Thursday, July 20, 2017

Valliyur temple

உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹*பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*🌹
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
💐 *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.* 💐
             *(15-வது நாள்.)*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🌷 *அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்.*🌷
         *வள்ளியூர்.*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*இறைவன்:*அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி. 
(ஆனந்த கல்யாண சுப்பிரமணியர்.)

*இறைவி:* அருள்தரும் வள்ளிநாயகி அம்மன்.

*தீர்த்தம்:* சரவணப் பொய்கை.

*தல விருட்சம்:* கடம்ப மரம்.

*ஆகமம்:* குமார தாந்திரிகம்.

*புராணச் சிறப்பு:*
திருமாலின் புதல்வியர் இருவர். இவர்களின் பெயர் சுந்தரி, அமுதவல்லி ஆகும்.

இவர்கள் இருவரும் முருகனை குறித்து தவம் புரிந்தனர்.

அவர்களின் தவத்திற்கு இரங்கிய  முருகன், அமுதவல்லியை இந்திரன் மகளாக தேவலோகத்திலும்,  சுந்தரியை குறவர் மகளாகப்  பூலோகத்திலும் வளருமாறு கட்டளையிடுகிறார்.

முருகன, சூரபத்மன் முதலிய அசுரர்களைக் கொன்று தேவர்களின் துயர் அகற்றியதால் இந்திரன் மகிழ்ந்து தெய்வானையை முருகனுக்கு மணம் புரிவிக்கின்றார்.

சுந்தர வள்ளி என்ற பெயருடன் வேடர் தலைவனான நம்பிராயனுக்கு மகளாகப் பிறந்து வளர்ந்து தினைப்புனம் காவல் தொழிலைச் செய்யும் வேளையில் முருகனே வேடனாக, விருத்த வடிவுடன் சென்று திருவிளையாடல் புரிந்து காட்சி நல்கி அவளையும் திருமணம் புரிந்து கொள்கிறான்.

இந்த திருமணம் இவ்வூரின் அருகே இருக்கும் வள்ளி மலையிலே நடந்ததால், இவ்வூர் வள்ளியூர் எனப் பெயர் பெற்றதாக கந்த புராண ஆசிரியர் குறித்திருக்கிறார்.

இக்கோயில், ஒரு குன்றின் (பாறை) மீது அமைந்துள்ள குகையில் அமைந்துள்ளது.

இக்குகையிலேதான் முருகப் பெருமான் வள்ளிநாயகியுடன் எழுந்தருளி இருக்கிறார்.

*தனிச் சிறப்பு:*
இங்கே வள்ளிநாயகிக்கு மட்டும் தனிச் சந்நிதி உண்டு.

சூரனின் தம்பி தீர்த்தகாசூரனை குறவஞ்சி மலையான இங்கு சம்ஹாரம் செய்த பிறகே திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்கிறார்.

ஆதலால் திருச்செந்தூரில் முருகப் பெருமானை தரிசனம் செய்வதற்கு முன் இத்தலத்து முருகப் பெருமானை தரிசனம் செய்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது தனிச்சிறப்பு.

இக்கோயில் சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது குடவரைக் கோயில் இது.

இறைவன் திருக்கல்யாண கோலத்தில் காட்சி தருகிறார்.

பாண்டிய மன்னர்களால் இக்கோயில் நிர்மாணிக்கப் பெற்றதாகும்.

அவர்களது வழித்தோன்றல்களால் திருப்பணிச் செய்யப்பட்ட தலமிது.

பிற்காலத்தில் வேலாண்டித் தம்பிரான் சுவாமி அருணாசலம் பிள்ளை ஆகியோரால் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டன.

இத்திருக்கோயில்தேவேந்திரனும், அகத்திய முனிவரும், அருணகிரிநாதரும், இடைக்காட்டுச் சித்தரும் வழிபட்டத் தலமாகும்.

மேலும், வண்ணச்சரபம் தண்டபாணி தேசிகர் சுவாமிகள், வேலாண்டித் தம்பிரான் ஆகியோரும் வழிபட்டத் தலமாகும்.

திருப்புகழ் பாடிய அருணகிரி நாதரால் பாடப்பெற்ற ச்சீ சிறப்புடையத் தலமாகும்.

*பூஜைகள்:*
தினமும் ஆறு கால பூஜை.
திருவனந்தல் - காலை 5.30 மணிக்கு,

உதயமார்த்தாண்டம் - காலை 6.30 மணிக்கு,

சிறுகால சந்தி - காலை 8.00 மணிக்கு,

உச்சிக் காலம் - காலை 11.30 மணிக்கு,

சாயரட்சை - மாலை 6.30 மணிக்கு,

பள்ளியறை (ஏகாந்தம்) - இரவு 8.30 மணிக்கு.

*திருவிழாக்கள்:*
சித்திரை மாதம் பிரமோற்சவம்.

விநாயகர் சதுர்த்தி.

ஐப்பசி சஷ்டி திருவிழா பத்து நாட்கள்.

கார்த்திகை கடைசி வெள்ளி தெப்ப உற்சவ விழா, திருக்கல்யாணம், மற்றும் திருக்கார்த்திகை.

*இருப்பிடம்:*
திருநெல்வேலி- நாகர்கோவில் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து நாற்பத்திரண்டு கி மி. தொலைவில் அமைந்துள்ளது.

பேருந்துகளும் இரயில்களும் நிறைய உள்ளன.

         ஓம் சரவணபவ!
கந்தா போற்றி! கதிர்வேலா போற்றி!!

           திருச்சிற்றம்பலம்.

*அஞ்சல் முகவரி:*
செயல் அலுவலர்,
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
வள்ளியூர். திருநெல்வேலி - 627 117

*தொடர்புக்கு:*
04637 - 222 888.

*நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களில் நாளை வளர்வது அருள்மிகு இராமலிங்க சுவாமி திருக்கோயில், பணகுடி.*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*கோவை கு.கருப்பசாமி.*
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment