Wednesday, May 31, 2017

Thiru Innambar temple

சிவாயநம. திருச்சிற்றம்பவம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                    *(2)*
🍁 *சிவத்தல பெருமைகள், அருமைகள்,*🍁 
நேரில் சென்று தரிசித்ததை போல தொடர்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    🍁 *திரு இன்னம்பர்.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*இறைவன்:* எழுத்தறிநாதர்,தான்தோன்றீசர்.

*இறைவி:* சுகுந்தகுந்தாளம்பிகை,(கொந்தார் பூங்குழல் அம்மை, (மின்கொம்பனையாள்.),நித்தியகல்யானி.

*தலமரம்:* பலா, மற்றும்
 செண்பக மரம்.

*தீர்த்தம்:* ஐராவத தீர்த்தம்.

சோழ நாட்டின் காவிரி வட கரையில் அமையப் பெற்றிருக்கும் அறுபத்து மூன்று தலங்களில் இந்த இன்னம்பர் தலம் 45-வது தலமாக போற்றப் பெற்றிருக்கிறது.

*வழி*
கும்பகோணம்- திருவையாறு பாதையில் புளியஞ்சேரி செல்ல வேண்டும். அப்படி அந்தச் சாலையில் செல்லும் போது, திருப்புறம்பியம் எனும் கைகாட்டி வழிகாட்டும் வழி தடத்தில் மூன்று கி.மீ தொலைவில் இன்னம்பர் திருக்கோயில் திருத்தலத்தை அடையலாம்.

*பெயர்க் காரணம்:*
இனன் (சூரியன்) வழிபட்டதால் இத்தலம் இன்னம்பர் ஆனது.

*கோவில் அமைப்பு:* கிழக்கு நோக்கிய இராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. பழங்கால கட்டுமானத்தால் ஆனது. இதில் பொம்மைகள் அதிகமாக கிடையாது.

கோபுரத்தை அடுத்து உள் நுழைந்தோமானால், நடுவில் விநாயகர். 
பலி பீடம்.
நந்தி மண்டபம்.
வலபக்கம் அம்பிகை சந்நிதி,இதுவே வெளிப் பிரகாரம்.
உள் வாயிலைத் தான்டிச் சென்றீர்களானால்,விசாலமான உள் பிரகாரம் வரும்.
கிழக்குச் சுற்றில் முதலில் சூரியன்.
தென் கிழக்கு மூலையில்-மடப்பள்ளி.
தெற்குச் சுற்றில் தென்மேற்கு மூலையில் சற்று முன்னதாகவே நால்வர் சந்நிதி இருக்கிறது.
தென்மேற்கு மூலையில் கன்னி மூல கணபதி நம்மைப் பார்க்கிறார்.
மேற்குச் சுற்று இருக்கும் இடங்களில் சுவாமியின் வாகனங்கள் காத்திருக்கின்றது.

மூலவருக்கு நேர் பின்புறம் சந்நிதியில் பாலசுப்பிரமணியர் நம்மை வரவழைக்கிறார்.

இதைத் தொடர்ந்து லிங்கங்கள், மகாலட்சுமி சந்நிதி, 

வடக்குச் சுற்றில் தெற்கு நோக்கி பார்த்த வண்ணம் விஷ்ணு, துர்கை சந்நிதி, 

இதிலிருந்து சில அடிகள் தூரம்தான் மாடம். இந்த மாடத்தில் நடராசர் இருக்கிறார். வழக்கமான இந்த நடனக் கோலம்,  நம்மை மெய்மறக்கச் செய்கிறது.

பின், வடக்குச் சுற்றிலிருந்து கிழக்குச் சுற்றுக்குள் திரும்பும் இடத்தில், பைரவர் சந்நிதி வரவேற்கிறது. 

அடுத்து சந்திரன், முகப்பு மண்டபம் இவைகளயடுத்து, வலப்பக்கத்தில் அம்பாள் நித்யகல்யாணியின் சந்நிதியைக் காணலாம்.

