Sunday, July 30, 2017

Keats, Shelly & Advaita - Periyavaa

மஹாபெரியவா

ஒருநாள் ஸ்ரீ ரா.கணபதியுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது ஶ்ருங்கார கவியான கீட்ஸ் கூட, அத்வைதத்தைப் பற்றி கூறியிருப்பதை ஸ்ரீ கணபதி பெரியவாளிடம் கூறினார்.

"Keats-ஐயும், Shelley-யையும் sensual poets-னு மட்டம் தட்டப்...டாது! Sensuous-னே... நகாஸு பண்ணி, ஒஸத்தி வெக்கணும்-னு சொல்றதுண்டோன்னோ? கீட்ஸ்-ல உதாரணம் காட்டினே..... ஸெரி.... ஷெல்லி-ல அத்வைதம் எங்கியாவுது வருதா?....."

கணபதி நன்கு யோஜித்தும், எதுவும் ஞாபகம் வரவில்லை.

ஆங்கிலக் கவிதைக்கான அடியெடுத்துக் கொடுத்தாள் காஞ்சீ ஸரஸ்வதி....

"கீட்ஸுக்காக அவன்.... [ஷெல்லி] பாடின..... 'Elegy' [இரங்கல் கவிதை] லேயே....!...."

குறுகுறுவென்று.... பார்த்துக்கொண்டே.... தூண்டிக் கொடுத்தார்.

ம்ஹூம்! கணபதிக்கு ஞாபகம் வரவில்லை!

அழகான அந்தக்காலத்து perfect உச்சரிப்புடன், பெரியவாளே மடைதிறந்த வெள்ளமாக, ஒவ்வொரு வார்த்தையையும் ரஸித்து ரஸித்து சொல்ல ஆரம்பித்தார்.......

"The One remains, the many change and pass;
Heaven's light forever shines, Earth's shadows fly;
Life, like a dome of many-colour'd glass,
Stains the white radiance of Eternity"

"இதைவிட..... ஏகமா [ஒன்று] இருக்கற ப்ரஹ்மத்தையும், த்வைத ப்ரபஞ்சமா வேஷம் போடற மாயையையும் வர்ணிக்கறதுக்கு என்ன இருக்கு?....."

உளமார ஷெல்லி கவிதையை ஶ்லாகித்தார். கொஞ்சநேரம் கவிதைச்சுவையை அனுபவித்தபடி..... அமைதியாக இருந்தார்......

"Many coloured glass..... வந்து.... அந்த white radiance-ஐ stain-ம் பண்றது! ஆனா.... அத்தனை கலரா shine பண்றதும்.... அதே white radiance-தானே!..."

நாம் வெண்மையிலும், நிறங்களை ஆரோபித்து பார்ப்போம். பெரியவாளோ, நிறங்களிலும் கூட, வெறும் வெண்மையைத்தான் பார்க்கிறார்.

வெண்மை என்பது நிறமில்லை.

காமாலை கண்ணுக்கு எல்லாமே மஞ்சளாக தெரியும் என்பார்கள். After all, அழியும் இந்த ஶரீரத்தின் உள்ளே இருக்கும் after all ஒரு கல்லீரல், நம் கண்கள் காணும் அனைத்தையும் மஞ்சளாகக் காட்டும் வல்லமை பெற்றதென்றால், அழியாமல் என்றுமே நம்முள் இருக்கும் ஆத்மஜ்யோதிஸ்ஸை நாம் பக்தியால் தூண்டிவிட்டால், அனைத்துமே ஆத்மஜ்யோதிஸ்ஸாக தெரியுமே!

ஒரே வெண்மையிலிருந்துதான் பல வண்ணங்களின் சிதறல்...... என்று ஷெல்லியின் கவிதையில் வருகிறதல்லவா? இந்த scientific fact-ஐ ஆழ்ந்து ஆராய்ச்சி செய்தவர் ஸ்ரீ Chandrasekar Venkata Raman என்ற C.V.ராமன்.

இந்த விஞ்ஞானத்தை மெய்ஞானத்தோடு பொருத்தி, பல அரிய விஷயங்களை தன்னுடைய ராஸீக்யமான எண்ணங்களோடு சேர்த்து நமக்குத் தருபவர்....... ஸ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதி!

"வெள்ளை-லேந்து வெளிப்படற..... voilet, indigo, blue, green, yellow, orange, red...ன்னு வரிஸைப்படுத்தி, இதுகளோட மொதல் எழுத்தை ஒண்ணு சேத்து VIBGYOR-ன்னு ஸப்த வர்ணங்களும் காட்ற வானவில்லை சொல்றோம்.... இல்லியா?

இதுமாதிரி..... voilet-ல தொடங்கி, ரெட்-ல முடிக்கறது அவ்ளோ ஸெரியில்ல! ஏன்னா..... இந்த வரிஸையை அப்டியே...... திருப்பி 'infra red'-ங்கற செவப்புலதான்..... வெள்ளை கலர் வந்து, மத்த கலரா பிரிய ஆரம்பிச்சு, வரிஸையா....... orange, yellow....ன்னு போயி, ultra voilet-ன்னு ஊதா கலர்ல போய் முடியறது!

அதுக்கப்றம் கறுப்பு.

அந்த முடிவா இருக்கற கறுப்பு, மொதலா இருக்கற வெள்ளை.... இந்த ரெண்டுமே..... ஸப்த வர்ணத்ல சேராது!

VIBGYOR-ங்கறதுல, ஆர்டர் தலைகீழா இருந்தாலும், அதே வெள்ளைக்காராள்ளாம், ஸ்கூல் பசங்களுக்கு, க்ரமப்படி.... ரெட்-ல ஆரம்பிச்சு, வைல்ட்-ல முடியறாப்ல.... எப்டி வரிஸைப்படுத்தி சொல்லணுமோ..... அது நெனவுல இருக்கறதுக்காக.... அந்த ஏழு கலரோட மொதல் எழுத்துல ஆரம்பிக்கற வார்த்தைகளை..... ஒரு வாக்யமா [sentence] கோர்த்து சொல்லிக் குடுப்பா....... அதுலேயே நாஸூக்கா ஒரு புத்திமதியையும் குடுத்துடுவா!

அது... என்ன வாக்யம்-ன்னா.....

"Read over your good books in vacation"...!

இதுல வர, ஏழு வார்த்தையோட ஆரம்ப அக்ஷரங்கள், VIBGYOR-க்கு நேர்மாறா.... அதாவுது science-க்கு ஸெரியா.... ROYGBIV-ன்னுதானே இருக்கு? அதோட..... கொழந்தேள்.... லீவுநாள்ள ஒரேடியா.. வெளையாட்டுலியே எறங்காம, நல்ல பொஸ்தகங்கள் படிக்கணும்-ங்கற புத்திமதியும்!...."

நம் ப்ரத்யக்ஷ தெய்வத்தின் குரலை கேட்பதாலும், படிப்பதாலும், முடிந்தவரை அதன்படி நடப்பதாலும், இவ்வுலகில் மட்டுமில்லை; இனி எவ்வுலகிலும் நம்மை பிறவியில் தள்ளாதே!

ஶ்ரீ ஆச்சார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்

compiled & penned by gowri Sukumar