Friday, June 16, 2017

End of war - Periyavaa

courtesy:sri.Varagooran Narayanan

"பெரியவாளின் வானொலி உரை"

(
நாட்டு நலனில், ஸ்வாமிகளின் அக்கறை)

ஒரு சிறு பதிவு

சொன்னவர்-கீதா துரைஸ்வாமி சென்னை-20
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
 தட்டச்சு-வரகூரான் நாராயணன்

பாகிஸ்தானுக்கும் பாரதத்துக்கும் சண்டை.
பாரதம் வெற்றிபெற வேண்டுமென்பதிலும்,
யுத்தம் விரைவில் முடிவுக்கு வரவேண்டும்
என்பதிலும் எவருக்கும் கருத்து வேற்றுமையில்லை.
சமயத் தலைவர்கள், தத்தம் முறைப்படி
பிரார்த்தனை செய்தார்கள்.

வானொலியில் மகா பெரியவாளின் உரை
ஒலிபரப்பாகியது. உரையின் இடையில்,

" ஸமரவிஜயகோடி ஸாதகானந்ததாடி
...ம்ருதுகுணபரிபேடி முக்யகாதம்பவாடி
...முநிநுதபரிபாடி மோஹிதா ஜாண்டகோடி
....பரமசிவவதூடி பாது மாம் காமகோடி"

(மூகபஞ்சசதீ-ஸ்துதி சதகம் - 101)

என்ற ஸ்லோகத்தை, முடிந்தவரை,பாராயணம்
செய்துவந்தால்,யுத்தம் சீக்கிரம் முடிந்துவிடும்'
என்றார்கள்.

என் குடும்பத்தார்கள் மட்டுமல்லாமல், எனக்குத்
தெரிந்தவர்களுக்கும் சொல்லிக் கொடுத்து
பாராயணம் செய்யச் சொன்னேன்.

விரைவில் பாரதம் வெற்றி பெற்றது.
யுத்தம் நின்றுவிட்டது.

நாட்டு நலனில், ஸ்வாமிகளின் அக்கறை
ஈடு இணையில்லாதது.

No comments:

Post a Comment