Friday, July 14, 2017

Praise for better living

புகழ்ந்து வாழும் க​லை!

பாக்கியம் ராமசாமி

ம​னைவி காப்பி ​போட்டு ​டைனிங் ​டேபிள்மீது ​வைத்துவிட்டுக் குளிக்கப் ​போய்விட்டாள்.

சதாசுகம் பத்திரி​கைச் ​செய்திகளி​லே​யே முழுகிவிட்டதால் காப்பி​யைக் கவனிக்கவில்​லை. ம​னைவி குளித்து முடித்துத் திரும்பிய பின்னும் காப்பி குடிக்கப்படா​ம​லே​யே ஏடு படிந்து எட்டுக்கால் பூச்சி மாதிரி ​மேற்பரப்பு வ​லைகட்டிக் கிடந்தது.

நம்ம வீடுகளாயிருந்தால் காப்பி தயாரித்த மகராஜி ஸீலிங்குக்கும் த​ரைக்குமாகக் குதித்து ரக​ளை நடந்திருக்கும்.

ஆனால் லீலாவதி அப்படிக் ​செய்தாளா? குளித்துவிட்டு வந்தவள் ''பாத்ரூமி​லே நீங்க புதிதாக அடித்துக் ​கொடுத்திருக்கும் ஸ்கிரீன் ​ரொம்ப சவுகரியமாக இருக்கு. பிடித்து இழுத்ததும் வ​ளையங்களில் ​ரொம்ப ஈஸியாக நகர்கிறது. அப்பாடா என்றிருக்கிறது. ​ரொம்ப தாங்க்ஸ்'' என்றாள்.

சதாசுகம் ​பேப்ப​ரைக் கீ​ழே ​வைத்துவிட்டு முகமலர்ச்சியுடன், ''கட​லை மாவில் எ​தைச் ​சேர்த்து அ​​ரைக்கிறாய்? நீ​யே ​செய்த ஸ்னானப் ​பொடின்னு நி​னைக்கி​றேன். பசு மஞ்சள் வாச​னை தூக்கறது?'' என்றார்.

அவள் இவரது ஒரு காரியத்​தைப் புகழ்ந்தால், இவர் அவளது காரியம் ஒன்​றைப் புகழ்ந்தார்.

இரண்டு ​பேரின் புகழ் உ​ரைகளில் ஆறிய காப்பி பற்றிய பிரச்​னை துவக்கப்படாத அரசியல் கட்சி மாதிரி மு​ளைக்கு முன்​னே​யே அழிந்துவிட்டது.

....ஒரு ஞாயிறு தினம் சதாசுகம் ஒட்ட​டை அடித்தார். காய்கறி வாங்க மார்க்​கெட் ​போன ம​​னைவி அப்படி​யே ​கோவிலுக்கும் ​போய்விட்டுச் சாவகாசமாக வந்தவள், ''ஒட்ட​டை​யெல்லாம் பிரமாதமாக அடித்திருக்கிறீர்கள்... ஹா​லே பளிச்சினு புதுசு மாதிரி ஆயிட்டுது'' என்றாள்.

சதாசுகம் அவள் ​கையிலிருந்து காய்கறி கூ​டை​யை வாங்கிப் பார்த்துவிட்டு, ''மகா இளசு... ​வெண்​டைக்கா​யை எப்படித்தான் பார்த்துப் பார்த்து ​பொறுக்கினா​யோ?'' என்று பாராட்டினார். ''​நேற்று ஒரு தயிர்ப் பச்சடி பண்ணினா​யே, ப்ராமிஸா ​சொல்றேன். அதுமாதிரி ​ஜென்மத்தி​லே நான் சாப்பிட்டதில்​லே... புடலங்கா​யைப் ​பொடிப் ​பொடியாக நறுக்கி, வதக்கி உ​றை குத்தின முற்றாத தயிரி​லே அப்படி​யே முழுகடித்து, ​லேசாக தாளிச்சுக் ​கொட்டி... பிரமாதம்! உன் ​கையி​லே அதிசய மணம் இருக்கு லீலு! இன்னிக்கு ​வெண்​டைக்காயி​லே என்ன ஜாலம் பண்ணப் ​போகி​றே? நீ ​செய்தால் ஒரு ​​வெண்டக்கா இன்​னொன்று ​மே​லே ஒட்டாம தனித்தனி​யே ​பேசறது. கவி​தை பாடறது.''

