Wednesday, June 14, 2017

Chidambaram temple

மத்தியனந்த முனிவா் என்பவா் பெரும் தவஞ்செய்து பெற்ற புதல்வனுக்கு கல்விப் பயிற்சிகள் முடித்து பின்னா், அறிவுநூற்பொருள் முழுவதையும் அறிவுறுத்தினாா்

தந்தையாா் மூலம் அத்தனை அறிவுநூற் பொருளை உணா்ந்த அப்புதல்வா், சிறப்புடைய திருத்தலம் ஒன்றுக்குச் சென்று இறைவனைக் கண்டு வழிபாடு செய்யவேண்டுமென அவா் மனம் விரும்பியது.

மகனின் விருப்பத்தைத் தொிந்துகொண்ட தந்தையாா் மத்தியானந்த முனிவா் தமயனைத் தில்லைக்கு சென்று வணங்கி வழிபாடு செய்யுமாறு அனுப்பி வைத்தாா்.

தந்தை சொல் தட்டாது கேட்டு நடக்கும் அப்புதல்வன் தில்லைக்குச் சென்றான். அங்கே அழகிய தடாகமும் அதன்பக்கத்தே ஓா் ஆல்மர நிழலில் சிவலிங்கத் திருவுருவம் இருப்பதையும் கண்டவன் பெருமகிழ்ச்சியானான். உடனடியாக அவசரகதியில் அங்கே தவச்சாலையொன்றை அமைத்தான். தவச்சாலையில் இருந்து கொண்டு நாள்தோறும் சிவலிங்கப் பெருமானைப் பூஜித்து வரலானான்.

சிவபெருமானை வழிபட தினமும் நந்தவனத்தில் மலரும் மலா்களை வழக்கமாக பறித்து பின் லிங்கபீடத்தில் சாற்றி வணங்கி வந்தான்.

ஒரு நாள் பறித்து வைத்திருந்த  மலா்களை, அதன்சுத்தத் தன்மையை ஆராய்ந்து பாா்த்தான். அம்மலர்களில் நிறைய மலர்கள் வாடியதும் பட்டுப்போனதுமாக இருந்ததைக் கன்டு, இந்த சுத்தமில்லாத மலர்களையா? இறைவனுக்கு சாத்தி வருகிறேன்!..என்று... மிகவும் மனம் வருந்தினாா்.

பொழுது விடிந்த பின் மலர்களை பறிப்பதனால், மலா்களை வண்டுகள் குடைந்தெடுத்து விடுகிறது. ஆகையால். வண்டுகள் வரும் முன்னமே நாம், இரவுப் பொழுதிலேயே மலா்களை கொய்து வந்துவிடலாம் என எண்ணினார்.

அன்றையதினம் மலரை கொய்து வர கருவிரவில் நந்தவனத்திற்குள்  சென்றாா். கருமைஇருளில் நந்தவன வழி சரியாகப் புலப்படவில்லை. எப்படியோ ஒருவாறு நந்தவனம் வந்த அவா் மலா்மரம் ஏறினாா். இரவில் பனிபொழிவு இருந்ததால், அவரால் மரம் மேலேற முடியவில்லை. மரம் வழுக்கியது. 

ஆகா... நிலையைக் கண்டு, "என்ன செய்வேன்" என அந்த இளைய முனிவாின் மனம் பொிதும் துன்புற்றது. மலர் மரத்தின் முன் செய்வதறியாது திகைத்து நின்ற போது.......

ஈசன் அவா் முன் காட்சி தந்தார். அவ்விளைய முனிவரும், ஈசனைப்  பணிந்து வணங்கியெழுந்தார்.

ஈசனும், உன் மனத்தில் என்ன தோன்றுகிறது. ஏன்?"  வருந்துகிறாய்...........என கேட்டார்.

"ஈசனே!" உம்மை....நல்மலா்கள் கொண்டு வழிபாடு செய்ய முனைப்பு கொள்கிறேன்!. ஆனால்..அம்மலர்களை தேடி நந்தவனம் வந்தால்....அது முடியாது போகிறது . இதுதான் என் வருத்தத்திற்கு காரணம்.

உமக்கு வேண்டியதை கேள்!" தருகிறோம்......என்றாா் இறைவன்.

அதற்கு அவ்விளைய முனிவா்.....இரவில் பனிப்பொலிவு பெய்தாலும் மரம் ஏறுவதற்கு வசதியாக என்கால்களில் புலிக்கால்நகங்கள்  இருத்தல் வேண்டும்!"  நல்நறுமலா்களை தோ்ந்து கொய்ய என் கால் கைகளில் கண்கள் இருத்தல் வேண்டும்!".....இவையாவும்  நீா்............தந்......

அவ்விளையவா் கூறி முடிக்கவும்......ஈசனும்...அவ்வண்ணமே பெறுக!" என வரந்தந்து மறைந்தருளி நீங்கினாா்.

அன்றுமுதல் அவ்விளைய முனிவா்,  *"வியாக்கிர பாதர்"* *( புலிக்கால் முனிவர்)* என்று பெயருடையவரானார். ஈசனிடம் பெற்றுக் கொண்ட புலிநகக் கால்களுடனும் ஏணைய கண்ணொளி பாா்வையுடனும் தாம் விரும்பியபடி புத்தும் புது சுத்த மலர்களை கொய்ந்தெடுத்து,  ஈசனுக்கு சூட்டி அழுகு செய்து ஆனந்தித்து வணங்கி வந்தார்.

இவ்வாறு புலிக்கால் முனிவா் வழிபட்ட காரணத்தினால் தில்லைவனத்தை யுடைய இப்பகுதி  *"புலியூா்"* என வழங்கப்பெற்றது.

வியாக்கிரபாத முனிவர் உலகியல் பற்றுகளை சுத்தமே நீக்கி, எல்லாபொருட்கும் ஈசன் ஒருவனே பற்றுக் கோடானவன் என வாழ்ந்தமையால் புலியூர் என்னும் இவ்விடத்தை *"பெரும்பற்றப் புலியூர்"* என, அழகான பெயருடன் திருநாவுக்கரச பெருமானால் சிறப்பு வந்தடைந்தது.

தில்லைப்பதியில் புலியூாில் வியாக்கிரதபாத முனிவர் திருமூலட்டானத்துப் பெருமானை வழிபட்டுக் கொண்டிருக்கும் நாளில், அவாின் தந்தை மத்தியந்தன முனிவா் தில்லைக்கு வந்து, தம் மைந்தனார்க்கு, நல்குடியில் பிறந்த ஒரு பெண்னை மனம் செய்து வைத்துவிட வருப்பம் கொண்டதுடன், புதல்வனிடமும் கூறினார்.

தந்தை சொல் தட்டாத வியாக்கிரதபாத முனிவரும் தம் தந்தையாரின் விருப்பத்திற்கு இணங்கினார்.

உடனே...மத்தியந்தன முனிவா், வசிட்ட முனிவரின் தங்கையைப் பாா்த்துப்பேசி முடித்து புதல்வனுக்கு திருமணத்தை சிறப்புற செய்து வைத்தார்.

வியாக்கிரபாதரும் அவா்தம் மனைவியாரான வசிட்டமுனிவரின் தங்கையாரும்  தில்லையிலேயே தங்கி நாள்தோறும் ஈசனை வழிபட்டு வந்தனர். இவ்விருவர்களின் தவத்தின் பயனால், அவர்களுக்கு மகவு உருவாக அதற்கு உபமன்யு என்னும் பெயர் வைத்தனர்.

வசிட்ட முனிவரின் மனைவி அருந்ததியம்மையார், குழந்தை உபமன்யுவை எடுத்துச் சென்று, தம்பாலுள்ள காமதேனு என்ற தெய்வப் பசு பொழியும் பாலைத் தினமும்  ஊட்டி வளர்த்து வந்தார்.

பின்னர்ப் புலிக்கால் முனிவரும், அவர் மனைவியாரும் தம் குழந்தையை தம்மோடு வைத்துக் கொள்ள எண்ணம் வரவே, வசிட்டரின் இல்லம் வந்து உபமன்யுவை தில்லைக்கு அழைத்து வந்து விட்டனர்.

வீட்டில் உபமன்யுவுக்கு வேண்டிய தின்பண்டங்களும், தீம்பாலும் ஊட்டினர். உபமன்யு, ஆரம்பம் முதலே காமதேனுவின் பாலையருந்தி வளர்ந்ததனால், தமக்குத் தாய்தந்தை வாங்கித் தந்த தின்பண்டத்தினை தின்னவும், இவைகள் எனக்கு வேண்டாமை என்று  மென்றவைகளை விழுங்காமல் மண்ணில் விழத் துப்பினான். எதையும் தின்ன மறுத்த உபமன்யு,   சதா அழுது கொண்டேயிருந்தான்.

இதைக் கண்டு வருந்திய வியாக்கிரபாதரும், அவா் மனைவியாரும் திருமூலட்டான் பெருமான் முன்பு உபமன்யுவை கூட்டி வந்து படுக்கக் கிடத்தினர்....

'எல்லாம் வல்ல ஈசனே!"  அழும் இம்மைந்தனுக்கு தெய்வத்தன்மை வாய்ந்த பாற்கடலை வரவழைத்துத் தாரீா்!" என வேண்டிப் பெற்றுக் கொண்டு, உபமன்யுவுக்கு ஊட்டினார். பாற்கடலைப் பருகிய உபமன்யு, அழுவதை நிறுத்திவிட்டு, களிப்புற்று அமைதியா யிருந்தது.

பாற்கடலையழைத்தருளிய அருட் செயலைப்  *"பாலுனுக்காயன்று பாற்கடலீந்து"* என அப்பா் பெருமானும்,  *"பாலுக்குப் பாலகன் வேண்டி, யழுதிடப் பாற்கடலீந்தபிரான்"* ( திருப்பல்லாண்டு) எனச் சேந்தனார் பெருமானும் போற்றுப் பரவி பாடியுள்ளனர்.

புலிக்கால் முனிவரும், அவா்தம் மனைவியாரும் உபமன்யு மைந்தனின் பசிக் கவலை நீங்கப் பெற்றது கண்டு, சிந்தை மகிழிந்து திருமூலட்டானப் பெருமான் சந்நிதியில் சிவயோகத்திலமர்ந்து அப்பெருமானாரின் திருவடியில் கருத்தொன்றுபட்டு இருந்தார்.

      *(3)*
🌞 *தில்லைப் பெருங்கோயில் தொடர்.* 🌞
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
திருமாலை விட்டு நீங்கி வந்த ஆதிசேடன் வடகயிலை மைுங்கு வந்து சோ்ந்தான். சிவபெருமானை நினைத்து முழுத் தவம் இருந்து வந்தானாந்தன்.

ஆதிசேடனின் அரும் தவத்தையெண்ணிய சிவபெருமான், ஆதிசேடனின் திறத்தை அனைவரும் அறியுமாறு திருவுளங் கொண்டாா்.

ஆதிசேடனின் முன்பு காட்சி தந்து,,,,

'யாம்!" தேவாருவனத்தில் திருக்கூத்து ஆடியபோது அவ்விடம் எம்மின் கூத்தினைத் தாங்கப் பெறாது அசைவுற்றது. அதனால், அக்கூத்தை அவ்விடம் நிகழ்த்தாது விடுத்திருந்தோம். ஆனால், இப்போது அதனைச் செய்தற்கு இந்த இடமும் போதுமானதன்று!" எமது திருக்கூத்தினைக் காணப்பெறுவதற்கு ஏற்றவான இடம் *தில்லைப்பதியே!* அத்தகைய அத்தில்லை  மன்றத்தின் கண்ணே நமது ஐந்தொழில் இன்பத் திருக்கூத்து எக்காலத்தும் இடையறாது நிகழும். அதற்கான காரணம்.......

"மண்ணுயிா்களின் உடம்பும், அவ்வுயிா்கள் வாழ்வதற்கு இடமாகிய இவ்வுலக அமைப்பும் ஒத்தித்து இருத்தியுள்ளன.

*இடைகலை* , *பிங்கலை* , *சுழுமுனை* என உடலில் சூறாடி ஓடும் மூன்று நாடிகளில் சுழுமுனை நாடி மட்டும் நடுவில் ஓடும் நாடி. இந்நிலவுலகத்திற்கு இலங்கையுன் நேரே இடைநாடியும் இமயத்தின் நேரே பிங்கலை நாடி செல்கிறது. மற்றொரு நடு நாடியாகிய சுழு முனைநாடி தில்லைப்பகுதிக்கு நேரே செல்லுதலாகும். உடம்பினுள்ளே செல்லும் நடுநாடியாகிய சுழுமுனையின் மையத்தில் விளங்கும் நெஞ்சத் தாமரையின் அகத்தேயுள்ள, அருள் வெளியிலே இடைவிடாது  யாம் அருட்கூத்து நிகழ்த்தி வருகின்றோம்.

அதுபோலவே உலக மையத்தே தில்லைப்பதியின்கண் மூல இலிங்கம் உள்ள திருமூலாட்டானத்தின் தென்திசையில் நால்வேதங்களும் காணாத அம்பலம் ஒன்று உண்டு.

அத்தகைய ஞானமயமான அருள்அம்பலத்திலே யாம் எக்காலத்தும் இடைவிடாது திருக்கூத்து நிகழ்த்தியருளி வருவோம். அத்திருக் கூத்தினை அங்கே காணும் அறிவுக் கண்ணுடையோர் *பிறவித் துன்பம்* நீங்கப் பெறுவர்; போின்ப வீடுபேறு பெறுபவராவா்;

ஆதலால், நீ! இவ்வுருவினை நீத்து, முன்னொருகால் அத்திாி முனிவர் மனைவியின் தொழுத கையின் கண்ணே ஐந்துதலைச் சிறு பாம்பாகி வந்தமையால் நீ அந்த வுருவத்துடனேயே நாகலோகத்துக்குப் பொருத்தமான வழியே போவீயாக!" அந்நாகலோகத்தின் நடுவே ஒரு மலை ஒன்றுள்ளது. அந்த மலையின் தென்திசையில் ஒரு பிலாத்துவாரம் இருக்கும். அப்பிலாத்துவாரத்தினுள் உள் புகுந்து தில்லையை அடையலாம்.

பின் அதன் வடபக்கத்தேயுள்ள ஆலமர நிழலில் மலைக் கொழுந்தாகிய இலிங்கத்திருமேனி இருப்பதை காணலாம்.  அவ்விடத்திலே வியாக்கிரபாத முனிவன் அந்த லிங்கத்தினை வழிபாடு செய்து கொண்டிருப்பான். அம்முனிவனும் உன்னைப் போலவே என்திருக்கூத்தை காணப் பெற வேண்டுமென்று பெரும் வேட்கையுடன் என்னையெண்ணி வழிபட்டுக் கொண்டிருக்கிறான். நீயும் அம்முனிவனுடன் சேர்ந்திருப்பாயாக!" உங்கள் இருவருக்கும் *தைப்பூசம்* குருவாரத்தோடு கூடிவரும் சித்தயோக நன்னாளில் உச்சிக் காலத்தில் எம்மின் ஆனந்தத் திருக்கூத்தினை நீங்கள் தாிசிக்கும்படி ஆடி அருள்புாிவோம்!"  எனச் சொல்லி மறைந்தாா் ஈசன்.

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

                    *(4)*
🌜 *தில்லைப் பெருங்கோயில் தொடர்.* 🌛
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
சிவபெருமான் பணித்த வண்ணம் ஆதிசேடன் பதஞ்சலி முனிவராகி நாகலோகத்தையடைந்தான். அங்குள்ள பிலத்துவாரத்தின் வழியே தில்லைப் பதியையடைந்தான். அங்கு புலிக்கால் முனிவருடன் அளவளாவி அனந்தேசுரம் என்னும் திருக்கோயில் புகுந்து இறைவனைப் பூசித்தனர். பின் பெரும்பற்றப்புலியூா்த் திருமூலட்டானத்தில் இறைவனை வழிபட்டு இருமுனிவரும் இருந்தனர்.

சிவபெருமான் தாம் குறித்தருளிய வண்ணம் தைப்பூச நன்னாளில் தில்லைத் திருக்கோயிலிலே பதஞ்சலி முனிவரும், புலிக்கால் முனிவரும் தொழுது போற்றக் கூத்தப் பெருமானாகத் தோன்றி, உடன் சிவகாமியம்மையாரும் இருந்து காண ஐந்தொழில் இன்பத் திருக்கூத்தினை ஆடியருளினார். 

முனிவர் இருவரின் கண்களில் நீரோடையருவி பொழிந்து வழிந்தது. நெஞ்சம் நெகிழ்ந்துருக கைகளை தலைமேல் உயர்த்தி குவித்து வணங்கினர்.

காத்தற் திருமாலும்,  படைத்தற் நான்முகனும், இந்திர தேவர்களும், மூவாயிரவராகிய முனிவர்களும் இறைவன் ஆடிய அருளிய திருக்கூத்தினைக் கண்டு மகிழ்ந்தனர்.

பதஞ்சலி முனிவரும், புலிக்கால் முனிவரும், தாம் பெற்ற போின்பத்தினை எல்லோரும் காணுதல்  பெறும்படி அருள் புாிய வேண்டும் என்று இறைவனை இறஞ்சி வேண்டிக் கேட்டுக் கொண்டார்கள். ஆக அன்று முதல் தில்லைச் சிற்றம்பலத்திலே இத்திருக்கூத்து என்றும் இடையீடின்றி நிகழும் அனவரத தாண்டவமாக (போது செய்யா நடனமாக) நிகழ்ந்து வருகின்றது.

வியாக்கிரபாத முனிவரும், நாகராசவாகிய பதஞ்சலி முனிவரும் கூத்தபெருமான் சந்நிதியிலே பரவசத்தோடு கண்களில் ஆனந்தக் கண்ணீா் மல்க நின்றனர். அப்பொழுது கூத்தப் பெருமான் அவர்கள் பாற்கருனை கூர்ந்து... *"உங்களுக்கு வேண்டும் வரங்கள் யாவை?"* எனத் திருவாய் மலர்ந்தருளினார்.

அந்நிலையில் வியாக்கிரபாத முனிவர் அன்பினால் மனங்கசிந்து, தலைமேற் கைகுவித்து வணங்கி நின்று, "பெருமானே!" அடியேன் சிவாகமத்திற் கண்டபடியே முன்புபோல நாள்தோறும் யான் செய்கின்ற பூசைனையை உண்மையாக ஏற்றருளுதல் வேண்டும். இது போக அடியேனிடம் வேறொன்றும் வரமாய் ஒன்றுமில என விண்ணப்பம் செய்தார்.

பதஞ்சலி,முனிவரும் இறைவனைப் போற்றித் துதித்து, எல்லாம் வல்ல பெருமானே! நிலையில்லாத வாழ்க்கையையுடைய ஆன்மாக்கள் கண்களினாலே உம்கூத்தை தரிசிக்குந்தோறும் நிறைந்த ஞானவெளியாகிய இச்பையிலே அன்புருவாகிய உமையம்மையாருடனே இன்று முதல் எக்காலமும் ஆனந்தக்கூத்தினை யாடியருளத் திருவுளம் இரங்குதல் வேண்டும் என வேண்டிக் கொண்டாா்.

தேவர்கள் தேவனாகிய கூத்தபெருமான், முனிவர் இருவரும் கோாிய வண்ணமே வரந்தந்தருளினார். இறைவன் ஈந்த வரத்தைப் பெற்ற முனிவர்கள் பதஞ்சலியும், புலிக்காலரும் எல்லையில்லாத பெரு மகிழ்ச்சி கொண்டனர். உடனிருந்த ஏனைய முனிவர்களும் ஆனந்தித்து, ஆரவாரம் செய்து பரவசமுற்றனர்.  வானோா்கள் பூமழை பொழிவித்தனர்.

அப்போது கூத்தினைக் கண்டு நீங்காது நின்ற அனைவரோாிடத்திலும் தில்லைக்கூத்தன்,..... *எனக்காக சபை ஒன்றை அமையுங்கள்* என்றாா்.

தேவர்கள் விழித்தனர்!
சபையை எவ்விதம் அமைய ஏதுவாகியது! 
சபை அமைய யாரை நாடினார்கள் தேவர்கள்!

