Thursday, July 13, 2017

Thirupurambiam temple

சிவாயநம. திருச்சிற்றம்பவம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                    *(3)*
🍁 *சிவத்தல பெருமைகள், அருமைகள்,*🍁 
நேரில் சென்று தரிசித்ததை போல தொடர்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
     🍁 *திருப்புறம்பயம்.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

*இறைவன்:* சாக்ஷிநாதேஸ்வரர், சாக்ஷீஸ்வரர், புன்னைவன நாதர்.

*இறைவி.* கரும்பன்ன சொல்லி, இக்ஷீவாணி.

*தலமரம்:* புன்னை.

*தீர்த்தம்:*பிரம்ம தீர்த்தம், மன்னியாறு.

சோழ நாட்டின் காவிரி வடகரையில் அமைந்துள்ள அறுபத்து மூன்று தலங்களுள், நாற்பத்தாறாவதாகப் போற்றப்படுகிறது.

*இருப்பிடம்.*
கும்பகோணத்திலிருந்து வடமேற்கே பத்து கி.மீ தொலைவில் உள்ளது. 

கும்பகோணம்-- திருவையாறு சாலையில், புளியஞ்சேரி சென்று, அங்கு இச்சாலையில் திருப்புறம்பியம் என்ற வழிகாட்டிப் பலகை காணப்படும். 

பலகை வழிகாட்டும் திசையில் சென்றால் இன்னம்பர் வரும். அங்கிருந்து மூன்று கி.மீ சென்றால் திருப்புறம்பயம் தலம் வரும்.

*பெயர்க்காரணம்.*
பிரளயத்திற்கு புறம்பாய் இருந்தமையால் ( புறம்பு- அயம்).திருப்புறம்பயம் என்று பெயர் பெற்றது.

*வேறு பெயர்கள்.*
கல்யாணமா நகர், புன்னாகவனம், ஆதித்தேசுவரம்  என்பன.

*கோவில் அமைப்பு:*
கொள்ளிடம் ஆற்றின் தென்பகுதியில் இரண்டே முக்கால் ஏக்கர் நிலப்பரப்பில் அமையப்பெற்றுள்ளது.
கிழக்குப் பார்த்த ஐந்து நிலை இராஜ கோபுரம்.
இரண்டு பிரகாரங்கள்.

முதல்பிரகாரத்தில் நால்வர், அகத்தியர், புலஸ்தியர், சனகர், விசுவாமித்திரர், சனந்தனர் முதலியோர் வழிபட்ட லிங்கத்திருமேனிகள் உள்ளன.
ஆலயத்தின் வெளிப்பகுதியில் திருக்குளம் அமைந்துள்ளது.
இங்கும் தனி தட்சணாமூர்த்தி சந்நிதி உள்ளன. 
இராஜ கோபுரத்தைத் தாண்டி உள்ளே நாம் நுழையும்போது,  இடதுபுறபக்கமாய் ரத்தினாவளிக்காக மதுரைக்கு வந்து சாட்சி சொன்ன வன்னிமரம் உள்ளது.
மற்றொரு சாட்சியான கிணறும் மடப்பள்ளியின் அருகே இருப்பதை இன்றைக்கும் காணலாம்.

செட்டிப் பெண்ணுக்கு  இறைவன் சாட்சி சொல்லியமையால் இறைவனுக்குச் சாட்சிநாதர் என்று பெயர் பெற்றார்.

இதற்கு வன்றிமரமும் ஒரு சான்றானது.

இம்மரமே தலமரம் அல்ல. தலமரம் புன்னை மரமே. வன்னிமரம் இரண்டாம் பிரகாரத்தில் உள்ளது.

இச்சொன்ன வரலாறுகளை திருவிளையாடல் புராணத்திலும், கோவில் தல புராணத்திலும் பதிவாகப் பெற்றுள்ளன.

குகாம்பிகை சந்நிதி சிறப்பானதாக அமைந்துள்ளன. 

ஆறுமுகனை குழந்தை வடிவில் இடையில் அணைத்து நிற்கும் காட்சி அருள்காட்சியாக காணமுடிகிறது.

விசேஷ காலங்களில் தைலக் காப்பு மட்டுமே சாற்றப்படுகிறது.