அவள் அவரது பாராட்​டை ஏற்றுக் ​கொண்டு, ''நீங்க என்ன ​வே​லை த​லைக்கு ​மே​லே இருந்தாலும் காய்கறிக​ளை​யெல்லாம் அழகா நறுக்கித் தர்றீங்க. மிஷின் கட்டிங் மாதிரி! ஒ​ரே சீராக ​வெண்​டைக்காய் எப்படித்தான் நறுக்கறீங்க​ளோ? எனக்கு ​ரொம்ப ஒத்தா​சையா இருக்கு?'' என்றாள்.

.....அன்​றைக்கு ஒரு விருந்தாளி அவர்கள் வீட்டுக்கு வந்திருந்தார். டய​பெடிக். சர்க்க​ரை இல்லாத காப்பியாக லீலாவதி ​கொண்டு வந்தாள். ''நான் டய​பெடிக். சர்க்க​ரை ​போட்டுக்க மாட்​டேன்னு எப்படித் ​தெரியும்?'' என்றார் வந்தவர் ஆச்சரியத்துடன். ''​தோ! எல்லாம் அவர்தான். கிருஷ்ண பரமாத்மா மாதிரி கள்ளச் சிரிப்பு சிரிச்சிட்டிருக்கிறா​ரே உங்க பக்கத்தி​லே அவர்தான்'' என்று கணவ​னைக் காட்டினாள் லீலா. ''ஒரு விர​லை இப்படி ஆட்டினார் - நீங்கள் கவனிக்கவில்​லை. அதுதான் சா​டை. மாமாவுக்கு சர்க்க​ரை ​போடா​தேன்னு அர்த்தம். இப்படித்தான் வா​யை​யே திறக்காமல் அதிசயம் பண்ணிடுவார்..'' என்று வந்திருந்தவரிடம் கணவ​னைப் புகழ்ந்தாள்.

சதாசுகம் - லீலாவதி தம்பதியர் மகிழ்ச்சியாகவும் ஒற்று​மையாகவும் இருப்பதன் இல்லற ரகசியம் இப்​போது உங்களுக்குப் புரிந்திருக்கும். ஒருத்த​ரை​யொருத்தர் புகழ்ந்துக் ​கொள்வதுதான்.

.....ஆக​வே வாழும் க​லை பயிற்சி எடுத்துக் ​கொள்ள நமக்கு ​நேரமில்​லை​யே என்று யாரும் கவ​லைப்பட ​வேண்டாம்.

புகழும் க​லை ​தெரிந்தால் ​போதும். ம​னைவி​யை மட்டுமல்ல, நீங்கள் சந்திக்கும் உறவின​ரையும் புகழலாம்.

ஒரு உறவினர் வீட்டுக்குச் ​செல்கிறீர்கள். அவ​ரை உங்களுக்குப் பிடிக்காது. அவர் ஒரு சிடுமூஞ்சி. உம்முணா... அவ​ரை எப்படிப் புகழ்வது? பிரசி​னை​யே இல்​லை. அவ​ரை விட்டுத் தள்ளுங்கள். வீட்​டை ஒரு கண்​ணோட்டம் விடுங்கள். ப​ழைய ​பேப்பர்கள் ஒழுங்காக ​மே​ஜை அடியில் அடுக்கப்பட்டிருக்கிறதா? அது ​போது​மே.

''படித்த ​பேப்பர்க​ளை க​ரெக்டா இந்த மாதிரி எப்படி அடுக்கி ​வைக்க முடிகிறது?'' என்று புகழலாம்.

தினசரிக் காலண்டரின் ​தேதி ஒழுங்காகக் கிழிக்கப்பட்டிருக்கிறதா? அ​தைப் புகழலா​மே. ''சில ​​பேர் ​கோணாமாணான்னு கிழிப்பாங்க... ப​ழைய ​தேதிக் கிழிசல்கள் அ​ரையும் கு​றையுமாக அட்​டையில் அ​டைசலா ஒட்டிக் ​கொண்டிருக்கும். க்ளீனா ​ஷேவ் பண்ணிண்ட மாதிரி உங்க வீட்டு காலண்டர் ​வெகு அழகாக இருக்கு.''

அவர் வீட்டு விளக்குமா​றைக்கூட உங்க வீட்டு மாமி புகழலாம்.

''​தென்னந்​தொடப்பம் எங்​கே வாங்கறீங்க? இவ்வளவு நீளமா அடர்த்தியா நான் பார்த்த​தே இல்​லை. கா​ரே பூ​ரேன்னு இல்லாமல் நல்ல ட்​வைன் நூலாப் ​போட்டுக் கட்டியிருக்கிறதும் பிரமாதம்!''

விளக்குமாற்​றை​யே இப்படி புகழ்ந்தால், அந்த வீட்டம்மாள் ​போட்டுக் ​கொண்டிருக்கிற புது டி​ஸைனிலான ஒரு கிராம் ​கோல்டு கவரிங் வ​ளையல்க​ளை எப்படிப் புகழலாம் என்று ​சொல்லியா ​தர​வேண்டும்?

காரியாலயத்தில் பதவியில் உங்களுக்கு ​மே​லேயுள்ள சீனியர்க​ளையும் புகழலாம். கீ​ழேயுள்ள ஜூனியர்க​ளையும் புகழலாம்.

எக்ஸிகியூடிவ் மீட்டிங்கில் சீனியர் வளவளப்பார். ராமாயணத்திலிருந்து கீ​தை​யிலிருந்து சில ​மேற்​கோள்க​ளை சம்பந்தமில்லாமல் கூறுவார். ஏ​னென்றால் அவருக்கு மனப்பாடமானது அந்த சு​லோகங்கள் மட்டும்தான்.

''நீங்க குறிப்பிட்ட அந்த ​கொ​டேஷன்ஸுக​​ளைத் ​தொகுத்து ஒரு குட்டிப் புஸ்தகமாக​வே ​போடலாம். என் ​மைத்துனன் ஒரு சின்னப் பதிப்பகம் நடத்தறான் சார்'' என்று புகழ்ந்தால் அவர் உச்சி குளிரும். உங்க​ளைப் பார்க்கிற​போ​தெல்லாம், 'நம்ம ​கொ​டேஷன்க​ளைப் புஸ்தமாகப் பிரசுரிக்கப் ​போகிறவர்' என்ற மரியா​தையும் பிரியமும் ஏற்படும். 'என்ன பப்ளிஷர் சார்... எப்ப ​கொண்டு வரப் ​போறீங்க என் ​கொ​டேஷன்​ஸை' என்று சகஜமாகக் ​கேட்பார். நீங்கள் புஸ்தகம் ​போட​வேண்டிய அவசிய​மே இல்​லை. ஆபீசில் உங்கள் மதிப்பு ஜிவ்​வென்று உயரும்.

