Monday, May 22, 2017

Sekizhar and his thirukural

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
              .     *(57)*
🍁 *தெரிந்தும் தெரியாமலும் தொடர்.* 🍁
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
🍁 *சேக்கிழார் மொழிந்த மூன்று திருக்குறள்.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

*சோழநாடு சோறுடைத்து, *பாண்டிய நாடு முத்துடைத்து, *சேர நாடு வேழமுடைத்து* என தெய்வத்  திருதமிழ்நாட்டில் நாடுகளின் சிறப்புகளைப் பற்றிக் கூறும்போது *தொண்டை நாடு சான்றோருடைத்து* எனக் கூறுவார்கள்.

தொண்டைநாடான புலியூர்க் கோட்டத்தில் குன்றத்தூர் நகரில் *சேக்கிழார்* பிறந்தார்.

இவரின் பெற்றோர்கள் இவருக்கிட்ட பெயர் *அருண்மொழித் தேவர்.* ஆகும்.

வேளாளர் குலத்தைச் சார்ந்தவரான சேக்கிழாருக்கு *பாலாறாவாயர்* என்கிற தம்பியும் உண்டு.

சேக்கிழாரின் தந்தையார் அவர்கள் அநபாயச் சோழரிடத்தில் அமைச்சராய் பொறுப்பு வகித்து வந்தார்.

சோழ மன்னன் அவையில் கூடியிருந்த சமயத்தில், அமைச்சரிடம்--- *மலையினும் பெரியது?*, *உலகினும் பெரியது எது?*, *கடலினும் பெரியது எது?* என மூன்று கேள்விகளைக் கேட்டுவிட்டு, இதற்குரிய பதிலை நாளைக்குள் தரவேண்டுமென மன்னன் பணித்தார்.

சேக்கிழாரின் தந்தையார், மன்னர் கேட்ட மூன்று கேள்விகளுக்கும் விடையை சிந்தித்து அலசிக் கொண்டிருந்தார்.

அச்சமயம் வீட்டிலிருந்த இளமையாக இருந்த சேக்கிழார், மன்னரின் மூன்று கேள்விகளுக்கும் பதிலை நான் எழுதித் தருகிறேன் என்று சொன்னவர், வீட்டின் அறையினிலிருந்து.ஏடும் எழுத்தாணியும் எடுத்து வந்து, அவ்வேட்டிலே மூன்று திருக்குறள்களை எழுதி தந்தையாரிடத்தில் கொடுத்தார்.

மகன் எழுதித்தந்த திருக்குரல்களைப் படித்துப் பார்த்த அவர், விடை கிடைத்து விட்டதை என்னி சந்தோஷமடைந்தார்.

மறுநாள் தனது மகன் எழுதித் தந்த திருக்குறட்பாக்களுடன் மன்னரிடம் சென்று படித்து வாசித்தார்.

மன்னர் கேட்ட மூன்று குறட்பாக்களிலும் தனது கேள்விக்குரிய விடை இருந்ததை என்னி மன்னர் அதிசயித்து சந்தோஷித்து மீண்டும் மீண்டும் அக்குறள்களை படித்தார்.

இதுதான் அந்தக் கேள்விக்கான விடை......

*நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.*

*காலத்தி னாற்செய்த நன்றி சிறிதுஎனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.*

*பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது.*

மூன்று கேள்விகளுக்கும் திருக்குறளிலிருந்தே விடை சொன்ன திறத்தை மன்னர் பாராட்டினார்.

ஆனால் சேக்கிழாரின் தந்தையார், இந்த விடைகளை எனது மகன் *அருண்மொழித் தேவர்*-தான் எழுதித்.தந்தான் என்ற உண்மையைத் தெளிவுறுத்திக் கூறினார்.

அதற்கு இன்னும் மன்னன் சந்தோஷமாகி அமைச்சரின் மகனை அழைத்து வரச் செய்து அரசவையில் வைத்து முதன்மந்திரி பதவியைக் கொடுத்தார்.

அருண்மொழித்தேவர் மிக மிகத் திறமையாக பணியாற்றிய காரணத்தினால் அவரின் அறிவாற்றலைக் கண்டு வியந்த அநபாயச் சோழன், *உத்தமச் சோழபல்லவர்* என்கிற பட்டத்தைச் சேக்கிழார்க்கு கொடுத்தார்.

சேக்கிழாருக்கு திருநாகேச்சுவரம் திருக்கோயிலின் மீதும், திருநாகேச்சுவர பெருமான் மீதும் அளவில்லா பக்தி கொண்டிருந்தார்.

திருநாகேஸ்வர சுவாமியையே தனது இஷ்ட தெய்வமாகக் கொண்டிருந்தார்.

எனவே, தனது பிறந்த குன்றத்தூரில் திருநாகேச்சுவரத்தில் இருப்பது போன்றே அழகிய ஆலயத்தை அமைத்து அன்றாடம் வழிபாடுகள் செய்து வர ஆவண செய்தார்.

சேக்கிழார் புகழ் மேலும் ஓங்குக
            திருச்சிற்றம்பலம்.

*மீண்டும் மற்றொரு தொடரில்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment