Wednesday, May 31, 2017

KALABHAIRAVASHTAKAM

Courtesy: Sri.JK.Sivan

                                                                                   காலபைரவாஷ்டகம்  

ஹரி தான்  ஹரன். ஹரனே  ஹரி.  இதை  ஒரு சில   அருமையான எளிய  தீந்தமிழ் பாழுரங்களிலும்  பாக்களிலும் காணலாம். 

தாழ் சடையும் நீள்முடியும்  ஒண்  மழுவும்  சக்கரமும் 
சூழ் அரவும்  பொன் நாணும்  தோன்றுமால் -- சூழும் 
திரண்டு அருவி  பாயும்  திரு மலை  மேல்  எந்தைக்கு 
இரண்டு உருவும்  ஒன்றாய்  இசைந்து   

என்று  பேயாழ்வார் சிவனையும்  விஷ்ணுவையும்  ஒன்றாகவே  பார்த்தார்  --   எங்கு? திருமலையில்.  ஒரு சிவனடியாரும்  இளைத்தவரல்ல இதே கருத்தை  தான்  வலியுறுத்துகிறார்  கீழ காணும்   அருமையா பாவில், 
அர்த்தனாரிக்கு  பதியாக  அர்த்த   ஹரியாக ஹரனைப்  பாடுவதாக  இது அமைந்திருக்கிறது.  ஹரன்   ஸ்தாணுவாக அடி முடி  காணாமல் நின்றாதைப்போல்    விஸ்வரூபனான  த்ரிவிக்ரமனாக ஒரு  பாதம் தூக்கி  எங்கே  வைக்கட்டும்  என்று கேட்கும்  திருமாலாகவும்  காண்கிறோம். 

இடதுகண் சந்திரன் வலதுகண் சூரியன்
இடக்கைசங்கு சக்கரம் வலக்கை சூல மான்மழு
எடுத்தபாதம் நீண்முடி எண்திசைக்கும் அப்புறம்
உடல்கடந்து நின்றமாயம் யாவர்காண வல்லரோ.


சமீபத்தில்   நவராத்திரி   மலைமகள்,  அலைமகள், கலைமகள்  என  நாம் வணங்கும்  ,தேவியரை,  சக்தி ச்வரூபமாக கொண்டாடினோம்.  தேவி  மகாத்மியம்  லலிதா சஹஸ்ரநாமம்  படித்து மகிழ்ந்தோம்.  சிவராத்திரி பற்ற்யும்  இங்கு  சிந்திப்போம்.   
  
பங்குனி மாதம்  வருஷா வருஷம்  மஹா  சிவராத்திரி வரும். (Feb -March). அன்று எச்சில் கூட  விழுங்காமல்  உபவாசம்  இருப்பவர்களும் உண்டு.  இரவெல்லாம்   விழித்து   பூஜை,   பால், தயிர், சந்தன, இளநீர், விபூதி, பன்னீர்  அபிஷேகம்  எல்லாம்   நடக்கும். பக்தர்கள்  இடைவிடாது   சிவ மகிமா, ராவண  சிவ தாண்டவ  ஸ்தோத்ரங்கள், தேவாரம், திருவாசகம்,  சிவ புராணம் பாராயணம்,  சிவ பஞ்சாக்ஷர மந்த்ரம்,  ஓம்  நமசிவாய  நாமாவளி, ருத்ரம்  சமகம்  எல்லாம்  சொல்வதுண்டு.  வில்வ தளத்தில் அர்ச்சனை   நடைபெறும்.  சிவராத்திரி  அன்று  பக்தியோடு  உபாசிப்பவனுக்கு  மறு பிறவியில்லை, பாபம் தொலையும்.  அன்று  எல்லா  சிவ ஸ்தலங்களிலும்,  ஆலயங்களிலும்  பக்தர்கள் கூட்டம்  நெரிசலாக  இருக்கும்.   ஒரு  சிவராத்திரி கதை:

மகாபாரதத்தில்   சாந்தி பர்வத்தில்  பீஷ்மர்  அம்பு படுக்கையிலிருந்தபடி  யுதிஷ்டரனுக்கு  சொன்னதாக  இது வரும்.   நிகழ்ச்சி. 
சித்ரபானு என்று  ஒரு ராஜா. இக்ஷ்வாகு வம்சம். சிவராத்திரி அன்று  ராணியோடு  பூஜை பண்ணிக்கொண்டிருக்கும்போது  அஷ்டாவக்ரர்  வருகிறார். 

