Wednesday, April 5, 2017

Patteswarar temple

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
கோவை .கு.கருப்பசாமி.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                        1
🌻சிவ தல பெருமைகள் அருமைகள்.🌻
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
   🌻 திருப்பட்டீச்சரம். 🌻
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
இறைவன்: பட்டீச்சுர், தேனுபுரீஸ்வரர்.
இறைவி; ஞானாம்பிகை, பல்வளை நாயகி.
தலமரம்; வன்னி.
தீர்த்தம்; ஞானதீர்த்தம் (கோடி தீர்த்தக் கிணறு)

கோவில் அமைப்பு:
திருமலையாற்றின் வடகரையில் 4.4 ஏக்கர் நிலபரப்பிளானது.
4 வாயில்களிலும் இராஜகோபுரங்களுடன், மூன்று பிரகாரங்களுடன் அமைப்பு.
இராஜகோபுரம் 7நிலை.
உள்ளே சென்றதும் 3-ஆம் பிரகாரம்.
விலகிய கொடிமரப் பிள்ளையார்.
பலி பீடம்.
நந்தி.
ஓங்கி உயர்ந்த கொடிமரம்.
ஞானவாவி தீர்த்தம்.
பசு மடம் இருக்கிறது.
ஞானவாவிக் கரையில் வன்னிமரம் இருக்கிறது.
2-ஆம் பிரகாரத்தில்ஆக்ஞா கணபதி சந்நதி உள்ளது.
2-ஆம் கோபுரத்தைக் கடந்து செல்லும் முன் அதிகார நந்தி தேவரை தரிசித்துச் சென்றால், விலகிய நந்தியைக் காணலாம்.
கோயில் வாயிலில் உள்ள மண்டபம் பெரிது. 
இம்மண்டபத்திலையே காலசம்ஹார், அகோர வீரபத்திரர், வில்லேந்திய வேலவர், மன்மதர் முதலானோர் சம்ஹார வடிவிலும், பணிப்பெண்டீர், ஆடல் மகளிர் உருவங்கள் உள்ளன.
இடப்புற பிரகாரத்தில் மூவர் சந்நிதி.
மரச் சிற்பங்கள் செதுக்கப்பட்ட கதவினையுடைய திருவாயில்.
அதைக் கடந்து....செல்ல, பெரிய மண்டபம்.
பிட்சாடனர், 
சந்திரசேகர்,
அர்த்தநாரீஸ்வரர் தெய்வத் திருமேனிகள் அனுக்கிரக முத்திரை காட்டுகின்றனர்.
முதல் பிரகாரத்தின் கருவறையில் மூலவர்.
தென்புற வெளியில் விநாயகர், சோமாஸ்கந்தர்.
வடபுறத்தில் சம்பந்தரும், ஆடிப்பூர அம்மனும் உள்ளனர். 
கோஷ்டமூர்த்தங்களாக தட்சணாமூர்த்தி, லிங்கோத்பவர்,துர்க்காம்பிகை, பிரம்மா உள்ளனர்.
திருச்சுற்றில் சப்த கன்னியர், சுவர்ண விநாயகர், மகாலிங்கம், சுப்பிரமணியர், சண்முகர், இராமலிங்கம், கஜலட்சுமி, காசி விஸ்வநாதர் சந்நிதிகள் உள்ளன.
வடமேற்கு மூலையில் அறுபத்து மூவர் மண்டபம் உள்ளன.
வடக்கில் சண்டேசுவர் சந்நிதி.
இராமர் தீர்த்தமும், நடராசர் சந்நிதியும் அமைந்துள்ளன.
இதன் கீழ் புறத்தில் தவம் மேற்கொள்ளும் அம்மன் சந்நிதி, தபஸ்கேணியும், பள்ளியறையும், நவக்கிரகங்களும், வேதலிங்கம், பைரவர், சனீஸ்வரர்,சூரியன், கீர்த்தி வாசர் சந்நிதிகள் உள்ளன.
வட புறத்தில் அம்மன் சந்நிதி தனிக் கோவிலாக உள்ளது.
இதனின் உள் மண்டபம் நாயக்கர் காலத்தால் கட்டப்பெற்ற கலையம்சம் பொருந்தியதாகும். 
கிழக்கில் யாக சாலையும், பைரவர் சந்நிதியும் உள்ளன.