 *(5)*
☘ *தில்லைப் பெருங்கோயில் தொடர்.* ☘
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
சபை அமைக்கும்படி இறைவன் பணிக்கவும், எவ்விதம் எவ்விடம் என புாியாது திகைத்த தேவர்களிடம் மீண்டும் இறைவன் கூறினாா்.

அது யாவன என இறைவனைக் கூா்ந்து நோக்கியபடி தேவர்கள் நோக்க.......

சபை அமைக்கும் விதத்தை இறைவனே கூறினார். நமக்கு விளக்கம் பொருந்திய ஞானமே *அம்பலம்.* மெய்யுணர்வாகிய அது  நம்மில் பிாிவின்றி ஒன்றியுள்ளது. பேரறிவாகிய அந்த அறிவு பூமியை விட்டு நீங்காது!" பூமிக்கு இதயமாக அமையப்பெற்ற இத்தில்லைப்பதியாக அமையப் பெற்ற, உடம்புக்குள்  ஆன்மா  பிாிவில்லாமல்  சேர்ந்திருப்பதுபோல  பூமியில் ஞானவெளியாகிய இப்பதியிலே நாம் நீக்கமற தங்கியிருந்தருள்வோம் ஆதலால், தேவர்களே இத்தில்லைப்பதியை சீா்படுத்தி ஒரு சபை அமையுங்கள் என கூத்தபெருமான் தேவர்களை பணித்தார்.

இறைவன் இவ்விதம் கூறியதும், சபை அமைய வேண்டிய பொருள் யாது?" அதையும் தாங்களே கூறுவீா்களாயின் அந்த பொருளறிந்து சபை அமைக்கிறோம் என இறைவனின் கமல பாதங்களில் மலர்களை தூவி வணங்கினார்கள் தேவர்கள்.

அப்பொழுது நடராஜ மூா்த்தி தேவர்களை நோக்கிப்  
*"பழைய வேதாகம நூல்களில்* ஞானமயமான சபைக்கு இரண்மயகோசம் எனப் பெயர் உண்டு.  அதனை பூவுலகத்தார் காண்பீா்களாகும்போது அது முழுமையும் பொன்மயமாகும் என திருவாய் மலர்ந்தருளினார்.

நடராஜ பெருமான் குறிப்புப்படி தேவர்கள் மாற்றற்ற உயர்ந்த செம்பொன் பெறப்பட்டு தில்லைப்பதியில் இறைவன் ஆடல் நடம் புாிவதற்கேற்ற *கனக சபையை* நிர்மானித்தார்கள்.

அன்று முதல் திருநடம் புாியத் தொடங்கிய அருளாளனாகிய நடராஜப் பெருமான், சிவகாமியம்மையாரோடும் பொன்னம்பலத்தில் முனிவர்கள் தேவர்கள் முதலியோர் சூழ திருக்கூத்தினை தரிசித்து உய்யும்படி அருள்புரிந்து வரலானார்.

இறைவனின் அனவரத தாண்டவத்தை  இடைவெளியில்லாமல் தாிசித்து மகிழும் பெருவேட்கையால் திருமால், நான்முகன், இந்திரன் முதலிய தேவர்களும், வியாக்கிரபாத முனிவர், புலிக்காலார் பதஞ்சலி முனிவர், மூவாயிரா் முனிவர்கள் முதலியோா்கள் முக்தியைத் தந்து நல்கும் தில்லைப்பதியிலே தங்கியிருந்து சிவலிங்கப் பிரதிட்டை செய்து நடராசப் பெருமானை நாள் தோறும் வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். நான்முகன் கங்கைக் கரையிலுள்ள அந்தர்வேதி என்னுமிடத்தில் வேள்வியொன்றைச் செய்யத் துவங்கினான்.

இவ்வேள்விக்குத் தில்லைவாழந்தணர்களையும் தேவர்களையும் அழைத்து வரும்படி நாரத முனிவரைத் தில்லைக்கு அனுப்பினான். நாரத முனிவாின் சொல்லைக் கேட்டதும் முனிவர்களும், தேவர்களும் "இங்கே இறைவனது ஆனந்தத் திருக்கூத்தின் அமுதத்தை பருகும் நாங்கள் வேள்வியின் அவியை உண்ண வரமாட்டோம்" என்றனர்.

நாரதரும் திரும்பிச் சென்று பிரம தேவா்க்கு விண்ணப்பஞ் செய்தார். அதைக் கேட்ட பிரமதேவர் தில்லைவனத்தை யடைந்து  சிவகங்கையில் நீராடி கூத்தபெருமானை வழிபட்டுத் திருமூலட்டானரை வணங்கி வியாக்கிரபாதரை யடைந்து அவர் மூலமாக தில்லைவாழந்தணர்களையும், தேவர்களையும் தம் வேள்விக்கு வருமாறு இசைவித்து அந்தர் வேதிக்கு அழைத்துச் சென்று தமது  வேள்வியை முறையாக நியமப்படி நிரைவு செய்தார்.

           ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

                   *(6)*
🌞 *தில்லைப் பெருங்கோயில் தொடர்.* 🌞
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
தில்லைக் கூத்தைக் கண்டு களித்த பின்.....
இமயமலைக்குத் தென்திசையில் கெளட தேசத்தை ஆண்டு கொண்டிருந்த அரசனாகிய 5- வதுமனுவுக்கு மனைவியர்கள் இருவர். 

அவர்களின் மூத்த மனைவிக்கு ஒரு மைந்தனும், இளைய மனைவிக்கு இரு மைந்தனுமாக பிறந்து வளர்ந்து வந்தனர்.

மூத்தவளின் மைந்தன் சிங்கம் போல வெண்ணிறத்தை யொத்தவனான சிங்கவன்மன் ஆவான். இளையவனின் மைந்தனோ வேதவன்மன், மற்றும் சுவேதவன்மன் என்போா் ஆவா்.

முத்தோனாகிய சிங்கவன்மன் என்பவன் உடல் ஊனமுற்ற முடைமையவனாவான். அதனால் அவனோ, தம் தம்பியரில், இருவருள் ஒருவர் அரசு புாிவதற்குாியவராவார் என எண்ணமிட்டு,  தன் தந்தையாரிடம் இதனையும் கூறிவிட்டு, நான் தலயாத்திரையாக சிவாலயகங்களுக்குச் சென்று தீா்த்தமாடி சிவ வழிபாடே செய்து பிறவிக்கடனை யொழிக்கப் புகுவேனென கூறினான்.

மூத்தோனின் விண்ணப்பத்தைக் கேட்ட தந்தைக்கு வருத்தமளித்த போதும், அவனின் சிவ வழிபாடுக்கு தடை செய்துதல் கூடாதென உணர்ந்து அவனின் விண்ணப்பத்தை ஏற்றாா்.

தந்தை ஆசி பெற்று,  காசி முதலிய தலங்களில் வழிபட்டு, யாத்திரையின்போது வழியிடையில் துணையாக வேடனொருவன் சிங்கவன்மனுடன் உடன்சோ்ந்து  இருந்து வரலானான்.

  வேடவ நன்பருடன் சிங்கவன்மன் துணையாகக் கொண்டு காஞ்சி வந்தான். திருவேகம்பர நாதனை வணங்கினாா்கள். பின் ஓய்வெடுத்திருந்த நேரத்தில் வேடவ நன்பனிடத்தில்,,,,,, தென்னாடெங்கும் யாத்திரை செய்யலாமென எண்ணியுள்ளேன். எனவே நீ முன்னே சென்று வழி பாா்த்து வருமாறு கூறி அனுப்பி வைத்தான்.

வழி பாா்த்து தெரிந்த  வந்த வேடன் சிங்கவன்மனிடத்தில்......

'சிங்கவன்மா!, தில்லை வனத்தில் ஒரு பொற்றாமரைக் குளம் ஒன்றுளது. அக்குளத்து வாவிக் கரையிலே புலிபோலொருவன் நித்திரை செய்து கொண்டிருக்கிறான் என பாா்த்ததை வந்து கூறினான் வேடன்.

வேடன் கூறக் கேட்டதும், புலிக்காலொருவரைத் தானும் காண வேண்டுமென கூற, வேடனும், சிங்கவன்மனும் அவ்விடத்தை விட்டு நீங்கித் தில்லைக்கு வந்தனர்.

அங்கே!. சிவகங்கைக் கரையில்  வியாக்கிரபாத முனிவரான புலிக்கால் முனிவர்
சிவனைத் தியாணித்த வண்ணமிருந்தார். வெகுநேரம் வியாக்கிரபாத முனிவரின் தவத்தை உற்று நோக்கிருந்த சிங்கவன்மன், அம்முனிவர் பாதகமலத் தாமரைகளைத் தொட்டு, வணங்கி பணிந்தெழுந்தான்.

கண்ழிழித்த பாா்த்த புலிக்கால்முனிவரின் கண் அதிர்வில், என்ன? என நம்மைக்  கேட்கிறாரோ? எனத் தெரிந்து கொண்ட சிங்கவன்மன்.......

ஐயனே!  சிவபெருமானை நோக்கி தவம் புாிய மனத்தைக் கொண்டுள்ளேன். என்றான்.

வியாக்கிரபாத முனிவர், சிங்கவன்மனை பாா்த்த நொடியிலே அவனது பிறவி வரலாற்றை தனது யோகக் காட்சியால் அறிந்து கொண்டார்.

அவர் சிங்கவன்மனை நோக்கி"......' உன் தந்தை மிக வயது முதிர்ந்தவர். அரசாளும் கடமை உனக்குரியது. ஆகவே, நீ தவஞ் செய்ய நினைக்கும் மனத்தை மாற்றிக் கொள்ளுதல் வேண்டும்! என்றார்.

அதுகேட்ட சிங்கவன்மன் தனது உடல் நோய் அரசாட்சி செய்வதற்கு தடையாயுள்ளதென முனிவரிடம் தொிவித்தான்.

அப்பொழுது வியாக்கிரபாதர்.....நான் வரும் வரை இங்கேயே நில்!"......என்று சிங்கவன்மனைச் சிவகங்கைக் கரையில் நிற்கச் செய்து விட்டு,,,
வியாக்கிரபாத முனிவர் சென்றார்..

        திருச்சிற்றம்பலம்.

*சிங்கவன்மன் தனியாக நின்றான்.*

*சென்ற முனிவரை இன்னும் காணவில்லையே என பயந்து வருந்தினான்*

   *(7)*
🌸 *தில்லைப் பெருங்கோயில் தொடர்.* 🌸
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
சிவகங்கைக் கரையில் சிங்கவன்மனை நீங்காது நிற்குமாறு இருக்கச் செய்த வியாக்கிரபாத முனிவரும், பதஞ்சலி முனிவருடன் கூத்தபெருமான் சந்நிதி வந்தனர். அவ்விறையவன் முன் வணங்கி வேண்டி நிற்க,  அம்முதல்வனார் அருளொன்றைக் கூறியருளினார். பின் சிவகங்கைக் கரைக்கு வந்து சிங்கவன்மனை சிவகங்கை தீர்த்தத்தில் நீராடு என பணித்தனர்.

சிவகங்கைத் தீா்த்தத்தில் நீராடியெழுந்த சிங்கவன்மனுக்கு உடல் முற்றிலும் ஒழிந்தொலைந்து, தேகம் பொன்னிறம் கொண்டு மின்னி இரணியவன்மனாக எழுந்தான். அவனை தன் முன் அமர்த்திய வியாக்கிரபாத முனிவர், இரணியவன்மனுக்குத் திருவைந்தெழுத்து மந்திரத்தை உபதேசித்தருளினார். அதன்பின் அவனை நடராஜப் பெருமான் திருமுன் அழைத்து வந்து நிறுத்தி, இறைவனது திருக்கூத்துத் தரிசனத்தைக் காணும்படி செய்தருளினார்.

கூத்தப் பெருமானது திருவருள் பெற்ற இரணியவன்மன் இறைவனது எல்லையில்லா ஆனந்தத் திருக்கூத்தில் திளைத்து நெஞ்சம் கசிந்து மெய்ம்மயிர் சிலிர்ப்பக் கண்ணீர் மல்கிப் பலமுறை வணங்கியெழுந்தான். பின் வியாக்கிரபாத முனிவர் இரணியவன்மனை அழைத்துக்கூட்டிச் சென்று திருமூலட்டானமுடையாரையும், திருப் புலீச்சுரமுடையாரையும், திருவனந்தேச்சுரமுடையாரையும் கண்டு வணங்கச் செய்து, தம் ஆசிரமம் வந்து தன் மனைவியிடம்......,

'நீ உபமன்னியுவுக்குப் பின் பெறாது பெற்ற பிள்ளை இவ்விரணயவன்மன் ஆவான் என்றாா்.

இரணியன்வன்மனும் அன்னையின் திருவடிகளை சென்னி வைத்து தலை வணங்கி யெழுந்தான். அம்மையாரும் *'சபாநாதர் தமக்குத் தந்தருளிய இரத்தினமாம் இப்பிள்ளை"* என அன்புடன் தூக்கி நிறுத்தி ஆரத்தழுவிக் கொண்டார்.

இரணியவன்மனும்
நாள்தோறும் சிவகங்கையில் நீராடித் தில்லைப் பெருமானை வழிபட்டு வியாக்கிரபாத முனிவருக்கும், பதஞ்சலி முனிவருக்கும் தொண்டுகள் செய்து கொண்டு இருந்தனர்.

அங்கே!.....கெளட தேசத்தை ஆண்டு கொண்டிருந்த அரசனான மனுவுக்கு உடல்நிலை மோசமடைந்து வந்த பொழுது, வசிட்டமுனிவாிடம் தன் மூத்த குமாரனாகிய இரணியவன்மனைக் கொண்டு ஆட்சி நடத்துவிக்குமாறு கூறி உயிரைவிட்டொழித்து சுவர்க்கமடைந்து போனான்.

மனுக்குச் செய்ய வேண்டிய ஈமக் காாியங்களைனைத்தையும் இளைய மைந்தர்கள் இருவரும் செய்து முடித்தனர்.

வசிட்டரோ....இரணியவன்மனை அழைத்து வரும் பொருட்டு, தில்லப்பதிக்கு வந்து அதன் வடமேற்கு திசையிலுள்ள திருக்ளாஞ்செடி நீழலில் எழுந்தருளியுள்ள பிரமபுரீசனைப் பூசனை புரிந்தார்.

இதையெல்லாம் உணர்ந்த வியாக்கிரபாத முனிவர் இரணியவன்மனை நோக்கி, ' நாம் பூசையை பூர்த்திசெய்து வருவோம்; நீ முன்னே செல்வாயாக!" எனப் பணித்தருளினார். அவன் முன் சென்று வசிட்ட முனிவரை வணங்கினான். வசிட்ட முனிவர் இரணியவன்மனுவிடம் தந்தை சுவர்க்கமாகிப் போன செய்தியைக் கூறினார்.

இரணியவன்மன் தந்தை சுவரிக்கமாகிப் போன செய்தி கேட்டு வருத்தமுற்றான். அந்நிலையில் வியாக்கிரபாதரும், பதஞ்சலி முனிவரும் அவ்விடம் வந்து சேர்ந்தனர். வருந்திய  இரணியவன்மனுக்கு ஆறுதல் கூறச் செய்து தேற்றினர்.

வியாக்கிரபாத முனிவரும், பதஞ்சலி முனிவரும் வசிட்ட முனிவரை அழைத்துப் போய் சிவகங்கை தீா்த்தத்தில் நீராடச் செய்து கூத்தப்பெருமானையும், திருமூலட்டானமுடையாரையும், திருப்பாலீச்சுரமுடையாரையும், 
திருவனந்தீச்சுரமுடையாரையும் வணங்கிக் கொண்டார்கள். பின் வியாக்கிரபாதர் வசிட்டமுனிவரைத் தம் இல்லம் அழைத்து வந்து அமுது செய்விக்க வைத்தாா்.

மறுநாள் மும்முனிவர்களும் ஒன்றாக கூடி அளவாடிக் கொண்டிருந்தனர். அந்நேரம் அவ்விடம் வந்த இரணியவன்மன் மும்முனிவர் மூவரையும் வணங்கி நின்றான். அப்போது வசிட்ட முனிவர் வியாக்கிரபாத முனிவரை நோக்கி, *"இரணியவன்மனை அழைத்துச் செல்லுவதற்கு இங்கு வந்தோம்"* என்றார்.

அதுகேட்ட வியாக்கிரபாதர் இரணியவன்மனை நோக்கி, *"நீ என்ன,செய்யப் போகிறாய்? ...உன் கருத்தென்ன?"*

*இரணியவன்மன் தன் நாட்டுக்குச் சென்றானா?*

*மறுத்தானா?*

*மும்முனிவர்கள் என்ன செய்தார்கள்?*

 *(8)*
🔴 *தில்லைப் பெருங்கோயில் தொடர்.* 🔴
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
நீ' என்ன,செய்யப் போகிறாய் என வியாக்கிரபாத முனிவர் கேட்ட கேள்விக்கு,

இரணியவன்மன், முனிவர் பெருமானை வணங்கி, *அடியேன் பொன்னம்பலவாணர்க்கும், உமக்கும் செய்யும் வழிபாட்டினையன்றிப் பிறிதொன்றும் வேறாயிருக்க என் மனம் ஒப்பவில்லை என்றான்.

நீ' உன் கொள்கையில் உறுதிபட இருப்பானாயின்,  இப்பொழுதே வசிட்ட முனிவருடன் துணை சென்று *அரச முடியையும், பொன், ரத்தினங்கள்* போன்ற  அரசுடமைகளையும், *யானை, தேர் , காலாள்* ஆகிய சேனைகளையும், அமைச்சர்களையும் கொண்டு விரைவில் இங்கு வருவாயாக!" அப்படி வரும் வழியில் அந்தர் வேள்விக்குச் சென்றிருக்கும் தில்லை மூவாயிரவர்களையும் உன்னுடன் வருமாறு அழைத்து வருவாயாக எனப் பணித்தருளினார்.

இரணியவன்மன், கூத்தப் பெருமானையும், வியாக்ரபாதரையும், அவர் மனைவியாரையும், பதஞ்சலி முனிவரையும் வணங்கி விடை பெற்றுக் கொண்டு வசிட்ட முனிவருடன் கெளட தேசத்தை அடைந்தான்.

தம்பிமார்களும், நகரமக்களும் எதிர் கொண்டழைக்க தன் நகரத்துனுள் புகுந்து, தாயாரை வணங்கி தாயாருடனே சிலநாள்களாக அங்கேயே தங்கியிருந்தான்.

பின்பு தம்பிமார், அமைச்சர் முதலியோருடன் தில்லைப்பதி புறப்பட்டு வழியில் அந்தர்வேதியை அடைந்து, அங்கிருந்த தில்லை மூவாயிரவரையும் தேரில் ஏற்றிக் கொண்டு, தில்லை வனத்தினை யடைந்தான். அவனுடன் வந்த அந்தணர்கள் தாங்கள் ஏறிவந்த தேர்களை கனக சபையின் வடமேற்குத் திக்கில் நிறுத்திக் கொண்டு இறங்கினர்.

வியாக்கிரபாத முனிவர் முன் வந்த இரணியவன்மன், தான் கூட்டி வந்த மூவாயிரவர்களையும் அவர் முன் எண்ணிக் காட்ட, ஒரு அந்தணா் மட்டும் கானாது போய் குறைந்திருந்தார்.

இரணியவன்மன் திகைத்தப் போனான்.

அப்பொழுது அங்குள்ளவர்கள் எல்லோரும் கேட்கும்படி, *இவ்வந்தணர்கள் எல்லோரும் நம்மை ஒப்பாவர்;நாம் இவர்களை ஒப்போம்!* *நாம் இவர்களில் ஒருவர், என்றதொரு *அருள்மொழி* தில்லையம்பலவாணர் திருவருளால் தோன்றியது.

அதுகேட்ட அந்தணர்கள் இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது பேரும், அச்சமும் நடுக்கமும் உடையவர்களாய், தங்களுக்குள்ளே ஒருவரையொருவர் வணங்கியெழுந்து பொன்னம்பலத்தை வலம் வந்து, கூத்தப் பெருமானைப் போற்றி அம்பலத்தைச் சூழ இருந்தார்கள்.