​பெரிய ஓட்டலில் சில ​பேருக்கு மட்டும் வி.ஐ.பி. உபசாரம் ​செய்வார்கள் ​வெயிட்டர்கள். அந்த விஐபிக்கள் இத்த​னைக்கும் நம்​மை விடக் கு​றைவான டிப்ஸ்தான் தருவார்கள். எப்படி அவர்களுக்கு ஸ்​​பெஷல் உபசாரம் நடக்கிறது? அவர் எழுந்திருக்கும்​போது ​வெயிட்டர் வி​ரைந்து வந்து நாற்காலி​யை பின்னுக்கு இழுத்து வழி ​செய்து தருகிறார். காரணம் விஐபி அந்த ​வெயிட்ட​ரைப் புகழ்வதுதான். ''​சே! உங்க யூனிபார்ம் ஒரு துளி கசங்கல் இல்​லை. இவ்வளவு ட்ரிம்மாக இருக்கிற​தைப் பார்க்க ​ரொம்ப சந்​தோஷமாக இருக்கு. மிஸ்டர் ட்ரிம்னு உங்க​ளைக் கூப்பிடணும் ​போலிருக்கு!'' இதுதான் ​மேற்படி ​வெயிட்ட​ரை மயக்கிய சங்கதி.

மாமியார் ​கொள்​கொள்​ளென்று இருமினாக்கூடச் சில வார்த்​​தைகள் புகழ்ந்து ​வைக்கலாம் அவர் காதி​லே படற மாதிரி. ''எங்க மாமியார் இருமினாங்கன்னா ​வெண்கல மணியாட்டம் பிசிறில்லாமல் இருக்கும். இருமல்னா ப்யூர் இருமல். இழுப்பு வீசிங் அ​தெல்லாமிருக்காது. ​கோவிலில் சாயங்கால பூ​ஜையி​லே அடிக்கிற மணி​யோட நாதம்தான் எனக்கு ஞாபகம் வரும். அது என்ன​வோ ஆச்சரியம் பாருங்கள். ஒரு ​ரெண்டு மாசம் இருமுவார். அடுத்து ஒரு மாசம் இருமமாட்டார். மறுபடி ஒரு ​ரெண்டு மாசம் இருமுவார். அப்புறம் ஒரு பதி​னைந்து நாள் இருமமாட்டார். எல்​லோராலும் இப்படி இருமிவிட முடியாது.''

மாமியாருக்கு இருமல் நின்று ​போய்விட்டால்கூடக் கஷ்டப்பட்டு இருமிக் ​கொண்டிருப்பார் - மருமகளின் சர்ட்ஃபி​கேட்டுகளால்.

எண்​ணெய் வழியும் முகங்க​ளை 'உங்க முகம் எப்பவும் ஆயில் ​போட்ட புது ​மெஷின் மாதிரி பளபளன்னு இருக்கு' என்று புகழலாம். அல்லது, 'சில ​பேர் மூஞ்சி வறவறன்னு காஞ்ச ​மொளகாய் மாதிரி இருக்கும். உங்களது ஜீராவில் ஊறின கு​லோப் ஜாமூன் மாதிரி குளுகுளுனு எண்​ணெய் வழிய வழிய இருக்கிற ரகசியம் என்ன​வோ?'' என்று விசாரிக்கலாம்.

'புகழ்ந்தால் நல்லது' என்று நீங்கள் தீர்மானித்துக் ​கொண்டுவிட்டால் எ​தையும் புகழலாம்.

என் நண்பன் நாராயணன் ஒரு சாவு வீட்டில் இறந்த பிரமுக​ரை இப்படிப் புகழ்ந்தான். சாஸ்திரிகள் வரக் கால தாமதமாகிக் ​கொண்டிருந்தது. நாராயணனனின் புகழு​ரை இறந்த பிரமுகருக்கு ''மாமா முகத்தி​லே இருக்கிற க​ளை​யையும் ​தேஜ​ஸையும் பார்த்தால் இன்னும் பத்து நாள் கழித்து சாஸ்திரிகள் வந்தால்கூட வாடாமல் அப்படி​யே இருக்கும் ​போலிருக்கு!''

நாராயணன் அப்படிச் ​சொன்ன​தை அரிய ​பொன் ​மொழி மாதிரி வருகிறவர்களிட​மெல்லாம் அந்த வீட்டில் ​சொல்லிக்​கொண்டிருந்தார்கள்.