Monday, June 12, 2017

Dvaita

Courtesy:https://raghavendranbhimarao.wordpress.com/page/34/

ஸ்ரீமத்வாச்சார்யாரின் ஸர்வமூலக்கிரந்தங்கள் தொடர்கிறது.,

அடுத்த கிரந்தம்.,.,கிரந்தம் எண்.,26.,மாயாவாத கண்டனம்:-

ஸ்ரீமத்வரின் மாயாவாதகண்டனம் என்ற இந்தக் கிரந்தம் ஒரு சில ஸ்லோகங்களே கொண்ட சிறிய உரைநடைக் கிரந்தம்.,(கத்யம்.,OR.,Prose).,

இதில் பகவத்கீதை.,கடோபநிஷத்.,பிரம்ம ஸூத்ரம்.,ஆகியவைகளை உதாஹரித்து (using as Quotations) அத்வைதிகளின் மாயாவாத ஸித்தாந்தத்தை தவறு என்று ஸ்ரீமத்வர் நிரூபித்திருக்கிறார்.,அநுபந்தசதுஷ்டயம் என்பதாக (Four pronged attack) ஒரே நேரத்தில் நான்கு விதங்களிலும் இந்த மாயாவாதம் தவறு என்று நிரூபிக்கிறார் ஸ்ரீமத்வர்.,
அதெல்லாம் சரி.,சார்! .,ஏதேதோ டெக்னிகலான பெயர்களைஎல்லாம் சொல்லி குழப்புகிறீர்கள்., முதலில் அத்வைதிகளின் மாயாவாதம் என்பது என்ன.,அதைச் சொல்லீட்டு அப்புறமா மத்ததைச் சொல்லுங்க ஸார்!.,

நாம் ஒரு விஷயத்தை மறுக்கப் போகிறோம் என்றால் அது என்ன விஷயம் .,நாம் எதை மறுக்கப் போகிறோம் என்பதை முதலில் தெளிவாகக் கூறவேண்டும்., இவ்வாறு கூறும் பகுதிக்கு பூர்வ பக்ஷம் (எதிர்கட்சியின் வாதம்) என்று சொல்கிறோம்.,அதன் பிறகு நமது கட்சியின் கருத்து என்ன என்பதை .,ஸித்தாந்தம் என்று சொல்கிறோம்.,
முதலில்.,பூர்வ பக்ஷம்.,:-

அத்வைத ஸித்தாந்தம் இரண்டு விஷயங்களை முக்கியமாகக் கூறுகிறது.,1.ஜீவ-பிரம்ம ஐக்ய பாவம்.,2.பிரம்மம் ஸத்யம்., ஜகத் மித்யை.,

1.,ஜீவ பிரம்ம ஐக்யம்:-
அத்வைத ஸித்தாந்தம் கூறுவது., ஜீவன் வேறு., பிரம்மம் (கடவுள்) வேறு அல்ல,., இரண்டும் ஒன்றே.,உலகில் வாழும்போது ஜீவன் பிரம்மமாகவே இருந்தாலும் அக்ஞானத்தின் காரணமாக வேறு.,வேறு போல தோன்றுகிறது., ஜீவனுக்கு முக்தி கிடைக்கும்போது இரண்டும் ஒன்றரக் கலந்து விடுகின்றன., அதன்பிறகு ஜீவன் வேறு .,பிரம்மம் வேறு அல்ல.,
2.பிரம்மம் ஸத்யம்.ஜகத் மித்யை.:-

அத்வைத ஸித்தாந்தம் கூறுவது:-
பிரம்மம் அல்லது கடவுள் ஸத்யமான வஸ்து.,பிரம்மம் என்று ஒன்று இருப்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்., ஆனால் இந்த ஜகத் (This world.,.,The universe ) ஸத்யமல்ல.,அது ஸத்யம் என்று நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை.,அது மித்யை.,(இந்த மித்யை என்னும் வார்த்தையை கவனித்து வைத்துக்கொள்ளுங்கள்.,)
சரி.,.,அத்வைதி அவர்களே! இந்த உலகம் கண்ணுக்கு நன்றாகத்  தெரிகிறதே., புலன்களால் இதில் உள்ளவற்றை அநுபவித்து ஆனந்தப்பட முடிகிறதே ., அப்புறம் அது எப்படி ஸத்யமில்லை என்கிறீர்கள்.,?
அத்வைதி:-

அப்படி வாங்கோ., மத்வாச்சார்யரின் சிஷ்யரே! சொல்றேன் கேளுங்கள்.,
கடவுள் தன் மாயையினால் இந்த ஜகத்தை உண்டாக்கினார்(உலகே மாயம்!) ., அதனால் உங்களுக்கு இது உண்மைபோல் தெரியறது.,உங்களுக்கு.,அக்ஞானம் இருக்கு., அக்ஞானம் போய் க்ஞானம் வந்துட்டால்., இந்த ஜகத் இல்லாது போய்விடும்.,
Back to the Subject:-