உத்திரவேதியில் நிகழ்ந்த வேள்விக்குச் சென்றிருந்த மூவாயிரவரும் கனக சபையின் வடமேற்கு த் திக்கில் தேரை நிறுத்தி இறங்கினர்.

இதனை நினைவு கூறும் முறையில் பாண்டிய நாயகத் தூண்களில் தேர்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

இரணியவன்மன் தில்லையின் கிழக்குத் திசையிலே *"கொற்றவன்குடி"*என ஒரு நகரம் உருவகப் படுத்தி   அங்கிருந்தான்.

தில்லையில் எல்லோரும் இறைவனது திருக்கூத்தைத் தாிசனம் செய்து கொண்டிருக்கும் நாளில், வியாக்கிரபாத முனிவர் *"இரணியவன்மன்"* இந்நாட்டினை ஆளக்கடவன்; இவன் தம்பிமார் *கெளட தேசத்தை* ஆளக்கடவர்  என்றார்.

அதுகேட்டு மகிழ்ந்த வசிட்ட முனிவரும், பதஞ்சலி முனிவரும், மற்றும் ஏனைய முனிவர்களும் *அப்படியே ஆகுக!* என்றனர்.

வியாக்கிரபாத முனிவர் இரணியவன்மனுக்குத் திருமணம் செய்வித்து முடிசூட்டி புலிக்கொடி கொடுத்து சோழ மன்னனாகத் திகழச் செய்தார்.

இரணியவன்மனுடைய தம்பிமார் விடைபெற்றுக் கொண்டு நால்வகைச் சேனைகள் சூழச் சென்று கெளட தேசத்தை அடைந்து அந்நாட்டினை ஆட்சி புரிந்தனர்.

இரணியவன்மன், வியாக்கிரபாத முனிவர் பணித்த வண்ணம் கூத்தப் பெருமானுக்குத் *திருவம்பலமும்*, திருமூலட்டானேசுரா்க்குத் *திருக்கோயிலும்* திருப்பணிகளும் செய்வித்து, நாள் வழிபாட்டிற்கும், திருவிழா சமய நேர்த்திக்குமுண்டான நிபந்தங்களை உண்டாக்கி வைத்தான். இவ்வுண்மை உமாபதி சிவாச்சாாியார் பாடிய கோயிற் புராணத்தில் வாசிக்கலாம்.

கண்ணபிரானுக்கு சிவதீட்சை செய்த உபமன்யு முனிவரும் தில்லைக்கு வந்து கூத்தப்பெருமானது திருநடனத்தைக் கண்டு வணங்கி நல்வாழ்வு பெற்றார்.

சாமவேதத் தலைவர்களுள் ஒருவராகிய சைமினி முனிவர் என்பவர் வேதம் ஒருவராற் செய்யப்படாது சுயம்புவாயுள்ளது. அது கரும காண்டம், ஞான காண்டம் என்னும் இரு பகுதிகளையுடையது.

இவ்விரு பகுதிகளுள் கரும காண்டம் ஒன்றினையே பிரமாணமாகக் கொண்டு வேத வேள்வியாகிய கிாிகைகளை வற்புறுத்தி *மீமாஞ்சக* நூலை இயற்றினார் சைமினி முனிவர்.

வேதம் எல்லாம் விதி, புனைந்துரை, மந்திரம், குறியீடு என நால் வகைகளுள் அடங்கும். இந்நான்கினுள் விதி வாக்கியங்களே பிரமாணமாகக் கொள்ளப்படும்.

சிவபெருமான் பிட்சாடனாராகவும், திருமால் மோகினியாகவும் சென்று ஆட் கொள்வதற்கு முன் தாருகாவனத்து முனிவர்கள் இந்த மீமாஞ்சை மதத்தையே மேற்க்கொண்டு ஒழுகினர்.

அவர்கள் செய்த அபிசார வேள்வியால் அழிவுறாது சிவபெருமான் நிகழ்த்தியருளிய தாண்டவத்தினைக் கண்டு உள்ளந் திருந்தி இறைவனை வழிபட்டுய்தினர் முன்னர் கூறலன.

மீமாஞ்சை நூல் செய்த சைமினி முனிவர் தமது கொள்கை தவறுடையது எண்றுணர்ந்து சிதம்பரத்திற்கு வந்து, தில்லைக் கூத்தப்பெருமானை வணங்கி வேத பாதஸ்வம் என்ற பனுவலால் ஈசனை துதித்துப் போற்றினார்.

ஸ்வதம்-தோத்திரம், வேதபாதம்-வேதத்தினடி முதல் மூன்றடிகள் தமது வாக்காவும், நான்காமடி வேதத் தொடராகவும் அமைய சைமினி முனிவராலே செய்யப் பெற்ற தோத்திரமாதலின் இந்நூல் *"வேத பாதஸ்தவம்"* என்னும் பெயருடையதலாயுற்று.

*கருமானின் உாியதளே உடையா வீக்கிக்*

*கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை யேந்தி*

*வருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட*

*வளர்மதியஞ் சடைக்கணிந்து  மானோர் நோக்கி*

*அருமான வாண்முகத்தா ளமர்ந்து காண*

*அமரா்கணம் முடிவணங்க ஆடுகின்ற*

*பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்*

*பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!*

        -------திருநாவுக்கரசர்       திருப்பாடலின் சொல்லோவியம்.

         *(10)*
🔴 *தில்லைப் பெருங் கோயில் தொடர்.* 🔴
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
தில்லைப் பெரும்பற்றப் புலியூரில் எல்லாம் வல்ல சிவபெருமான், பதஞ்சலியும் புலிமுனியும் வேண்டிக் கொண்ட வண்ணம் தில்லைப் பொன்னம்பலத்திலே சிவகாமியம்மை கண்டுகளிக்க வானோா்கள் போற்ற ஆனந்தத் திருக்கூத்து ஆடியருள்கின்றார்...

இதை.....

*கருமானின் உரியதளே உடையா வீக்கிக்
கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை ஏந்தி,
வருமானத் திரள்தோள்கள் மட்டித்தாட
வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி
அருமான வாண்முகத்தா ளமர்ந்து காண
அமரர்கணம் முடிவணங்க ஆடுகின்ற
பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.*

        -என திருநாவுக்கரசர் சொல்லோவியம்.

எல்லாம் வல்ல இறைவனைக், கூத்தப் பெருமான் திருவுருவில் வைத்து வழிபடும் முறை எக்காலத்தில் தோன்றியது என்பது இங்கு சிந்திக்கத் தோனுவதாகும்.

மொகஞ்சதரோ, அரப்பா எனும் இடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் சிவலிங்கம் ஒன்று கிடைக்கப் பெற்றது. மற்றொன்றான தெய்வ உருவங்களின் ஆண் சிலையொன்று தனது இடக் காலை தூக்கி, வலக் காலை யூன்றி, நடனம் புாியும் நிலையிலும் கிடைக்கப் பெற்றது.

இதுவே சிவபெருமானுக்குரிய திருவுருவங்களில் ஒன்றாகிய நடராஜர் திருவுருவத்தின் பழைய உருவமாகக் கருதினர் ஆராய்ச்சியாளர்.

சிவபெருமான் மன்னுயிர்கள் உய்ய வேண்டி உலகங்களையெல்லாம் *படைத்தும்*, *காத்தும்*, *ஒடுக்கியும்*, ஆடவல்ல கூத்தப் பெருமானாகத் திகழ்ந்தானென்பதும், அம்முதல்வனது ஆடலாலே உலகவுயிர்கள் இயங்குகின்றன என்பதும், அவன் ஆடியருளும்  திருக்கூத்தினை அவனுடன் பிரியாதிருந்து கண்டு உயிா்களுக்கு நலஞ்செய்பவளி அவனிற் பிாியாத திருவருட் சத்தியாகிய உமையம்மையென்பதும் சைவ நூல்களின் சிறப்பாகும்.  இவ்வாறு உமையம்மை காண ஆடல் புரியும் இறைவனை முன்னிலையாக்கிப் பரவிப் போற்றுவதாக அமைந்தது, *'ஆற்றி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து'*

       எனத் துவங்குகிறது கலித் தொகை கடவுள் வாழ்த்துப் பா.

முனிவர்களுக்கு அருமறைகளை அருளிச்செய்து  பெருகி வரும் கங்கை வெள்ளத்தினைத் தன் சடையில் ஏற்று முப்புரத்திலே தீயைச் செலுத்தி வாக்கு மனங்கடந்து நிற்கும் நீலமேணி போலும் மிடற்றினையுடைய இறைவன், தன்னால் தோற்றுவிக்கப்பட்ட பல வடிவுகளையும் மீண்டும் தன்னிடத்தே ஒடுக்கிக் கொண்டு, உமையம்மையார் சீர் என்னும் தாள முடிவினைத் தர, *கொடு கொட்டி*என்னும் கூத்தினை ஆடியருளினான்.

அவன் முப்புரங்களையும் வென்று அந்த, வன்மையினாலே முப்புரத்து அவுணர்கள் வெந்து வீழ்ந்த சாம்பாராகிய நீற்றினை அணிந்து கொண்டு *பாண்டரங்கம்* என்னும் கூத்தினை ஆடியபொழுது பராசக்தியாகிய அம்மை *இடை நிகழும் தூக்கு* என்னும் தாளத்தைத் தருவாள் எனவும், கொலைத் தொழிலையுடைய புலியைக் கொன்று அதன் தோலையுடுத்து, கொன்றைப் பூமாலை தோளிலே புரண்டசைய அயனுடைய தலைகளை அகங் கையிலே ஏந்திச் சிவபெருமான் *கபாலம்* என்னும் கூத்தினை ஆடியருளிய பொழுது மலை மகளாகிய உமையம்மையார் தாளத்தின் முதலெடுப்பாகிய பாணியைத் தருவாள் எனவும், இவ்வாறு தாளத்தின் தொடங்கும் காலமாகிய பாணியும், இடை நிகழுங்காலமாகிய தூக்கும் முடியுங் காலமாகிய சீரும், ஆகிய தாளக் கூறுபாட்டை உமாதேவியார் உடனிருந்து காப்ப, எல்லாம் வல்ல இறைவன் மன்னுயிர்கள் உய்தி பெற ஆடல் புரிகின்றான்.

மேலே குறித்த கடவுள் வாழ்த்துப் பாடலில் *நல்லந்துவனார்*என்னும் புலவர், இறைவன் ஆடிய *கொடு கொட்டி*  *பாண்டரங்கம்* *கபாலம்* என்னும் மூவகைக் கூத்துக்களையும் விரிந்து விரித்துக் கூறியுள்ளார்.

வாக்கால் கூறப்படாமல் மனத்தால் குறித்த எவ்வகைப் பொருட்கும் எட்டாமல் சொல்லின் வரம்பையும், பொருளின் எல்லையையும் கடந்து நின்ற இறைவன், தன்னை அன்பினால் வழிபடுவோரது உள்ளத்தின்கண் எண்தோள் வீசி நின்று ஆடும் பிரானாகத் தோன்றி அருள் புரிகின்றான் என்பது இக்கலித் தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலால் உணர்த்தப் பெறும் உண்மையாகும்.

இப்பாடலில் குறிக்கப் பெற்ற மூவகைக் கூத்துக்களுள் *கொடுகொட்டி* என்பது, இறைவன் எல்லா வுலகங்களையும் ஒழித்து நின்று ஆடுதலின் *கொடுங்கொட்டி* என்னும் பெயருடையதாயிற்று.

முதன்மையில்  உயர்ந்தோனாகிய மகாதேவன் என்னும் இறைவன் அவுணரது முப்புரங்களைத் தீயூட்டி வெற்றிக் களிப்பால் கை கொட்டி நின்று ஆடியது *கொடு கொட்டி* எனும் ஆடலாகும்.

'திரிபுரம் தீ மடுத்து  எரியக் கண்டு இரங்காது நின்று கைகொட்டி ஆடுதலின் கொடுகொட்டி என்று பெயர் கூறினார் என்பாா்கள் *அடியார்க்கு நல்லார்*

இக்கூத்தினைச் சேரநாட்டில் பறையூர் என்ற ஊரில் வாழ்ந்த *கூத்தச்சாக்கையன்* என்பானன சேரன் செங்குட்டுவன் முன் ஆடிக் காட்டினான் எனும் செய்தியை, *இளங்கோவடிகள் சிலப்பதிகாரம்*  நடுகற்காதையில் விளக்கியுள்ளார்.

தேர்முன் நின்ற  திசைமுகன் காணும்படி இறைவன் வெண்ணீற் றையணிந்து ஆடியது *பாண்டரங்கம்*  என்னும் பெயர்த்தாயிற்று எனவும், பாண்டரங்கம் என்பதே பண்டரங்கம் எனத் திரிந்தது எனவும், கருதுவர் *நச்சினார்க்கினியர்* .

பாண்டரம்--வெண்மை, இங்கு வெண்ணீற்றைக் குறித்தது.

வெண்மை வாய்ந்த திருநீற்றை யணிந்து ஆடுதலால் *பாண்டரங்கம்* என்னும் பெயருடையதாயிற்று.

திருவெண்ணீீறு பராசக்தியின் வடிவமாம் என்பது, *"பராவண மாவது நீறு"*

--என சம்பந்தர் வாக்கால் புலனாதை நாமறிவோம்.

     *(11)*
🌷 *தில்லைப் பெருங்கோயில் தொடர்.* 🌷
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*காபாலம்* என்பது சிவபெருமான் பிரமனது தலையைக் கிள்ளி அகங்கையில் ஏந்தி ஆடிய கூத்தாகும்.

அயனது மண்டை ஓடாகிய பிரமகபாலத்தைக் கையிலேந்தி ஆடுதலின் இது *காபாலம்* என்னும் பெயர்த்தாயிற்று.

இம்மூன்று கூத்துக்களும் இறைவன் அழித்தற்றொழிலை நிகழ்த்துங்காலத்தில் ஆடப் பெறுவனவாகும்.

*"பல்லுருவம் பெயர்த்து நீ கொட்டி யாடுங்கால்"*

*"மண்டமர் பலகடந்து மதுகையால் நீறணிந்து பாண்டரங்கம் ஆடுங்கால்"*

*"தலைஅங்கை கொண்டு நீகாபாலம் ஆடுங்கால்"*
         
               ---என,கலித்தொகை,,,,,
அழித்தற் றொழிலை நிகழ்த்துகின்ற  காலங்களிலே பாணியும் தூக்கும் சீரும் என்று சொல்லப்பட்ட இவையிற்றை மாட்சிமைப்பட்ட அணியினையுடைய உமாதேவி காப்ப ஆடி" எனவரும் நச்சினார்க் கினியர் உரையாலும் நன்கு புலனாகும்.

ஆடல் மகளாகிய மாதவி, சிவபெருமான் முதலிய தெய்வங்களால் நிகழ்த்தப் பெற்ற *கொடுகொட்டி* முதலிய பதினோர் ஆடல்களையும், ஆடிக்காட்டிய செய்தியினைச் சிலப்பதிகாரக் கடலாடு காதையில் *இளங்கோவடிகள்* குறித்துள்ளார். தெய்வங்களின் ஆடல்களாக அமைந்த பதினோரு ஆடல்களில் சிவபெருமான் ஆடிய *கொடுகொட்டியும்*,  *பாண்டரங்கமும்* இடம் பெற்றிருத்தல் காணலாம்.

தன் அருள்வழி நில்லாதவர்களை அச்சுறுத்திப் பின்னர் அடிமை கொள்ளும் முறையில் இறைவன் இயற்றியருளும் திருக் கூத்துக்கள், அன்புடைய அடியார்களுக்கு அமைதி நல்கும் முறையில் ஆடும் திருக்கூத்துக்கள் என இறைவன் ஆடியருளும் தாண்டவத்தினை இரு வகையாக பகுத்திரைக்கலாம்.

தேவதாருவனத்து முனிவர்கள் மீமாம்சை நூலை, உண்மை நூலெனக் கொண்ட மயக்கத்தினிலே வேதம் விதித்த கருமகாண்டம், ஞான காண்டம் என்னும் இரண்டினுள் கருமகாண்டத்தையே மேற் கொண்டு ஞானக் காண்டத்தை ஒதுக்கி விட்டுக் கருமங்களை மட்டும் செய்து, தம் மனைவியர்களுக்கும், அக்கொள்கையைப் போதித்துக் கடவுள் வழிபாட்டை இகழ்ந்திருந்தனர் என்பதும், அவர்களைத் திருத்துதற் பொருட்டே சிவபெருமான் பிச்சைக் கோலத்தை யுடையவராய்த் திருமாலை அழகிய பெண்ணுருவில் தம்முடன் அழைத்துச் சென்று, அம்முனிவர்களது தவத்திண்மையையும், அம்முனிவர் மனைவியரது கற்பின் திண்மையினையும் நிலை கலங்கச் செய்தனர்.

அந்நிலையிலே அம்முனிவர்கள் வெகுண்டு ஆபிசார வேள்வியைச் செய்து அவ்வேள்வியினின்றும்  *புலி, பாம்பு, பூதங்கள், தீ, முயலகன், மந்திரங்கள்,* எல்லாவற்றையும் 
தோற்றுவித்து அழிக்க ஏவிய போது சிவபெருமான் அவற்றையெல்லாம் தனக்குள் அடக்கிக் கொண்டு ஆடல் செய்யத் தொடங்கினார்.

அவ்வாடலைக் காணப் பெறாது அஞ்சிய முனிவர்கள், தம் பிழையினைப் பொறுத்டுக் கொள்ளும்படி இறைவனைப் பணிந்து வேண்டினர். அந்நிலையில் சிவபெருமான் உமாதேவியும், திருமாலும் கண்டு மகிழ ஐந்தொழில் திருக்கூத்தாடிய *ஆனந்தத் தாண்டவத்தை* ஆடியருளினார்.

உலகில் மண்ணுயிர்கள் அமைதியடைய ஆடிய அவ்வாணந்தத் திருக்கூத்தினையே *பதஞ்சலி முனிவரும்* *வியாக்கிரபாத முனிவரும்* வேண்டிக் கொண்டபடி, *தில்லைச் சிற்றம்பலத்திலே* ஆடியருளினார் என்பன.,

இத்தாண்டவங்களுள் படைத்தற்றொழிலை நிகழ்த்தும் *காளிகா தாண்டவம்* *திருநெல்வேலி தாமிர சபையிலும்,*

காத்தற்றொழிலை நிகழ்த்தும் *கவுாி தாண்டவம்* *திருப்புத்தூர் சிற்சபையிலும்*

*சந்தியா தாண்டவம்* *மதுரை வெள்ளியம்பலத்திலும்*,

அழித்தற்றொழிலை நிகழ்த்தும் *சங்கார தாண்டவம்* *உலகமெல்லாம் ஒடுங்கிய ஊழிக் காலமாகிய நள்ளிரவிலும்,

மறைத்தற்றொழிலை நிகழ்த்தும் *திரிபுர தாண்டவம்* *திருக்குற்றாலச் சித்திர சபையிலும்,*

அருளல் தொழிலை நிகழ்தும் *ஊர்த்துவ தாண்டவம்*  *திருவாலங்காட்டில் இரத்தின சபையிலும்*, 

மேற்கூறிய ஐந்தொழில்களையும் ஒருங்கே நிகழ்த்தும் *ஆனந்தத் தாண்டவம் தில்லைச் சிற்றம்பலத்திலும்,* நிகழுவனென திருப்புத்தூா் புராணம் சொல்லும்.

     (12)

🔴 தில்லைப் பெருங்கோயில் தொடர். 🔴

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

தில்லையில் கூத்தப்பெருமானை வழிபாடு செய்யும் மூவாயிர வராகிய திலைவாழந்தணர் என்னும் தொகையடியார்களைப் பற்றி வரலாற்றை பெரிய புராணத்திலுள்ள தில்லை வாழந்தணர் புராணமாகும்.


இப்புராணத்திலுள்ள தொடக்கப் பாடலான முதலிரண்டு பாடல்கள் தில்லைச் சிற்றம்பலத்தைப் போற்றிப் பரவுவன.