சுதை நாயகி ஆதலால் அபிஷேகம் இல்லை. 
பலிபீடம். 
கொடிமரம்.

அடுத்து உள் மண்டபங்களைக் கடந்து செல்லும் போது இடப்பக்கம் முதலில் வருவது தேனபிஷேக பெருமான் சந்நிதி.

அடுத்து வாகன மண்டபம்.

அதையும் அடுத்து கடந்து செல்ல கிழக்கு நோக்கிய மூலவரைக் காணமுடியும்.

அம்மன் தெற்கு நோக்கி அருளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறாள்.

பிரகார வலத்தில், உக்ராண அறை, நால்வர்கள் சந்நிதி, சட்டநாதர், சோமாஸ்கந்தர், வள்ளி தெய்வாணை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி, துர்க்கை ஆகிய இவர்களோடு கோஷ்ட மூர்த்தங்களையும் தரிசிக்கலாம்.

*தேவாரம் பாடியவர்கள்.*
மொத்தம் மூன்று பதிகங்கள்.
*சம்பந்தர்.* 1-ல் ஒரு பாடல்,
*அப்பர்.* 6-ல் ஒரு பாடல்,
*சுந்தரர்.* 7-ல் ஒன்றும்.

*தல பெருமை*
சோழர்களின் தலைவிதியை நிர்ணயித்த போர் கி.பி. 880 -ல் *திருப்புறம்பயத்தில்*தான் நடந்தது.

விஜயாலய சோழனின் மைந்தன் முதலாம் ஆதித்த சோழன், சாட்சிநாதர் ஆலயத்தை கற்கோவிலாக திருத்தி புணரமைத்தான் முதலாம் ஆதித்த சோழனானவன்.

இவன் ராஜராஜசோழனின் முப்பாட்டனவார்.

இந்தப் போர் பல்லவ வம்சத்து கடைசி அரசனான அபராஜித வர்மனுக்கும், பாண்டிய மன்னனான வீரபாண்டியனுக்கும் போர் நடந்தது.

பாண்டியர்கள் வெற்றி பெற்றால் சோழ சாம்ராஜ்யமே அடியோடு அழிந்து போகும்.

ஆதலால் பல்லவர்களுடன் தோழமையானவர்கள் சோழர்கள்.

போரில் பல்லவர்கள் வெற்றி பெற்று சோழர்களிடம் ஒப்படைத்தனர்.

இடைச் சங்க காலத்தில், வரகுண பாண்டியனால் செங்கல் கற்களால் கட்டப்பெற்ற இக்கோவிலை, ஆதித்த சோழன் கற்றளியாக மாற்றிப் புணரமைத்தான்.

சோழப் பிரதேசத்தில் பாண்டியன் இக்கோவிலைக் கட்டினான்.

அதற்கு 64- வது திருவிளையாடல் புராணம் இங்கு நடந்தேறியது.

ஈசனின் அருளாடலால்  நிகழ்ந்த இத்தலத்தில் அவரது பெருமையை எதிர் காலத்தில் சொல்வதற்கு சோழர்களின் அனுமதி பெற்று வரகுண பாண்டியன் செங்கல் கோவில் கட்டினான்.

*திருவிளையாடல் புராணத்தில் 64-வது திருவிளையாடலாக நடந்த நிகழ்வு.*
மதுரையைச் சேர்ந்தவன் வணிகன் அரதனகுப்தன் என்பவன் ஒருவன் இருந்தான்.

அவன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். இவருடைய தாய்மாமன் பூம்புகாரில் வசித்து வந்தார். இவருக்கு ஒரே மகள் ரத்தினாவளி.

அவளை அரதனகுப்தனுக்கே மணம் செய்து வைக்க வேண்டும் என்று விரும்பினார். 

விதி வசத்தால் தாய்மாமனும்,அவரது மனைவியும் இறந்து விட நேர்ந்தது.

ரத்தினாவளி அனாதையாகப்பட்டாள்.

உனக்கு உற்றார் உறவினராக ஒரே உறவான மதுரையைச் சேர்ந்த அரதனகுப்தனாகும். அவனை இங்கு வர வைத்து மணம் செய்து வைக்கலாம் என அருகிலிருந்தோர் கூறினர்.

