதேசம் 80 திவ்ய தேசம் பார்த்தாச்சு ( நல்ல உபன்யாசகர்கள் மற்றும் ஆன்மீக சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மூலமாக சென்று) என்கிறார்கள்

எனக்கு தெரிந்து ஒரு இருபது வருடகாலத்திற்க்கு முன் இப்படி ஒரு  பேச்சை நான் வாழ்ந்த ஊரில் கேட்டதில்லை எனக்கு வயது 70க்கு மேல் ஆகிவிட்டது என்தகப்பனார் என் தாத்தா ஆகியோரும் திவ்யதேசயாத்திரை செய்ததாக அறியேன் அவர்களுக்கு தெரிந்தது எனது ஊரும் அருகில் இருந்த ஆழவார்திருநகரி வானமாமலை குறுங்குடி போன்ற சேத்ரங்கள் தான் அதையும் ஏதேனும் விசேஷத்திற்க்கு சிறப்பு கைங்கர்யதார்ர்களாக அழைப்பின் பேரில் செல்வர்

இந்த 108 திவயதேசங்களையும் பார்க்காமல் போவது ஒரு குற்றமா இந்த 108 திவ்யதேசம் என எதனடிப்படையில் குறிப்பிடுகிறார்கள்? ஒரு பெருமாள் தானே எல்லாஇடத்திலும் இருக்கிறார் அவரை எங்குதரிசித்தாலும் ஒன்று தானே ஏன் கேட்கிறேன் என்றால் என்னை காணவரும் என் வயதுடையோரும் என்னைவிட பத்து பதினைந்து வயது இளையோரும் திவ்ய தேச தரிசனத்தை எண்ணிக்கையில் கூறும் போது நாம் அவைகளை காணமல் போகிறோமே என எண்ணுகிறேன் அது பாவமா? எனக்கும் நற்கதி உண்டுதானே?

அடியேன் தாஸன் தேவரீர் எனது தாத்தாவுக்கு சமமானவர் இன்றும் உள்ளூர் பெருமாளை ஆடி ஆடி அகம் களிந்து இசை பாடிப்பாடி கண்ணீர் மல்கி என்பது போல் தடியூன்றி ஆடி ஆடி நடந்து சென்று தரிசனம் செய்து வருகிறீர் இதைவிட வேறு என்ன வேண்டும் உமது ஊரில் உள்ள பெருமாள்தான் எங்கும் எதிலும் எவ்விடத்தும் உள்ளான் அவனை ஆராதித்தாலே திவ்யதேச பெருமாள் எல்லோரையும் வணங்கி ஆதரித்ததுக்கு சம்ம் 

எல்லொரும் அவரவர் தாயை அம்மா என்றழைப்பர் அவரவர் அவர்களது அம்மாவை நன்கு கவனித்து வேண்டிய கைங்கரயங்களை செய்தாலே உலகத்திற்கெல்லாம் தாயான திருமாமகளுக்கே செய்தது போல் அதுபோல தான் உமது ஊர் பெருமாளை ஆராதித்தால் உலகமளந்தானை திருமாமகள்கேள்வனை ஆதாரித்து மாதிரிதான்

108 திவ்ய தேசம் என்பது (12 ) 11ஆழ்வார்களால் பல ஊர்களில் உள்ள கோவில்களுக்கு சென்று அங்குள்ள பகவானைக் கண்டு ஆனந்தித்து அந்த பெருமாளை போற்றி பாடியுள்ள பாசுரங்களை வைத்து குறிப்பிடுகின்றனர்

ஆழ்வார்கள் காலத்துக்கு முன் அந்த கோவில்கள் இல்லையா? என்றால் இருந்தது ஆனால் ஆழ்வார்கள் பாடியதால் அக்கோவில்களுக்கு ஏற்றம் அவ்வளவுதான்

ஆழ்வார்கள் அப்படிபாடிய பாடல்கள் பெரும்பாலும்  நரசிம்மராக திருவிக்கரமராக இராமராக கண்ணனாக பகவானை கண்டு பாடியுள்ளனர் ஒரு சிலரே மற்ற அவதாரங்களான மச்ச கூர்ம வராக பரசுராம பலராமர்களை பற்றி பாடியுள்ளனர் 