ஆதியாய்நடுவு மாகி அளவிலா அளவு மாகிச்


சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகிப்


பேதியா ஏகமாகிப் பெண்ணுமாயி ஆணு மாகிப்


போதியா நிற்கும் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி!

உலகங்களையெல்லாம் தோற்றுவித்து நிலை பெறச் செய்து, பின் தன்னுள் ஒடுக்கிக் கொள்ளும் நிலையில் உயிர்க்குயிராய் எல்லாப் பொருள்களோடும் கலந்து நின்றருளும் இறைவன் சிவகாமியம்மை கண்டு மகிழ ஆனந்தத் திருக்கூத்து ஆடியருளும் உருவத்திருமேனியைப் போற்றும் முறையில் அமைந்ததாகும்.


கற்பனை கடந்த சோதி கருணையே உருவ மாகி


அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்


சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று


பொற்புடன் நடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி!


அருமறைச் சிரத்தின் மேலாம் ஞான வெளியிலே கற்பனைக் கெட்டாத சோதிப் பொருளாய்த் திருநடமி புாிந்தருளும் இறைவனது அருவ நிலையினைக் குறிப்பதேயாம். 


தில்லைச் சிற்றம்பலத்திலே சிவகாமியம்மை காண ஆடியருளும் நடராசப் பெருமான் திருவுருவம், அம்முதல்வனது உருவத் திருமேனியையும், நடராசர்க்கு அரபகே மேற்குப் பக்கம் உள்ள திருவம்பலச் சக்கரமாகிய சிதம்பர ரகசியம் இறைவனது அருவத் திருமேனியையும் குறிப்பனவேயாம்.


பொன்னம்பலத்தில் நாள்தோறும் ஆறு காலங்களிலும் திருமஞ்சனப் பூசை கொண்டு அருளுகிற சந்திரமெளலீஸ்வரராகிய படிகலிங்கம் இறைவனது அருவுருவத் திருமேனியையும் குறிப்பனவேயாம்.


ஆக, தில்லைச் சிற்றம்பலத்தே உருவம், அருவம், அருவுருவம், என மூவகைத் திருமேனிகளாக இறைவன் அமர்ந்திருந்து அன்பர்களது வழிபாட்டினையேற்று அருள் புரிகின்றான். தில்லைவாழந்தணருள் ஒருவரும் சைவசமய சந்தான ஆசாாியருள் நான்காமவரும் ஆகிய உமாபதி சிவாசாாியார் இயற்றிய கோயில்ப புராணத்தில்காண்க!".


ஓங்கும் ஒளி வெளியே நின்று உலகு தொழ நடமாடும் தேங்கமழும் பொழில் தில்லைத் திருச்சிற்றம் பலம்போற்றி!


                                        - என்றும்,


காரணங் கற்பனை கடந்த கருணைதிரு வுருவாகிப் பேரணங்கி னுடனாடும் பெரும்பற்றப் புலியூா்சேர்

                                         -என்றும்,


சிற்பரமாம் அம்பரமாம் திருச்சிற்றம்பலம் போற்றி!

 

                                         -என்றும்,


இறைவனுக்குாிய அருவுருவத் திருமேனி, உருவத் திருமேனி, அருவத் திருமேனி ஆகிய மூவகைத் திருமேனிகளையும் முறையே போற்றியுள்ளாா்.


இந்த மூன்று பாடற்றொடர்களும் தில்லைச் சிற்றம்பலத்தில் நாள்தோறும் நிகழ்ந்து வரும் வழிபாட்டு முறையினை நன்கு புலப்படுத்துவனவாகும்.


வளமார்ந்த தில்லைச் சிற்றம்பலத்தில் இறைவன் நிகழ்த்தியருளும் அற்புதத் திருக்கூத்து உலக வாழ்க்கையில் மக்களுக்கு நேரும் அச்சத்தை அகற்றி, ஆனந்தம் நல்குதற் பொருட்டே நிகழ்வது எனவும், இத்திருக்கூத்து நிகழாதாயின் உலகில் கொடியோர்களால் போிடர் விளையும் எனவும், அவ்விடையூறுகளை விலக்குதற் பொருட்டுக் கோர சத்தியாகிய காளியின் கொடுங்கூத்து நிகழ வேண்டிய இன்றியமையாமை நேரும் எனவும் அறிவுறுத்தும் நிலையில் அமைந்தது.


தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச் சிற்றம்பலவன்

தாள்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ

தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்

ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ.


                                 - திருச்சாழல்.

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

                 *( 13 )*
🍁 ** தில்லைப் பெருங்கோயில் தொடர்.🍁
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
முன்பொரு காலத்தில் தாருகன் என்னும் அவுணனைக் கொல்லுதற் பொருட்டுத் துர்க்கையால் ஏவப்பட்ட காளி, அவனோடு போர் செய்து அவனது அவனுடம்பைப் பிளந்த பொழுது, கீழே தொித்த இரத்தத்திலிருந்து மேலும் பல அவுணர்கள் உருபெற தோன்றினார்கள்.

இதைக்கண்ட அவனது உடம்பின் குருதி கீழே பூமியில் விழாதபடி அதனை முற்றும் பருகினாள். அதனால் இரத்த வெறி பிடித்த காளியாக உலக உயிர்களை அழிக்கத் தொடங்கினாள்.

அந்த நிலையில்தான் எவ்வுயிர்க்குத் தந்தை ஆகிய இறைவன், அவள் முன்னே தோன்றிக் *கொடுங்கூத்து* இயற்றினான். இக்கூத்தின் கடுமையைக் காணப்பெறாத காளி தனது வெறியடங்கி இறைவன் அருளைப் பெற்று அமைதியுற்றான் என்பது புராண வரலாறு.

*வென்றிமிகு தாருகன தாருயிர் மடங்கக்*
*கன்றிவரு கோபமிகு காளிகதம் ஓவ*
*நின்றுநடம் ஆடியிடம் நீடுமலர் மேலால்*
*மன்றல்மலியும் பொழில்கொள் வண்டிருவை யாறே!*

            -என திருஞானசம்பந்தப் பிள்ளையார்.

*ஆடினார் காளிகாண ஆலங்காட் டடிகளாரே!*
        
                  -என திருநாவுக்கரசர்.

இவ்வாறு காளியின் இரத்த வெறி தணிய இறைவன் ஆடிய திருக்கூத்து திருவாலங்காட்டில் மட்டுமல்ல?, தில்லையில் நிகழ்ந்துள்ளது.

தில்லைவனமுடையாளாகிய காளி, அவுணரை அழித்த பின்பும் கோபம் தணியாது மண்ணுயிர்களை அழிக்கத் தொடங்கவே தில்லைச் சிற்றம்பலப் பெருமான் ஊர்த்துவ தாண்டவம் செய்து, காளியின் சினத்தை அடக்கி,  *'நீ தில்லையின் வட எல்லையிலே அமர்ந்திருப்பாயாக!"* என ஆணை தந்தனர்.

ஆடலில் தோற்று நாணிய தில்லைவன முடையாளாகிய காளி இறைவன் பணித்தவாறே தில்லையின் வட எல்லையிலே கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளாள் என்று தில்லைக் காளியைக் குறித்துப் புராண வரலாறு ஒன்று வழங்கி வருகின்றது.

மாணிக்க வாசகர் காலத்திற்கு முன்பிருந்தே தில்லைக் காளி வரலாறு தொன்மையுடையவன. *"தேன்புக்க தண்பணை சூழ் தில்லைச் சிற்றம் பலவன்,* என முன்னமே *திருச்சாழற்* உளன.

*எழில்பெறும் இமயத்து இயல்புடை அம்பொற்*
*பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம்நவில்*
*கனிதரு செய்யாய் உமையொடு காளிக்*
*கருளிய திருமுகத் தழகுறு சிறுநகை*
*இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்*
*பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன்*
*ஒலிதரு கைலை உயர்கிழ வோனே*

           ---  கீர்த்தித் திரு அகவல்.

தில்லையைப் பற்றிய இப்புராணச் செய்தி உண்மைப் புலப்படுதல் என தில்லைப் பொன்னம்பலத்தில் தென்புறத்திலமைந்த *நிருத்த சபை* யில் காளி காண ஆடிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியின் சந்நிதி அமைந்துள்ளமை நோக்கத்தக்கன.


¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
                    *(14)*
🍀 *தில்லைப் பெருங்கோயில் தொடர்.* 🍀
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
மக்களது அகத்தையும் புறத்தையும் தூய்மைப்படுத்தி நலம் புரியும் தீர்த்த வடிவாகத் திகழ்கின்றான் எல்லாம் வல்ல இறைவன்.

*"ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்"* என வருகிறது திருவெம்பாவைத் தொடரால் *திருவாதவூரடிகளும்*,

*"சென்றாடு தீர்த்தங்கள் ஆனார்தாமே"* என திருத்தாண்டகத் தொடரால் *திருநாவுக்கரசரும்* அறிவுறுத்தியுள்ளனர்.

அம்முறையில் தங்கண் மூழ்குவாரது மனமாசினையும் உடற் பிணியையும் அறவே நீக்கி வீடு பேற்று இன்பத்தினை வழங்கும் தெய்வத்தன்மை வாய்ந்த தீர்த்தங்களாகச் சிவகங்கை முதலிய பத்து தீர்த்தங்கள் தில்லைப் பெருங்கோயிலைச் சூழ அமைந்துள்ளன.

*1சிவகங்கை*
*"தீர்த்தமென்பது சிவகங்கையே"* எனக் குமர குருபர சுவாமிகளால் போற்றப் பெற்ற இத்தீா்த்தம் தென்புறத்தில் திருமூலட்டானக் கோயிலையும், மேற்புரத்தில் நூற்றுக்கால் மண்டபம், சிவகாமியம்மை திருக் கோயிலையும், வடபுறத்தில் நவலிங்கத் திருக்கோயிலையும், கீழ்புறத்தில் ஆயிரங்கால் மண்டபத்தையும் எல்லையாகக் கொண்டு அவற்றிடையே அமையப்பெற்ற தடாகமாகும். உடற்பினியால் வருந்திய சிங்கவர்மன் என்ற வேந்தன் இச்சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடி உடற்பிணி நீங்கிப் பொன்னிறம் பெற்று இரணியவர்மன் ஆயினமை, இத்தீர்த்தத்தின் சிறப்பாகும்.

சிவகங்கைத் தீர்த்தத்தின் நாற்புறமும் அமையப் பெற்றள்ள மண்டபங்களும் கற்படிகளும் சோழமன்னர் காலத்த திருப்பணிகளாகும்.

சிவகங்கை மண்டப உள்புறச் சுவர்களிலே பளிங்கு கற்களை பதித்து பரப்பி, *திருவாசகத்தையும்* *திருச்சிற்றம்பலக் கோவையையும்* ஆகிய எட்டாந் திருமுறை முழுவதனையும் கல்வெட்டில் வரையச் செய்து பொருத்தியவர் *திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தின் அதிபர் காசிவாசி தவத்திரு அருணந்தித் தம்பிரான் சுவாமிகள் ஆவர்.

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

                      (15)

🍃 தில்லைப் பெருங்கோயில் தொடர். 🍃

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤


2. சூரிய தீா்த்தம்.

----------------------------------

இது தில்லைப்பதியின் வடகிழக்கே, வெள்ளாறு என்பவை கடலோடு கலக்குமிடத்தில் அமைந்த கடற்றுறையாகும். 


ஓர் அசுரனைப் போாில் வெல்லும் உபாயத்தினைக் கற்பிக்கும்படி தேவகுருவானவர்,  வருணனிடத்திலே இருட் பொழுதிலே வந்தார். 


வருணனோ, அவரைத் தவறான எண்ணம் கொண்ட பகைவனென நினைத்து,அவர் மேல் பாணத்தை விடுத்தான்.


பாணம் பதிய குரு மரணமாகிப் போனார். இக்கொலைப் பாவம் காரணமாக ஒரு பிசாசு வடிவம் தோன்றி, இரண்டு கால்களிலும் இரண்டு கைகளிலும் பொருந்தக் கழுத்தோடு கூடும்படி அவனைக் கட்டிக் கடலில் வீழ்த்தியது. 


நெடுநாள் கடலினிலேயே வருந்திக் கிடந்த வருணனுக்குச் சிவபெருமான் மாசிமகத்தில் காட்சி கொடுத்து, அவனது பாசக் கட்டு அறுத்தொழிந்து போகும்படி அருளாசி தந்தார். 


அதனால், அக்கடற்றுறை பாசமறுத்த துறை எனப் பெயர் பெற்றது. 


அத்துறையிலே மாசி மகத்திலே நீராடுபவர்கள் பாசம் நீங்கி முக்தியடையும்படி வருணன் சிவபெருமானிடத்தில் வரம் பெற்றான். மகாபாதகனாகிய துர்க்கடன் என்னும் வணிகன் படகில் ஏறிக் கொண்டு மாசிமகநாளில் பாசமறுத்த துறையிடத்தே வரும் பொழுது படகுடன் தாழ்ந்து முத்தி பெற்றான்.

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

                     (16)

🌻 தில்லைப் பெருங்கோயில் தொடர். 🌻

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

3. புலி மடு தீர்த்தம்.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

இது தில்லைப் பெருங் கோயிலின் தென்திசையில்  அமைந்துள்ள நீர்நிலை. 


புலிக்கால் முனிவருக்குத் தந்தையாகிய மத்தியந்தன முனிவர் வழிபட்ட மத்தியந்தனேசுரம் என்னும் திருக்கோயில் இம்மடுவின் மேற்கரையில் அமைந்துள்ளது.


இக்கோயில் கல்வெட்டுக்களில் கடலை யமர்ந்தார் கோயில் எனக் குறிக்கப் பட்டுள்ளது. 


இக்கோயிலின் எதிரேயமைந்துள்ள புலிமடுவில், இறந்தோர் நற்கதி அடைதற் பொருட்டு அவர்தம் எலும்பினை இடுதல் வெகு நாளா நடந்து வரும் மரபு. 


அப்படி இங்கு இடப்படும் எலும்புகள் கரைந்து உருகி போதல் என்பது பலரும் அறிந்திருக்கும் செய்தி. அது உண்மை!


4.வியாக்கிரபாதத் தீர்த்தம்.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

இது தில்லைப் பெருங்கோயிலின் மேற்குத் திசையில் வியாக்கிரபாத முனிவர் தம் ஆன்மார்த்தமாகக் கொண்டு வழிபாடு செய்த திருப்புலீச்சுரர் திருக்கோயிலுக்கு எதிரே உள்ள தீர்த்தமாகும்.


திருத்தொண்டத் தொகை அடியாா்களுள் ஒருவராகிய திருநீலகண்டக் குயவநாயனார். இவர் இன்பத் துறையில் எளியராய் 'எம்மைத் தீண்டுவாராகில் திருநீலகண்டம்" என மனைவியார் கூறய ஆணை மொழியினை மதித்து, மற்ற மாதராரையையும் தம் மனத்தினும் தீண்டாது ஐம்புலன்களையும் வென்று விளங்கியவர்.


திருநீலகண்டக் குயவரும் அவர் மனைவியாரும், முதுமை அடைந்த நிலையில் சிவபெருமான், சிவயோகியாராக வந்து ஓர் ஓட்டினைத் தந்து, அதனை மறையச் செய்து, மீண்டும் வந்து கேட்க,......


அதனைத் தர இயலாத நிலையோடு திருநீலகண்டக் குயவனார், முதுமைப் பருவமுற்ற தாமும், தம் மனைவியுமாக இத்திருக்குளத்தில் மூழ்கி, பின் இளமை பெறப்பட்டு எழுந்தனர். 


முதுமை பருவத்தினராகிய திருநீலகண்ட நாயனாரும், அவர்தம் மனைவியாரும் இத்தீர்த்தத்தில் மூழ்கி இளமை பெற்று எழுந்தமையால், இத்தீர்த்தம்.... இளமை ஆக்கினார் குளம் என்று இக்குளத்தின் மேற்கரையில் உள்ள *திருப்புலீச்சுரர் திருக்கோயில் இளமை ஆக்கினார் கோயில் எனவும் வழங்கப் பெறுவன.

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

                      (17)

🍂 தில்லைப் பெருங்கோயில் தொடர். 🍂

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤


5- வது தீர்த்தம் அனந்த தீர்த்தம்.

"""""""""""""""""""""""""""""""""""""""""""""

இது தில்லைப் பெருங்கோயிலுக்கு மேல்திசையில் பதஞ்சலி முனிவர் ஆன்மார்த்தமாக வழிபாடு செய்த அனந்தீச்சுரத் திருக்கோயிலுக்கும் முன்பாக அமைந்த தீர்த்தமாகும்.


6-வது தீர்த்தம். நாகசேரி தீர்த்தம்.

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

பதஞ்சலி முனிவர் நாகலோகத்தினின்றும் பிலாத்துவாரம் வழியாகத் தில்லைக்கு ஏறி வந்த இடத்திலுள்ள  தீர்த்தமாதலின் இது நாகசேரி தீர்த்தம் என பெயர் பெற்றது. இத்தீர்த்தம் அனந்தீச்சுரர் திருக்கோயிலுக்கு வடமேல் திசையில் அமைந்துள்ளது.


7-வது தீர்த்தம். பிரம தீர்த்தம்.

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

இது தில்லைப் பெருங்கோயிலுக்கு வடமேல் திசை மூலையில் சிங்காரத் தோப்பு எனப்படும் திருக்களாஞ்சேரியில் உள்ளது. இக்குளத்தின் மேற்கே வசிட்ட முனிவரால் வழிபாடு செய்யப் பெற்ற திருக்களாஞ் செடியுடையார் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவனுக்குப் பிரமபுரீசர் என்னும் திருப்பெயருண்டு. பிரமபுரீசர் சந்நிதியில் இத்தீர்த்தம் அமைந்திருத்தலால் இது பிரம தீர்த்தம் என்னும் பெயர் பெறுவதாயிற்று.


8-வது தீர்த்தம். சிவப் பிரியை

""""""""""""""""""""""""""""""""""""""""""""

இத்தீர்த்தம் தில்லைப் பெருங்கோயிலுக்கு ஜவடதிசையிலுள்ள தில்லைவன முடையாளாகிய தில்லைக் காளியின் திருக்கோயில் முன்னதாக இருக்கிறது.


9-வது தீர்த்தம். திருப்பாற்கடல்.

""""""""""""""""""""""""""''''''''''''''''''''

இத்தீர்த்தம் தில்லைப் பெருங்கோயிலின் வடகிழக்குத் திசையில் அமைந்துள்ளது. வியாக்கிரபாத முனிவருடைய இளங்குழந்தையாகிய உபமன்யு காமதேனுவின் பாலை உண்ணப் பெறாது, வருந்தி அழுத நிலையில் தில்லை மூலட்டானப் பெருமான், உபமன்யுவாகிய குழந்தை உண்டு பசி தீரும்படி திருப்பாற்கடலையே தில்லைக்கு வரவழைத்தருளினான். 


"பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்" எனத் தில்லை இறைவனைப் போற்றினார் சேந்தனார்.


உபமன்யுவின் பொருட்டுத் திருப்பாற்கடல் வந்த பொய்கையாகத் திகழ்வது இத்தீர்த்தமாதலின் இது திருப்பாற் கடல் என வழங்கப் பெறுவதாயிற்று. 


இத்தீர்த்தத்தினையொட்டி வடகரையில் அமைந்தது திருப்பெருந்துறை என்னும் திருக்கோயிலாகும்.


சிதம்பரத்தின் கீழ்திசையில் பர்ணசாலையில் மாணிக்கவாசகர் சிவயோகம் புரிந்திருக்கும் நிலையில் பாண்டிய நாட்டில் குருவாக எழுந்தருளித் தம்மை ஆண்டு கொண்டருளிய ஆன்மநாதரையும் சிவயோகாம்பிகையையும் திருப்பெருந்துறையில் திருவடி உருவில் வைத்து வழிபாடு செய்தது போலவே, தில்லையிலும் பெருந்துறைப் பெருமானைத் திருவடி உருவில் வைத்து வழிபட்டு மகிழ்ந்தார்.


இச்செய்தியைப் புலப்படுத்தும் முறையில் தெற்கு நோக்கிய  சந்நிதியாக இத்திருப்பெருந்துறைத் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் விமானத்திலுள்ள  கல் வெட்டு இது திருப்பெருந்துறை என குறிக்கப் பட்டுள்ளது.10-வது தீர்த்தம். பரமானந்த கூவம்.

