Monday, June 5, 2017

Small pazhani

Courtesy:http://madipakkamsrisivavishnutemple.blogspot.in
'அடைமழை விட்டாலும் செடிமலை விடாது' என்கின்றனர், திருச்சிக்கு அருகில் உள்ள முருக பக்தர்கள். அதாவது, அடைமழை விட்டாலும் செடி மலை யில் கோயில் கொண்டிருக்கும் முருகனின் அருள் மழை மக்களைக் கைவிடாது என்பது இதன் பொருள்.
திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது துவாக்குடி. இந்த ஊருக்கு அருகில் உள்ள செடிமலை எனும் பகுதியை 'குட்டி பழநி' என்று அழைக்கின்றனர் பக்தர்கள். இங்கே முருகப்பெருமானின் திருநாமம்- ஸ்ரீபாலதண்டாயுதபாணி.  
மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தையும் இங்கு வந்து முருகக் கடவுளின் திருச்சந்நிதியில் நின்று தெரிவித்துப் பிரார்த்தனை செய்தால் போதும்... கண்கண்ட தெய்வமான கந்தவேள் அவற்றை விரைவில் நிறைவேற்றித் தருவார் எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள்.
மேற்குப் பார்த்த ஆலயம். பங்குனி உத்திரம், தைப் பூசம், கந்த சஷ்டி ஆகியவை இங்கு சிறப்புறக் கொண்டா டப்படுகின்றன. செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ அலங்காரங்களும் அபிஷேகங்களும் நடை பெறுகின்றன. கந்தசஷ்டி நாளில், காவடி எடுத் தும் பால் குடம் ஏந்தியும் பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
மாதாந்திர சஷ்டியிலும் கந்தசஷ்டி விழாவிலும் கலந்துகொண்டு, மயில்வாகனத்தில் திருவீதியுலா வரும் அழகன் முருகனைத் தரிசித்தால், நம் கர்வம் மொத்தமும் அழியும்; அவனது கருணைப் பார்வை நம் மீது விழும்; சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப்பெற்று வாழலாம் என்பது ஐதீகம்!
திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர் களில் உள்ள பக்தர்கள் பழநிக்குப் பாத யாத்திரையாகச் செல்ல மாலை அணிந்து விரதமிருக்கும் காலத்தில், இங்கு வந்து செடிமலையின் மேல் குடிகொண்டிருக்கும் கந்தக் கடவுளை வணங்கிச் செல்கின்றனர்.
ஆரம்ப காலத்தில், மலையேறுவதற்குப் படிக் கட்டுகள் இல்லாமல் இருந்தன. பிறகு பக்தர்களின் முயற்சியால், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. ஸ்ரீபாலதண்டாயுதபாணியின் சந்நிதிக்கு எதிரில் ஸ்ரீகோபாலகிருஷ்ண ஸ்வாமி சந்நிதி அமைந்துள் ளது. இவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறு கின்றன.
மலையடிவாரத்தில், ஸ்ரீபாலவிநாயகர் எனும் திருநாமத்துடன் கோயில்கொண்டிருக்கிறார் கணபதி. சங்கடஹர சதுர்த்தி நாளில், இவருக்கு நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டால், சங்கடங்கள் யாவும் தீரும்.
செடிமலையின் கீழே உள்ள அண்ணன் ஸ்ரீபால விநாயகரையும், மலையின் மேல் குடிகொண்டி ருக்கும் ஸ்ரீபாலதண்டாயுதபாணியையும் கந்தசஷ்டி நாளில் வந்து வணங்குங்கள். நம் சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்து வைப்பான் செடிமலை வேலவன்.

No comments:

Post a Comment