தலப்பெருமை.
காமதேனுவின் புத்திரி பட்டி பூசித்ததால் பட்டீஸ்வரம் என்ற பெயர் ஏற்பட்டது.

இராமருக்கு சாயஹத்தி தோசம் நீங்கப் பெற்ற தலம்.

பராசக்தி தவமிருந்து வழிபட்ட தலம்.

மாலவ தேசத்து தர்மசர்மா என்ற அந்தணனுக்கு மேதாவி என்ற முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட நாய் வடிவம் இத்தலத்திலுள்ள ஞானவாவியின் துளி பட்டமையால் சாபம் நீங்கப் பெற்றது.

நாயக்கர் கால கலையம்சம் பொதிந்த கோவில்.

மராட்டியர் கால ஓவியங்களும் உள்ளன.

ராஜராஜசோழன் முதலான சோழ மன்னர்கள் அனைவராலும் ஆத்மார்த்தமாக வழிபாடு செய்யப்பட்ட அம்பிகை.

சோழ மன்னர்கள் முக்கிய முடிவுகள் எடுக்கும் போதும் வெற்றி வாகை சூட போர்க்களம் புகும்போதும், இந்த தேவியின் அருள்வாக்கு பெற்ற பின்னரே செயல்படுவர்.
சம்பந்தர் வெயில் காலத்தில் இத்தலத்திற்கு வரும் பொழுது சூரியனின் கதிர்கள் சுட்டெரித்தன. கொடிய வெப்பத்தைத் தணிக்க இத்தலத்து பட்டீசர் பூத கணங்கள் மூலமாய் அழகிய முத்துப் பந்தலை அனுப்பி அப்பந்தர் நிழலிலே வரச் செய்தார். 
முத்துப் பந்தரில் இவர் வரும் காட்சியை இறைவன் காண நந்தியெம்பெருமான்களை விலகச் சொல்லி கட்டளையிட்டார்.
ஆதலால் இத்தலத்தில் நந்திகள் விலகியிருப்பதைக் காணலாம்.
இந்நிகழ்வுகளைக் குறிக்கும் விதமாக ஆனி முதல் தேதியன்று முத்துப் பந்தல் விழா சிறப்பாக நடக்கும்.

தலப் பாடல் பாடியவர்:
திருஞாணசம்பந்தர்.3-ல்= 1


தல வரலாறு.
பராசக்தி தனித்து தவம் செய்வதற்காக இத்தலம் அமைந்த இடத்திற்கு வந்து ஒரு வனம் அமைத்து தவம் செய்தாள்.

தேவர்கள் மரம், செடி, கொடிகளின் வடிவம் தாங்கி உதவி செய்தனர்.

தவத்திற்கு உதவ வேண்டி காமதேனு தன் புத்திரி பட்டியை அனுப்பியது.

தேவியாரின் தவத்திற்கு உதவுவதற்கான பணிவிடைகளை காமதேனு செய்தது.

தவத்திற்கு உகந்த பெருமான் தன் சடை முடியுடன் காட்சி கொடுத்தார்.

ஆதலால் இறைவனுக்கு கபர்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.

இவ்வனத்தின் பெருமையையும், தூய்மையையும் பட்டி உணர்ந்ததால் தானும் பெருமானைப் பூஜிக்க வியும்பி மணலினால் லிங்கம் அமைத்து விதிப்படி பூசித்து தன் பாலைக் கொண்டும், ஞானவாவியின் நீரைக் கொண்டும் வழிபட்டது.
இறைவன் மகிழ்ந்து அவ்மணற் லிங்கத்தில் நிலையாய் அமர்ந்தருளினார். 
பட்டிக் கன்று வழிபட்டதால் பட்டீஸ்வரம் என்றும், இறைவன் பட்டீஸ்வரர் ஆனார்.

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
சிவாகம முறையில் ஆறு கால பூசை.

காலை 6.00 மணி முதல் பகல் 12.30 மணி வரை.

அஞ்சல் முகவரி:
அருள்மிகு. தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்.
பட்டீஸ்வரம் அஞ்சல்.
கும்பகோணம் வட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம். 612 703.

நிர்வாக அதிகாரி: 0435- 2416976
சபேச குருக்கள்: 99525 30576

       திருச்சிற்றம்பலம்.