ஒ ராஜன்,   நீ சிவராத்திரி  பூஜை  இவ்வளவு   ஸ்ரத்தையாக   செய்கிறாயே  அதன்  காரணம் உனக்கு  தெரியுமா ?
''சொல்லுங்கள்    குருவே,''
உன்னுடைய  முற்பிறவியில்  நீ  காசியில் சுச்வரன்  என்ற  ஒரு  வேடன். பறவைகள், மிருகங்களை  வேட்டையாடி  கொன்று  விற்பவன்.  ஒருநாள்   காட்டில்  அலைந்து திரிந்தும் வேட்டையாட  ஒன்றும்    கிடைக்கவில்லை.பசி  தாகம், இரவு  அந்தகாரம் சூழ்ந்துகொண்டது.    இரவு  வீடு  திரும்பமுடியாமல்  ''அட  கடவுளே,  என் வீட்டில்  மனைவி  மக்களும் ஆகரமிண்டி  பட்டினி,  நானும்  பசி  காதடைக்க கண் விழித்திருக்கிறேன்.  ஒரு வழியும்  தெரியவில்லையே. ''  கவலையோடு  சுச்வரன் ஒரு மரத்தில் மேல்  ஏறி  ஒரு கிளையில்  அமர்ந்தான். அன்று இரவு  அது தான்  அவன் படுக்கை. ஒரு மான் தான்  கிடைத்தது. அதை  மரத்தடியில் கட்டி வைத்திருந்தான்.  கவலை மேற்கொள்ள  தூக்கமின்றி  அவன் இருந்த மரத்தின்  இலைகளை கிள்ளி  கீழே  போட்டுக்கொண்டிருந்தான். பொழுது புலர்ந்தது.  மானை தூக்கிக்கொண்டு போய்  விற்றான்.   விற்ற பணத்தில்  ஆகாரம் வாங்கிக்கொண்டு வீடு திரும்பும்போது  யாரோ  பசியோடு  அவனை  உணவு கேட்டார்கள். கையில் இருந்த ஆகாரத்தை  அவர்களுக்கும்  கொஞ்சம் கொடுத்தான். பிறகு  வீடு திரும்பினான். சுச்வரன் இறந்தான்.  அப்போது  இரு  சிவகணங்கள் அவனை தக்க  மரியாதையோடு அழைத்துச்  செல்ல வந்து  கைலாயத்தில்  கொண்டு சேர்த்தனர். 

''நான்  ஒரு  கொடிய வேடன். எனக்கு இதற்கு இந்த  மாலை மரியாதை?''
அப்பனே,  மஹா சிவராத்ரி அன்று  உணவருந்தாமல், கண் விழித்து  வில்வ தளத்தால்  சிவலிங்க  பூஜை  செய்து மறுநாள்  ஒரு  அதிதிக்கு  உணவளித்ததன்  பலன்  இது.'' 

நான்  ஒரு பூஜையும்  செய்யவில்லையே.''   யோசித்தபின்  புரிந்தது  அவனுக்கு.   அவன்  அமர்ந்திருந்தது வில்வ மரம்.  அவன் பறித்து கீழே போட்ட  வில்வ இலைகள்  அங்கே  இருந்த  ஒரு  சிவலிங்கம் மேல்   விழுந்திருக்கிறது.இரவெல்லாம்  கண்விழித்து  பூஜை செய்த  பலன்  அவனை  தானாகவே  சேர்ந்திருந்தது.  மறுநாள்  யாரோ  ஒரு ஏழைக்கு  கொஞ்சம் உணவை அளித்தானே.  அதுவும்  நினைவுக்கு  வந்தது.   