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

இது தில்லைச் சிற்றம்பலத்தின் கீழ்ப்பக்கத்தில் சண்டேசுரர் சந்நிதிக்கு அருகில் அமைந்துள்ள  திருமஞ்சனக் கிணறு ஆகும்.


*சிவ வடிவாகிய சிவகங்கை முதல் பேரின்ப வடிவாகிய பரமானந்த கூவம் ஈறாக உள்ள இப்பத்துத் தீர்த்தங்களிலும் தில்லைப் பெருமானாகிய சிவபெருமான் தை அமாவாசை தோறும் தீர்த்தம் கொடுத்து அருள்வார். இப்பத்துத் தீர்த்தத்திலும் சிவபெருமானை வழிபட்டு உடன் சென்று நீராடுங்கள். இம்மை மறுமை நலங்களை ஒருங்கு பெற்று இன்புறுங்கள்.

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

                     (17)

☘ தில்லைப் பெருங்கோயில் தொடர். ☘

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

தில்லை நகரத்தில் நடுநாயகமாய் திகழ்கின்றது தில்லை சிற்றம்பலவர் திருக்கோயில்.


ஏறக்குறை நாற்பத்து மூன்று ஏக்கர் பரப்பளவு.


எழுநிலைக் கோபுரங்கள். இதன் புறத்தே அமைந்த நந்தவனப் பரப்பையும் உள்ளடக்கிய நிலையில், வெளிப்புறத்தே பெருமதில் சூழ அமைந்துள்ளன.


கோயில் புறமதிலாகிய இம்மதில், வீரப்பநாயக்கர் மதிலென வழங்கப் பெறுகிறது. மதுரையை ஆண்ட வீரப்பநாயக்கர் என்பவரால் பழுது நீக்கம் பெற்று திருப்பணி செய்யப் பெற்றன.இம்மதிலின் நாற்புரமும் எழுநிலைக் கோபுரங்களுக்கெதிரே நுழை வாயில்கள். இவ்வாயில்களின் வழியே கோயிலுனுள் சென்றால் எழுநிலைக் கோபுரங்களைத் தொடர்ந்து அமைந்த பெருமதில்கள். 


கோயிலின் உள்புறத்தே திருமாளிகை பத்தியினை உடையனவாய் விளங்குவதைக் காணலாம். எழுநிலை கோபுரத்தினா உட்புறத்தே அமைந்த மூன்றாம் பிரகாரம் இராஜாக்கள் தம்பிரான் என்பது மூன்றாம் குலோத்துங்கனுக்குரிய சிறப்பு பெயர். ஆதலால் இப்பிரகாரத்திலமைந்த திருமாளிகை பத்தி இவ் வேந்தனால் திருப்பணி செய்யப்பட்டது என்பது பொருத்தம்.


கிழக்கு கோபுரத்தின் வழியாகக் கோயிலுக்குள்ளே நுழைவதற்கு முன் அக்கோபுர வாசலின் வெளிப்புறத்தே கோபுரத்தையொட்டிய நிலையில் தென்பக்கத்தில் விநாயகர் கோவில். 


கிழக்குக் கோமுர வாசலின் தென்புறத்தே இக்கோபுரத்தை பழுது பாா்த்துத் திருப்பணி செய்தவர் காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியார். அவா் தமக்கையார் உருவச்சிலைகள் மாடங்களில் இடம் பெற்றுள்ளன.


சோழராட்சியில் கட்டப்பெற்ற இக் கோபுர வாசலில் பரத சாத்திரத்தில் இருந்த வண்ணம் நூற்றெட்டுக் காரணங்களைச் செய்யும் ஆடல் மகளிருடைய சிற்ப வடிவங்களை அமைத்து அழகுபடுத்திப் பார்த்தான் பல்லவ மரபினாகிய இரண்டாம் கோப்பெருஞ் சிங்கனாவான். இவனது படிவம் இக்கோபுர வாயிலுள்ள  வடமேற்குப் பக்கத்தே தெற்கு நோக்கிய மாடத்தில் இடம் கண்டுள்ளது.


இக்கோபுர வாயிலுனுள் நுழைந்த மூன்றாம் பிரகாரத்தை அடையும் நிலையில் தோன்றும் நந்தி மண்டபம் திருமூலட்டானப் பெருமான் சந்திதியை நோக்கிப் புறத்தே அமைந்துள்ளது. 


இப்பிரகாரத்தை வலம் வரும் பொழுது கிழக்குக் கோபுரத்தின் எதிரே தென்புறமாய் சிறிது தள்ளிய நிலையில் தில்லைப் பெருங்கோயிலின் உள்வாசல் அமைந்துள்ளதைக் காணலாம்.


கிழக்கிலிருந்து வலமாகச் சென்றால் தெற்கு கோபுரத்தின் எதிர்பக்கத்தே சுதையாலியன்ற நந்தியம் பெருமான் இருக்கும் கல் மண்டபமும் அதன் பின்புறத்தே பலிபீடமுய் இணைந்துள்ளதை காணப் பெறலாம்.


வெளிப்புறத்தேயுள்ள  இந்த நந்தி உள்ளேயுள்ள நடராசப் பெருமான் சந்நிதியை நோக்கிய நிலையில் அமைந்துள்ளதைக் காணச் சிறப்பு.


நந்தி மண்டபத்தின் தென்புறத்திலுள்ள  தெற்கு கோபுரம் சொக்கசீயன் என பெயர் பெற்று விளங்குகிறது. மூன்றாம் குலோத்துங்கனுக்குப் படைத் தலைவனாகவும் அவன் மகனை மணந்த மணவாளப் பெருமாளாகவும் விளங்கிய பல்லவத் தலைவனாகிய கோப்பெருஞ்சிங்கன் இக்கோபுரத்தை ஆண்டு தோறும் பழுது பார்த்து செப்பனிட்டு வருவதற்காக, செங்கல்பட்டு மாவட்டம் ஆற்றூர் எனும் சிற்றூரைத் தானமாகக் கொடுத்துள்ளான்.


இக்கோயில் வாயில் உள்புறத்தே பரத நாட்டியக் கரணங்களைப் புலப்படுத்தும் மகளிரின் ஆடல் சிற்பங்கள் அமைந்துள்ளது. இக்கோபுர,வாயிரின் மேற்குப் பகுதியின் உட்புறத்தே வடக்கு நோக்கிய நிலையில் முருகன் திருவுருவம்  கோபுரத்தையொட்டி உள்ளன. 


தெற்கு பிரகாரத்தின் மேற்குப் பகுதியில் கிழக்கு நோக்கிய நிலையில் சந்நிதியாக முக்குறுனி விநாயகர் கோயில் உளது. 


தென்பாலுகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவனை வழிபாடு செய்தற் பொருட்டுத் தெற்குக் கோபுர வழியே உள் நுழைந்து வலம் வரும் பொழுது முகப்பில் இப்பிள்ளையார் கோயில் அமைந்திருப்பதால், இங்கு எழுந்தருளிய விநாயகப் பெருமான் முகக் கட்டண விநாயகர் எனப் பெயர். இப்பெயர்தான் பிற்காலத்தில் முக்குறுணி விநாயகர் எனத் திரிந்து விட்டது.


முக்குறுணி விநாயகரைத் தரிசித்தவர்கள் மேலைக் கோபுர வழியாக வெளியே வந்து, அக்கோபுரத்தின் தென் பகுதியில் மேற்கு நோக்கிய நிலையில் படைப்புச் சிற்பமாக அமைக்கப் பெற்றுள்ள கற்பக விநாயகரைத் தரிசிப்பது வழக்கம்.  தல விநாயகராகிய இவ்விநாயகர் குலோத்துங்க சோழ விநாயகர் என கோயில் கல்வெட்டு கூறுகிறது.


இவ்விநாயகரை வணங்கிய பின்னர் மேலைக் கோபுரத்தின் வழியாக மீண்டும் உள் புகுந்து அக்கோபுரத்தின் வடக்குப் பக்கத்தே கிழக்கு நோக்கிய நிலையில் புடைப்புச் சிற்பமாக இருக்கும் முருகப் பெருமானை வழிபடுதல் மரபு. 

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
                      *(17)*
🍂 *தில்லைப் பெருங்கோயில் தொடர்.* 🍂
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

5- வது தீர்த்தம் *அனந்த தீர்த்தம்.*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""
இது தில்லைப் பெருங்கோயிலுக்கு மேல்திசையில் பதஞ்சலி முனிவர் ஆன்மார்த்தமாக வழிபாடு செய்த அனந்தீச்சுரத் திருக்கோயிலுக்கும் முன்பாக அமைந்த தீர்த்தமாகும்.

6-வது தீர்த்தம். *நாகசேரி தீர்த்தம்.*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
பதஞ்சலி முனிவர் நாகலோகத்தினின்றும் பிலாத்துவாரம் வழியாகத் தில்லைக்கு ஏறி வந்த இடத்திலுள்ள  தீர்த்தமாதலின் இது நாகசேரி தீர்த்தம் என பெயர் பெற்றது. இத்தீர்த்தம் அனந்தீச்சுரர் திருக்கோயிலுக்கு வடமேல் திசையில் அமைந்துள்ளது.

7-வது தீர்த்தம். *பிரம தீர்த்தம்.*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இது தில்லைப் பெருங்கோயிலுக்கு வடமேல் திசை மூலையில் சிங்காரத் தோப்பு எனப்படும் திருக்களாஞ்சேரியில் உள்ளது. இக்குளத்தின் மேற்கே வசிட்ட முனிவரால் வழிபாடு செய்யப் பெற்ற திருக்களாஞ் செடியுடையார் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவனுக்குப் பிரமபுரீசர் என்னும் திருப்பெயருண்டு. பிரமபுரீசர் சந்நிதியில் இத்தீர்த்தம் அமைந்திருத்தலால் இது பிரம தீர்த்தம் என்னும் பெயர் பெறுவதாயிற்று.

8-வது தீர்த்தம். *சிவப் பிரியை*
""""""""""""""""""""""""""""""""""""""""""""
இத்தீர்த்தம் தில்லைப் பெருங்கோயிலுக்கு ஜவடதிசையிலுள்ள தில்லைவன முடையாளாகிய தில்லைக் காளியின் திருக்கோயில் முன்னதாக இருக்கிறது.

9-வது தீர்த்தம். *திருப்பாற்கடல்.*
""""""""""""""""""""""""""''''''''''''''''''''
இத்தீர்த்தம் தில்லைப் பெருங்கோயிலின் வடகிழக்குத் திசையில் அமைந்துள்ளது. வியாக்கிரபாத முனிவருடைய இளங்குழந்தையாகிய உபமன்யு காமதேனுவின் பாலை உண்ணப் பெறாது, வருந்தி அழுத நிலையில் தில்லை மூலட்டானப் பெருமான், உபமன்யுவாகிய குழந்தை உண்டு பசி தீரும்படி திருப்பாற்கடலையே தில்லைக்கு வரவழைத்தருளினான்.

*"பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்"* எனத் தில்லை இறைவனைப் போற்றினார் *சேந்தனார்.*

உபமன்யுவின் பொருட்டுத் திருப்பாற்கடல் வந்த பொய்கையாகத் திகழ்வது இத்தீர்த்தமாதலின் இது திருப்பாற் கடல் என வழங்கப் பெறுவதாயிற்று.

இத்தீர்த்தத்தினையொட்டி வடகரையில் அமைந்தது *திருப்பெருந்துறை* என்னும் திருக்கோயிலாகும்.

சிதம்பரத்தின் கீழ்திசையில் பர்ணசாலையில் மாணிக்கவாசகர் சிவயோகம் புரிந்திருக்கும் நிலையில் பாண்டிய நாட்டில் குருவாக எழுந்தருளித் தம்மை ஆண்டு கொண்டருளிய ஆன்மநாதரையும் சிவயோகாம்பிகையையும் திருப்பெருந்துறையில் திருவடி உருவில் வைத்து வழிபாடு செய்தது போலவே, தில்லையிலும் பெருந்துறைப் பெருமானைத் திருவடி உருவில் வைத்து வழிபட்டு மகிழ்ந்தார்.

இச்செய்தியைப் புலப்படுத்தும் முறையில் தெற்கு நோக்கிய  சந்நிதியாக இத்திருப்பெருந்துறைத் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் விமானத்திலுள்ள  கல் வெட்டு இது திருப்பெருந்துறை என குறிக்கப் பட்டுள்ளது.

10-வது தீர்த்தம். *பரமானந்த கூவம்.*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இது தில்லைச் சிற்றம்பலத்தின் கீழ்ப்பக்கத்தில் சண்டேசுரர் சந்நிதிக்கு அருகில் அமைந்துள்ள  *திருமஞ்சனக் கிணறு* ஆகும்.

*சிவ வடிவாகிய சிவகங்கை முதல் பேரின்ப வடிவாகிய பரமானந்த கூவம் ஈறாக உள்ள இப்பத்துத் தீர்த்தங்களிலும் தில்லைப் பெருமானாகிய சிவபெருமான் தை அமாவாசை தோறும் தீர்த்தம் கொடுத்து அருள்வார். இப்பத்துத் தீர்த்தத்திலும் சிவபெருமானை வழிபட்டு உடன் சென்று நீராடுங்கள். இம்மை மறுமை நலங்களை ஒருங்கு பெற்று இன்புறுங்கள்.

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
                     *(17)*
☘ *தில்லைப் பெருங்கோயில் தொடர்.* ☘
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
தில்லை நகரத்தில் நடுநாயகமாய் திகழ்கின்றது தில்லை சிற்றம்பலவர் திருக்கோயில்.

ஏறக்குறை நாற்பத்து மூன்று ஏக்கர் பரப்பளவு.

எழுநிலைக் கோபுரங்கள். இதன் புறத்தே அமைந்த நந்தவனப் பரப்பையும் உள்ளடக்கிய நிலையில், வெளிப்புறத்தே பெருமதில் சூழ அமைந்துள்ளன.

கோயில் புறமதிலாகிய இம்மதில், வீரப்பநாயக்கர் மதிலென வழங்கப் பெறுகிறது. மதுரையை ஆண்ட வீரப்பநாயக்கர் என்பவரால் பழுது நீக்கம் பெற்று திருப்பணி செய்யப் பெற்றன.

இம்மதிலின் நாற்புரமும் எழுநிலைக் கோபுரங்களுக்கெதிரே நுழை வாயில்கள். இவ்வாயில்களின் வழியே கோயிலுனுள் சென்றால் எழுநிலைக் கோபுரங்களைத் தொடர்ந்து அமைந்த பெருமதில்கள்.

கோயிலின் உள்புறத்தே திருமாளிகை பத்தியினை உடையனவாய் விளங்குவதைக் காணலாம். எழுநிலை கோபுரத்தினா உட்புறத்தே அமைந்த மூன்றாம் பிரகாரம் இராஜாக்கள் தம்பிரான் என்பது மூன்றாம் குலோத்துங்கனுக்குரிய சிறப்பு பெயர். ஆதலால் இப்பிரகாரத்திலமைந்த திருமாளிகை பத்தி இவ் வேந்தனால் திருப்பணி செய்யப்பட்டது என்பது பொருத்தம்.

கிழக்கு கோபுரத்தின் வழியாகக் கோயிலுக்குள்ளே நுழைவதற்கு முன் அக்கோபுர வாசலின் வெளிப்புறத்தே கோபுரத்தையொட்டிய நிலையில் தென்பக்கத்தில் விநாயகர் கோவில்.

கிழக்குக் கோமுர வாசலின் தென்புறத்தே இக்கோபுரத்தை பழுது பாா்த்துத் திருப்பணி செய்தவர் காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியார். அவா் தமக்கையார் உருவச்சிலைகள் மாடங்களில் இடம் பெற்றுள்ளன.

சோழராட்சியில் கட்டப்பெற்ற இக் கோபுர வாசலில் பரத சாத்திரத்தில் இருந்த வண்ணம் நூற்றெட்டுக் காரணங்களைச் செய்யும் ஆடல் மகளிருடைய சிற்ப வடிவங்களை அமைத்து அழகுபடுத்திப் பார்த்தான் பல்லவ மரபினாகிய இரண்டாம் கோப்பெருஞ் சிங்கனாவான். இவனது படிவம் இக்கோபுர வாயிலுள்ள  வடமேற்குப் பக்கத்தே தெற்கு நோக்கிய மாடத்தில் இடம் கண்டுள்ளது.

இக்கோபுர வாயிலுனுள் நுழைந்த மூன்றாம் பிரகாரத்தை அடையும் நிலையில் தோன்றும் நந்தி மண்டபம் திருமூலட்டானப் பெருமான் சந்திதியை நோக்கிப் புறத்தே அமைந்துள்ளது.

இப்பிரகாரத்தை வலம் வரும் பொழுது கிழக்குக் கோபுரத்தின் எதிரே தென்புறமாய் சிறிது தள்ளிய நிலையில் தில்லைப் பெருங்கோயிலின் உள்வாசல் அமைந்துள்ளதைக் காணலாம்.

கிழக்கிலிருந்து வலமாகச் சென்றால் தெற்கு கோபுரத்தின் எதிர்பக்கத்தே சுதையாலியன்ற நந்தியம் பெருமான் இருக்கும் கல் மண்டபமும் அதன் பின்புறத்தே பலிபீடமுய் இணைந்துள்ளதை காணப் பெறலாம்.

வெளிப்புறத்தேயுள்ள  இந்த நந்தி உள்ளேயுள்ள நடராசப் பெருமான் சந்நிதியை நோக்கிய நிலையில் அமைந்துள்ளதைக் காணச் சிறப்பு.

நந்தி மண்டபத்தின் தென்புறத்திலுள்ள  தெற்கு கோபுரம் சொக்கசீயன் என பெயர் பெற்று விளங்குகிறது. மூன்றாம் குலோத்துங்கனுக்குப் படைத் தலைவனாகவும் அவன் மகனை மணந்த மணவாளப் பெருமாளாகவும் விளங்கிய பல்லவத் தலைவனாகிய கோப்பெருஞ்சிங்கன் இக்கோபுரத்தை ஆண்டு தோறும் பழுது பார்த்து செப்பனிட்டு வருவதற்காக, செங்கல்பட்டு மாவட்டம் ஆற்றூர் எனும் சிற்றூரைத் தானமாகக் கொடுத்துள்ளான்.

இக்கோயில் வாயில் உள்புறத்தே பரத நாட்டியக் கரணங்களைப் புலப்படுத்தும் மகளிரின் ஆடல் சிற்பங்கள் அமைந்துள்ளது. இக்கோபுர,வாயிரின் மேற்குப் பகுதியின் உட்புறத்தே வடக்கு நோக்கிய நிலையில் முருகன் திருவுருவம்  கோபுரத்தையொட்டி உள்ளன.

தெற்கு பிரகாரத்தின் மேற்குப் பகுதியில் கிழக்கு நோக்கிய நிலையில் சந்நிதியாக முக்குறுனி விநாயகர் கோயில் உளது.

தென்பாலுகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவனை வழிபாடு செய்தற் பொருட்டுத் தெற்குக் கோபுர வழியே உள் நுழைந்து வலம் வரும் பொழுது முகப்பில் இப்பிள்ளையார் கோயில் அமைந்திருப்பதால், இங்கு எழுந்தருளிய விநாயகப் பெருமான் *முகக் கட்டண விநாயகர்* எனப் பெயர். இப்பெயர்தான் பிற்காலத்தில் முக்குறுணி விநாயகர் எனத் திரிந்து விட்டது.

முக்குறுணி விநாயகரைத் தரிசித்தவர்கள் மேலைக் கோபுர வழியாக வெளியே வந்து, அக்கோபுரத்தின் தென் பகுதியில் மேற்கு நோக்கிய நிலையில் படைப்புச் சிற்பமாக அமைக்கப் பெற்றுள்ள கற்பக விநாயகரைத் தரிசிப்பது வழக்கம்.  தல விநாயகராகிய இவ்விநாயகர் குலோத்துங்க சோழ விநாயகர் என கோயில் கல்வெட்டு கூறுகிறது.

