Monday, June 12, 2017

Pancakacham & Madisar

Courtesy: https://www.facebook.com/kmuseshadri/posts/523988337758086

பஞ்சகச்சம்.&மடிசார்..

குக்ஷித்வயே ததா ப்ருஷ்டே நாபௌ த்வௌ பரிகீர்த்திதௌ
பஞ்சகச்சா:ஸ்து தே ப்ரோக்தா: சர்வ கர்மஸு ஷோபனா: -....

குக்ஷி என்றால் இடுப்பு,
குக்ஷித்வயே = இரண்டிடுப்பில் ( வலது இடுப்பில் ஒன்று இடது இடுப்பில் ஒன்று )
ததா = அவ்வாறு
ப்ருஷ்டே =பின்புறத்தில் ஒன்று
நாபௌ = தொப்புளில் இரண்டு
கச்சம் என்றால் சொருகுதல்
பஞ்சகச்சா: = ஐந்து சொருகலானது
சர்வ கர்மஸு = எல்லா காரியங்களிலும்
ஷோபனா: = மன்களகரமானதாக
ப்ரோக்தா: = கூறப்படுகிறது

அதாவது வலது இடுப்பில் ஒரு சொருகல், இடது இடுப்பில் ஒன்று, பின்புறத்தில் ஒன்று, தொப்புள் பகுதியில் இரண்டு என்று ஐந்து சொருகுதல் முறையையே பஞ்சகச்சம் என்று பெரியோர்களால் கூறப்படுகிறது..

கேள்வி :
மடிசார், பஞ்சகச்சம் போன்ற விசேஷ உடைகளை பற்றி சற்று விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்?..............
பதில் :
உங்கள் கேள்விலேயே உங்களை அறியாமல் ஒரு தவறு நுழைந்துள்ளது.

மடிசார், பஞ்சகச்சம் போன்றவைகள் விசேஷ உடைகள் அல்ல.

அவை நாம் நித்யம் அணிய வேண்டியவைதாம்.

என்ன செய்ய, காலத்தின் கோலம், எவையெல்லாம் சர்வ சாதாரணமாக இருந்ததோ,
அவையெல்லாம் இன்று முக்கிய விசேஷங்களில் சம்பந்தப்பட்டவைகளாகி விட்டன.

சரி, உங்களது கேள்விக்கு வருவோம். விசேஷ தினங்களிலாவது இவற்றை அணிந்துதான்
ஆக வேண்டும்.

இல்லாவிட்டால் கர்மாக்கள் நஷ்டமாகும்.

மேலும் இவற்றை அணிவதொன்றும் பெரிய பிரம்மவித்தை அல்ல.

அப்யாஸம் செய்தால் சுலபமாகப் பழக்கமாகி விடும்.............. மற்றொன்றையும் இந்த சமயத்தில் எடுத்துக்கூற விரும்புகிறேன். இன்று சுடிதார், பேண்ட் போன்றவைகள் பழக்கத்திற்கு வந்துவிட்டன. சமுதாயமும் இதை ஏற்றுக் கொண்டு விட்டது. அவை இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் குறைந்தது கோவில்களுக்கும், வேத பாராயணம் நடக்கும் இடங்களுக்கும், ஆச்சார்ய ஸ்வாமிகள் போன்ற மஹான்களை தரிசிக்கச் செல்லும் பொழுதாவது, இவற்றைத் தவிர்த்து, புடவை வேஷ்டியில் செல்வது உசிதம்.
மடிசார்......................a method in which sari is worn by married women of the tamil brahmin community............தமிழ்நாட்டு அந்தணர்களில் திருமணமானப் பெண்கள் புடவை அணியும் பாணி மடிசார் எனப்படும்...பழைய பழக்கங்களின்படி திருமணமானதும் பிராமணப் பெண்கள் தினமும் இந்தப் பாணியில்தான் புடவை அணியவேண்டும்...சமையலும் குளித்துவிட்டு மடியாக, சுத்தமாக இந்தப்பாணி புடவைக் கட்டிக்கொண்டுதான் செய்யவேண்டும்...மடியை சார்ந்த பாணி என்பதால் மடிசார் கட்டு என்பர்...இந்த பாணியில் இருவகை உண்டு...வைணவ மதத்தினர் (ஐயங்கார்) புடவையின் மேல் தலைப்பை இடது பக்கமாகவும், சைவ மதத்தினர் (ஐயர்) வலது பக்கமாகவும் மடித்து அணிவர்...மடிசார் கட்டுவதற்குப் புடவையின் நீளம் அதிகமாகத் தேவைப்படுமென்பதால் ஒன்பது கெஜம் நீளமுள்ளப் புடவையே கன கச்சிதமான மடிசார் கட்டுக்குப் பயன்படுகிறது...தற்காலத்தில் தினமும் மடிசார் கட்டுவதில்லை...விசேட காலங்களில்தான் கட்டுகின்றனர்...சம்பிரதாயமானது அல்ல என்றாலும் சற்று எளிதான முறையில் ஆறு கெஜம் நீள புடவையிலும் மடிசார் கட்டும் முறை தற்போது நடைமுறையிலுள்ளது...முறையான மடிசார் பாணியில் கட்டியப் புடவை எந்தச் சூழ்நிலையிலும் பெண்களின் உடலிலிருந்து நழுவாது,வழுவாது, அவிழாது, பறக்காது என்பதே சிறப்பாகும்...பட்டு, பருத்தி முதலான எல்லாவிதமான துணிகளிலும் மடிசார் புடவைகள் ஆயத்தமாகக் கிடைக்கின்றன...




--
K.Sekar,
Srirangam
9486311457

No comments:

Post a Comment