இப்போது ஸித்தாந்தம்.,
1.ஜீவ பிரம்ம ஐக்யம்.,:-ஸ்ரீமத்வரின் த்வைத ஸித்தாந்த சஸ்திரப்படி ஜீவ-பிரம்ம ஐக்யம் கொஞ்சம்கூட., எப்போதுமே.,எந்தக்காலத்திலும் சாத்தியமே இல்லை.,
சார்., அவர் சித்தாந்தம் அவருக்கு., உங்கள் ஸித்தாந்தம் உங்களுக்கு., நீங்கள் பாட்டுக்கு சா த்தியமே இல்லை என்று சொல்லிவிட்டால் நாங்கள் அதை எப்படி ஒப்புக்கொள்வது.,நீங்கள் அதை prove பண்ணவேண்டாமா.,? ஆமாம்., பண்ணத்தான் வேண்டும்.,
அதைத்தான் ஆச்சார்யர் ஸ்ரீமத்வர் இந்த (மாயாவாத கண்டனம்.,என்னும்) இந்தக் கிரந்தத்தில் செய்திருக்கிறார்.,இதை இன்னும் மேலும் மேலும் விளக்கி., ஸ்ரீடீகாராயர்., ஸ்ரீராகவேந்திரர்., ஸ்ரீவியாஸராஜர்., ஸ்ரீவிஜயீந்திரர் போன்ற யதிகள் கிரந்தங்கள் எழுதி இருக்கின்றனர்.,
முழு விவரமும் அறிய ஸ்ரீமத்வரின் கிரந்தங்களை டீகை., டிப்பணிகளுடன் படிக்க வேண்டும்.,

இதை சின்னதாக ஒருபக்கத்துக்குள் விளக்க எனக்கு க்ஞானம் போதவில்லை., சுருக்கமாக ஒன்று மட்டும் சொல்கிறேன்.,There are some (small) similarities between jiiva and Brahman .,but they are never identical OR one and the same.,.,
இருந்தாலும் இதற்கு அடுத்ததாக நாம் பார்க்கப்போகும் கிரந்தத்தில் கொஞ்சம் விளக்கம் அளிக்க முயற்சி செய்கிறேன்.,
முன்னதாக நான்கு முனைத் தாக்குதல் என்று (Four pronged attack) என்று சொன்னேன் அல்லவா.,?அது என்னவென்றால்.,ஒரு ஸித்தாந்தம் அல்லது சாஸ்திரம் என்றால் அதற்கு நான்கு விஷயங்கள் இருக்க வேண்டும்.,1.அதிகாரி.,2.விஷயம்.,3.பிரயோஜனம்., & 4.,ஸம்பந்தம்.,
ஸ்ரீமத்வர் தமது விளக்கத்தில் ஜீவ-பிரம்ம ஐக்ய வாதத்துக்கு இந்த நான்குமே இல்லை.,அதனால் அது முழுக்க .,முழுக்கத் தவறு என்று இந்தக் கிரந்தத்தில் நிரூபணம் செய்திருக்கிறார்.,ஸுமத்வ விஜய மஹாகாவ்யத்தில் ., ஸ்ரீநாராயண பண்டிதாச்சார்யர்., அத்வைத வாதிகள் சுமார் 1,25,000 ஸ்லோகங்களில் கூறியுள்ள மாயாவாத ஸித்தாந்தத்தை தமது மாயாவாதகண்டன கிரந்தத்தில் ஸ்ரீமத்வர்  ஒரே ஒரு வாக்கியத்தில் (அக்ஞானா ஸம்பவாதேவ தன்மதமகிலமபாக்ருதம்) என்று Disprove செய்து விட்டார்.,(Life and works of Sri Madhvacarya.,.,by.,.Dr.Vyasanakere Prabhanjanacarya.,pp404).,.,

அடுத்த கிரந்தம்.,
கிரந்தம் எண்.,27.,பிரபஞ்ச மித்யாத்வனுமான கண்டனம்.,:-

இது அத்வைத ஸித்தாந்தத்தின் உலகம் மாயை எனும் தத்துவத்தைக் கண்டனம் செய்வதற்காக எழுதப்பட்ட நூல்.,
ஸதஸத் விலக்ஷணம்.,;.,அநிர்வசனீயம் போன்ற (மாயாவாதிகளின்) concept ஐ refute  செய்து ஸ்ரீமத்வர் எழுதிய கிரந்தம்.,

பாத்தீங்களா.,பாத்தீங்களா., திரும்பவும் ஆரம்பிச்சுட்டீங்களே.,.,? இந்த டெக்னிகலான வார்த்தைகளைப் போட்டு குழப்புறீங்களே.,!

