Thursday, April 27, 2017

Thillai staanam Krutapureeswarar temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
                *(9)*
🌹 *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்*🌹
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""'
     🌹 *திருநெய்தானம்.* 🌹
           (தில்லை ஸ்தானம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*இறைவன்:*நெய்யாடியப்பர்,கிருதபுரீஸ்வரர்.

*இறைவி:* பாலாம்பிகை.

*தலமரம்:* வில்வம்.

*தீர்த்தம்:* காவிரி.

சோழநாட்டின் காவிரி வடகரையில் அமைந்துள்ள 63 தலங்களில் 52 -வது தலமாக போற்றப்படுகிறது.

*இருப்பிடம்:*
தஞ்சாவூர் திருவையாறு பாதையில் திருவையாற்றுக்கு மிக அருகில் கிட்டத்தட்ட திருவையாறு புறநகர் பகுதியில் அமைந்துள்ளது.

*பெயர்க் காரணம்:*
சிவன் அபிஷேகப்பிரியர். காமதேனு தனது பாலாலும், பாலில் கட்டி நின்ற நெய்யாலும் அபிஷேகித்தது.

இவர் பசு நெய்யில் ஆடிய அப்பர் ஆதலால் நெய்யாடியப்பர். 

ஊர் நெய்தானம்.

*தேவாரம் பாடியவர்கள்.*
மொத்தம் பாடல்கள் ஆறு.
*சம்பந்தர்* 1-ல் ஒரு பாடலும்,
*அப்பர்* 4-ல் இரு பதிகங்களும், 5-ல் ஒரு பதிகமும், 6-ல் இரு பதிகங்களும்.

*கோவில் அமைப்பு:*
இக்கோயில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பளவிலானது.

கிழக்கு நோக்கிய ராஜ கோபுரம் 75 அடி உயரம் உள்ளவை.

இராஜ கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது.

இரண்டு பிரகாரஙகளுடன் இருக்கின்றது.

முதல் பிரகாரம் விசால பரப்பளவு கொண்டதாகும்.

அம்மன் கோயில் தனிக் கோயிலாக தெற்கு நோக்கி அமைந்துள்ளன.

உள் பிரகாரத்தில் விநாயகர், முருகன் சந்நிதிகள் இருப்பதைக் கண்டு வணங்கிக் கொள்கிறோம்.

கோஷ்ட மூர்த்தங்களான தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகிய மூர்த்தங்கள் உள்ளன.

உள் சுற்றில் சூரியன், ஆதிவிநாயகரும், தெற்குச் சுற்றில் வாகனங்களும், உள்ளன.

மேற்குப் பகுதியில் முருகனின் அறுபடை வீடு தோற்றங்கள் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன.

தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதி பக்கத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் இருக்கிறார்கள்.

இதையடுத்து சனி, நாக கன்னிகள், சரஸ்வதி, மகாலட்சுமி சன்னதிகள் அமைந்துள்ளன. 

வடகிழக்கு மூலையில் கம்பீர அருளுடன் நடராச சபை, இருக்கிறது. இவருடன், சிவகாமி சுந்தரி தாளம் தட்ட,  மாணிக்கவாசகர் மனம் தோய்ந்து அமர்ந்திருக்க நடராசப் பெருமான் நடனமாடிக் கொண்டேயிருக்கிறார்.

கிழக்குச் சுற்றில் சப்த லிங்கங்கள், காலபைரவர், சந்திரன், அனுக்கிரக பைரவர் ஆகியோர் நமக்கு அருளைத்தர அமர்ந்திருக்கிறார்கள்.

மூலவர் சன்னதியில் முகப்பு மண்டபம் பெரியதாகவும், பக்கத்தில் நவக்கிரகங்களும் அதையடுத்து மகா மண்டபம் உள்ளன.

அர்த்த மண்டபத்தினுள் உள் நுழைந்து நெய்யாடியப்பர் வட்ட வடிவ ஆவுடையாரில் சற்று ஒல்லியானதானகவும், மேலும் சற்று உயர்ந்தோங்கிய லிங்கபாணம் காட்சியளிக்கிறது.

காமதேனு, சரஸ்வதி, கெளசிக முனிவர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

வடக்கு நோக்கிய சன்னதியில் அம்மன் அமர்ந்து அருள்பாலிக்கிறாள்.

முன்புறம் நந்தியும், மண்டபம் போல பெரிய அமைப்பு அதில் உற்சவ வாகனமும், அதற்குரிய பொருள்களும் வைக்கப்பட்டுள்ளன.