இங்கு இரண்டு அம்பாள் சந்நிதிகள் இருக்கின்றன.

நித்யகல்யாணியம்மையை வணங்கிய பின், மூலவர் சந்நிதிக்குச் செல்லும் வழியில் முன் அர்த்த மண்டப வாயிலில் விநாயகர் இருக்கிறார். 

துவார பாலகர்கள் இருவர் இருக்கிறார்கள். 

வெளிப் பிரகாரத்தில் பிரதான அம்பாளான சுகுந்தகுந்தளாம்பிகை சந்நிதி உள்ளது.

இதன் முகப்பு மண்டபத்தில் நவக்கிரக நாயகர்கள் உள்ளனர்.

நின்ற கோலத்தில் சதுர்புஜ (நான்கு கரங்களுடன்) அம்பாளைக் கண்டு வணங்கிக் கொள்கிறோம். 

மூலவர் விமானம் கஜபிருஷ்ட விமான அமைப்பு கொண்டது.

*தேவாரம் பாடியவர்கள்:*
மொத்தமாக பாடல்கள்-5.
*சம்பந்தர்* 3-ல் ஒரு பாடல்.
*அப்பர்* 4-ல் இரண்டும், 5-ல் ஒன்றும், 6-ல் ஒன்றும்.

*தல பெருமை:*
இந்திரனது யானை ஐராவதம் பூசனை புரிந்த தலம்.

பாற்கடலில் தோன்றியதும், நான்கு கொம்புகளை உடையதுமான ஐராவதம் துருவாசருக்கு தக்க மரியாதை செலுத்தாத காரணத்தால், காட்டு யானை என்று சாபம் பெறப்பட்டது.

தனது சாபம் தீர இன்னம்பரில் தீர்த்தம் ஒன்றை ஏற்படுத்தி அதில் மூழ்கி நீராடி இறைவனை வழிபட்டு வர சாபம் தீரும் என அறிந்து கொண்டது.

எனவே அதன்படி செய்து குறைகள் நீங்கப் பெற்றது.

முன்னர் காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் செண்பக மரங்கள் நிறைந்த காடாக இருந்திருக்கிறது.

அப்போது சாபத்துக்குள்ளான காட்டுயானை செண்பக மரத்தடியில் தீர்த்தம் தோன்ட முயன்றுது. 

அப்படித் தோண்ட முயலுகையில் அகழ்த்திய அவ்விடத்திலிருந்து இன்னம்பிரான் என போற்றப்படுகிற சிவலிங்கத் திருமேனி வெளிப்பட்டுத் தோன்றின.

*தல வரலாறு.:*
சுதன்மன் என்பவர் ஒரு கணக்கர்.
அவரின் தந்தையும் கோயில் கணக்குகளின் வரவு செலவினை பார்த்துக் கொண்டு வந்தவர்.
கொடுப்பவர்கள் சண்டேசுவரர் திருமுன் நின்று கொடுப்பதாகச் சொல்வார்கள்.
அதே போல, செய்பவர்களும் சண்டேசுரர் திருமுன் நின்று செய்வதைச் சொல்வார்கள். 
அதன்கண் சொல்லிய வாக்கினை நிறைவேற்றுவர்.
சுதன்மனும் என்னென்ன வேலைகள் நிலுவையில் உள்ளதோ, நிலுவையிலுள்ள அவ்வேலைகளை அவர் சண்டேசுரர் திருமுன் நின்று சொவ்வார்.
இரண்டொரு நாட்களில் நிலுவையிலுள்ள அவ்வேலைகள் சரியாகிட வழி கோலிடமாகும்.

சோழப் பேரரசர் பணிகளைப் பார்வையிட்டார். கணக்குப் பதிந்து வைத்திருக்கும் பேரேடுகளை பார்வையிட சுதன்மன் கணக்கரிடம் கேட்டார்.

சுதன்மன் எவ்வளவு விரைவாகவும், நேர்த்தியாகவும் திருப்பணிகளைச் செய்வது என்பதில் இருந்தாரே தவிர அந்தச் சமயம் எழுதி வைக்கும் சிந்தனை கொஞ்சம் தள்ளிப் போனது.