நடந்த சம்பவங்களை அறிந்து கொண்ட அரதனகுப்தன் தன் மனைவியிடம் விபரத்தைக் கூறி பூம்புகார் வந்தடைந்தான்.

ரத்தினாவளியை அழைத்துக் கொண்டு திருப்புறம்பயம் வரும் போது இரவாகிப் போனதால்  வனத்தில் தங்க நேர்ந்தது.

வன ஆலயத்தில் வன்னி மரத்தடியில் படுத்திருந்த பொழுது,  அரதனகுப்தனை கொடிய விஷமுள்ள நாகம் தீண்டி விட அரதனகுப்தன் மாண்டு போனான்.

இவனே உறவுக்குரியவன் என இருந்தவன் மாண்டு போனதைக் கண்டு ரத்தினவாளி அழுது பரிதவித்து அரற்றி அழுதாள்.

இவளின் அழுகை வெகு தொலைதூரம் வரை கேட்டது.

அச்சமயத்தில் சம்பந்தர் பெருமான் இத்தலத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

பெண்ணின் புலம்பல் அழுகையொளியைக் கேட்டு அவ்விடம் வந்து ரத்தினவாளியிடம் விபரம் கேட்டார்.

அவளின் சரிதத்தைக் கேட்டு அவளுக்கு உதவி புரிய அவர் மனம் நினைத்தது. ஈசனிடம் வேண்டிப் பதிகம் பாடி அரதனகுப்தனை உயிர்பிக்க வைத்தார்.

அதோடு அவர்களிருவருக்கும் அவ்வனத்திலேயே மணமும் செய்வித்து வைத்தார்.

மணத்துக்குரிய சான்றுகளாக வன்னிமரம், கிணறு , திருமணம் நடந்த கோயில் லிங்கம் சாட்சிகளாகும் என்றார் சம்பந்தர் பெருமான்.

தம்பதி சமேதராக மதுரைக்கு வந்துனர். 

அரதனகுப்தனின் மூத்தவளானவள் ரத்தினாவளியை ஏற்க மறுத்தாள். உனக்குத் திருமணம் நடந்ததற்கு என்ன சாட்சி உளது? என கேட்க, 

ரத்தினாவளியோ, திருப்புறம்பயம் ஆலயத்தில் அமைந்திருந்த வன்னிமரம், கிணறு, அங்கிருக்கும் லிங்கம் முதலானவை சாட்சி என்றாள். 

மூத்தவள் ஏற்க மறுத்து வழக்காகத் தொடுத்து அரசின் விசாரணை வரைக்கும் ஏற்படுத்தி விட்டாள்.

வழக்கு விசாரனையில், இறைவன் அசரீரியாக.............மதுரை மீனாட்சி ஆலயத்தின் வடகீழ்த் திசையில் வன்னிமரம், கிணறு, சிவலிங்கம் வந்து தங்கும் என்றது. 

நீதிபதிகளும் அங்கு (மதுரை) சென்று பார்த்தனர். 

அங்கே வன்னிமரம், கிணறு, லிங்கம் கருங்கல்லால் ஆன சிற்ப வடிவில் வந்து தங்கியிருந்தன. *( இப்போது போனாலும் நாமும் பார்க்கலாம்.)* 

மதுரைக்குப் புறம்பயநாதர் வந்ததால் *சாட்சிநாதர்* ஆனார்.

இத்திருக்கோயில் மதுரை ஆதினத்திற்குச் சொந்தமானதாகும்.

"""""""''''''"""""""""""""""""""""""""""'""'''''''''""'"""'''''''''''''''''"""
காமீக ஆகம முறையில் நான்கு கால பூசை.

காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை.
மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோவில்.
திருப்புறம்பயம்.
கும்பகோணம் வட்டம்.
தஞ்சை மாவட்டம். 612 303.

தொலைபேசி: 0435- 2459011
98421 74746,,,,99525 28459

மதுரை ஆதீனம்: 0452- 4377116

            திருச்சிற்றம்பலம்.

*நாளை...திருவிசயமங்கை.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களோடு அடியார்களாக உறவாகிக் கொண்டீர்களா? -இறைவன் அவ்வடியார்களுக்குள் இருக்கிறான்.*

No comments:

Post a Comment