Thursday, July 27, 2017

Poiyyadimai allada pulavar-8- nayanamar stories

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை. கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
 🌿 *(8) நாயனார் சரிதம்.*🌿
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🌿 *பொய்யடிமையல்லாத புலவர்.* 🌿
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
பொய்யடிமையில்லாத புலவர் என்போர், நீலகண்டப் பெருமானின் திருமலரடிக்கே ஆளானவர்கள்.

அதுவே மெய்யுணர்வின் பயன் என்று துணிந்து விளங்கியவர்கள்.

இவர்கள் செய்யுட்களில் திகழும் சொற்களைப் பற்றிய தெளிவும், செம்மை தரும் பயனுடைய நூல்கள் பலவற்றைப் பயின்ற ஆய்வுணர்வும் உடையவர்கள்.

அவைகளால் பெறும் மெய்யுணர்ச்சியின் பயன் சிவபெருமானின் மலரடிகளை வணங்குதலே என்ற கருத்தின் வழி நின்று தொண்டாற்றியவர்கள்.

சிவபெருமானின் செயலையன்றி வேறெதையும் வாய் திறந்து படாத நெறியில் நின்று தொண்டு செய்த மெய்யடிமையுடையவர்கள். 

அவர்களுடைய பெருமையை  அறிந்து உரைக்க வல்லவர்கள் யார்தான் உண்டு?

*பொய்யடிமையில்லாத புலவர்க்கும் அடியோம்.*

         திருச்சிற்றம்பலம்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment