Thursday, July 13, 2017

Tiruperumbuliyur temple

                 ``````
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை. கு. கருப்பசாமி.*
பதியும் பதியே பணியாய் அருள்வாய்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
                *(10)*
🌼 *சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.* 🌼
நேரில் சென்று தரிசித்ததைப் போல......
--------------------------------------------------------------------
   🌼 *திருபெரும்புலியூர்.* 🌼
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

*இறைவன்:* வியாக்ரபுரீஸ்வரர், புலியூர் நாதர்.

*இறைவி:* செளந்தரநாயகி, அழகம்மை.

*தலமரம்:* சரக்கொன்றை.

*தீர்த்தம்:* காவிரி தீர்த்தம்.

சோழ நாட்டின் காவிரி வடகரையில் அமையப்பெற்ற அறுபத்து மூன்று தலங்களுள் ஐம்பத்து மூன்றாவதாக  போற்றப்படுகிறது.

*இருப்பிடம்:* 
திருவையாறு --கல்லணை, சாலையில் திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் தில்லை ஸ்தானத்திற்கு வலப்புறமாகப் பிரியும் கிளைச் சாலையில் நான்கு கி.மீ தொலைவு கடந்தால் *பெரும்புலியுரை* அடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்ல முடியும்.

*பெயர்க் காரணம்:*
வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்) பூஜித்த காரணத்தால் இத்தலத்திற்கு புலியூர் என்று பெயர்.

ஏனைய புலியூர்த் தலங்களிலிருந்து வேறுபட்டு காண்பிப்பதற்காக இத்தலத்திற்கு பெரும்புலியூர் என்று பெயராயிற்று.

*ஏனைய புலியூர்த் தலங்கள்:*
1.பெரும்பற்றபுலியூர். (சிதம்பரம்)
2. எருக்கத்தம் புலியூர். (ராஜேந்திரப் பட்டணம்.)
3. திருப்பாதிரிப் புலியூர். (கடலூர்)
4. ஓமாம்புலியூர். 

*தேவார பதிகம் பாடியவர்கள்:*
*சம்பந்தர்*2-ல் ஒரேயொரு பதிகம் மட்டுமே.

*கோவில் அமைப்பு:*
மூன்று நிலைகளுடன் இராஜ கோபுரம் கிழக்கு நோக்கி உள்ளது.

கொடிமரம் கிடையாது.

பலி பீடம் இருக்கிறது.

கோபுரத்தில் காணப்படும் சிற்பங்கள் மிக மிக பழமையானவை.

கீழ்ப்பகுதிகள் கருங்கல்லால் கட்டப்பட்டும், மேற்புறம் சுதைச் சிற்பங்களாலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

கோவிலினுள் உள்ளே நுழைந்தால், நமக்கு நேராக மூலவரான சுயம்புலிங்கங்கமாகக் காட்சியருள்கிறார்.

பிரகாரத்தை வலம் வரும்போது சூரியன், விநாயகர் சந்நிதிகள் அமைந்துள்ளன.

இதற்கு அடுத்து சுப்பிரமணியர் சன்னதி அமைந்துள்ளன.

இக்கோவில், ஒன்றறை ஏக்கர் நிலப்பரப்புடன் கூடியதாகும்.

அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி காட்சியருளிக் கொண்டிருக்கிறாள்.

நின்ற நிலையுடன் அழகு வடிவுடன் இன்ப புன்முறுவல் பூத்திருந்தவாறு இருக்கும் காட்சியைக் காணும்போது, மனம் இதமாக இருக்கிறது.

இங்கிருக்கும் நவக்கிரக சந்நிதியில், எல்லா உருவங்களும் நடுவிலிருக்கும் சுரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளன.

கோஷ்ட மூர்த்தங்களாக, தட்சிணாமூர்த்தியும் லிங்கோத்பவரிடத்தில் அர்த்த நாரீஸ்வரரும் காட்சியருளுகின்றனர்.

ஆதலால் இக்கோயில் சோழர் காலத்துக்கு முன்பாகவே கட்டப்பட்டதென்கிறார்கள்.