108 திவ்ய தேசமும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்பது இல்லை அப்படி எந்த பிரமாணமும் நம் வைணவத்தில் இல்லை பூர்வர்களும் சொல்லி செல்லவில்லை 

இன்றய பக்திமார்க்க உலகில் இவையெல்லாம் பக்தியைவிட தங்களது ஸ்டேடஸாக சொல்லிக்கொள்ள பயன்படுகிறது சம்பாதித்த பணத்தை செலவுசெய்ய ஒரு வழி அவ்வளவே மற்றபடி அதில் பக்தியாக யாரும் செய்வதாக தெரியவில்லை 

இன்னொரு விசேசம் நம் ஆழ்வார்கள் 12 பேரில் யாருமே அந்த 108 திவ்ய தேசத்தை கண்டதில்லை 

பொய்கையாழவார் -  7 திவ்ய தேசத்தையும்
பூத்தாழ்வார்              - 13 திவ்ய தேசங்களையும்
பேயாழ்வார்              - 14 திவ்ய தேசத்தையும்
திருமழிசை ஆழ்வார் - 14 திவ்ய தேசத்தையும்
நம்மாழ்வார்                - 34 திவ்ய தேசங்களையும்
மதுரகவி ஆழ்வார்    - நம்மாழவாரை மட்டுமேயும் 
குலசேகராழ்வார்         - 7 திவ்ய தேசங்களையும்
பெரியாழ்வார்              - 20 திவ்ய தேசங்களையும்
ஆண்டாள் நாச்சியார்   - 9 திவ்ய தேசங்களையும்
தொண்டரடிப்பொடியாழ்வார் -3 திவ்ய 
 தேசத்தையும்
திருப்பாணாழ்வார்           - 3 திவ்ய தேசத்தையும்
திருமங்கையாழ்வார்         -87 திவ்ய தேசத்தையும்  பாடியுள்ளனர் 

இதில் திருமங்கையாழ்வார் மட்டுமே பல (87) திவ்ய தேசங்களை தரிசித்தவர்

இதில் சிறப்பு என்னவென்றால் நம்மாழவாருக்கு பல திவ்யதேச பெருமாளும் அவர் இருந்த திருப்புளிக்கே வந்து தரிசனம் தந்து பாடல் பெற்றனராம் 

தேவரீர் 108 திவ்ய தேசத்திற்க்கும் செல்லவில்லையே என கவலைபட வேண்டாம் தேவரீர் அந்த திவ்யதேச யாத்திரைக்கு செல்ல செலவுசெய்யும் பணத்தை நேரத்தை நாட்களை தேவரீரின் ஊர் பெருமாளுக்கான நித்ய கைங்கரயத்துக்கு உபயோகமாக பயன்படுத்தினால் கூட  திவ்ய தேசம் சென்ற பலன் கிட்டும்

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் என எண்ணி பகவானை ஆத்மார்தமாக தொழுதால் காஞ்சி வரதராசன் தன் பக்தனுக்கு அவன் இருந்த குளக்கரையிலே வந்து கருடவாகனத்தில் தரிசனம் தந்தது போல் தேவரீரின் காலத்தில் தரிசனம் தருவான் நம்பிக்கையே பிரதானம்

இன்று ஏதோ இன்ப சுற்றுலாபோல் திவ்யதேச யாத்திரை சென்று வந்து பக்திமார்க்கமாக அங்கே உள்ள பகவானை பற்றிய விசேஷமான பேச்சைவிட பயணத்தில் அதில் அது சரியில்லை சாப்பாடு சரியில்லை ஒழுங்காக தரிசிக்க நேரம் போதவில்லை என கூறுவோரும் அதை ஒரு டாம்பீகமான ஸ்டேடஸாக சொல்வோரும் தான் அதிகம்  எனவே தேவரீர் மனத்தை உமது திருவாராதன பெருமாள் மற்றும் உமது ஊர் பெருமாளிடமே  செலுத்தும் பகவான் உம்மை தேடி வருவான் நற்கதியும் தருவான் கவலைபட வேண்டாம்

ஜெய் ஶ்ரீராம்!!