அரசன் இவரின் கருத்தை ஏற்கவில்லை.

சுதன்மன் இறைவன் முன் வந்து நின்று இறைஞ்சினார். 

எப்படி கணக்கு எழுதுவது?

எங்கே தொடங்குவது?

கைச்சாத்துக்களுக்கு எங்கே போவது?

தவறான கருத்தை சமர்பித்தால், இறைவனுக்கும் ஊராருக்கும் பழுது ஏற்படுமே என்று எண்ணி பித்துப் பிடித்தவர் போல் பல நாட்களாய் அப்படியே கிடந்தார்.

சிவனார் சுதன்மனாக வேடமெடுத்துக் கொண்டார்.

சண்டேசுரர் ஊர்த் தலைமைக் கணக்கரானார்.

பேரேடுகளையும், குறிப்புகளையும், வரவு பற்று சிட்டைகளையும், இருப்பு உள்ளனவ விபரத்தையும், உறையூர் சென்று மன்னன் முன் ஐந்தொகை கணக்கை சமர்பித்தார்.

*கணக்கின் ஐந்தொகை என்பது(வரவு, பற்று, செலவு, கொடுத்து, பாக்கி வைத்தது , கையிருப்பு முதலியனவையை எழுதி வைத்திருப்பதை ஐந்தொகை என்று கூறுவர். இவ்வழக்கம் இன்றும் விற்பனை வரி அதிகாரிகளால் வியாபார நிறுவணங்களிடம் வருடந்தோறும் கணக்கு தணிக்கை செய்வது வழக்கம்.)* 

ஐந்தொகை கணக்கின் நேர்த்தியையும், விபரத் துல்லியத்தையும் பார்த்த அரசர் வியந்து அசந்து போனார்.

இவ்விபரமான கணக்குகளின் தன்மையை தன் அரண்மனை கணக்கனுக்கும் புரிதல் வேண்டும் என நினைத்த அரசன், அரண்மனைக் கணக்கரை சதன்மனிடம் சென்று கணக்கு எழுதும் ஐந்தொகை முறையை கற்றுத்தேறுமாறு அனுப்பி வைத்தான்.

அகத்தியர், ஐராவதம், சூரியன் வழிபட்ட தலம்.

அகத்தியர் இலக்கண உபதேசம் செய்த தலமும் இது!.

ஈசன் தாமே கணக்கு எழுதிக் கொடுத்த தலமும் இது!

என்னதான் மாணவன் பாடம் பயிண்று தேர்வைச் சந்தித்தாலும், கல்வி சம்பந்த போதனையை இன்னம்பர் முன் வந்து வணங்கிச் செல்ல கல்வி பழுதில்லா அருள் வரமாகும்.

*திருவிழாக்கள்.* 
கார்த்திகை சோமவாரங்கள்.
நவராத்திரி.
மார்கழியில் நடைபெறும் மாணிக்கப் பெருந்தகையார் உற்சவம் இத்தலத்தில் மிக மிக சிறப்பு.
ஆனி மாதத்தில் திருக்கல்யாணம்.

*பூசனை முறை:*
சிவாகம முறையில் நான்கு கால பூசை.

காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை.

மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

*அஞ்சல் முகவரி.*
அருள்மிகு. எழுத்தறி நாதேசுவரர் திருக்கோயில்.
இன்னம்பர் அஞ்சல்.
(வழி) திருப்புறம்பியம்.
கும்பகோணம் வட்டம்.
தஞ்சை மாவட்டம். 612 303

*தொடர்புக்கு:*
பாலசுப்பிரமணிய குருக்கள்.
96558 64958
0435--2000157

*நாளை..திருப்புறம்பயம்.*

          திருச்சிற்றம்பலம்.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்திருக்கிறீர்களா? இறைவன் அவர்களுக்குள்ளிருந்து உங்களைப் பார்ப்பான்.*

No comments:

Post a Comment