Monday, July 10, 2017

Thevara sung temples in North India

தேவாரப்பாடல் பெற்ற வடநாட்டுத் தலங்கள்

1. திருப்பருப்பதம் ( ஸ்ரீ சைலம் )

மூலவர் – மல்லிகார்ஜுனர் ( ஸ்ரீ சைலநாதர் , ஸ்ரீ பருப்பதர் )
அம்பாள் – பிரம்மராம்பாள் 
தலமரம் – மறுத்த மரம் , திரிபலா மரம் 
தீர்த்தம் – பாலா நதி முதலான தீர்த்தங்கள் 
புராண பெயர் – திருப்பருப்பதம் 
ஊர் – ஸ்ரீ சைலம் 
மாவட்டம் – கர்னூல்
மாநிலம் – ஆந்திரப்பிரதேசம்
பாடியவர்கள் – அப்பர் , சம்பந்தர் , சுந்தரர் 

• தேவாரப்பாடல் பெற்ற வடநாட்டுத்தலங்கள் ஐந்தினில் ஒன்றான இத்தலம் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது 
• 12 ஜோதிர்லிங்கத்தலங்களில் இத்தலமும் ஒன்று 
• சக்திபீடங்களில் பிரம்மராம்பாள் பீடமாக விளங்கும் தலம் 
• மருதமரத்தை தலவிருட்சமாக கொண்டுள்ள மூன்று தலங்களில் இத்தலமும் ஒன்று. அவை :
o 1. ஸ்ரீ சைலம் ( மல்லிகார்ஜுனம் )
o 2. திருவிடைமருதூர் ( மத்தியார்ஜுனம் )
o 3. திருப்புடைமருதூர் ( புடார்ஜுனம் – கடையார்ஜுனம் ) 
• சிலாத முனிவர் தவஞ்செய்த தலம் 
• நந்திதேவர் பிறந்து , தவஞ்செய்து சிவனாரின் வாகனமாக விளங்கும் பேரு பெற்ற தலம். அவரே இத்தலத்தில் மலையாக விளங்குவதாக வரலாறு சொல்லப்படுகிறது 
• பூகயிலாயம் என்று அழைக்கப்படும் மலை இது 
• மகா சிவராத்திரி மிக விசேஷமாக கொண்டாடப்படும் ஜோதிர்லிங்கத்தலம்
• தேவாரப்பாடல் பெற்ற மூன்று ஜோதிர்லிங்கத்தலங்களில் இத்தலமும் ஒன்று. அவை :
o 1. ராமேஸ்வரம் , 
o 2. ஸ்ரீ சைலம் 
o 3. திருக்கேதாரம் ( கேதார்நாத் )
• மேதி , ரவி , ஜூவி என்னும் மூன்று மரங்களின் சேர்க்கையே திரிபலா மரம். தத்தாத்திரேயர் தவஞ்செய்த மரமாதலால் தத்தாத்ரேயர் விருட்சம் என்றும் இம்மரம் அழைக்கப்படுகிறது. இம்மரம் விருத்த மல்லிகார்ஜுனர் கோயிலில் உள்ளது. கரவீரம் என்ற பழமையான மரமும் இங்குள்ளது 
• சம்பந்தரரும் , சுந்தரரும் ஸ்ரீ காளஹஸ்தியில் இருந்து இத்தலத்தைப் போற்றி பாடியுள்ளனர். அப்பர் இத்தலத்தை தரிசித்து பதிகம் பாடியதாக வரலாறு சொல்லப்படுகிறது 
• மலையடிவாரத்தில் கிருஷ்ணாநதி ஓடுகிறது. இந்நதியின் தென்கரையில் கோயில் அமைந்துள்ளது. பாதாள கங்கை என்றும் இந்நதி அழைக்கப்படுகிறது 
• இம்மலையில் எட்டு சிகரங்கள் உள்ளன. அவை :
o 1. வைடூரிய சிகரம் , 
o 2. மாணிக்க சிகரம் , 
o 3. பரவாளி சிகரம் ,
o 4. பிரம்ம சிகரம் , 
o 5. ரௌப்ய சிகரம் , 
o 6. க்ஷேமா சிகரம் , 
o 7. மரகத சிகரம் , 
o 8. வஜ்ரா சிகரம் 
• ஒன்பது நந்திகள் உள்ளன. அவை :
o 1. பிரதம நந்தி , 
o 2. நாக நந்தி , 
o 3. விநாயகர் நந்தி , 
o 4. கருட நந்தி ,
o 5. சிவ நந்தி , 
o 6. மகா நந்தி , 
o 7. சூரிய நந்தி ,
o 8. விஷ்ணு நந்தி , 
o 9. சோம நந்தி 
• ஒன்பது கோயில்கள் உள்ளன. அவை :
o 1. பிரம்மேஸ்வரம் , 
o 2. வருணேஸ்வரம் ,
o 3. இந்திரேஸ்வரம் ,
o 4. ஜனார்த்தனேஸ்வரம் , 
o 5. சப்தகோடீஸ்வரம் ,
o 6. குக்குடேஸ்வரம் ,
o 7. ஹேமேஸ்வரம் , 
o 8. அக்னேஸ்வரம் , 
o 9. மோக்ஷேஸ்வரம் 
• பிரதான கோயில் மலையுச்சியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நாற்புறமும் கோபுர வாயில்கள் உள்ளன. பிரதான நுழைவு வாயிலான கிழக்கு வாயிலில் உள்ள பெரிய மண்டபத்தில் கல்லால் ஆனா நந்திதேவர் உள்ளார். 
• ஆலய முகப்பில் சித்தி விநாயகர் சந்நிதி 
• கோயிலின் மேற்குப் பிரகாரத்தில் பாண்டவர்கள் கட்டியதாக சொல்லப்படும் ஆறு ஆலயங்கள் உள்ளன 
• பளிங்குக்கல்லால் ஆனா சண்முகர் கோயில் அழகு நிறைந்தது 
• அன்னபூரணி கோயில் , சகஸ்ரலிங்கேஸ்வரர் கோயில் , பஞ்சநதீஸ்வரர் கோயில் முதலான கோயில்கள் சிறப்பு வாய்ந்தவை.
• நாள்தோறும் காலை ௦5:௦௦ மணி முதல் இரவு 1௦:௦௦ மணிவரை பலவித அபிஷேகங்கள் நடைபெறுவது சிறப்பான ஒன்று. 
• மகா சிவராத்திரியில் பாதாள கங்கையில் நீராடி , பின் மல்லிகார்ஜுன சிவனாரை வழிபடுவது மிக புண்ணியமான ஒன்றாக சொல்லப்படுகிறது 
• தெலுங்கு வருடப்பிறப்பு , ஆவணி மாத சப்தமி பூஜை மகா சிவராத்திரி , கார்த்திகை சோமவார அபிஷேகங்கள் , பிரதோஷம் முதலான உற்சவங்கள் சிறப்பு மிக்கவை 
தரிசன நேரம் 

