Sunday, May 14, 2017

Sthalasayana temple

*ஸ்ரீஸ்தலசயனப் பெருமாள்* 
*திருக்கடல்மல்லை*

இத்தலத்தில்  திருமால்  ஆதிசேசனில்  பள்ளி  கொள்ளாமல்  ஸ்தலத்தில்  பள்ளி கொண்டுள்ளார்.திருப்பாதத்தின் அருகில் புண்டரீக   மகரிஷி அமர்ந்துள்ளார். 

மூலவர் - *ஸ்தலசயனப் பெருமாள்* 

சயனத் திருக்கோலம். புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம். வலது திருக்கரத்தை திரு மார்பின் மீது உபதேசமுத்திரையாக வைத்து, 'ஞானத்தமிழ் புரிந்த நான்' என்பதை விளக்குகிறார்.

உத்ஸவர் - *ஸ்தலசயனத்துறைவார்* (உலகுய்ய நின்றான்) .

உற்சவப்பெருமாள்  கையில்   தாமரை  மலருடன்  நிற்கும்  ஒரே திருத்தலம் .

பூதத்தாழ்வார் அவதார தலம்

நண்ணாத வாள் அவுணர் * இடைப் புக்கு * வானவரைப்
பெண் ஆகி * அமுது ஊட்டும் பெருமானார் * மருவினிய
தண் ஆர்ந்த கடல் மல்லைத் * தல சயனத்து உறைவாரை *
எண்ணாதே இருப்பாரை * இறைப் பொழுதும் எண்ணோமே *

திருமங்கை ஆழ்வார்  
பாற்கடலில் கடைந்து எடுத்த அமுதத்தை தீயவர்களான அசுரர்களுக்கு கிடைக்காமல் இருக்க மற்றவர்களை தன் கவர்ச்சியால் மயக்க, அழகான மோகினி பெண்ணாய் மாறி தேவர்களுக்கு அமுதை ஊட்டும் பெருமாளும்,
இனிமையாக பொருந்திய குளிர்ச்சியான இடமான மகாபலிபுரம் கடல் மல்லைத் தல சயனத்தில் வசிப்பவருமான எம் செல்ல பெருமாளை எண்ணாமல் இருப்பவரை ஒரு நொடி பொழுது கூட எண்ண மாட்டோம்.


ஸ்ரீ மணவாள மாமுனிகர், பிள்ளைலோகம் ஜீயர் மங்களாசாஸனம் செய்த ஸ்தலம்.

*ஸ்ரீ நிலமங்கைநாச்சியார் ஸமேத ஸ்ரீ ஸ்தலசயனத்துறைவான் ஸ்வாமிநே நம:*

No comments:

Post a Comment