''ஒ ராஜன்   அந்த  புண்யம்  உன்னை  ராஜாவாக்கி இருக்கிறது.  நீ  சிவராத்திரி  பூஜையும்  விடாமல் செய்து வருகிறாய். '' என்றார்  அஷ்டாவக்ரர். 
இந்த  கதையின்  உள்ளர்த்தம்  சொல்லட்டுமா: 

வேட்டையாடிய  காட்டு மிருகங்கள்  தான்  பேராசை, கோபம், ஆசை,  பொறாமை  ஆகியவை.
காடு தான் நமது  ஆழ்மனம்,  புத்தி, ஆணவம், விழிப்புணர்ச்சி கொண்ட மனம்  ஆகியவை  சேர்ந்தது. இந்த காட்டில்  தான்  மேற் சொன்ன  மிருகங்கள் உலவுகிறது. அவற்றை ஒடுக்க வேண்டும்.  யோகி  தான்  வேடன்.  அவன்  மேற்சொன்ன  விலங்குகளை தேடியவன்.    வேடன் பெயர்  ஞாபகம் இருக்கிறதா:  ஸுஸ்வரன்--   இனிய  ஸ்வரத்தை பிரயோகிப்பவன்.  யம நியமங்களை  விடாது பல  வருடங்கள் கடைப்பிடிப்பவன்.  அதால்  இனிய  குரல்  அடைந்தவன். இது  ச்வேதஸ்வதர உபநிஷதத்தில் சொல்லப்படுகிறது.  அந்த  வேடன்  பிறந்த  இடம்  வாரணாசி.  காசி.    யோகிகள் நமக்குள்  இருக்கும்  சக்ரங்களில்  ஆக்ஞா  சக்ரத்தை  வாரணாசி  என்பார்கள் .   ஆக்ஞா  சக்ர்ரத்தின்  இருப்பிடம்  எது தெரியுமா?  இரு புருவங்களுக்கும்  இடையே.   இட  பிங்க ல  சுழும்ன நாடிகள்  ஓடும்  இடம்.    இதில் மனத்தை  நிறுத்தும்  யோகிக்கு  தான்   ஆசை பாசம் ஆத்திரம், கோபம், மற்றும்  உலகின் அனைத்து  தீய சக்திகளையும்  சுலபமாக  வெல்ல முடியும். உள்ளே   ஆத்மா ஒளி  காண முடியும். 

இதையெல்லாம்   யாரை  வேண்டினால்  கிடைக்கும்.   அதற்கு தான்   தேவை நீ   மகா  காலபைரவா 

शूलटङ्कपाशदण्डपाणिमादिकारणं
श्यामकायमादिदेवमक्षरं निरामयम् ।
भीमविक्रमं प्रभुं विचित्रताण्डवप्रियं
काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥३॥

Shuula-Ttangka-Paasha-Danndda-Paannim-Aadi-Kaaranam
Shyaama-Kaayam-Aadi-Devam-Aksharam Nir-Aamayam |
Bhiimavikramam Prabhum Vicitra-Thaandava-Priyam
Kaashikaa-Pura-Adhinaatha-Kaalabhairavam Bhaje ||3||

Meaning:
3.1: (Salutations to Sri Kalabhairava) Who has Trident, Hatchet, Noose and Club in His Hands and Who is the Primordial Cause of the Universe.
3.2: Whose Body is Dark, Who is the Primordial Lord, Who is Imperishable and Who is beyond Diseases [of the World],
3.3: Who is the Lord with Terrific Prowess and Who Loves the Strange, Vigorous Tandava Dance.
3.4: Salutations to Sri Kalabhairava Who is the Supreme Lord of the City of Kasi.

பிரபஞ்ச காரணா . திருசூல நாதா. பாசமும்  கதையும்  கொண்டவனே. காலம்  இருட்டே தான்   அதில்  ஒளி  வீசுபவன்  நீயே என்று உணர்த்தும்  கரிய மேனியனே. வியாதிகள் அனைத்தும்  போக்கும் மஹா  வைத்தியநாதா, சர்வ சக்தி தாயகா , தாண்டவ மூர்த்தே,  அழிவையே  அழிக்கும்   சம்ஹார மூர்த்தியே,   காலபைரவா,  காசிகாபுராதி நாதா  உனக்கு  நமஸ்காரம். 




No comments:

Post a Comment