சரி.,சரீ., என்னால் முடிந்தவரை விளக்குகிறேன்.,
ஏற்கெனவே பூர்வ பக்ஷம் கொஞ்சம் சொல்லியிருக்கிறேன்., அத்வைதிகள்.,உலகம் மாயை என்பதற்கு 1.சுக்தி-ரஜஸ்.,2.கயிறு-பாம்பு என்று உதாரணத்தை எடுத்துக்கொண்டு பூர்வ பக்ஷத்தை சொல்லுவார்கள்.,  கிட்டத்தட்ட இரண்டும் ஒன்று என்பதால் நாம் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்வோம்.,
சுக்தி-ரஜஸ் .,என்றால் என்ன,.?.,சுக்தி என்றால் கிளிஞ்ஜல் அல்லது சிப்பி.,ரஜஸ் என்றால் வெள்ளி.,
நாம் நல்ல வெய்யில் நேரத்தில் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது தூரத்தில் ஒரு பொருள் வெள்ளி போல பளபள என்று மின்னிக்கொண்டிருக்கிறது.,என்னது,.? வெள்ளி போல இருக்கே என்று அருகில் போய்ப் பார்க்கிறோம்., அடச்சே., இது வெறும் கிளிஞ்ஜல்(சிப்பி) .,என்று தூரப் போய் விடுகிறோம்.,
அத்வைதிகள் சொல்வது:-

கிளிஞ்ஜலை வெள்ளியென்று நினைப்பதுபோல .,இந்த உலகை நிஜம் என்று நினைக்கிறோம்., நமது அக்ஞானம் அகன்று., மோட்சம் கிடைத்தால்.,எப்படி அது வெள்ளியல்ல .,உண்மையில் அது வெறும் சிப்பி.,கிளிஞ்ஜல்தான் என்று நமக்கு க்ஞானம் வருகிறதோ., அதேபோல இந்த உலகம் மாயை.,என்று புரிந்து விடும்., இதைத்தான் நாம் முன்னர் மாயாவாதம் என்று கூறினோம்.,ஸ்ரீமத்வரும் இதையே இந்த மாயாவாதத்தைத்தான்   கண்டனம் செய்கிறார்.,எப்படி,.,?

ஸ்ரீமத்வரின் துவைத ஸித்தாந்தம்:-  

த்வைதம்:-
முதலில் இருந்த சிப்பிநடுவில் கொஞ்ச நேரம் வெள்ளிபோலத் தெரிந்தது.,அது வெள்ளி இல்லை என்று ஆனவுடன் அது மீண்டும் சிப்பி(கிளிஞ்ஜல்)யாக ஆகிவிட்டது.,அப்படி இருக்கும்போது வெள்ளியை எப்படி ஜகத்துக்கு சமானமாக்குகிறீர்கள்.,? முக்தி கிடைத்தவனுக்கும் இந்த உலகம் உலகமாகத்தானே தெரிகிறது.,?.,
அத்வைதம்:- கிளிஞ்ஜல் ஸத்யம்., கிளிஞ்ஜல் இல்லாமல் இருந்தால் அது அஸத்யம்.,ஆனால் இல்லாத வெள்ளி இருப்பதுபோல் தோற்றம் அளிப்பது ஸத்யமும் அல்ல., அஸத்யமும் அல்ல.,
த்வைதம்;-அப்படியென்றால்.,?
அத்வைதம்:-அதுதான் மித்யை.,அதற்கு நாங்கள் ஸதஸத் விலக்ஷணம் என்று பெயர் கொடுக்கிறோம்.,இதற்கு அநிர்வசனீயம் என்றும் சொல்கிறார்கள்., ஏனென்றால் அது உண்மையும் அல்ல., அதே சமயம் பொய்யும் அல்ல.,(ஏனெனில் வெள்ளிபோலத் தெரியும்போது அங்கே வெள்ளி இருக்கிறதே.,?)

த்வைத ஸித்தாந்தம்:-
இதை ஸ்ரீமத்வாச்சார்யர் படு strong ஆக மறுக்கிறார்.,எப்படியெனில்., ஸத்யம் என்பது நமக்கு அநுபவஸித்தமானது.,அதாவது நமது அநுபவத்தில் இருப்பது.,சிப்பியைக் கண்ணால் பார்க்கிறோம்.,
அதேபோல அஸத்யமும் நமக்கு அநுபவஸித்தம்.,அது எப்படியென்றால்.,முயல் கொம்பு., மலடிமகன்.,ஆகியவை எப்போதுமே இருப்பதில்லை., அவை அஸத்யம்.,
ஆனால் ஸத்யமும் அல்லாத அஸத்யமும் அல்லாத ஒரு பொருள் நமக்கு அநுபவத்தில் வருவதில்லை.,அப்படிப்பட்ட ஒரு பொருள் பற்றி நமக்கு யாருக்கும் அநுபவம் கிடையாது.,
எனவே ஸதஸத்விலக்ஷணம் அல்லது அநிர்வசனீயம் என்பதாக ஒன்று கிடையவே கிடையாது.,ஆகையால் ஜகத் மித்யை என்பதை ஒப்புக்கொள்ள இயலாது.,
அத்வைதம்:- அப்படியென்றால் நாம் கண்னால் பார்த்த வெள்ளி எங்கே போயிற்று.,?
ஸ்ரீமத்வர்:- அது நமது பார்வைக்கோளாறினால் வந்தது.,இந்த தவறான க்ஞானத்துக்கு பாதகக்ஞானம் என்று பெயர்.,வெள்ளி இருப்பதுபோல தோன்றியது "ஆரோபிதம்" என்பதால் வந்தது.,அதாவது நமது மனது கிளிஞ்ஜலில் வெள்ளியை ஏற்றிவைத்து ஒரு மனப் பிரமையை உண்டாக்கியது .,அவ்வளவே.,இது வெறும் பிரமையே தவிற வேறல்ல.,பிரமை நீங்கியதும் வெள்ளி அகன்றுவிட்டது.,

அத்வைதம் விடவில்லை.,
அத்வைதம்:-அப்படியென்றால் நாம் கிளிஞ்ஜலில் பார்த்த வெள்ளி சத்யமா.,அல்லது அஸத்யமா.,?

த்வைதம்:- கிளிஞ்ஜலும் ஸத்யம்., வெள்ளியும் சத்யமே., ஏனெனில் கிளிஞ்ஜலைப் பார்த்தவனுக்கு வெள்ளியை இதற்குமுன் வேறு எங்கோ பார்த்த ஞாபகம் இருப்பதால் அதை தவறாக வெள்ளியென்று நினைத்தான்., அவன் இதற்குமுன் வேறு எங்கோ பார்த்த வெள்ளியும் சத்யமே.,

அடியேனின் குறிப்புகள் தொடர்கின்றன., நாம் இதுவரை பார்த்த உபாதிகண்டனம்., மாயாவாத கண்டனம்.,மற்றும்.,பிரபஞ்சமித்யாத்வநுமான கண்டனம் ஆகிய மூன்றும் சேர்ந்து கண்டனத்ரயம் என்று அழைக்கப் படுகின்றன.,
பிரம்மன் சத்யம்., ஜகத் மித்யை என்று கூறும் மாயாவாதிகள் செய்யும் Arguements.,களும்.,அதற்கு ஸ்ரீமத்வர் கொடுக்கும் எதிர் விளக்கங்களும் புரிந்து கொள்வது மிகமிக கடினம்.,ஸ்ரீமத்வாச்சார்யர் என்ன கூறியிருக்கிறார்., எப்படி விளக்கமளிக்கிறார்., என்பதை ஸ்ரீஜயதீர்த்தமஹான்.,(ஸ்ரீடீகாராயர்) மற்றும் ஸ்ரீவியாசராஜ ஸ்வாமிகள் மிகமிகச் சிறப்பான commetory புஸ்தகங்களை இயற்றிக் கொடுத்திருக்கிறார்கள்.,இவையெல்லாம்.,நமக்குப் படிக்கக் கிடைத்திருப்பதே நாம் செய்த மிகப் பெரும் பாக்கியம்.,ஸ்ரீவியாஸராஜஸ்வாமிகளின் நியாயாம்ருதம் நூலில் த்வைதஸித்தாந்தத்தை விளக்கியதோடல்லாமல்.,அத்வைத கிரந்தங்களை சாஸ்திர ரீதியிலும் .,தர்க்கரீதியிலும் கண்டனம் செய்திருக்கிறார்., எதிர்ப்பக்க வாதங்களை எள்ளி நகையாடாமல் தமது பக்ஷத்தை சிறப்பாக சொல்லியிருப்பது ஸ்வாமிகளின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.,(ஸ்ரீவியாஸராஜ ஸ்வாமிகளே தமது அடுத்த பிறவியில் ஸ்ரீராகவேந்திரராக அவதரித்தார் என்பது கவனிக்கத்தக்கது.,).,

தஸப்பிரகரண கிரந்தங்களில் அடுத்ததாக வருவது தத்வோத்யோதம்.,இதை அடுத்த பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.,
(தொடரும்).,

No comments:

Post a Comment