இவ்விநாயகரை வணங்கிய பின்னர் மேலைக் கோபுரத்தின் வழியாக மீண்டும் உள் புகுந்து அக்கோபுரத்தின் வடக்குப் பக்கத்தே கிழக்கு நோக்கிய நிலையில் புடைப்புச் சிற்பமாக இருக்கும் முருகப் பெருமானை வழிபடுதல் மரபு. 

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
                      *(20)*
💐 *தில்லைப் பெருங்கோயில் தொடர்.* 💐
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
நவலிங்கம் திருக்கோயிலுக்கு மேற்கிழக்கே சிவகங்கைத் தீர்தத்தின் கீழ்பக்கத்தில் அமைந்துள்ள மண்டபம் ஆயிரம்கால் மண்டபம் ஆகும்.

முதல் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்த மிழலை நாட்டு வேள் கண்டன்மாதவன் என்பவன், தில்லை அம்பலத்தின் வடகீழ்த் திசையில் சொன்னவாறு அறிவார் (கழறிற்றறிவாராகிய சேரமான் பெருமாள் நாயனார்) கோயிலும் புராண நூல் விரிக்கும் புரிசைமாளிகையும் வரிசையாக அமைத்தான் என செய்யுள் வடிவில் கல்வெட்டு கூறுகிறது.

கண்டன்மாதவனால் கட்டப் பெற்ற புராண மண்டபத்தை உள்ளடக்கிய நிலையில் விரிந்த இடம் உடையதாக அமைக்கப் பெற்றதே இவ்வாயிரங்கால் மண்டபம்.

இதனைக் கட்டியவர் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் என ஆராய்ச்சியாளர் *சதாசிவ பண்டாரத்தார்* கருதுவர்.

அண்மையில் இம் மண்டபத்தைப் பெரும் பொருட்,செலவில் பழுது பார்த்துத் திருப்பணி செய்தவர் ஆடூர் பெருநிலக்கிழார் தருமபூஷணம் *எம். இரத்தினசபாபதி பிள்ளை* ஆவார்.

இவ்வாயிரங்கால் மண்டபத்தில்தான் சேக்கிழார் நாயனார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் அரங்கேற்றம் நடந்தது.

தில்லையில் வருடந்தோறும் நிகழும் ஆனித் திருமஞ்சன விழாவிலும் மார்கழி திருவாதிரை விழாவிலும், ஒன்பதாம் திருநாளில் தேரில் எழுந்தருளி நான்கு பெரு வீதிகளிலும் உலாப் போந்த நடராசப் பெருமானும், சிவகாமி அம்மையும் அன்றிரவு இம்மண்டபத்தில் எழுந்தருளியிருந்து, மறுநாள் விடியற்காலையில் திருமஞ்சனம் கொண்டருளி நண்பகலில் இங்கிருந்து புறப்பட்டு நடம் கொண்ட கூத்தராய் அடியார்களுக்குத் திருவருள் காட்சி நல்கிக் கீழைவாயில் வழியே சிற்றம்பலத்துள் சென்று புகுந்தருள்வார்.

பத்தாந் திருநாளில் நிகழும் இத்திருநடனக் காட்சியே *திருக்கூத்துத் தரிசனம்* எனச் சிறப்பித்து போற்றப் பெறுகிறது.

சிற்றம்பலத்தில் ஆடல் புரியும் கூத்தப்பெருமானை ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து மீண்டும் *சிற்றம்பலமாகிய ஞானமன்றத்தே* புகுந்தருளச் செய்யும் இத்திருநாள் நிகழ்ச்சியானது, மண்ணுயிர்களின் நெஞ்சத் தாமரையின் உயிர்த் துடிப்பாக இடைவிடாது நடம் புரிந்தருளும் கூத்தப் பெருமானை நெஞ்சத்தினின்றும் எழுந்தருளச் செய்யும் புருவ நடுவில் தியானித்து ஆறு ஆதாரங்களுக்கும் 
அப்பாற்பட்டதாய் உச்சந்தலைக்கு மேல் பன்னிரண்டு அங்குலம் உயர்ந்டு விளங்கும் மேலிடமாகிய ஆயிர இதழ்த் தாமரை மேல் எழுந்தருளும்படி செய்து முதல்வனது திருவருளோடு ஒன்றியிருந்து அம்முதல்வனை மறுபடியும் நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளியில் கண்டு போற்றித் துதித்து, மீண்டும் நெஞ்சத் தாமரையில் எழுந்தருளச் செய்யும் சிவஞானச் செல்வர்களது அகப்பூசை முறையினை நினைவு படுத்துவதாகும்.

சிவஞானச் செல்வர்களின் அகத்தே நிகழும் இத்திருக்கூத்துத் தரிசனத்தை உலகமக்கள் பலரும் புறதிதே கட்டு உய்தி பெறும் நிலையில் நிகழ்த்தப் பெறுவதே *நடராசர் தரிசன விழா*வாகும்.

தில்லைச் சிற்றம்பலமாகிய மன்றம் உலக புருடனது நெஞ்சமாகிய ஞான ஆகாயமாகவும் இங்குள்ள ஆயிரங்கால் மண்டபம் மூலாதாரம் முதல் ஆக்ஞை வரையுற்ற ஆறு ஆதாரங்களுக்கும் அப்பாற்பட்டுத் தலையின் மேலிடமாகத் திகழும் *(சகஸ்ராரம்)* ஆயிரம் இதழ்த் தாமரையாகவும், சிற்றம்பலத்திற்கும் ஆயிரம்கால் மண்டபத்திற்கும் நடுவே குலோத்துங்க சோழன் திருமாளிகைக் கிழக்கு வாயிலையொட்டி அமைந்த முக மண்டபம் புருவ நடுவாகவும் அமையக் கூத்தப்பெருமான் சிவகாமி அம்மை காண ஆயிரக்கால் மண்டபத்திலிருந்து முகமண்டபம் வரை உள்ள எல்லையிலும் திருக்கூத்து நிகழ்த்தியருளுவதுதான் இத்திருநடனக் காட்சி.

சிவஞானச் செல்வர்களால் அகத்துக் கண் கொண்டு பார்க்கக் கூடிய திருக்கூத்துத் தரிசனத்தை  உலக மக்கள் அனைவரும் முகத்திற் கண் கொண்டு பாா்த்து உய்யும் வண்ணம் நிகழ்த்தப் பெறுவதாகும்.

மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்தவர்கள் கோயிலின் உள்ளே புகுதலுக்குக் கிழக்கிலும் மேற்கிலும் ஆக இரண்டு வாயில்கள் அமைந்துள்ளன.

அவ்விரண்டனுள் மேற்றிசையில் அமைந்துள்ள வாயிலுக்குக் குலோத்துங்கச் சோழன் திருமாளிகைத் திருவாயில் என்னும் பெயர் கல்வெட்டில் உள்ளது.

இறைவன் திருவுலாப் போகும் காலத்தில் எழுந்தருளும் கீழைத் திருவாயிலைக் குலோத்துங்க சோழன் திருமாளிகைக் கீழைத் திருவாயில் என்பது மிகப் பொருத்தம்.

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
                    *(19)*
🍁 *தில்லைப் பெருங்கோயில் தொடர்.* 🍁
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
சிவகாமியம்மை திருக்கோயில் கோபுர வாசலின் வடபுறத்தே மகிஷாசுரமர்த்தனியாகிய துர்க்கையின் சந்நிதி வடக்கு நோக்கி அமைந்துள்ளது. 
இச்சந்நிதி கி.பி.13-ஆம் நூற்றாண்டில் அண்டபாரண தேவர் என்னும் தெய்வத்துக்குரிய திருக்கோயிலாக விளங்கியது.

சிவகாமியம்மையின் வடபக்கத்தே *பாண்டிய நாயகம்* என்னும் பெயருடைய திருக்கோயிலில் ஆறுமுகப் பெருமான் கிழக்கு நோக்கிய நிலையபடன் மயில் மீதமர்ந்து வள்ளி தெய்வானையுடன் அருள் புரிகின்றார்.

கோயில், யானைகளாலும் யாளிகளாலும் இழுக்கப்படும் தேர் வடிவில் அமைக்கப் பெற்றுள்ளது. இம்மண்டபத்தின் நாற்புறங்களிலும் கீழ்க் குறடுகளில் ஆடல், பாடல் பற்றிய அழகான சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இங்குள்ள தூண்கள் குலோத்துங்கனால் கட்டப் பெற்றுள்ள திரிபுவன வீரேச்சுரத்தில் அமைந்துள்ள தூண்களைப் போன்று முழுவதும் சிற்ப வேலைப்பாடு நிறைந்தவனாய் விளங்குதலும் மூன்றாம் குலோத்துங்கனுக்குரிய பாண்டிய தம்பிரான் என்னும் சிறப்புப் பெயரமைப்பில் பாண்டிய நாயகம் என்னும் பெயரால் இக்கோயில் வழங்கப் பெற்று வருதலாலும் இத்திருக்கோயில் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப் பெற்றிருக்க வேண்டும் எனக் கருதுகிறார்கள்.

தமிழகத்தில் முருகப் பெருமான் கோயில் கொண்ட திருத்தலங்களில் முருகப் பெருமானுக்கென அமைந்து மிகப் பெரிய அழகிய சந்நிதி *இப்பாண்டிய நாயகத் திருக்கோயில்* ஆகும்.

இந்தத் திருக்கோயில் மண்டப மேற்கூரையில் உட்புறத்தே கந்த புராண வரலாறும் முருகனுக்குரிய ஆறுபடை வீடுகளும் பன்னிரு திருமுறை ஆசிரியர்கள் திருவுருவங்களும் எழில் மிக்க வண்ண ஓவியங்களாக வரையப் பெற்றுள்ளன. இவ்வோவியங்களை வரைந்து இத்திருக்கோவிலுக்கு மூன்று முறை குடமுழுக்கு செய்தவர்கள் சிதம்பரம் அணிகல வணிக தருமபூஷணம் செ.இரத்தினசாமிச் செட்டியார் அவர்களும் அவர்தம் மைந்தர்களும் ஆவர்.

இத்திருக்கோயிலையொட்டி அமைந்த வடக்குக் கோபுரம் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலின் வாயிலின் உள்ளே கிருஷ்ணதேவராயர் சிலை வடிவம் கிழக்கு நோக்கிய மாடத்தில் உள்ளமையைக் காணலாம். இக்கோபுரத்தின் உள்பக்கத்தே தெற்கு நோக்கிய நிலையில் முருகப் பெருமான் திருவுருவம் கோபுரத்தையொட்டிய படைப்புச் சிற்பமாக அமைந்திருக்கிறது. இச்சந்நிதியில் *அறக்கடவுளாகிய எமன்* திருவுருவம் இருக்கிறது.

பாண்டிய நாயகத்தின் கிழக்கே சிவகங்கைத் தீர்த்தத்தின் வடமேற்கு மூலையில் ஒன்பது சிவலிங்கங்கள் எழுந்தருளிய நவலிங்கம் கோயில் உள்ளது. சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையில் *திருநீலகண்டக் குயவனார்*,  முதல் *திருநீலகண்டப் பாணனார்,* *சடையனார்*, *இசைஞானியார்*, *நம்பியாரூரர்* வரையுள்ள அறுபத்து மூன்று தனியடியார்களும் *தில்லைவாழந்தணர்* முதல் *அப்பாலும் அடிசார்ந்தார் ஈறாகவுள்ள ஒன்பது தொகை அடியார்களும் இடம் பெற்றுள்ளனர்.

இவ்வொம்பது தொகையினரையும் சிவலிங்க வடிவில் வைத்துப் போற்றும் நிலையில் அமைந்துள்ளதே இந்த நவலிங்கத் திருக்கோயில் ஆகும். இக்கோயில் திருத்தொண்டத் தொகையீச்சுரம் என்ற பெயரால் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளன. இக்கோயிலை ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சிவனடியார் ஒருவர் புணர்நிர்மானம் செய்துள்ளார்.

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
                   *(21)*
🍁 *தில்லைப் பெருங்கோயில் தொடர்.* 🍁
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
மூன்றாம் பிரகாரத்திலிருந்து கிழக்கு வாயில் வழியாகக் கோயிலின் இரண்டாம் பிரகாரம் வந்தால்,,,,

இப்பிரகாரம் இரண்டாம் குலோத்துங்க சோழனால் அமைக்கப் பெற்றமையின் குலோத்துங்க சோழன் திருமாளிகை கல்வெட்டில் குறிப்புள்ளன.

21- படிகள் அமைந்துள்ள கீழை வாசலில் நின்று மேற்கே பார்த்தால் கூத்தப் பெருமான் ஆடல்புரியும் பொன்னம்பலம் எதிரே தோன்றுதலைக் காணலாம்.

இரண்டாம் திருச்சுற்றை வலம் வரும் வழியில் தெற்குப் பிரகாரத்திலேயே தில்லை அம்பலவாணர் சந்நிதியில் பலிபீடத்துடன் நிறுவப் பெற்றுள்ள கொடி மரத்தினையும் அதன் தென்பாலமைந்த நிறுத்த சபையினையும் கண்டு வழிபடமுடியும்.

இறைவன் காளியுடன் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியாக ஆடல் புரியும் திருமேனி இந்த நிருத்த சபையில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக அமையப் பெற்றுள்ளது.

இம்மண்டபத்தின் தென்பக்கத்தில் வடக்குப் பார்த்த வண்ணம் சரபமூர்த்தியின் சந்நிதி அமைந்துள்ளது. இச்சபை குதிரை பூட்டிய தேரின் அமைப்புடையதாய் உள்ளதால் இது *தேர் மண்டபம்* எனவாகும்.

இம்மண்டபத்திலுள்ள தூண்கள் திரிபுவன வீரேச்சுரத்திலமைந்துள்ள தூண்கள் போல சிற்ப அமைப்புடன் விளங்குவதாலும், இம்மண்டபத்தின் வடபக்கம் கீழேயமைந்த குறட்டில் தில்லையம்பலப் பெருமானைக் கைகூப்பித் தொழும் நிலையில் மூன்றாம் குலோத்துங்க சோழனது உருவம் அமையப் பெற்றிருப்பதாலும், அவ்வேந்தனது வழிபாடு தெய்வமாகிய சரபமூர்த்தியின், சந்நிதி இங்கு அமைந்திருந்ததாலும் தேர் மண்டபமாகிய இந்நிருத்த சபையைக் கட்டியவன் மூன்றாம் குலோத்துங்க சோழன் என்பதை நாம் உணர முடியும்.

இம்மண்டபத்தின் நடுவில் உள்ள மேற்கூரை தில்லை சிற்றம்பலத்தைப் போலவே மரத்தினால் அமைக்கப் பெற்றுச் செம்புத் தகடு வேயப் பெற்றுள்ளமை காணலாம். இம்மண்டபத்திலுள்ள சிற்பங்கள் யாவும் சிற்பக் கலை வல்லுநா்களாலுமி வியந்து பாராட்டத் தக்க கலை நுட்பமும் வனப்புடையனவாக விளங்குகின்றன.

          திருச்சிற்றம்பலம்.

*தில்லைப் பெருங்கோயில் தொடர் நாளை இன்னும் வ(ள)ரும்.*
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள். இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
[10/10 11:06] ‪+91 99946 43516‬: **சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை. கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
                     *(22)*
🌺 *தில்லைப் பெருங்கோயில் தொடர்.* 🌺
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
நிருத்த சபைக்கு மேற்குத் திசையில் கிழக்கு நோக்கிய சந்நிதியாகப் புண்டரீகவல்லித் தாயார் சந்நிதி அமைந்துள்ளது. அதன் வலப்புறத்தே அமைந்த மண்டபத் தூணில் தெற்கு நோக்கிய நிலையில் தூணில் பாலதண்டாயுதபாணி சந்நிதி அமைந்துள்ளது.

அங்கிருந்து மேலைப் பிரகாரத்தின் வழியே செல்லும் போது குலோத்துங்கன் சோழன் மேலை வாயிலுக்கு எதிரே கீழ்ப்புற மதிலை ஒட்டி மேலே திருமுறை கண்ட விநாயகர் சந்நிதி மேற்கு நோக்கிய  உள்ளது.

அதன் கீழே தாயுமானேசுரர் திருவுருவமும் விநாயகர் திருவுருவமும் அமைந்துள்ளன. இப்பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் சமயாசாரியார் நால்வர் திருவுருவமும் அதன் தென்புறத்தே வேதாகமத் திருமுறைக் கோயிலும் கிழக்கு பார்த்த சந்நிதியாக அமையப் பெற்றுள்ளன.

சமயாசாரியார் நால்வர்க்கு விமானம் அமைத்தும், சந்தானாசாரியார் திருவுருவங்களுக்கு விமானம் புதிதாக அமைத்தும், திருமுறைக் கோயிலை விமானத்துடன் அமைத்தும் குடநீராட்டு விழாவைச் சிறப்பாக நடத்திய பெருமை தருமை யாதீனம் இருபத்தாறாவது குரு மகாசந்நிதிதானம் திருப்பெரும் திரு சண்முக தேசிக ஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்களைச் சார்ந்ததாகும்.

இச்சந்நிதிகளை வணங்கி கிழக்கு நோக்கி வடக்குப் பிரகார வழியே சென்றால், அதனின் வடபகுதியில் பெரும்பற்றப் புலியூர்த் திருமூலட்டானம் எனப் போற்றப் பெறும் தொன்மைத் திருக்கோயிலைக் காணலாம்.

அங்கு புலிக்கால் முனிவரால் பூசிக்கப் பெற்ற சிவலிங்கப் பெருமான் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.  தெற்கு நோக்கிய நிலையில் உமைய பார்வதி அம்மையார் எழுந்தருளியுள்ளார். இவ்விரு சந்நிதிகளையும் வழிபட்டு மீண்டும் தெற்கு நோக்கித் திருமூலட்டானரை வலமாக வரும்பொழுது விமானத்தின் தென்புறத்தில் வல்லப கணபதியையும், மோகன கணபதியையும், ஆலமர் செல்வராகிய தட்சிணமூர்த்தியையும் கண்டு வழிபடலாம்.

அங்கிருந்து வடக்குப் பக்கமாகத் திரும்பி திருமூலட்டான விமானத்தை வலம் வரும் நிலையில் மேற்கு பக்கத்தே மூத்த பிள்ளையார், தலவிருட்சம், சிவலிங்கம் முதலிய திருவுருவங்கள் அமைந்துள்ளமை புலனாகும்.

வடக்குப் பக்க்தே திருத்தொண்டைத் தொகையாற் போற்றப் பெற்ற தனியடியார், தொகையடியார், திருவுருவங்களும், அவர்களது வரலாற்றை வகுத்தமைத்த நம்பியாண்டார் நம்பியின் திருவுருவமும், தொண்டர் சீர் பரவுவாராகிய சேக்கிழார் நாயனார் திருவுருவமும் அமைந்த சந்நிதியை கண்டு தொழலாம்.

திருமூலட்டானேசுவர விமானத்தின் வடபக்கத்தே அமைந்த சண்டீசுவரரை வணங்கிக் கிழக்குப் புறமாகத் திரும்பினால் சிவலிங்கத் திருவுருவில் அமைந்துள்ள அண்ணாமலையாரை வணங்கி மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்பிச் செல்லும் இடத்துக் கீழைப் பிரகாய மூலையில் அமைந்த அலங்கார மண்டபத்தைக் காணலாம்.

அங்கிருந்து தெற்கு நோக்கி மீண்டும் மேற்குப் பக்கமாகத் திரும்பினால் திருவுலாச் செல்லும் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளும் திருமேனிகள் அமர்ந்துள்ள பேரம்பலத்தைக் கண்டு தரிசிக்கலாம்.

தேவசபை என வழங்கும் இப்பேரம்பலம் நடுவே செப்புத் தகடு போர்த்தப் பெற்ற கூரையினை உடையதாய் தென்திசை நோக்கி அமைந்த வாயுலை உடையனதாய் விளங்குகின்றது.

இங்கிருந்து மேற்காக நோக்கினால் கூத்தப்பெருமான் எழுந்தருளியுள்ள பொன்னம்பலமும் அங்குச் செல்லுதற்குரிய கிழக்கு வாயிலும், அவ்வாயில் வழியே சிற்றம்பலத்தைச் சூழவுள்ள முதற் பிரகாரத்தை அடையலாம்.

