Tuesday, July 18, 2017

Ulcers - periyavaa

பெரியவா பாத்துப்பா 13 ! 

காருண்யா மூர்த்தியான பெரியவாளைப் பத்தி சில விஷயங்களை சொல்றேன் கேளுங்கோ. ஒரு தடவை அவர் மாட்டுக் கொட்டகைல இருந்த மரத்து மேல சாஞ்சுண்டு மணிக்கணக்கா ஒக்காந்துண்டு இருந்தார். தியானம். தபஸ். எழுந்து அவரோட குடிலுக்கு வந்த உடனே யாரையோ கூப்பிட்டு பக்தர் ஒருத்தர் கொடுத்த மயில் தோகை விசிறியை எடுத்துண்டு வரச்சொல்லி தன்னோட முதுகை மெதுவா வருடி விடச் சொன்னார். எதுக்கு தெரியுமா? அவரோட முதுகு பூரா ஒரே கரையான். அது அவருக்கு உபத்ரவம் பண்ணி இருந்தாலும், அதை தான் ஹிம்சிக்கக் கூடாது அப்படீங்கற கருணை. இது இன்னொரு சம்பவம். ஒரு நாள் திடீர்னு பெரியவாளுக்கு வாய் முழுக்க ஒரே புண்ணு. நாக்கு செக்கச் செவேல்னு இருக்கு. பக்தாளுக்கெல்லாம் திக்குனு இருந்தது. யாரோ ஒருத்தர் துணிஞ்சு கேட்டுட்டார் 'பெரியவா, என்ன ஆச்சு?'. 'ஒன்னும் இல்லை, உக்ராணத்துல அம்பாளுக்கு நெய்வேத்யம் தயார் பண்ணிண்டு இருந்தா, கம கம ன்னு வாசனை வந்துது. உடனே நாக்குல ஜலம் ஊறிடுத்து. அது எவ்வளவு பெரிய அபச்சாரம். அதான் இலுப்ப கரண்டியை சூடு பண்ணி இழுத்துண்டுட்டேன்'ன்னு சொன்னார். வேதம், சாஸ்திரம், தர்மம் இதையெல்லாம் அவர் உபதேசம் மட்டும் பண்ணலை. அதன்படி வாழ்ந்தே காட்டினார். ஈடு இணை இல்லா தெய்வம் அவர். இன்னும் அவரைப்பத்தி சொல்றதுக்கு நெறைய இருக்கு. சொல்லப்போனா அதுக்கு ஒரு முடிவே இல்லை. ராம் ராம். ஸ்ரீ மஹா பெரியவாள் திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர. 
ராம் ராம்.

ஹர ஹர சங்கர! ஜெய ஜெய சங்கர!

பெரியவா பாத்துப்பா 14 !

எங்கேயோ வெளி ஊர்ல கேம்ப். ஒரு நாள் திடீர்னு பெரியவா எங்க போனான்னு தெரியல. எல்லாரும் தேடினா. பாத்தா நெருஞ்சி முள் மேல படுத்து பொரண்டுண்டு இருந்தார். முதுகு பூரா ரத்தம். கேட்டா, இன்னைக்கு வேதத்துக்கு அடி விழுந்துடுத்து, அதுக்கு எனக்கு நானே தண்டனை கொடுத்து பிராயச்சித்தம் பண்ணிக்கறேன்னு சொன்னார். விஷயம் இதுதான். ஒரு பாடசாலை குழந்தை பசிக்கறது, சாதம் போடுங்கோன்னு அங்க இருக்கற பாட்டிகிட்ட கேட்டுருக்கு. அவ கைல இருந்த துடைப்ப கட்டயால அடிச்சிருக்கா. அதை, அங்க எதேச்சியா வந்த பெரியவா பாத்துட்டா. அதான். அப்புறம் எல்லாருமா மன்னிப்பு கேட்டு நமஸ்காரம் பண்ணி கூட்டிண்டு வந்தா.

இதுமாதிரி பல தடவை நடந்திருக்கு. எப்பவும் தன்னை தானே தண்டிச்சுப்பாளே தவிர வேற யாரையும் கோச்சுக்க மாட்டா. இன்னொரு சமயம் வயக்காட்டுக்குள்ள போய் உக்காந்துட்டா. கொட்டாங் கச்சில ஒரு கண்ணுல ஓட்ட போட்டு அதுல ஒரு கயத்தை கட்டி அங்க இருந்த ஒரு பாழுங் கெணத்துலேர்ந்து தண்ணிய மட்டும் எடுத்து குடிச்சுண்டு இருந்துட்டா. என்னவோ அபசாரம் நடந்துடுத்து. கேட்டாலும் ஒன்னும் சொல்லல. அப்பவும் மன்னிப்பு கேட்டு, நமஸ்காரம் பண்ணி அழைச்சுண்டு வந்தா.

எனக்கே அப்படி ஒரு அனுபவம் இருக்கு. நான் எப்பவும் ஸ்வீட், முறுக்கு எல்லாம் தயார் பண்ணி எடுத்துண்டு போவேன். பெரியவா, இது கையாலா சுத்தினதா, நாழியால பிழிஞ்சதான்னு அவட்ட கேளுன்னு சொன்னார். நான், கையால சுத்தினதுதான்னு சொன்னேன். அப்புறம், அங்க இருந்த பழங்களையும் எங்கிட்ட கொடுத்து, பாடசாலை குழந்தைகளுக்கு கொண்டு போய் கொடுன்னு சொன்னார். மாமாவும் நானுமா போனோம். குழந்தைகளுக்கு தீர்த்தம் போடறதுக்காக நின்னுண்டு இருந்தேன். அப்போ, அங்க ஒருத்தர் ஒரு குழந்தை ஊருக்கு போயிட்டு லேட்டா வந்துதுன்னு ரொம்ப திட்டினார். அது குனிச்சுண்டு அழுதுது. கண்ணுலேர்ந்து ஜலம் சாதத்து மேல விழுந்தது. எனக்கு அப்படியே மனசை பிழிஞ்சுது.

ஒரு நாள் பெரியவாட்ட யாரோ இந்த குழந்தைகளை பத்தி புகார் சொன்னா. பெரியவா கொஞ்ச நேரம் பேசாம இருந்தா. அப்புறம் 'வசதியான வீட்டுக் குழந்தைகள் எல்லாம் வேற படிப்புக்கு அனுப்பிச்சுடறா. எனக்கு கெடைக்கறது எல்லாமே ஏழையும், வித்யாசமான தெறமை உள்ள குழந்தைகள் தான். நீங்க அவாட்ட கருணையோட நடந்துக்கணம். அப்படி இல்லாம குறை சொன்னேள்னா வேதத்தை காப்பத்தறதுக்கு நான் என்ன பண்ணுவேன்'னு. ஒருத்தரும் ஒன்னும் பதில் சொல்லலை. ராம் ராம்.

ஹர ஹர சங்கர 
ஜெய ஜெய சங்கர