ஒரே கல்லில் வடிக்கப்பட்ட பாலாம்பிகை நான்கு திருக்கரங்கள் 1-ல் பாசம், 1-ல் அங்குசம், 1-ல் அபயம், மற்றொன்றான ஊருஹஸ்தமாக தொடையில் ஊன்றியவாறு நின்று அருள்பாலிக்கிறார்.

அம்பாளை இளமங்கையம்மன் என்றும் பெயரிருக்கிறது.

*தல பெருமை:*
இறைவனுக்கு பசுநெய் அபிஷேகம் மிகவும் உயர்ந்தது.

நெஞ்சு தொடர்பான நோய் உள்ளவர்கள், மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து இறைவனுக்கு நெய் அபிஷேகம் செய்தால் பாதிகப்பட்ட நோய் ஒழிந்தொழிகிறது.

ஏழூர் சப்த ஸ்தானத்தில் இத்தலம் ஏழாவது தலமாகும்.

ஏழூர் பல்லக்குகளையும் ஒரே இடத்தில் கணிடு களிக்கும் அமைப்பு கொண்டுள்ளன.

*தல அருமை:*
ஒரு சிவனடியார் நாள்தோறும் இறைவனுக்கு நெய் விளக்கிட்டுத் திரும்பும்போது, பிரகாரத்திலுள்ள கீரைகளை பறித்துக் கொண்டு போவது வழக்கம்.

காலம் செல்ல செல்ல மூப்பின் காரணமாய் சிவனடியார்,.... பலகாலம் உனக்கு நெய் விளக்கு  ஏற்றி வந்தேன் எனவே எனக்கு நீ அருள் புரிய வேண்டும் அதற்கு இறைவன் அசரீரியாக நெய்விளக்கு எரித்தன கைமாறாக நீ நம் பிரகாரத்திலுள்ள கீரையை தினமும் பறித்துச் சென்றாய்.

ஆகவே வேறு அருள்புரிவது எப்படி என்று கேட்டதாக தலபுராணம் கூறுகிறது. 
ஒட்டக்கூத்தர் புகழேந்தியும் பாடிய தலம்.

*கல்வெட்டுக்கள்:*
பல்லவர், பாண்டியர், சோழர், காலத்திய கல்வெட்டுக்கள் கொண்ட ஒரே சப்த ஸ்தலம் இதுவாகும்.

கல்வெட்டுக்களில் இத்தலம் ராஜராஜ வளநாட்டு பைங்காட்டு திருநெய்தானம் என்றும், சுவாமியின் பெயர் நெய்த்தானமுடையார் என்றும் உளன.

நிபந்தமாக நிலங்கள் அளித்த விளக்கம் உளன.

விளக்கெரிக்க பொற்காசுகள் தந்த விளக்கம் உளன.

ஊர்ச்சபையார் ஸ்தபன மண்டபம் கட்டியது.

கோவில் பணியாளர்களுக்கு ( மேளக்காரர், தேவரடியார்கள்) நிலங்கள் அளித்தமை உளன.

சுவாமியின் நைவேத்தியத்திற்கு நிலங்கள் விட்டது முதலிய செய்திகள் தெரிய வருகிறது.

இலங்கை அரசன் கயவாகு என்பவன் இப்பெருமானை தன் குலதெய்வமாகக் கொண்டு திருவிழாக்கள் செய்வித்த செய்தியும் தெரிய வருகிறது.

பல்லவர்களும் திருப்பணி செய்துள்ளனர் என்பதற்கான சான்றாக சிம்மத்தூண்கள் இருப்பதைக் கொண்டு தெரியலாம்.

*திருவிழா:*
திருவையாறைத் தலைமை இடமாகக் கொண்டு நிகழ்த்தப்பெறும் ஏழூர் விழா விசேஷசம்.

சித்திரை விழா முடிந்து ஏழூர் விழா இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

மாசி மகத்தை ஒட்டி பத்து நாட்கள் பெருவிழா நடக்கும்.

*பூஜை*
காரணாகம முறையில் இரண்டு கால பூசை.

காலை 10-00 மணி முதல் பகல் 11-00 மணி வரை.

மாலை 5-00 மணி முதல் இரவு 7-00 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு, நெய்யாடியப்பர் திருக்கோயில்.
தில்லை ஸ்தானம்.
தில்லை ஸ்தானம் அஞ்சல் 613 203
திருவையாறு வட்டம்.
தஞ்சை மாவட்டம்.

*தொடர்புக்கு:*
சங்கரன் குருக்கள்.
04362-260553

            திருச்சிற்றம்பலம்.

*நாளை......பெரும்புலியூர்.*

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*