தில்லைப் பொன்னம்பலத்தைச் சூழத் திருமாளிகைப் பத்தியுடன் அமைந்த இம்முதற் பிரகாரம் விக்கிரம சோழன் திருமாளிகையெனக் கல்வெட்டுக் கூறுகிறது.

இதன் நடுவே இறைவன் ஐந்தொழில் ஆடல் புரியும் சிற்றம்பலம், பொன் வேயப் பெற்ற மேற்க் கூரையையுடையததாயும், அதன் மேலே ஒன்பது கலசங்களைக் கொண்டும், நாற்புறமும் சந்தனப் பலகைகளால் போர்த்தப் பெற்றதாகவும், கிழக்கிலும், மேற்கிலும் ஏறிச் செல்லுதற்குரிய திருவணுக்கன் திருவாயில்களை உடையதாகவும் அமைந்துள்ளன. இதன் முகப்பில் நந்தியெம்பெருமான் எழுந்தருளியுள்ள முகமண்டபம் அமைந்துள்ளன.

சிற்றம்பலத்தின் எதிரேயுள்ள முக மண்டபத்தினை யொட்டிக் கிழக்குப் பக்கத்தில் செப்புத் தகடு போர்த்தப் பெற்றதாய்க் கருங்கற்றூண்கள் தாங்கிக் கொண்டதாய் உள்ள மரக்கூரை அமைந்துள்ளது.

         *திருச்சிற்றம்பலம்.*

தில்லைப் பெருங்கோயில் தொடர் இன்னும் வ(ள)ரும்.

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

**சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
                 *(23)*
🌸 *தில்லைப் பெருங்கோயில் தொடர்.* 🌸
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
செப்புத் தகடுகள் போா்த்தப் பெற்று, கருங்கற்றூண்கள் தாங்கிக் கொண்டனவையாய், இதன்கண் முன் மண்டபமாகிய கனக சபையிலே ஆறு காலமும் சந்திரமெளலீஸ்வரராகிய படிகலிங்கத்திற்கு நிகழும் அபிடேகத்தை அன்பர்கள் பலரும் நின்று தரிசிப்பதற்காக அமைக்கப்பட்டனதென தெரியும்.

இங்கிருந்து வலமாக சிறிது தூரம் மேற்கி நோக்கிச் சென்றோமானால் தென்பாலுகந்தாடும் தில்லைச் சிற்றம்பலப் பெருமான் சந்நிதியை அடையலாம்.

இங்கு நின்ற வண்ணமே அன்பலவர் திருக்கூத்தினைக் கண்டு தரிசிக்கலாம்.  இங்கு நின்ற வண்ணமே அன்பலவர் திருக்கூத்தினைக் கண்டு தரிசிக்கலாம்.

சிற்சபையில் உள்ள சிதம்பர இரகசியத்தையும் கூத்தப் பெருமானையும் சிவகாமியம்மையையும் அணுகி சென்று வழிபடுவோர், சிற்சபையாகிய சிற்றம்பலத்திற்கும், கனக சபையான முன் மண்டபத்திற்கும் இடையே மேற்புறத்தும் கீழ்ப்புறத்தும் அமைந்த திருவணுக்கன் திருவாயில் வழியாக ஏறிச் சென்றால் முன் மண்டபத்தில் நின்று கண்டு தரிசிக்க வேண்டும். இது மரபு.

முன் மண்டபமாகிய கனக சபையில் கூத்தப் பெருமானை நோக்கிய நிலையில் நந்தியெம்பெருமானது திருவுருவம் அமைந்திருப்பதைக் காணலாம்.

தில்லைச் சிற்றம்பலவனைப் பூசிக்கும் தில்லைவாழந்தணர்கள் கனக சபையிலிருந்து சிற்சபையினுள்ளே செல்லுதற்குரிய வழியாக ஐந்து படிகள் அமையப் பெற்றுள்ளன. இப்படிகள் பஞ்சாட்சரப் படிகள் என வழங்கப் பெறுகின்றது.

இப்படிகளின் இருபுறத்தும் இவற்றைத் தாங்கும் நிலையில் யாளித் துதிக்கையுடைய களிற்றின் (யாளியின்) கைகள் அமைந்துள்ளதால் இதனைத் திருக் களிற்றுப் படியென வழங்குதல் சைவ இலக்கிய மரபு.

*திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் திருவுந்தியாரின் வழிநூலாக இயற்றிய நூலை இப்படியில் வைத்த போது இப்படியில் அமைந்த களிறு இந்நூலைக் கூத்தப் பெருமான் திருவடியில் வைத்தது என்றும், அதுபற்றி அந்நூல் திருக்களிற்றுப்படியார்*எனப் பெயர் பெற்றது எனவும் வழங்குகிறது வரலாறு இம்மரபினைக் குறிப்பதாகும்.

கூத்தப் பெருமான் அம்மை காண ஆடல் புரியும் அம்பலத்தைச் *திருச்சிற்றம்பலம்* எனவும், இவ்வம்பலத்தின் மேல் பொன் வேயப் பெற்ற முகடாகிய பின்பகுதியைப் *பேரம்பலம்* எனவும், ஞானசம்பந்த பிள்ளையார் போற்றி பரவிப் பாடியுள்ளார்கள்.

*நிறைவெண் கொடிமாடம் நெற்றிநோர் தீண்டப்*

*பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச்*

*சிறைவன் டறையோவாச் சிற்றம்பல மேய*

*இறைவன் கழலேத்து மின்ப மின்பமே!"*

திருப்பாடல் பொன்மன்றத்தில் இறைவன் ஆடல் புரியும் உள் பகுதியைச் சிற்றம்பலம் எனவும், பொன் வேய்ந்த மேற்பகுதியைப் பேரம்பலம் எனவும், குறித்துப் போற்றியுள்ளமையைக் காணலாம்.

திருநாவுக்கரசு பெருமான் இச்சந்நிதியைத் தில்லைச் சிற்றம்பலம் எனவும், தில்லையம்பலம் எனவும் பாடிப் போற்றியுள்ளார்.

திருமூலநாயனார் பொன்னம்பலம் என இதனைப் போற்றுவதால், அவர் காலத்திலேயே இம்மன்றம் பொன்னினால் வேயப் பட்டிருந்தது எனத் தெரியும். வானுலகத்து உள்ள தேவர்களே தில்லைப் பெருமானைத் தொழுது போற்றி இவ்வம்பலத்தைப் பொன்னினால் வேய்ந்தார்கள் எனக் கோயில் புராணம் கூறுகிறது.

*முழுதும் வானுல கத்துள தேவர்கள்*

*தொழுதும் போற்றியுந் தூயசெம் பொன்னினால்*

*எழுதி மேய்ந்த சிற்றம்பலக் கூத்தனை*

*இழுதை யேன்மறந் தெங்ஙனம் உய்வனோ.*
என்று திருநாவுக்கரசர் திருக்குறுந்தொகையில் அமைத்துப் பரவியுள்ளார்.

இந்தத் திருப்பாடலில் தூய செம்பொன்னினால் எழுதி வேய்ந்த *சிற்றம்பலம்* எனத்  திருநாவுக்கரசுப் பெருமான் குறிப்பிடுதலால்  இவ்வம்பலத்தில் வேயப் பெற்ற  பொற்றகடுகள் ஒவ்வோர் பொன்தகட்டிலும் திருவைந்தெழுத்தை எழுதியே வேயப் பெற்றது.      

திருச்சிற்றம்பலமாகிய பொன்னம்பலத்தில் அறுபத்து நான்கு கைத் சாத்துக்கள் உள்ளன. இவை அறுபத்து நான்கு கலைகளைக் குறிப்பன. அம்பல முகட்டில் 21600 பொன்னோடுகள் வேயப்பட்டுள்ளது.  இவை ஒவ்வொரு நாளும் மனிதர்களாகிய நம்மனோர் விடும் மூச்சு எண்ணிக்கையைக் கொண்டனதாகும்.

பொன்னோடுகளில்   பொருத்தப் பெற்ற ஆணிகள் எழுபத்தீராயிரம். இது மாந்தருடைய சுவாச இயக்கத்தின் ஆதாரமான 72 நாடிகளை உணர்த்துவன.

இம்மன்றத்தின் புறத்தே வெள்ளித் தகடு போர்த்தப் பெற்ற  பலகணிகள் தொண்ணூற்றாறும் சைவ சித்தாந்தத் தத்துவங்கள் முப்பத்தாறும் அவைகளின் விளைவான தத்துவங்கள் அறுபதும் ஆகிய 96 தத்துவங்களை உணர்த்துவன.

சிற்றம்பல வாயிலிலமைந்துள்ள திருக்களிற்றுப் படிகள் ஐந்தும் திருவைந்தெழுத்தை உணர்த்துவனவாகும்.

சிற்றம்பலத்தினுள்ளே பிரணவ பீடத்தில் சிதம்பர ரகசியம் அமைந்துள்ளது. சதாசிவ பீடத்தில் கூத்தப் பெருமானும் சிவகாமியம்மையும் எழுந்தருளியுள்ளனர். நடுவேயமைந்த பீடத்திலுள்ள 10 தூண்களில் 4, நால் வேதங்களையும், 6 ஆறங்கங்களையும் உணர்த்துவதாகும். இம் மன்றத்தின் தூண்கள் 28-ம், சிவாகமங்களை உணர்த்துவதாகும். 
18 கல்தூண்கள்  பதினெண் புராணங்களைக் குறிப்பவாம். அதன் மேலமைந்த 9 கலசங்கள் 9 வாயில்களைக் குறிப்பனவாம். இது இம்மன்றத்தின் தத்துவமான அமைப்பு.

*ஆறு சாத்திரம், நாலுவேதமதில் தூண் ஆகமங்கள் இருபத்தெட்டுடன் ஐம்பெரும் பூதங்கள் பதினென் புராணங்கள் அரியசிறு தூண் உத்திரம் ஏறுசுவை அறுபத்து நாலு கைம்மர நாட்டி எழுபத்திரண்டாயிரம் எழில்வரிச்சுடன் ஆணிபுவனம் இருநூற்றிபத்து நாலும் குலவு சிற்றோடு இருபத்தோ ராயிரமும் கூறும் அறுநூறும் ஆகத் தேறுமொரு பெருவீடு கட்டிவிளையாடும் உமை சிறுவீடு கட்டி யருளே சிவகாம சுந்தரியெனும் பெரிய விமலையே சிறுவீடு கட்டி யருளே.* 
என வரும் சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ்ப் பாடலில் விரித்துக் கூறப் பெற்றிருத்தல் அறியத் தகுவதாகும்.

      *திருச்சிற்றம்பலம்.*

தில்லைப் பெருங்கோயில் தொடர், இன்னும் தொடர்ந்து மணந்து வ(ள)ரும்.

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள். இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

**சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
              *(26)*
☘ *தில்லைப் பெருங்கோயில் தொடர்.* ☘
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்கள் பல. அவற்றுள் கூத்தப் பெருமானுக்கு நிகழும் பெரிய திருவிழாக்கள் ஆனித்திருமஞ்சனமும், மார்கழி திருவாதிரையும் என்பன.

இத்திருவிழாக்களில் கொடியேற்றம்  முதல் எட்டாந் திருவிழா முடிய விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், அம்பாள், சண்டேசுரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் காலை, மாலை இரு பொழுதிலும் திருவீதிக்கு எழுந்தருள்வர்.

ஒன்பதாம் திருநாள் விடியற்காலை கூத்தப் பெருமானும், சிவகாமியம்மையும் சிற்றம்பலத்தினின்றும் எழுந்தருளித் தேர் மேலமர்ந்து விநாயகர், முருகன், சண்டேசருடன் திருவீதியில் உலா வந்தருள்வர். மாலை தேரினின்றும் இறங்கி ஆயிரக்கால் மண்டபத்திற்கு எழுந்தருளி மறுநாள் விடியற் காலை பலரும் கண்டு மகிழத் திருமஞ்சனம் கொண்டருளி, நண்பகல் ஆயிரக்கால் மண்டபத்தினின்றும் புறப்பட்டு அன்பர்கட்கு நடனக் காட்சியருளிச் சிற்றம்பலத்திற்கு எழுந்தருள்வர். கூத்தப் பெருமான் சிவகாமியம்மை காண நடனமாடிக் கொண்டு வரும் இவ்வழகிய தெய்வக் காட்சியே தெரிசனம் எனச் சிறப்பித்துப் போற்றப் பெறுகின்றது.

இங்கு கூறப்பெற்ற ஆனித் திருமஞ்சனப் பெருவிழாவும், மார்கழித் திருவாதிரைத் திருவிழாவும் கங்கை கொண்ட சோழன் ஆட்சிக் காலத்திற்கு முன், தேவார ஆசிரியர் காலத்திலிருந்தே தில்லையில் நடைபெற்று வரும் தொன்மை வாய்ந்த,திருவிழாக் களாகும்.

இச்செய்தி முதல் இராசேந்திர சோழ தேவராகிய கங்கை கொண்ட சோழனது இருபத்து நான்காவது ஆட்சியாண்டில் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர் அணுக்கி நக்கன் பாவை என்பாள் திருவானித் திருநாளில் திருச்சிற்றம்பலமுடையவராகிய கூத்தப் பெருமான் எழுந்தருளும் நாளில் வேண்டும் செலவுக்கும், அமுது படிக்கும், அப்பொழுது மகேஸ்வரர் ஆயிரவருக்குச் *சட்டிச் சோறு* கொடுத்ததற்கும், மாா்கழித் திருவாதிரைத் திருநாளுக்கு வேண்டும் செலவுக்கும், திருமாசித் திருநாளில் திருத்தொண்டத் தொகை விண்ணப்பஞ் செய்தற்கும் ஆக நிலமளித்த செய்தி சிதம்பரம் கல்வெட்டில் உள்ளது.

தில்லைப் பெருங்கோயிலில் சிவகாமியம்மைக்கு ஆண்டு தோறும் ஐப்பசி பூர விழா சோழ மன்னர் கால முதல் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது.

திருப்பாலி வளத்திருநாள் எனக் கல் வெட்டுக்களிற் குறிக்கப்படும் திருநாள் இப்பூர விழாவை ஒட்டியதே.

சீரங்கராயர் ll  சிவகாமசுந்தரி ஐப்பசி பூர-- விழா கொண்டருளும்படி, புறப்பேட்டை என்ற ஊரைத் தேவதானமாகக் கொடுத்துள்ளார்.

பதினெட்டாம் பெருக்கன்று தில்லை இறைவன் கொள்ளிடத்துக்கு எழுந்தருளித் தீர்த்தங் கொடுத்தல் உண்டு. தீர்த்தங் கொடுத்தெற்கெனக் கொள்ளிடத்தின் வடகரையில் இவர் மண்டபம் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாசி மகத்தில் தில்லைப் பெருமான் கடலிற்கு எழுந்தருளித் தீர்த்தங் கொடுக்கும் விழாவும் விக்கிரம சோழன் காலன் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இவ்விழாவில் இறைவன் கடலுக்கு எழுந்தருளுதற்கு இரு பக்கமும் தென்னை வளர்க்கப்பட்ட பெரு வழி அமைக்கப் பெற்றது.

சிதம்பரத்திலிருந்து கிள்ளைக்குச் செல்லும் வழி விக்கிரம சோழன் தெற்குத் வீதி எனக் கல்வெட்டுக்களிற் குறித்துள்ளது.

வசந்தத் திருநாளில் தில்லைப் பெருமான், குலோத்துங்க சோழன் திருத் தோப்புக்கு எழுந்தருளுவான்.

திருக்கண் சாத்தும் திருநாளும் எதிரிலி சோழன் சிவபாத சேகரன் சித்தத்துணைப் பெருமாள் விழாவும் தைப் பூசத்துப் பாவாடை வீட்டுப் பெரிய விழாவும் தில்லைப் பெருங்கோயிலில் நிகழ்ந்தனவாகக் கல்வெட்டுக்களிற் குறிக்கப் பெற்றுள்ளன.

திருமூலட்டானப் பெருமானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் நாள்தோறும் எட்டுக் காலப் பூசைகள் நடைபெற்றன. தில்லையில் திருநீற்றுப் சோழர் பஞ்ச மூர்த்திகளுடனும் சமயாசிரியர் நால்வருடனும் திருவீதியில் உலாப் போந்தமை தில்லையுலாவாற் புலனாகும்.

தில்லைப் பெருங்கோயிற் பூசனை மகுடாமக விதிப்படி முற் காலத்தில் நடைபெற்ற தென்பது, இரட்டையர் பாடிய தில்லைக் கலம்பகத்திலும் கி.பி. 1684--1686 ஆம் ஆண்டுகளில் மராட்டிய மன்னர் சாம்போசி நிகழ்த்திய தில்லைச் சிற்றம்பலவர் கோயிற் கும்பாபிஷேகம் உயிர் ஆகமப்படி நடைபெற்றதாகச் செப்பேடு குறிப்பிலுள்ளது.

பதஞ்சலி முனிவர் செய்த நூலின் விதிப்படி தில்லைக் கோயிலில் நாட் பூசனையும், திருவிழாவும் நடத்தப் பெற்றன எனக் கோயிற் புராணம் கூறும்.

பதஞ்சலி முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் பதஞ்சலி பூஜா விதிப்படியே தில்லையில் கூத்தப் பெருமானுக்குப் பூசை நடத்தப் படுகின்றது. சிவகாம நெறியினைக் கடைப்பிடித்தொழுகிய வியாக்கிரபாதரைச் சைவமுனி எனவும், வைதிக நெறியினைப் பின்பற்றியொழுகிய பதஞ்சலி முனிவரை வைதிக முனி எனவும் கூறுவதுண்டு.

அம்முறைப்படி தில்லைக் கூத்தப் பெருமானுக்கு நிகழ்த்தப் பெற்று வரும் பூசையானது ஆகம நெறிக்கும் வேத நெறிக்கும் ஒத்த பொது நெறியில் நடைபெற்று வருகின்றது.

*தில்லைப் பெருங்கோயில் தொடர் நாளையுடன் மகிழ்ந்து நிறையும்.*

         திருச்சிற்றம்பலம்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள். இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
                (28)
🍁 தில்லைப் பெருங்கோயில் தொடர்.🍁
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
சிவனைத் தொழு குலமாகப் பெற்று அம்முதல்வனின் ஊர்தியாகிய இடபத்தினை இலச்சினையாகக் கொண்டவர்கள் பல்லவ மன்னர்கள்.

அத்தகைய மரபினில் தோன்றிய நந்தி வர்ம பல்லவன் தன் ஆட்சியின் முதற் பகுதியில் சைவ வைணவ சமயங்களிற் சம நோக்குடையனாக விளங்கி வந்தான்.

இவனே அவன் காலத்தில் திருமாலின் திருவருளுக்குரிய அருளாசிரியராகத் திகழ்ந்த திருமங்கையாழ்வாரின் தொடர்பினால் பரம வைணவனாக மாறிவிட்டிருந்தான். 

முகுந்தன் திருவடிகளைத் தவிர வேறொன்றிற்கும் அவன் தலை வணங்காதிருந்தானென்று தண்டந் தோட்டப் பட்டயம் இம்மன்னனைப் பற்றிக் கூறுவதால் இவன் வைணவனாக மாறியது நன்கு புலனானது தெரியும். இவன் பரம வைணவனாக மாறிய பின்பே தில்லைச் சிற்றம்பலக் கோயிலில் முற்றத்தினில் கோவிந்தராசப் பெருமாளை பிரதிஷ்டை புணர்மானம் செய்து விட்டான்.

அதுவும், தில்லைச் திருச்சித்திரக் கூடத்தில் பிரதிஷ்டை புணர்நிர்மானம் செய்யப் பெற்ற கோவிந்தராசப் பெருமாளை முறைப்படி முதலில் பூசனை செய்து வந்தவர்கள் தில்லை மூவாயிரவரான தில்லைவாழந்தணர்களேயாவர்.