காலை ௦5:௦௦ மணி முதல் நண்பகல் ௦3:௦௦ மணி வரை &
மாலை ௦5:௦௦ மணி முதல் இரவு 1௦:௦௦ மணிவரை நடை திறந்திருக்கும். 

காலைநேரங்களில் சுவாமிக்கு நாமே பூஜை செய்யலாம். இதற்கு தனியே கட்டணம் உண்டு 

தொடர்புக்கு  

08524-287130 , 
08524-287135 , 
08524-287159 , 
08524-288881 ,
08524-288887 ,
08524-288888

ஆந்திர மாநில கர்னூல் மாவட்டத்தில் நந்தியாலுக்கு அருகில் அமைந்துள்ளது இந்த ஜோதிர்லிங்கத்தலம். விஜயவாடா அருகிலுள்ள ( 27
 கிமீ ) தெனாலியில் இருந்து சுமார் 25௦ கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம். திருப்பதியில் இருந்து சுமார் 5௦௦ கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்
தேவாரப்பாடல் பெற்ற வடநாட்டுத் தலங்கள்

3. அநேகதங்காபதம் ( கௌரி குண்டம் )

மூலவர் – அருள் மன்னேஸ்வரர் 
அம்பாள் – மனோன்மணி 
தலமரம் – 
தீர்த்தம் – 
புராண பெயர் – 
ஊர் – 
மாநிலம் – 
மாவட்டம் – 
பாடியவர்கள் – சம்பந்தர் 

• தேவாரப்பாடல் பெற்ற வடநாட்டுத்தலங்கள் ஐந்தினில் ஒன்றான இத்தலம் ஹரித்வாரில் இருந்து கேதார்நாத் செல்லும் வழியில் அமைந்துள்ளது 
• தற்போது இத்தலம் கௌரிகுண்டம் என்று அழைக்கப்படுகிறது 
• அம்பிகை தவஞ்செய்த இடம் இது என்று சொல்லப்படுகிறது
• இத்தலத்தில் உள்ள வெந்நீர் ஊற்றில் நீராடுவது முக்கியமான ஒன்றாக சொல்லப்படுகிறது 
• சூரியனும் , சந்திரனும் சிவனாரை வழிபட்ட தலம் 
• கேதார்நாத் யாத்திரையில் கெளரிகுண்டம் என்ற இத்தலம் வரை மட்டுமே வாகனங்கள் செல்லும். இங்கிருந்து நடந்தோ , குதிரைமீது அமர்ந்தோ , டோலியிலோ 14 கிமீ மலைப்பாதையில் ( கரடுமுரடான பாதை ) ஏறிச்சென்று கேதாரநாதரை தரிசித்து மீண்டும் இத்தலத்தை அடையவேண்டும்  
• சம்பந்தர் இத்தலத்தை குறித்த பதிகத்தை ஸ்ரீ காளஹஸ்தியில் இருந்தே பாடியதாக வரலாறு சொல்லப்படுகிறது

வெள்ளத்தினால் தற்போது இத்தலம் சிதிலமடைந்துள்ளது

No comments:

Post a Comment