சண்டேஸ்வரர் சந்நிதியும் இருக்கிறது.

சுவாமியின் கருவறை , கீழே அயமைந்த நான்கு அடுக்குகளாலான பத்மபீடத்தின் மேல் உள்ளது.

சிறிய விமானம்.

கிழக்கு நோக்கிய சந்நிதியில் மூலவர் அருளோச்சுகிறார்.

சற்று உயரமான ஆவுடையாருடன் கூடியது.

மூலவருக்கு பக்கத்தில் வெளியே காசி விஸ்வநாதர் லிங்கம் வலப்புறமாக இருக்கிறார்.

வடக்குப் பிரகாரத்தில் இறைவி செளந்தரநாயகி நான்கு கரங்களுடன் பத்மம், ஜபமாலை தாங்கி அபய ஊரு முத்திரைகள் காட்டியபடி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

அம்மை சதுர பீடத்தில் எழுந்தருளியிருப்பது தனிச் சிறப்பாகும்.

சந்திரன், காலபைரவர், நாகர்கள், உமாசகித மூர்த்தி திருமேனிகளும் உள்ளன.

*தல அருமை:*
சூழ்நிலை சந்தர்ப்பங்களாலும், குணமாறுதல்களாலும், மனம் ஒன்றிப் போகாது இருத்தல் இப்படி, எத்தனை எத்தனையோ காரணங்களால் தம்பதிகள் இடையே பிரிவுகள் ஏற்படுகின்றன. 

அப்படி பிரியும் எல்லோருமே சந்தோஷப்படுகிறார்களா? அதற்கு பதில் இல்லை.

பிரிவுகள் சுலபமாக நேர்ந்து விட்டாலும் மீண்டும் சேர்தல் என்பது பிரம்ம பிரயத்தனமாகவே இருத்தல் உண்மை.

ஏதேதோ காரணங்களால் தம்பதியரிடையே ஏற்படும் பிரச்சினையைத் தீர்த்து குடும்ப ஒற்றுமையை மீண்டும் நிலவச் செய்ய இறையருள் ஒன்றே வழி என்று சரணடையும் பக்தர்களைக் காப்பதற்காக சில தலங்களில் கருணையோடு காத்திருக்கிறார் இறைவன்.

அப்படிப்பட்ட தலங்களில் ஒன்றுதான் பெரும்புலியூர்.

ஆலயத்தின் கிழக்குப் பிரகாரத்தில் உள்ள உமாசகித மூர்த்தியின் திருமேனி முன் குடும்ப ஒற்றுமையை வேண்டும் பக்தர்கள் வேண்டிக் கொள்கிறார்கள்.

இறைவியுடன் இணைந்து காட்சி தரும் உமாசகித மூர்த்திக்கு இயன்ற அபிசேக ஆராதனைகள் செய்து தங்கள் நன்றி கடனை செலுத்துகிறார்கள்.

பலப்பல வருஷங்களாக வழிபட்டு குடும்ப பிரச்சினை நீங்கிப் பலன் பெற்றுச் செல்கிறார்கள் இத்தலத்தில்.


*கல்வெட்டுக்கள்:*
ராஜராஜசோழன் காலத்தைச் சார்ந்த அநேக கல்வெட்டுக்கள் உள்ளன.

*திருவிழா:*
மகாசிவராத்திரி சிறப்பாக நடத்தப் பெறுகின்றனர்

*பூஜை:*
சிவாகம முறையில் ஒரு கால பூஜை.

காலை 7.00 மணி முதல் பகல் 10.00 மணி வரை.

மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு, வியாக்கிரபுரீஸ்வரர் திருக்கோயில். பெரும்புலியூர்.
திருநெய்தானம் அஞ்சல்.
திருவையாறு வழி, 
தஞ்சை மாவட்டம். 613 203

*தொடர்புக்கு:*
ஜி. சதாசிவ குருக்கள்.
94434 47826....94427 29856.

         திருச்சிற்றம்பலம்.

*நாளை.....திருமழபாடி.*

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*