இங்குள்ள பெருமாள் திருவுருவம் நடராஜர் கோயிலைச் சார்ந்துள்ள கற்றுக் கோயில் தெய்வம்( பரிவார தெய்வம்) என்பதானளவிலேயே தில்லை வாழந்தணர்களால் முறைப்படு பூசனை செய்யப் பெற்று வந்திருந்தன. 

இவ்வாறே காஞ்சிநகரில் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பரிவாரத் தெய்வமாக எழுந்தருளியுள்ள பெருமானை நிலாத்திங்கள் துண்டத்தான் என திருமங்கையாழ்வார் மங்களாசனம் செய்திருப்பர். 

இங்கு எழுந்தருளிய பெருமாளைப் பூசனை செய்யும் உரிமையை இக்கோயிலின் பூசை முறையினராகிய ஆதிசைவக் குருக்கள் தான். (இவர்களே இன்றளவும் பூசனை மேற்கொண்டுருந்து வருவது நினைப்பிற்குரியன.

இம்முறைமையைத்தான்......

பைம்பொன்னும் முத்தும் மணியுங் கொணர்ந்து
படைமன்னவன் பல்லவர்கோன் பணிந்த
தில்லைத் திருச்சித்திரக்கூடம்.    -என
சித்திரக்கூட ஆராய்ச்சி கூறுகிறது.

இதனாலேயே பல்லவ வேந்தனொருவனாலேயே  அபிமானிக்கப்பட்ட பெருமாள் கோயில் என்று தெரிந்து கொள்க!

பல்லவன் மல்லையர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணகரம்
நந்திபணி செய்தநகர் நந்திபுர விண்ணகரம்.

--கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம்.

இச்சித்திரக்கூட திருமாலை முற்காலத்தில் முறைப்படி ஆராதித்து வந்தவர்கள் தில்லை மூவாயிரத்தவரேயாவார்கள்.

மூவாயிரநான் மறையாளர் முறையால் வணங்க
தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரக்கூடம்


தில்லைநகர்த் திருச்சித்தி கூடந்தன்னுள்
அந்தணர்கள் ஒருமூவா யிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வம்மான்

இதன் மூலம், சிற்றம்பலமான சிவாலய வழிபாட்டையும், தெற்றியம்பலமான சித்திரக்கூட வழிபாட்டினையும், முறையாக பூசனை புரிந்து வந்தவர்கள் தில்லை மூவாயிரவர் என்பதேயாகும்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
                (30)
☘ தில்லைப் பெருங்கோயில் தொடர். ☘
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
கிருஷ்ணதேவராயருக்குப் பின் கி.பி.1529-ல் பட்டத்துக்கு வந்த அச்சுததேவராயர் கி.பி.1539-ல் தில்லை நடராஜர் கோயிலில் கோவிந்தராசப் பெருமாளை பிரதிட்டை செய்து வைகாசநச சூத்திரத்தின்படி பூசை தொடர 500 பொன் வருவாயுள்ள நான்கு கிராமங்களின் வருவாய வரியை நீக்கிக் கொடுத்துள்ளார்.

இவர் பெருமாளை மீண்டும் பிரதிஷ்டை செய்த இடம் முற்காலத்தில் நந்திவர்ம பல்லவன் பிரதிஷ்டை செய்திருந்த திண்ணையளவாகிய சிறிய இடமே என்பது இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆயினும் இங்கு எழுந்தருளச் செய்வித்திருந்த பெருமாளை பூசிக்க ஸ்ரீவைஷ்ணவர்களை அவன் நியமித்தவையால் பெருமாளை வழிபாடு செய்யும் உரிமையையும் அரசன் வழியாகப் பெற்ற அவ்வைணவர்கள் மெல்ல மெல்லத் தங்களுக்குரியதென நடராசப் பெருமான் கோயிலிடங்களை வலிதிற் கைப்பற்றிக் கொள்ள முனைந்து வந்தார்கள்.

வேங்கடபதி தேவமகாராயர் ஆட்சியில் அவருடைய பிரதிநிதியாகச் செஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்த வையப்ப கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கன் என்கின்ற அதிகாரி வைணவர்களின் முயற்சிக்கு உடந்தையாய்க் கி.பி. 1597-ல் நடராஜர் கோயிலில் முதல் பிரகாரத்திலேயே  கோவிந்தராசப் பெருமாளுக்கு தனிக் கோயிலை அமைக்கத் தொடங்கினான்.

இந்நிலையில் தில்லைப் பெருங்கோயிலில் பூசையுரிமை தொன்றுதொட்டுப் பெற்றுடையராகிய தில்லை வாழணந்தணர்களும், நகரப் பொதுமக்களும் நடராசப் பெருமானுக்கேயுரிய இக்கோயிலில் பெருமாளுக்குக்கென  புதியதாய் தனிக்கோயில் கட்டுதல் வேண்டாம் என்றும், இரண்டாம் பிரகாரத்தில் முன்னிருந்த இடத்திலேயே பெருமாளுக்குப் பூசை நிகழச் செய்தலே பொருத்தமாகும் எனவும் அவ்வதிகாரியை எவ்வளவோ முறை நயந்து கேட்டார்கள்.

கொண்டம விடாக்கண்டம நாயக்கனாகிய அவ்வதிகாரி, அவர்களது வேண்டுகோளை பொறுபடுத்தாமல் கோவிந்தராசர் சந்நிதியைப் பொன்னம்பலவாணர் சந்நிதிக்கு மிகவும் அருகிலேயே அமைக்கத் தொடங்கினான்.

இந்நிலையில் தில்லைவாழந்தணர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தேனும், அவன் செயலைத் தடுத்து நிறுத்த உறுதி பூண்டனர். 

தாங்கள் உயிரோடிருக்கும் வரை நடராஜர் கோயிலின் உட்புறத்தில் கோவிந்தராசப் பெருமாள் கோயில் கட்டுவதற்கு இணங்கமாட்டோம் எனச் சொல்லி ஒருவர் பின் ஒருவராக கோயிலின் கோபுரத்திலேறி கீழே வீழ்ந்து குதித்து உயிரை விடுவாயினரானார்கள்.

இவ்வாறு இருபது பேர்கள் வரை தற்கொலை செய்து கொண்ட துண்பக் காட்சியினை தன் கண்களாற் கண்டும் இதயமில்லாத கொண்டம நாயக்கன், கோபுரத்தின் மீதேறி தற்கொலை செய்ய முந்துபவர்களையெல்லாம் துப்பாக்கி கொண்டு சுட்டுத் தள்ளும்படி உத்தரவிட்டான். 

இதன்படியினாலும் இரண்டு  தில்லைவாழந்தணர்கள் சுடப்பட்டு உயிரொழிந்து போனார்கள்.

இவ்வாறு செய்யும் கொண்டம நாயக்கனின் துண்பநிலையைப் பொறுக்கமாட்டாத தில்லைவாழந்தணர் குடும்பத்தைச் சேர்ந்த அம்மையார் ஒருவர் தன் கழுத்தை தானேயறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவ்வாறு அரசாங்க அதிகாரியொருவனது சமயப் பிடிவாத காரணமாய் சிதம்பரம் திருக்கோயிலுக்குள்ளே இன்பதுன்பச் செயல்கள் நிகழ்ந்த நாளில், மேலை நாட்டிலிருந்து யாத்திரை செய்ய தமிழ்நாட்டிற்கு வந்திருந்து சுற்றுப்பயணம் செய்த பிமெண்டா என்னும் பாதிரியார் கொண்டம நாயக்கன் செய்யும் கொடுங்கோலினை நேரில் பார்க்க நேர்ந்து, வருந்தியதுடன் இக்கொடுஞ் செயலைத் தம்முடைய யாத்திரை குறுப்பில் எழுதி குறித்துவைத்து விட்டார்.

இந்நிகழ்ச்சியினையுணரும் நல்லறிவுடையோர் யாவரும்கண்ணீர் விட்டு வருந்தினார்கள்.

             திருச்சிற்றம்பலம்.
**சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
கோவை.கு.கருப்பசாமி.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
                     ( 31 )
🍁 தில்லைப் பெருங்கோயில் தொடர்.🍁
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
நந்திவர்ம பல்லவன் திருமால் மூர்த்தத்தைத் தில்லைக் கோயிலில் பிரதிஷ்டை செய்த காலத்தில் அத்திருமேனி திண்ணணயளவாக அமைந்த சிறிய இடத்திலேதான் வழிபடப் பெற்றது. பின் நானூறு ஆண்டுகள் கழித்து அச்சுதராயர் பிரதிஷ்டை செய்ததும் அதே இடத்தில்தான் சமய வெறி பிடித்த வையப்ப கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கன் என்பவனானவன் கி.பி.1597 -ஆண்டில் முன்னிருந்த அத்தொற்றியம்பலத்தளவில்  நில்லாது நடராசர் சந்நிதி முகப்பிலுள்ள இடத்தையும் சேர்த்துக் கொண்டு கோவிந்தராசப் பெருமாளுக்குத் தனிக்கோயில் கட்டிவிட்டான்.  இந்த வம்புகளுக்கெல்லாம் காரணம் வைஷ்ணவத்தை எங்கும் பரப்ப வேண்டுமென்று முயன்ற விசயநகர அரசா்களும் அவர்களுக்குத் துணை நின்ற அவர்களுடைய குரு தாதாசாரியாரும் ஆவர். 

கிருஷ்ணப்ப நாயக்கனுக்குப் பின் விசயநகர மன்னனாகிய சீரங்கராயன் ||| கி.பி.1643-ல் தில்லைக் கோவிந்தராசர் சந்நிதியை மேலும் விரிவுபடுத்த எண்ணி முன்பு இல்லாத புண்டரீக வல்லித் தாயார் சந்நிதி முதலிய புதிர சந்நிதிகளையும் தில்லைக் கோயிலில் அமைத்து விட்டான்.

இவர்களுடைய மதவெறி காரணமாகத் தில்லைத் தில்லை நடராசர் கோயிலிற் பழமையாக இருந்த சிவசந்நிதிகள் பல இடிக்கப்பட்டு மறைந்து போயின.

இவ்வாறு வைஷ்ணவர்கள் கொஞ்சங் கொஞ்சமாகத் தில்லைக் கோயிலின் பெரும் பகுதியைத் தமக்கு உரிமையாக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபவராயினர்.  அதனையுணர்ந்த தில்லைநகரச் சைவப்பெரு மக்களும் தில்லைவாழந்தணர்களும் கொதித்தெழுந்து தில்லைக் கோயிலில் கோவிந்தராசப் பெருமாளுக்கு இனி இடமில்லையென்று கூறும் அளவுக்குப் பெருமாள் சந்நிதியையே அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவாராயினர். 

அந்நிலையில் கோவிந்தராசப் பெருமாள் பூசை முறையினைக் கண்காணிக்கும் உரிமையுடைய ஸ்ரீ வைஷ்ணவர்கள் கி.பி. 1862 -ல் தில்லைப் பெருங்கோயில் பூசை முறை உரிமையாளராகிய தில்லை வாழந்தணர்களோடு ஓர் உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டிய  இன்றியமையாமை உண்டாயிற்று. 

சிதம்பரம் கோவிந்தராசப் பெருமாள் பூசை முறையைக் கவனிக்கும் உரிமையுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் பெருமாள் பூசை முறையைக் கவனிக்கும் உரிமையுடைய ஸ்ரீ வைஷ்ணவர்கள் தில்லை வாழந்தணர்கட்கு ஒப்பந்தம் ஒன்றை எழுதிக் கொடுத்தனர். அந்த உடன்படிக்கையில் தாங்கள் கோவிந்தராசப் பெருமாளுக்குச் செய்து வரும் நித்திய பூஜைகளைத் தவிர வேறு பிரமோட்சம் நடத்துவதுவதில்லையெனவும், தில்லை நடராசப் பெருமானுக்குத் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் நித்திய பூசைகளிலும் திருவிழாக்களிலும் நாங்கள் தடையாக இருக்க மாட்டோமென்று என்று ஒப்புக் கொண்டு உறுதி கூறினார்கள்.

இவ்வுறுதியின் பேரில் கி.பி. 1867-ல் நீதிமன்றமும் இதையே தீர்ப்பாய் வழங்கியுள்ளது. 

தில்லைப் பெருங்கோயிலில் சைவரும், வைணவர்களும் அதன்பிறகு அன்பினால் ஒன்றுகூடி பெருந் தெய்வமான நடராசர் மற்றும் கோவிந்தர் ஆகிய தெய்வங்களை வழிபட்டு மகிழ்ததற்குரிய அமைதியான சூழ்நிலை தொடர்ந்து நிலைபெற்றுள்ளது என்பதனை இத்திருக்கோயிலுக்கு வரும் அன்பர்கள் எல்லோரும் நன்குணர்வர். இத்தகைய அமைதி நிலையே என்றும் நின்று நிலவி இன்பம் அளிப்பதாகியது.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                   *(42)*
🍁 *தெரிந்தும் தெரியாமலும் தொடர்.*🍁
"""""""""""""""""""""""""''''"""""""""'''''''''"""''"'''''''''''''''''''''''''''""'"
குனிந்து பாா்த்தால் ஆகாயம் தொியும்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிவனின் அம்சமான நடராஜ பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறு நாட்கள் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

மாா்கழி, திருவாதிரை நட்சத்திரம், ஆனி மாத உத்திர நட்சத்திரம் ஆகிய நாட்களில் மட்டும்தான் அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். இதில் ஆனி உத்திர நாளில் நடக்கும் அபிஷேகத்தை, *"ஆனி திருமஞ்சனம்"* என்பதாகும். 

சித்திரைமாதம் திருவோண நட்சத்திரம் மற்றும் ஆவணி, புரட்டாசி மற்றும் மாசி மாத வளா்பிறை சதுா்த்தசி திதி ஆகிய நான்கு நாட்களில் மாலையில்தான் அபிஷேகம் நடக்கும்.

இந்நாட்களின்போது, நடராஜபெருமானின் பஞ்ச சபைகளில் மிவும் சிறப்பான பூஜை உண்டு. *ரத்தின சபையான திருவள்ளூா் மாவட்டம், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயில்,* *பொற் சபையான சிதம்பரம்,* *வெள்ளியம்பலமான மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரா் கோவில்,*  *தாமிர சபையான திருநெல்வேலி நெல்லையப்பா் கோவில்,*  *சித்திர சபையான திருக்குற்றாலம் திருக்குற்றால நாதா் கோவில்,* ஆகியவையே.

இதில் சிதம்பரம் எனும் பொற்சபை, மிகவம் புகழ் பெற்று விளங்குவதாகும். அதற்குக் காரணம், இங்குதான் சைவத்தின் உயிா்நாடியான , தேவாரப் பாடல்கள் கிடைத்த இடம். 

திருநாவுக்கரச நாயனாா் மேற்கு கோபுர வாசல் வழியாகவும், சுந்தர நாயனாா் வடக்கு கோபுர வாசல் வழியாகவும், சம்பந்த நாயனாா் தெற்கு கோபுர வாசல் வழியாகவும், வந்து இறைவனை தாிசித்தனா். இம்மூன்று நாயன்மாா்களும் தேவாரம் பாடினாா்கள்.

சிவ வழிபாட்டின் மற்றொரு உயிா் மூச்சான  திருவாசகத்தேனைத் தந்த மாணிக்கவாசகா், கிழக்கு கோபுர வாசல் வழியாக வந்து நடராஜ பெருமானைத் தாிசித்தாா்கள்.

ஆத்ம ஞானம் வேண்டி, தில்லையில் மரங்கள் அடா்ந்த வனத்தினுடே இருந்த சிவலிங்கத்தை மாத்யந்தினா் என்பவா் தினமும் பூஜித்து வந்தாா். வைகறைப் பொழுதின்போது பூஜைக்குாிய மலா்களை பறிக்கும்போது, அதோடு அழுகிய மலா்களும் சோ்ந்து வரவே, அதற்கு முன் இரவிலேயே நல்ல மலா்களை பறிக்க, எனக்கு இருட்டிலும் கண் தெளிவாக தொியவும், கூடவே மரம் ஏறிப் பறிக்க கூறிய நகங்களும் வேண்டுமென சிவனிடம் அருள் வேண்டினாா் மாத்யந்தினா்.

அவாின் விருப்பம் போலவே ஈசனும் அவருக்கு இருளில் ஒளி பெறும் கண்களும், மரமேறிப் பூ பறிக்க நகங்களையும் தந்து அருள்பாலித்தாா். 

இவ்விதம் அருள் வேண்டி பெற்றவரே மாத்யந்தினா் எனும் வியாக்ரபாதா் ஆவாா். வியாக்ரபாதம் என்றால் புலிக்கால் எனப் பொருள். வியாக்கிரபாத முனிவரும், பதஞ்சலி முனிவரும் தினமும் நடராஜாின் திருநடத்தை கண்டு ரசிக்கும் பேறு பெற்றவா்கள். இவ்விரு முனிவா்களின் சிலைத்திருமேனிகளை நடராஜா் சன்னதிகளில் பாா்க்கலாம்.

நடராஜா் தலமான சிதம்பரத்தை, *சித்+அம்பரம்* என பிாிப்பா். *சித்* என்றால் *அறிவு; *அம்பரம்* என்றால் *வெட்ட வெளி ஆகாயம்* அதாவது, *ஒன்றுமே இலாதது* எனப் பொருள். மானிடா ஒன்றுமே இல்லை....!" என்பதுதான் அது!". இதுதான் *சிதம்பர ரகசியத்தின்* உட்பொருள்.

நடராஜா் சன்னதியின் வலது பக்கத்தில், சிறு வாசல் உள்ளது. இதனுள் தங்க வில்வ மாலை தொங்க விடப்பட்டு, அதையும் திரைச் சீலை கொண்டு மறைத்தே வைக்கப் பட்டிருக்கும். 
பூஜையின்போது மட்டும்  திரைச்சீலை விலக்கப்பட்டு, தங்க வில்வ மாலைக்கு ஆரத்தி காட்டப்படும். ஆரத்தியின் குனிந்து பாா்த்தால் உள்ளே ஒன்றுமே இல்லையாம். வெறும் ஆகாயம் மட்டும்தான் தொிகிறதாம்.

*(சில மாதத்திற்கு முன்பு தஞ்சை, ஆலங்குடி,  சீா்காழி, வைத்தீஸ்வரன் கோவில், சிதம்பரம் ஆகிய தலங்களுக்கு யாத்திரை அடியேன் சில அடியாா்களுடன் சென்றேன். சிதம்பரம் சென்ற போது, நடராஜாின் வலதுபக்க சிறுவாசல் வழியாக செல்ல அடியேனால் முடியவில்லை. காரணம் கட்டணம் 500 செலுத்தித் தான் செல்ல முடியும். அந்த நிமிடத்தில் பொருளாதாரம் சிக்கலுடன் நடராஜ பெருமான் சன்னதியில் நுழைந்திருந்தோம். எனவே அது முடியாமற் போனது. எனவே, இதற்குன்டான கட்டணத்துடன், அடியாா்கள் நினைவில் கொண்டு பொருளாதார நிலையுடன் சென்று தாிசித்து வர வேண்டுமென குறிப்பிடுகிறேன்.)*

இறைவன், ஆகாயம் போல் பரந்து விாிந்தவன். ஆகாயத்துக்கு ஆரம்பமோ, முடிவோ கிடையாது. அதுபோலதான் இறைவனும் முதலும் முடிவும் இல்லாப் பெருமான் என்பதைக் குறிப்பதாகும்.

இதோடு கருத்தையும் கூறுவாா்கள்; *சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மைக்குாிய 
ஸ்ரீசக்கரத்தையும், சிவனுக்குாிய சிவசக்கரத்தையும் இணைத்து பிரதிஷ்டை செய்துள்ளதாகவும் செய்தி. 

இனி வரும் ஒவ்வொரு  ஆனி திருமஞ்சன திருநாளில், ஆனந்த நடனமிடும் நடராஜப் பெருமானை வழிபட்டு ஆனந்தப் பெருவாழ்வு பெற முனைவோமா???????....!!!!!!!!!

             திருச்சிற்றம்பலம்.

*மீண்டும் தெரிந்தும் தெரியாமலும் மற்றொரு தொடரில்......*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
*அடியாா்கள் கூட்டம் பெருகிட, அடியாா் தொண்டு செய்யுங்கள்.*